Tuesday, April 9, 2013

ஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்!! (வண்டிகேட்டில் வரவேற்பு)-1




                            பத்தாம் வகுப்பு படித்து முடித்தவுடன் ஒவ்வொருவருக்கும் வரும் கேள்வி, அடுத்து என்ன படிக்க போறோம்.. +2 னா  என்ன குரூப் எடுக்கணும் அப்படீன்னு.. எனக்கும் அதே கேள்வி வந்துச்சு.. ஆனா அது கூடவே  இன்ஜினியர் ஆகணும்ங்கற  கனவு வேற.. பத்தாததுக்கு எங்க அண்ணா டிப்ளோமா முடிச்சுட்டு விப்ரோல பெரிய வேலையில இருந்தாரு.. எல்லாமா சேர்ந்து அப்பா, அம்மா, ஒண்ணு  விட்ட பெரியம்மா(?!!) இப்படி  பல பேர் சொல்லியும்  கேட்காம அடம்பிடிச்சு பாலிடெக்னிக்கில் சேர்ந்தேன்.. எப்படியாவது மூணு வருஷத்துல இன்ஜினியர் ஆயிடலாம்னு கனவு. ரெண்டாவது காலேஜ் வாழ்க்கை எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்கற ஆவல்.

                             அடிச்சு புடிச்சு நாமக்கல்ல ஒரு பாலிடெக்னிக்ல எங்க பெரியப்பா புண்ணியத்துல ஒரு இடம் வாங்கி (ஏன் கோயமுத்தூர்ல கிடைக்கலயான்னு கேக்கப் படாது..  இவ்வளவு அறிவுள்ள பையன் வெளியூர்ல தங்கி படிச்சாதான் உலக ஞானம் வரும்னு சொல்லி கோவையில ஒரு பயபுள்ளையும் சீட்டு குடுக்கலே..) சேர்ந்தாச்சு.. அட்மிஷன் போடும்போதே எல்லா நாளும் கலர் டிரெஸ்.. லேப்  அன்னைக்கு மட்டும் யுனிபார்ம் (காக்கி ஸ்கொயர்) போடணும்னு சொன்னபோது மனசுக்குள்ள வந்த சந்தோசம் இருக்கே.. அடடடா..

                             ஆச்சு.. ஓபனிங் டேவும் வந்துடுச்சு.. ஸ்கூல் வாழ்க்கை முடிஞ்சு நாம இன்ஜினியர் படிப்பு படிக்க போறோம்னு மனசுக்குள்ள ஒரே துள்ளல்.. துள்ளலுக்கு அது மட்டுமா காரணம், எட்டாவது வரை பாய்ஸ்  ஹை-ஸ்கூல்ல படிச்சுட்டு ஒன்பதாவதுக்கு கோ-எட் வந்தா அங்கே அதே ஸ்கூல்லயே அப்பாவும் வேலை செஞ்சதால ஸ்கூல் கேம்பசுக்குள்ள ஒரு பொண்ணுக கிட்டயும் சரியா பேசினது கிடையாது.. தவிர நம்ப தமிழ் சினிமாக்கள் காலேஜ் பற்றிய கலர் கலர் கனவுகளை விதைத்திருக்க, திரைப்படத்தில் நடிப்பதற்காக சென்னை ஓடி வந்த அபலைபோல் அந்த கல்லூரிக்குள் காலடி எடுத்து வைத்தேன்.. நிற்க.. காலேஜுக்கு வர்ற வழில ஒரு சின்ன பிளாஷ்பேக்..

                              மொத நாளாச்சே அப்புடீன்னு எங்க பெரியப்பா என்ன கொண்டுவந்து காலேஜ் பக்கத்துல இருக்கிற பஸ்டாப்புல இறக்கிவிட்டுட்டு போயிட்டாக.. காலேஜுக்கு லேட்டாச்சுன்னு சாப்பிடாம வீராப்பா கிளம்பி வந்ததுல நல்ல பசி.. எங்க பெரியப்பா வரும்போதே பக்கத்துக்கு வீட்டுல இருந்த ஒரு சீனியர் பையன (சுரேஷ்) அறிமுகப் படுத்தி வச்சிருந்தார். அந்த சுரேஷ்கிட்ட பசிக்குது, சாப்பிட நல்ல ஹோட்டல் ஏதும் இருக்கான்னு கேட்டேன். இங்க ஹோட்டல் எல்லாம் கிடையாது, "அசோகன் கடை" ன்னு ஒரு மெஸ் இருக்கு. இந்த வண்டிகேட்லயே (வண்டிகேட் என்பது ஊர்பெயர் என புரிந்து கொள்க) அதுதான் பேமஸ் என்று எதோ தாஜ் ஹோட்டலை அறிமுகப் படுத்திய பெருமிதத்துடன் முன்னே நடந்தான்..

                              சீனியர்களுக்கு ஒரு மணி நேரம் முன்னதாக ஆரம்பிக்கும் என்பதால் எனக்கு அசோகன் கடையை காட்டிவிட்டு சுரேஷ் காலேஜுக்கு சென்று விட்டான்.. கடைக்குள் அப்பாவியாய் கண்களில் பயத்துடனும், ஒரு வித மிரட்சியுடனும், டாஸ்மாக்கில் முதல் முறை நுழைந்தவனைப் போல் பம்மியபடியே உள்ளே நுழைந்தேன்.. காரணம் அங்கிருந்த சீனியர்ஸ்.. என்னை பார்த்ததும் கன்னிப்பெண்ணை வட்டமிடும் வில்லன் போல் சுற்றி அமர்ந்து கொண்டு "எந்த ஊர்டா " என்றான் ஒருவன்.. நானோ எப்போதும் போல் "கோயம்பட்டூர் " என ஆங்கிலத்தில் (???) கூறினேன்.. என்ன பட்டூர்  என்று  ஒருவன் என் உச்சரிப்பை கிண்டல் செய்தான்.. கோயமுத்தூர்னு சொல்லணும் என்ன என நாலைந்து முறை எனை சொல்ல சொல்லி ரேகிங் செய்தனர். அதற்குள் அவர்களுக்கு நேரமாகிவிடவே அவர்கள் செல்ல, இந்த களேபரத்தில் சாப்பிட மனமில்லாமல் வெறும் வயிற்றுடனெ காலேஜில் காலடி எடுத்து வைத்தேன்..( பிளாஷ்பேக் ஓவர்)...

                                அடி வயிற்றில் பசி கிள்ள ஒருவாறாக வழி கேட்டு வகுப்பறைக்கு செல்ல அங்கே முன்பே ஒரு சில மாணவர்கள் வந்திருந்தனர். ஆனால் எனக்கோ பெருத்த ஏமாற்றம். பெண்கள் ஒருவர் கூட இல்லை.. (என்ன கொடுமை சார் இது??) வேறு வழியில்லாமல் இரண்டாவது வரிசையில் ஒரத்தில் பெஞ்சின் மீது என் புத்தகப் பையை வைத்துவிட்டு வெளியே வந்து நின்றேன்.. அருகிலேயே ஒரு சர்க்கரை ஆலை  இருந்ததால்  அங்கிருந்து வந்த ஒரு நாற்றம் குடலைப் புரட்டியது. கைக்குட்டையை முகத்திற்கு கொடுத்து யாராவது மாணவிகள் வருவார்களா என எதிர்பார்த்து நின்றேன்.. ஆனால்   வந்ததோ ஒரு ஆசிரியர், அதுவும் ஆண்.. உள்ளே நுழைந்தவனுக்கு பெரிய அதிர்ச்சி..

(தொடரும்..)







15 comments:

  1. கோயம்பட்டூர்.. ஆஹா இதை ரசித்தேன்.. வரவேற்பு பிரமாதம்...

    ReplyDelete
  2. மலரும் நினைவுகள் சுவாரஸ்யம்... உங்களின் ஏற்பட்ட கொடுமை யாருக்கும் வரக்கூடாது...! ஹிஹி... தொடர்க...

    ReplyDelete
  3. சர்க்கரை ஆலையிலிருந்த என்ன மாதிரியான ‘நறுமணம்’ வரும்கறது எனக்கு நல்லாவே தெரியும் ஆனந்த். விக்கிரவாண்டில இருந்தப்ப முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலையை சுத்திப் பாத்திருக்கேன்.

    அனுபவங்களை திரும்பிப் பாக்கறது எப்பவுமே உங்களுக்கும் சுவாரஸ்யம்; படிக்கறவங்களும்தான்!

    ஹும்! பெண்வாசனையே இல்லாம நீங்க ஏமாந்திருக்கீங்க. சப்பை ஃபிகர்ஸா எல்லாம் அமைஞ்சுட்டதால நான் ஏமாந்தேன். ஸேம் பிளட்!

    நல்லாவே கொக்கி வெச்சு தொடரும் போட்ருக்கீங்களே... குட்! தொடர்ந்து வர்றேன். கலக்குங்க...!

    ReplyDelete
  4. //இரண்டாவது வரிசையில் ஒரத்தில் பெஞ்சின் மீது //நாமெல்லாம் ஒரே இனம் சார்

    ரைட்டு ஆரம்பிங்க ரெண்டாவது பெஞ்சில நமக்கும் ஒரு சீட்ட போடுங்க... என்ன ஆனாலும் அந்த ரெண்டாவது பெஞ்ச விட முடியாது பாருங்க

    ReplyDelete
  5. ரொம்ப கஷ்டம்தான்! அருமையான நினைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  6. இன்ட்ரஸ்டிங்கா போகுது தொடருங்க... மத்தவங்க டைரி படிக்கறது சுவாரசியம்தான்... தெரியாம படிச்சாத்தானே தப்பு.... நீங்களே சொல்றீங்களே.... தப்பில்ல....

    ReplyDelete
    Replies
    1. நன்றி மேடம்.. ஆவி எப்போதுமே ஒரு ஒப்பன் புக்.. இந்த பதிவு உங்களுக்கு பிடிச்சது ரொம்ப மகிழ்ச்சி..

      Delete
    2. இத நான் like பண்ற.. :D

      Delete
  7. எனக்கு காலேஜ் போய் படித்த அனுபவம் இல்லங்க. உங்கள் அனுபவம் படிக்க ஆர்வமா இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா.. அப்போ கண்டிப்பா தொடர்ந்து படிங்க..

      Delete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...