Showing posts with label 2015. Show all posts
Showing posts with label 2015. Show all posts

Wednesday, December 30, 2015

Recommendations for Chennai Film Festival

The Fencer:  The Story happens during the World War in Russia. It's the story of a Fencing master who escapes from the army and serves in a school as a teacher.




The Dark Horse :  This film slightly reminded me of "Scouting for zebras" from last year. But this deals with a chess champion who has a bipolar disorder.





Love :  The Ardent fans who enjoyed the Goddard's 3D movie and the "Blue is the Warmest Color" will enjoy this movie to the core. ;)  (18+)




Taxi :  Must Watch movie,  just for the director and for his passion for the movies. Jaffar Panahi, who was banned for making films is in Jail right now came out in a bail and shot the film and sent it to the film festival through his wife and won many awards. He also features in this movie..



Rams :  An wonderful movie about a sheep, not just for animal lovers.



Flocking:  It's a story of a young girl who accuses her fellow student for a sexual assault on her. A suspense drama will keep you thinking throughout the movie. This movie reminded me of 'The Hunt" from last year.




Embrace of the Serpent:  The Winner of Goa Film Festival and many more awards.  A Must Watch movie little slow to watch..




The above movies are my recommendations for Chennai Film Festivals. However there are few movies that are not screened in Chennai, but
screened in IFFI, Goa.



Danish Girl :  The story of a Man who has a feminine qualities in him becomes a woman.  Excellent perfomance by Eddie Redmayne. I would rate this as the Best Film of 2015. A Must Watch.




Accused : A true story of a lady who has been accused for killing babies and old people in a famous hospital. 



Cinemawala  (Marathi) An emotional drama about movie buff whose son chooses Pirate DVD selling as his profession. The climax is the highlight of the movie.





Filosofi Kopi Indonesia is famous for coffee plantations.  A coffee 'maker'who faces a challenge to make a best coffee in Indonesia to save his pride as well as his friend's coffee shop.





Frenzy: A slow thriller about three brothers, a man who sent in a parole to find a terrorist, A pig Hunter and a Terrrorist..! Excellent Screenplay gives you goose bumps at the end.





The Moving Forest:  A movie based on Shakespeare's "Hamlet". Excellent performance and a brilliant screenplay keeps the thriller interesting till the end. MUST Watch





The Man who Knew Infinity:  Sreenivasa Ramanujam, the great mathematician's life portrayal has been documented recently in Tamil. However like Richard Attenborough's Gandhi, I prefer this movie has more life.

Dev Patel simply rocks and grew up as a wonderful actor. MUST Watch




Enjoy Cinema!!


Friday, April 3, 2015

நிழலின் காவலன்




விசித்திரங்கள் நிறைந்த விடுகதை 
என் வாழ்க்கை என்றால் -
அதில் விரித்துப் பொருள் 
விளங்க முடியாத புதிர் நீ!

முரட்டுத் தனமான அன்பினால்
உயிரின் அடிவரை நேசித்தாய் 
மென்மையான கோபத்தால் 
நிதமும் என்னை நிந்தித்தாய்.

ன் மகிழ்ச்சியை மையெழுதிய
உன்னிரு கண்கள் சொல்லும்,
உன் சினத்தை பிறைவடிவான
உன்னிதழ்கள் உரைக்கும்.

டலும் காதலின் ஒரு பகுதியென
ஊடகங்கள் பலதும் உணர்த்திய போதும்
உள்ளங்கைகளிலிருந்து காதலின்று உயரே பறந்துவிட 
ஊசலாடும் மனதிற்கு என்ன உரைப்பேன் ஆறுதலாய்?

சிறுபிள்ளையாய் மாரில் தலைவைத்து 
உறங்கிய நாட்களை மறந்துவிட்டு- 
சீற்றத்தின் பிடியில் மதியிழந்து 
எனை நீங்கிச் சென்றாய் 

னக்காய்  சிந்தும் கண்ணீரைக் கூட 
துடைத்திட முடியவில்லை - கதிரவன்
சாய்ந்திடும் தொடுவானத்தை மட்டும் 
தொட்டுவிட முடியுமா என்ன?

நிழலாய் உன்னுடன் நடைபோட 
நினைத்திருந்தேன் முடியவில்லை- போகட்டும் உன்
நிழலின் காவலனாய் தொடர்ந்து வர
நிச்சயம் உன் அனுமதி தேவையில்லை..!

Saturday, February 14, 2015

காதல் போயின் காதல் - டீசர்

                   ஆவி டாக்கீஸின் முதல் படைப்பான "காதல் போயின் காதல்" குறும்படத்தின் டீசர் இதோ.  இந்த டீசரை காணும் எல்லோருக்கும் டீம் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். குறும்படம் பிப்ரவரி 23 அன்று வெளியாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி..!





                    அனைவருக்கும் என் காதலர் தின வாழ்த்துகள்!

Friday, February 13, 2015

அனேகன்-அசல்தானா?

                      அனேகன் ஏதோ இங்க்லீஷ் படத்தோட காப்பின்னு சொல்றாய்ங்க. ஆனா பழைய படங்கள் நிறைய பார்த்தவங்க டக்குன்னு  சொல்லிடுவாங்க   'நெஞ்சம் மறப்பதில்லை' மாதிரி இருக்குன்னு.   அந்தப் படம் பார்க்காதவங்களுக்காக சிறிய கதைச் சுருக்கம்.  பணக்கார கதாநாயகனும் ஏழை நாயகியும் காதலிக்கிறாங்க. அது நாயகனோட அப்பா நம்பியாருக்கு பிடிக்கல. ஸோ அவங்களை பிரிக்க நெனைச்சு ரெண்டு பேரையும் சுட்டுக் கொன்னுடறாரு. அத்தோட முடிஞ்சுதான்னா இல்ல. அவங்க ரெண்டு பேரும் அதே ஊர்ல திரும்ப பிறந்து ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்றாங்க. ரெண்டு பேருக்கும் பூர்வ ஜென்மத்துல நடந்த விஷயங்கள் தெரிய வரும்போது மறுபடியும் நம்பியார் வந்து (அவரு போன ஜென்மத்துல செத்திருக்க மாட்டாரு)  இவங்களை பிரிக்க வருவாரு. அப்புறம் கிளைமாக்ஸ். இதே கதையை கொஞ்சம் ஐ.டி, டிப்ரஷன், ஹிப்னாடிசம், ரங்கூன்,  டங்கா மாரின்னு பல மசாலா சேர்த்து கொடுத்திருக்காங்க.





தனுஷ் தி பெர்பார்மர் 

                      தனுஷ் தான் தேர்ந்தெடுக்கும் கதைகள் தான் அவருக்கு பலம் என்று எண்ணிவிட முடியாது. வேலையில்லா பட்டதாரி போன்ற கதைகளுக்கும் சரி, ஷமிதாப், அனேகன் போன்ற படங்களுக்கும் சரி தன் நூறு சதவிகித உழைப்பையும் கொட்டி நடித்ததற்கே பாராட்ட வேண்டும். சில இடங்களில் குறிப்பாக காளி கேரக்டரில் 'புதுப்பேட்டை' தனுஷை கண் முன் கொண்டு வருகிறார். இன்னொரு தேசிய விருது பார்சல்!


அமேஸிங் அமைரா 

                      'உசிரே போகுதே உசிரே போகுதே உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையிலே' என்ற பாட்டு இவருக்காக அல்லவா எழுதப்பட்டிருக்க வேண்டும். அடடடடடடடா அம்சமாக இருக்கிறார் அமைரா. இனி பார்பி டால் ரோல்களுக்கு ஒரு நடிகை கிடைச்சாச்சு. நல்லா நடிக்கவும் செய்யுறார்.


 டங்கா ஹாரிஸ் 

                    ஹாரிஸ் ஜெயராஜ் இசை சுமார் தான், ஓரிரு பாடல்கள் அசத்தல். பட் பெண்களையும் தியேட்டரில் ஆட்டம் போட வைத்த 'டங்கா மாரிக்காகவே' இவரை மன்னித்து விடலாம்.


சூப்பர் சுபா 

                     'ஆரம்பம்'  படத்தில் சொல்லிக்கொள்ளும்படி வசனம் இல்லாவிட்டாலும் இந்தப் படத்தில் 'நச்' வசனங்கள் மூலம் நம்மை அசத்துவது இந்த இருவரே.


'அடுத்த ஷங்கர்' ஆனந்த் 

                        பிரம்மாண்டம் என்பதில் அடுத்த ஷங்கராக உருவெடுத்து வருகிறார் கே.வி. ஆனந்த். இதிலும் அதே பாணியை பாலோ செய்திருக்கிறார். 'கனா கண்டேன்' போன்ற படங்கள் இவர் இனி செய்வாரா என்பது சந்தேகமே.



                         ஓம் பிரகாஷின் அழகான போட்டோகிராபி ரங்கூனையும் சென்னையையும் அழகாக காட்டுகிறது. ஆஷிஷ் வித்யார்த்தி, தலைவாசல் விஜய், ஜெகன் ஆங்காங்கே வந்து போகிறார்கள். கார்த்திக் நவரசத்தையும் பிழிந்து கொடுக்க முயற்சித்து,  சுரேஷ் கோபியிடம் சில பாயிண்டுகளில் தோற்கிறார். மொத்ததுல படம் "டங்கா மாரிக்காண்டியும், அந்த கோதுமை குல்பிக்காகவும் ஒருவாட்டி  பாக்கலாம்பா"














Saturday, February 7, 2015

நான் அடிமை இல்லை..!

         
                          "மச்சான், எம்மேல ஏன் இம்புட்டு கோபம்?"

                          "பின்ன என்ன புள்ள, நேத்து சினிமாக்கு போலாம்னு சொல்லி உன்னை ஆறு மணிக்கு வரச்சொன்னேனே. நீ ஏன் வரல. நான் காத்துக் கெடந்துட்டு வெறுப்பாகிப் போனேன்."

                            "கோவிச்சுக்காத மச்சான், நான் வரணும்னு தான் பார்த்தேன். கிளம்புற நேரத்தில ஆத்தா ஒரு வேலை சொல்லி இருக்க வச்சிடுச்சு. என்னை வெறுத்திடாத மச்சான்."

                             ஆதரவாய் அணைத்துக்கொண்ட அவன் அவள் முதுகை வருடியபடி "என்ன புள்ள இப்படி சொல்லிட்டே. சினிமா கெடக்குது சினிமா. உனக்காக எவ்வளவு நேரம் வேணும்னாலும் காத்துக் கெடப்பேன். "

                               தன்னைப் அவன் புரிந்துகொண்டதை வெளிப்படுத்தும் வண்ணம் அவள் கண்ணில் ஒரு துளி நீர். அவன் கண்ணில் சந்தோஷம்.
 
                                                         --------------


                            "டார்லிங், 'தல' படம் ரிலீஸ் ஆகியிருக்கு. போலாமா?"
                            மறுமுனையில் சிறிது யோசனைக்குப் பின் "ம்ம்.. ஐ'ல் லெட் யூ நோ டா." டொக்.



                             ஐந்து நிமிடம் கழித்து "அம்மா பக்கத்துல இருந்தாங்க, அதான். நீ புக் பண்ணிடு. ஐ'ல் ட்ரை." டொக்.



                             "கமான் யார்.. ஐயம் வெயிட்டிங் பார் பாஸ்ட் பிப்டீன் மினிட்ஸ், வேர் ஆர் யூ?"
                             "டே, கிளம்பும்போது அம்மா ஒரு வேலை கொடுத்திட்டாங்க.. இன்னும் பத்தே நிமிஷம். ஐ'ல் பீ தேர்" டொக்.



                               "ஹே கமான், போற வர்றவனெல்லாம் என்னை ஒரு மாதிரி பார்க்கிறான்.. படம் போட இன்னும் அஞ்சு நிமிஷம் தான் இருக்கு. ஆர் யூ கமிங் ஆர் நாட்?"
                               "டே கோவிச்சுக்காதே, என்னால இப்போ வர முடியும்னு தோணல. ப்ளீஸ் அண்டர்ஸ்டேன்ட் மை சிச்சுவேஷன் டா"
                                "வாட்.. நான் எவ்ளோ கஷ்டப்பட்டு டிக்கட் புக் பண்ணினேன் தெரியுமா? ஆன்லைன்ல கெடைக்காம ப்ளாக்கில வாங்கி வச்சேன். டூ யூ நோ தி வேல்யு ஆப் மணி?"
                                "டே உனக்கு என்ன விட பணம் தான் பெருசா போச்சா?"
                                "வர முடியலேன்னா முன்னாடியே சொல்லியிருக்கலாமே, இப்படி அலைய வச்சிருக்க வேணாமே.. இந்த பொண்ணுங்களே இப்படித்தான்."
                                "எங்க கஷ்டங்கள் உங்களுக்கு எங்க தெரியப் போகுது. நான் ஒண்ணும் உன் அடிமை இல்லை. நீ சொல்ற எடத்துக்கு சொல்ற நேரத்துக்கு வர்றதுக்கு. டோன்ட் கால் மீ எவர்"
                                 "ஏய், நிஷா..!" டொக்.

                                                               ***************



                                  காலையில் நிறைமாத கர்ப்பமாக இருக்கும் தன் மனைவியை விட்டுவிட்டு வேலைக்கு வந்தது அவனுக்கே பிடிக்கவில்லை. என்ன செய்வது முதலாளியிடம் அவ்வளவு சீக்கிரம் விடுப்பு வாங்கிவிட முடியாது. பக்கத்து வீட்டு அன்னக்கிளி அக்காவிடம் ஒத்தாசைக்கு இருக்க சொல்லிவிட்டு வந்தாலும் இவன் மனம் துடியாய் துடித்தது. வேலையை சீக்கிரம் முடித்துவிட்டு கிளம்பிவிட வேண்டுமென்று மனதில் எண்ணியபடி வேலை செய்து கொண்டிருந்தான். அப்போது அவசர அவசரமாக ஓடி வந்த அன்னக்கிளி அக்காவின் கணவன் சுப்பன் "மாரி, உம் பொண்டாட்டிக்கு கொழந்தை பொறந்திருச்சு பா. ஆண் கொழந்தை." என்று மூச்சிரைக்க சொல்லிவிட்டு போக முதலாளியிடம் ஓடிச் சென்று விடுப்பு கேட்க அவரோ "அதான் கொழந்தை பொறந்திடுச்சில்ல. வேலைய முடிச்சுட்டு போ மாரி" என்று கூறிவிட சோகத்துடன் வேலைக்கு திரும்பினான்.

                                    தன் வேலையை வேகமாக முடித்துவிட்டு ஆறு காத தூரம் தன் சைக்கிளில் பயணம் செய்து வீட்டிற்கு வர அங்கே அவன் மனைவி கூரைப்பாயில் அமர்ந்திருக்க அருகே தன் மகன் ஆடையின்றி அழகாக தாயின் மார்பை முட்டி பசியாறிக் கொண்டிருந்தான். சற்று நேரம் தன் மகனின் பிஞ்சு கால்களை தன் உள்ளங்கையில் எடுத்து வைத்துக் கொண்டு ஆனந்தப் பட்டான். மனைவியின் தலையை அன்போடு வருடிக் கொடுத்தான். ஆசை மேலிட அவள் நெற்றில் முத்தமிட்டான். குழந்தை பசியாறியவுடன் அவன் கைகளில் கொடுத்தாள். அந்தக் குழந்தையை கைகளில் தூக்கிய போது அவன் உள்ளத்தில் பொங்கிய சந்தோஷத்தின் அளவு எல்லையற்று இருந்தது.

                                                    ---------------------

                       
                                     "கண்ணா, இன்னைக்கு எப்படியும் டெலிவரி ஆயிடும்னு நெனைக்கிறேன். என் கூட இரேன்."
                                      "என்னப்பா விளையாடறியா, இன்னைக்கு மண்டே, பிஸி டே. நோ வே. அதுவும் இல்லாம இன்னைக்கு ப்ராஜெக்ட் டெலிவரி மீட்டிங் ஒண்ணு இருக்கு. நான் போயே ஆகணும். நான் இவ்வளவு கஷ்டப்படறதும் உனக்கும் நம் பிள்ளைக்கும் தானே"
                                       "அதில்லப்பா, நீ கூட இருந்தா எனக்கு சப்போர்ட்டா இருக்கும். கொஞ்சம் தைரியமா இருப்பேன்.."
                                        "மீரா, டோன்ட் பீ டிபண்டட். ஒரு கம்பெனில எச்.ஆரா இருக்கிற. இப்படி சைல்டிஷா பேசுறே. டெலிவரி எல்லாம் இப்போ சிம்பிள் மேட்டர். நான் போகும்போது உன்னை ஹாஸ்பிடல்ல விட்டுடறேன். உங்க அம்மாவை வர சொல்லிடு. கிம்மீ எ கால் இப் யூ நீட் எனிதிங்."



                                         பரபரப்புடன் கிளம்பி அவளை ஹாஸ்பிடலில் சேர்த்துவிட்டு காரில் அலுவலகம் அடைந்தான். பத்து நிமிடம் மீட்டிங். முடிந்தவுடன் தன் பக்கத்து டெஸ்கில் இருந்த ஸ்டெல்லா இவனிடம் "ஹே ஷிவ், உன் வைப் கன்சீவா இருந்தாங்களே, எப்போ டேட்ஸ் கொடுத்திருக்காங்க?"

                                            "ப்ராப்பப்ளி டுடே.." என்று கூறிவிட்டு தன் டெஸ்க்டாப்பில் இந்தியா ஆஸ்திரேலியா ட்வென்டி-ட்வென்டி மேட்சின் கமெண்ட்ரியை படித்துக் கொண்டிருந்தான். அப்போது ஒலித்த அவன் செல்போனை உயிர்பித்து "சொல்லுங்க அங்கிள்" என்றான்.

                                             "மாப்ளே, உங்களுக்கு பையன் பொறந்திருக்கான்" என்று உற்சாகம் பொங்க மறுமுனையில் அவன் மாமனார் கூற "அங்கிள் குட்டிப் பையனோட போட்டோஸ் வாட்ஸ்-ஏப் ல அனுப்புங்க. இஸ் மீரா பைன்?"
என்று கேட்டுவிட்டு போனை வைத்தான். சிறிது நேரத்தில் வந்த புகைப்படங்களை உடனடியாக பேஸ்புக்கில் அப்லோட் செய்ய, படம் போட்ட ஐந்து நிமிடங்களில் இருநூறு லைக்குகள் விழுந்தன..!
                     

                                         ****************************

 


                 இன்றைய சூழலில் நாம் எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு அடிமையாகி வாழ்வின் சின்னச் சின்ன சந்தோஷங்களையும் அனுபவிக்க மறந்துவிடுகிறோம். இந்த ஒரு சின்ன தோன்றல் வந்ததாலேயே நேற்று நுண்ணறிவாளர் தினத்தன்று எந்த ஒரு எலக்ட்ரானிக் உபகரணங்களும் இல்லாமல் ஒரு நாள் வாழ்ந்து பார்க்கலாம் என்று தோன்றியது. பல சங்கடங்கள், மனஸ்தாபங்கள், குழப்பங்கள் ஏற்பட்ட போதும் இறுதியில் எல்லோருமே புரிந்து ஏற்றுக் கொண்டார்கள். தவிர நேற்று கிடைத்த நேரத்தில் பல பயனுள்ள வேலைகள் செய்ய முடிந்தது. லைக்ஸ், கமெண்ட்ஸ், மெசேஜ், மெயில், போன் கால் என எந்த தொல்லையும் இல்லாமல் காலை ஆறிலிருந்து மாலை ஆறு மணி வரை கிட்டத்தட்ட ஒரு "ஜென்" நிலையில் சந்தோஷமாக கழித்தேன். இந்த முறைக்கு "Going Mute" என்று பெயரிட்டுள்ளேன். இனி மாதத்தில் ஒரு நாளாவது இதை செயல்படுத்தலாம் எனவும் யோசித்துள்ளேன். நீங்களும் ஒருநாள் ட்ரை பண்ணிப் பாருங்களேன். உங்களுக்கு கிடைக்கும் "சுகானுபவத்தை" பகிர்ந்து கொள்ளவும் மறக்காதீங்க.. ;)


          

அஜித்தை எனக்கு பிடிக்காது!

SPOILER ALERT.. 

                      நண்பனின் திருமணத்திற்காய் சிவகாசி சென்றிருந்தேன். திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்த அதே தினம் தான் என் ஆதர்ச நாயகன் 'தல' படத்தின் வெளியீடும். நண்பனிடத்தில் முன்கூட்டியே கூறிவிட்டேன், திருமணம் முடிந்த அடுத்த நிமிடம் நான் திரையரங்கிற்கு சென்று விடுவேன் என்று. அவனும் எனக்காக 'என்னை அறிந்தால்' படத்திற்கு டிக்கட் எடுத்துத் தர முயற்சித்து தோற்றான். சிவகாசியின் செல்லப்பிள்ளை, தென் தமிழ்நாட்டின் போர்வாள் 'சிவகாசிக்காரன்' என்று செல்லமாக அழைக்கப்படும் ராம்குமாரிடம் கேட்டேன். 'டிக்கட் அங்கேயே கிடைக்கும் தல' என்று  உறுதியான குரலில் கூறினார். இருந்தும் அரைமணி நேரம் முன்னரே சென்று டிக்கட் வாங்கி விட்டேன்.


                        இரண்டரை மணிக்கு என்று அறிவிக்கப்பட்டிருந்த போதும் இரண்டு இருபதுக்கு தொடங்கிவிட்டார்கள். ரசிகர்களின் ஆரவாரம் ஒரு பக்கம் குதூகலத்தை கொடுத்தாலும் என் முன் சீட்டில் அமர்ந்திருந்த ஒரு ஆறு வயது குழந்தை செய்த அடம் என்னை படம் பார்க்க விடாமல் தடுத்தது. ப்ளைட்டில் அஜீத் அறிமுகமாகும் காட்சியை அந்தக் குழந்தை பார்க்காமல் அடம்பிடிக்க அவளின் தந்தை "அங்க பாரு, அஜீத்" என்று திரையை காட்டினார். அதற்கு அந்தப் பெண் "ம்ஹும், எனக்கு அஜீத் பிடிக்காது. எனக்கு விஜய் தான் பிடிக்கும்" என்று கூறியதை கேட்டதும் அதை சொன்னது ஒரு குழந்தை என்பது கூட மறந்து போய் என் நரம்புகள் புடைக்க கோபத்துடன் கை விரல்களை மடக்கினேன். 'தல' ரசிகனான நானே கோபப் படக்கூடாது என என்னை நானே கட்டுப் படுத்திக் கொண்டு அமர்ந்தேன்.

                      அந்தப் பெண் மீண்டும் "அஜீத், ஆட்டோ டிரைவரா, நல்லாவே இல்லே. விஜய்தான் வேட்டைக்காரன்ல சூப்பரா இருந்தான்" என்றது. பின்னர் "ஐயே, போலீசா இதுவும் நல்லால்லே, விஜய் போக்கிரில நல்ல போலீசா வருவான்" என்றது. இதற்கு மேலும் பொறுக்க முடியாமல் நான் "குழந்தைய கொஞ்சம் பேசாம இருக்க சொல்லுங்க" என்று சொல்ல நினைத்து சொல்லாமல் இருந்துவிட்டேன். பின்னர் 'அதாரு உதாரு' பாடலை ரசித்த அவள் சீட்டில் அமர்ந்தபடியே ஆடத் துவங்கிவிட்டாள். சிறிது நேரம் கழித்து அந்தப் பெண் "அந்த பாப்பாவோட அம்மா இனி வரமாட்டாங்களா?" என்றது. அஜீத்தின் தோளில் அவர் மகள் சாயும் காட்சியில் இந்தப் பெண் அவள் தந்தையின் தோள்களில் சாய்ந்து கொண்டாள். இடைவேளை வந்தது. அந்தப் பெண் அவள் தந்தையிடம் அஜீத்துக்கு ஒண்ணும் ஆகாதில்லப்பா? என்று முகத்தை சோகமாக வைத்து கொண்டு கேட்டது. பின் தலை சாய்த்து தந்தை மடியில் படுத்துக் கொண்டது.

                        படம் மீண்டும் தொடங்கியவுடன் அமைதியாக படத்தை பார்க்க ஆரம்பித்தது. கையில் வைத்திருந்த பாப்கார்னை கூட விவேக் வரும் சில இடங்களில் மட்டும் தான் சாப்பிட்டது. அஜீத்தும் அவர் மகளும் டூர் செல்லும் பாடல் காட்சியின் போது "அப்பா, நீயும் என்னை இங்கெல்லாம் கூட்டிட்டு போப்பா" என்றது. அனுஷ்காவும், அஜித் மகளும் வீட்டிற்குள் இருக்கும் போது ஆறு ரவுடிகள் அஜித்தின் வீட்டிற்கு வர, வீட்டு வாசலில் ஸ்டைலாக அஜீத் நிற்பதை பார்த்த அந்தப் பெண் "டே, இப்ப உள்ள வாங்கடா பார்க்கலாம்" என்றதை கேட்டு ரசித்தது அவள் பெற்றோர் மட்டுமல்ல நானும் அவ்வரிசையில் அமர்ந்திருந்த அனைவரும். மற்றொரு காட்சியில் அஜித்தின் மகள் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று அடம்பிடிக்க, "ப்ளீஸ் அஜீத் நோ சொல்லிடு" என்றாள். எனக்கோ ஆச்சர்யம். இந்த சிறு வயதில் (அதிகபட்சம் ஏழு வயதிருக்கலாம்) இவ்வளவு யோசிக்கிறாளே இந்தப் பெண் என்று.

                           பள்ளியில் பாடிகார்ட்ஸ் எல்லோரையும் கொன்றுவிட்டு அஜித்தின் மகளை அருண் விஜய் கடத்தி சென்றதும் தல கதறி அழும் காட்சி, தலயுடன் சேர்ந்து இந்தப் பெண்ணும் அழத்துவங்கி விட்டாள் (அவள் தந்தை இது சினிமாடா என்று சொல்லி தேற்ற சிறிது நேரமாயிற்று) பின் கடைசி காட்சியில் 'தல' அருண் விஜயை அடித்து இழுத்து வரும் காட்சியில் "அவனை துப்பாக்கியால சுட்டுட சொல்லுங்கப்பா" என்றது. பின் மீண்டும் அஜீத் தன் பெண்ணை அணைக்கும் காட்சியில் இந்தச் சிறுமியும் அவள் தந்தையை அணைத்தபடி "ஐ லவ் யூ பா" என்றது. அதைப் பார்த்த என் கண்களிலும் கொஞ்சம் வேர்த்தது. படம் முடிந்து அவர்கள் பின்னே நான் வெளியேறிக் கொண்டிருந்தேன். அந்தப் பெண் அவள் தந்தையிடம் "அப்பா, அடுத்த அஜீத் படம் எப்ப வரும் பா? என்றது..!



Saturday, January 31, 2015

ப்ரீமாரிடல் செக்ஸ் (Premarital Sex) - 18+

                                  அமெரிக்கா சென்ற புதிதில் பாஸ்டன் நகரத்தில் தங்குவதற்கு ஒரு அபார்ட்மெண்டை வாடகைக்கு எடுத்தேன். அச்சமயம் சிங்கிள் பெட்ரூம் கிடைக்காததால் ஒரு டபுள் பெட்ரூமை வாடகைக்கு எடுத்திருந்தேன். அதன் முழு தொகையையும் செலுத்தும் அளவிற்கு அப்போது வசதி இல்லாததால் அந்த அபார்ட்மெண்ட்டை ஷேர் செய்ய ஒரு ரூம் மேட் தேவை என இணையத்தில் ஒரு விளம்பரம் கொடுத்திருந்தேன். நான் விளம்பரம் கொடுத்து மூன்று வாரம் வரை எதுவும் ரெஸ்பான்ஸ் இல்லாமல் இருந்தது. ஒரு வெள்ளிக்கிழமை மாலை அலுவல் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது ஒரு போன் கால். இணையத்தில் என் விளம்பரத்தை பார்த்ததாகவும் அபார்ட்மெண்டை பார்க்க விரும்புவதாகவும், பிடித்திருந்தால் ரூம் மேட் ஆக சம்மதம் எனவும் கூறியது. மறுமுனையில் ஒலித்தது ஒரு பெண் குரல் போலிருந்தது. நான் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்ததால் அது மென்குரல் கொண்ட ஆணினுடையதா இல்லை பெண்ணினுடையதா என்று அனுமானிக்க முடியவில்லை. பெயரையும் நான் சரியாக கேட்காமல் விட்டுவிட்டேன். இருப்பினும் நாளை காலை  வருமாறு கூறிவிட்டு போனை அணைத்துவிட்டேன்.




                                 மறுநாள் விடுமுறை நாளாதலால் காலையிலேயே "ஐடாகோ" உருளைக்கிழங்கை கொண்டு பிரமாதமான ஒரு சாம்பார் வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது வீட்டின் அழைப்பு மணி அடிக்கும் ஓசை கேட்டு நான் அணிந்திருந்த "ஏப்ரனோடு" சென்று கதவைத் திறந்தேன். எதிரே பத்தொன்பது, இருபது வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் நின்றிருந்தாள். அமெரிக்கர்களுக்கே உரிய தங்க நிறத்தில் ஜொலித்த அவள் கூந்தல் அவள் தோள் வரை நீண்டிருந்தது. நீலக் கண்களும், பளீரென்ற பல்வரிசையும், முழுக்கை டீஷர்ட் மற்றும்  ஜீன்ஸில் ஒளிந்திருந்த அழகுகளும் அவள் பேரழகி என்று பறை சாற்றியது. கதவின் தாளை முழுதும் விலக்காமல் "யெஸ்" என்றேன். "அனாந்த ராஜா" என்று எதோ ஒரு பெயரை உச்சரித்தாள். ஓரிரு நொடிகளுக்கு பின் தான் அவள் உச்சரித்தது என் பெயர் தான் என்று விளங்கியது. "எஸ், இட்ஸ் மீ" என்றேன் தாளை விலக்காமல்.  "ஐ, ஸ்போக் டு யு எஸ்டர்டே" என்று தன் தேன் குரலில் சொன்னபோது கொஞ்சம் சிலையாகிப் போனேன்.

                                 ரூம் மேட் தேவை என்று சொல்லியிருந்தேன். ஆனால் ரூம் மேட்டாக வேண்டி ஒரு தேவதையே வந்து கதவை தட்டும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதுவும் ஒரு அமெரிக்க தேவதை அதிகாலையில் என் வாசல் கதவை தட்டும் என்று கனவிலும் நினைக்கவில்லை.அவசர அவசரமாக கதவை திறந்து "ப்ளீஸ், கம் இன் " என்றேன். உள்ளே நுழைந்த அவள் ஒவ்வொரு அறையாக பார்க்க ஆரம்பித்துவிட்டாள். நேற்று அழைத்துச் சொல்லியிருந்த போதும் நான் தயாராக இல்லாததால் ஆங்காங்கே இறைந்து கிடந்த என் உடைமைகளை பொறுக்கியபடியே அவளிடம் "சாரி, ஐ டிடின் கெட் யுவர் நேம் ஓவர் தி போன்" என்றேன். "ஒ.. ஐயம் மெலிஸா" என்றபடி அவள் மெல்லிய கைகளை நீட்டினாள்.  வலக்கையில் வைத்திருந்த சாம்பார் கரண்டியை இடக்கைக்கு மாற்றி வலக்கையை அவளுக்கு நீட்டினேன். பஞ்சு போன்ற அவள் கரங்களை பற்றியபோது அவள் பெற்றோர் அவளுக்கு பொருத்தமான பெயரை இட்டதாகவே உணர்ந்தேன். 


                                   அறையை நான்  எப்போதும் சுத்தமாக வைத்திருப்பேன் என்பதால் எல்லா அறையையும் சுற்றிக் காண்பித்தேன். பின் அபத்தமாக ஒரு கேள்வியை கேட்டு வைத்தேன். "திஸ் ரூம் ஈஸ் பார் யு, ஆர் பார் சம்படி எல்ஸ்?" என்றவுடன், அவள் நிதானமாக என் கண்களைப் பார்த்து "பார் மைசெல்ப்" என்றாள். இன்னமும் ஆச்சர்யம் விலகாத நிலையில் நான் "ஐ வாஸ் எக்ஸ்பெக்டிங் எ மேல்" என்று உண்மையை உளறிவைத்தேன். ஹாலின் மையத்தில் நின்று கொண்டிருந்த அவள் சட்டென்று திரும்பி "ஈஸ் தேர் எ ப்ராப்ளம்?" என்றாள்.  "நோ, நாட் அட் ஆல். இட்ஸ் ஜஸ்ட் தட் ஐ பெல்ட் யு மைட் பீல் அன்கம்பர்டபில்". "வொய் ஷுட் ஐ பீல் அன்கம்பர்டபில்?" என்று அவள் உடனடியாக கேட்ட கேள்விக்கு நான் கொஞ்சம் தயங்கியபடியே கொடுத்த பதில் "இட்ஸ் நாட் ஸோ காமன் இன் இண்டியா" என்றேன். 


                                   "ஒய் ஈஸ் தட்" என்றவளிடம் நான்  தமிழ்நாட்டின் கலாச்சாரங்களையும், ஆண்களும் பெண்களும் ஒரே அறையில் தங்குவது என்பது அரிதாய் கூட நடக்காது என்பதையும் கூறினேன். அப்பொழுதும் அவள் சந்தேகம் தீர்ந்த பாடில்லை. "இஸ் தேர் சம்திங் ராங் இன் தட்" என்றவளுக்கு திருமணத்துக்கு முன் ஒரு ஆணும் பெண்ணும் தனியாய் தங்கும் வழக்கம் இல்லை என்று கூறினேன். அவள் அடுத்த கேள்விக் கணையை அனுப்பும் முன்னரே நான் " பிகாஸ் இன் இண்டியா ப்ரீ-மாரிடல் செக்ஸ் இஸ் நாட் அலவுட்" என்று நான் சொன்னதை ஆச்சர்யத்தோடு கேட்டுவிட்டு என்னிடம் "ஸோ, ஆர் யூ சேயிங் பீபிள் இன் இண்டியா நெவர் ஹேவ் செக்ஸ் பிபோர் மேரேஜ்?" என்றாள். கொஞ்சம் பப்பி ஷேமாக இருந்தாலும் "யெஸ், அண்ட் மோஸ்ட் ஆப் தெம் கெட் மேரீட் ஒன்லி எபவ் ட்வண்டி பைவ் ஆர் சிக்ஸ்." என்றேன். அவள் அன்று நான் சொன்னதை முழுதாக நம்பவில்லை என்பது எனக்கு நன்றாக தெரிந்தது.


                              ஆனால் இன்று நிச்சயம் அதே நிலைமை இல்லை. சென்ற பத்து பதினைந்து வருடங்களில் "வெஸ்டர்னைசேஷன்" என்ற பெயரில் கலாச்சாரத்தை இழந்து இன்று செக்ஸ் என்பது கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் கூட வியாபித்திருக்கிறது என்பதே திடுக்கிட வைக்கும் உண்மையாக இருக்கிறது. இலைமறை காயாக இருந்த விஷயங்கள் பலவற்றையும் இணையத்தில் தரவிறக்கி கற்றுக் கொள்ளும் தலைமுறைக்கு கலாச்சார பாடங்கள் என்பது நகைப்புக்குரிய விஷயங்களாகிவிட்டது. சென்ற வார "இந்தியா டுடே" நாளிதழைப் படித்த என் தலைமுறைக்கு முந்தையவர்களுக்கு எல்லாம் அந்த செய்திகள் நிச்சயம் அதிர்ச்சிகரமான தகவல்களாகத்தான் இருக்க முடியும். பெரும்பாலான பள்ளி/கல்லூரி செல்லும் பதின்வயது பாலகர்கள் தம்முடன் பயிலும் மற்ற பாலினத்தவரோடு உடலுறவு வைத்திருந்ததாக கூறும் அந்த புள்ளிவிவரங்கள் நம் வயிற்றில் புளியை கரைக்கின்றன.

                                   மேலும் டேட்டிங், லிவ்விங் டுகெதர் போன்ற மேலைநாட்டு கலாச்சாரங்களை பின்பற்றும் தலைமுறை நமக்கு அச்சமூட்டுபவையாகத்தான் இருக்கிறது. மேலை நாடுகளில் உள்ளது போன்ற சட்ட திட்டங்களோ, தவறுகளுக்கான தண்டனைகளோ நம் நாட்டில் இல்லை என்பதே நம் நாட்டில் ஆங்காங்கே நடக்கும் பாலின கொடுமைகளுக்கான முக்கிய காரணம். இணையத்தை பயன்படுத்த வயது வரம்பு, சிறுவர்களின் இணையப் பயன்பாட்டின் போது பெற்றோரின் கண்காணிப்பு போன்ற விஷயங்கள் செயல்படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் பல இருந்த போதும் அரசாங்கமும் மக்களும் இந்த விஷயத்தில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தினாலே அன்றி எதிர்கால இந்தியா ஒளிரப்போவது இல்லை..!



How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...