Friday, August 27, 2010

விடை இல்லா விடுகதை - பாகம் 1




சிகாகோ- ஒ ஹேர் விமான நிலையம்...


நண்பர்களிடம் விடைபெற்றுவிட்டு, முன்பே பெட்டிகளை செக்-இன் செய்துவிட்டதால் நேராக செக்யுரிட்டி செக்கிங்கிட்கு தன் மனைவியுடன் சென்றான் ரிஷ்விக்.


 "கண்ணு, பாஸ்போர்ட் எந்த பேக்ல வச்சிருக்க".
 "உங்க பேக்-பேக் (Backpack) ல தான் இருக்கு" 
"மூணாவது லேப்டாப்புக்கு ஏதாவது சொல்வாங்களான்னு தெரியலை"


சேக்யுரிட்டியிடம் தன் பாஸ்போர்டை காட்டி விட்டு ஷு, பெல்ட் மற்றும் எலெக்ட்ரானிக் சாதனங்களை தனியே எடுத்து ஒரு பிளாஸ்டிக் பெட்டியில் வைத்தார்கள். மூன்று லேப்டாப்பையும் தனித்தனியே ஒவ்வொரு பெட்டிகளில் அடுக்கி சோதனை இயந்திரத்தின் உள்ளே தள்ளி விட்டான். பின்னர் சோதனை கூட்டின் வழியே நுழைந்து வெளியே வந்தான். அவன் பின்னே ரேஷ்மாவும் வெளியே வந்தாள். சோதனை இயந்திரம் ஒவ்வொரு பெட்டியாய் வெளியே தள்ள, திடீரென்று அது அலற ஆரம்பித்தது. 


ரிஷ்விக்கின் பேக்கை சோதனையிட்டபடியே அவனிடம் வந்த பணியாளர் தண்ணீர் பாட்டிலை உள்ளே கொண்டு செல்ல அனுமதி இல்லை என்றார். பெருமூச்சு விட்ட ரிஷ்விக் அவரிடம் ஸாரி சொல்லிவிட்டு தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு நடந்தான். ரேஷ்மா அவன் காதருகே வந்து 


"நான்தான் சொன்னேனே, இவங்க ஒண்ணும் சொல்லலே பாத்தீங்களா?"
"ஆமாண்டா செல்லம்.. நீ சொன்னா எப்பவும் கரெக்டா இருக்கும்"


போர்டிங் பாஸை பார்த்து பிளைட் நிற்குமிடத்தை கண்டறிந்து அந்த இடத்தை அடைந்தார்கள். ஜன்னலோரமாய் வெளியே தெரியும் பிளைட்டை பார்க்க வசதியாக ஓரத்தில் இருந்த ஒரு சீட்டில் அமர்ந்தார்கள். 


"இன்னும் நம்ம பிளைட்டுக்கு அரைமணி நேரம் இருக்கு"
" ஊருக்கு போனப்புறம் தினமும் ஒரு முழம் மல்லிப்பூ வாங்கித்தர்றேன்னு சொல்லீருக்கீங்க, ஞாபகம் இருக்கா?"
"இங்கயே ஆரம்பிச்சுட்டியா. அதான் சரின்னு சொன்னேனே டா!"
"பேரூர் பட்டீஸ்வரன் கோவிலுக்கு போகணும்"
"சரி, சரி .. எல்லா எடத்துக்கும் போலாம்"


இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி இவர்களின் இருக்கைக்கு அருகில் அமர்ந்தாள். அவள் கண்களில் ஒரு மெல்லிய சோகம் இழையோடியது. ரேஷ்மா அந்த பெண்மணியை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அதே சமயம் ரிஷ்விக் வெளியே சென்று கொண்டிருந்த ஒரு லுப்தான்சா விமானத்தை பார்த்தான். தன்னையும் அறியாமல் லாவண்யாவின் நினைவுகளில் மூழ்கினான்.


யார் அந்த லாவண்யா?   -- தொடரும் ...


.

7 comments:

  1. வாவ்...ஸ்டோரி சூப்பர்ஆ பிக் அப் ஆகுது... நெக்ஸ்ட் பார்ட் எப்போ... யார் அந்த லாவண்யா? மல்லிகை பூ, பேரூர் கோவில்... ஹும்... வேற என்ன பெருமூச்சு தான்... nostalgic

    ReplyDelete
  2. நன்றி மதன் !!

    ReplyDelete
  3. @ தங்கமணி -- யாருமில்லாத கடையிலே டீ ஆத்த வேண்டியிருக்குமொன்னு ஒரு பயத்தோடதான் இந்த தொடரை எழுத ஆரம்பிச்சேன். ஆனா உங்களைப் போல சிலரோட ஆதரவு நிச்சயம் ஊக்கம் தருது..
    அடுத்த பாகம் விரைவில் வருகிறது.. ஆமாங்க.. எழுதும் போதே ஒரு பெருமூச்சு கேட்டுக்கிட்டே இருந்தது. (என் மனைவியிடமிருந்து..)

    ReplyDelete
  4. Thambi..konjam nalla iruku...adhu eppadi yaruko nadantha onnu madhiriye ezhuthiyiruka... unnoda anubavama yarum ketkala...

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails