SPOILER ALERT..
நண்பனின் திருமணத்திற்காய் சிவகாசி சென்றிருந்தேன். திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்த அதே தினம் தான் என் ஆதர்ச நாயகன் 'தல' படத்தின் வெளியீடும். நண்பனிடத்தில் முன்கூட்டியே கூறிவிட்டேன், திருமணம் முடிந்த அடுத்த நிமிடம் நான் திரையரங்கிற்கு சென்று விடுவேன் என்று. அவனும் எனக்காக 'என்னை அறிந்தால்' படத்திற்கு டிக்கட் எடுத்துத் தர முயற்சித்து தோற்றான். சிவகாசியின் செல்லப்பிள்ளை, தென் தமிழ்நாட்டின் போர்வாள் 'சிவகாசிக்காரன்' என்று செல்லமாக அழைக்கப்படும் ராம்குமாரிடம் கேட்டேன். 'டிக்கட் அங்கேயே கிடைக்கும் தல' என்று உறுதியான குரலில் கூறினார். இருந்தும் அரைமணி நேரம் முன்னரே சென்று டிக்கட் வாங்கி விட்டேன்.
இரண்டரை மணிக்கு என்று அறிவிக்கப்பட்டிருந்த போதும் இரண்டு இருபதுக்கு தொடங்கிவிட்டார்கள். ரசிகர்களின் ஆரவாரம் ஒரு பக்கம் குதூகலத்தை கொடுத்தாலும் என் முன் சீட்டில் அமர்ந்திருந்த ஒரு ஆறு வயது குழந்தை செய்த அடம் என்னை படம் பார்க்க விடாமல் தடுத்தது. ப்ளைட்டில் அஜீத் அறிமுகமாகும் காட்சியை அந்தக் குழந்தை பார்க்காமல் அடம்பிடிக்க அவளின் தந்தை "அங்க பாரு, அஜீத்" என்று திரையை காட்டினார். அதற்கு அந்தப் பெண் "ம்ஹும், எனக்கு அஜீத் பிடிக்காது. எனக்கு விஜய் தான் பிடிக்கும்" என்று கூறியதை கேட்டதும் அதை சொன்னது ஒரு குழந்தை என்பது கூட மறந்து போய் என் நரம்புகள் புடைக்க கோபத்துடன் கை விரல்களை மடக்கினேன். 'தல' ரசிகனான நானே கோபப் படக்கூடாது என என்னை நானே கட்டுப் படுத்திக் கொண்டு அமர்ந்தேன்.
அந்தப் பெண் மீண்டும் "அஜீத், ஆட்டோ டிரைவரா, நல்லாவே இல்லே. விஜய்தான் வேட்டைக்காரன்ல சூப்பரா இருந்தான்" என்றது. பின்னர் "ஐயே, போலீசா இதுவும் நல்லால்லே, விஜய் போக்கிரில நல்ல போலீசா வருவான்" என்றது. இதற்கு மேலும் பொறுக்க முடியாமல் நான் "குழந்தைய கொஞ்சம் பேசாம இருக்க சொல்லுங்க" என்று சொல்ல நினைத்து சொல்லாமல் இருந்துவிட்டேன். பின்னர் 'அதாரு உதாரு' பாடலை ரசித்த அவள் சீட்டில் அமர்ந்தபடியே ஆடத் துவங்கிவிட்டாள். சிறிது நேரம் கழித்து அந்தப் பெண் "அந்த பாப்பாவோட அம்மா இனி வரமாட்டாங்களா?" என்றது. அஜீத்தின் தோளில் அவர் மகள் சாயும் காட்சியில் இந்தப் பெண் அவள் தந்தையின் தோள்களில் சாய்ந்து கொண்டாள். இடைவேளை வந்தது. அந்தப் பெண் அவள் தந்தையிடம் அஜீத்துக்கு ஒண்ணும் ஆகாதில்லப்பா? என்று முகத்தை சோகமாக வைத்து கொண்டு கேட்டது. பின் தலை சாய்த்து தந்தை மடியில் படுத்துக் கொண்டது.
படம் மீண்டும் தொடங்கியவுடன் அமைதியாக படத்தை பார்க்க ஆரம்பித்தது. கையில் வைத்திருந்த பாப்கார்னை கூட விவேக் வரும் சில இடங்களில் மட்டும் தான் சாப்பிட்டது. அஜீத்தும் அவர் மகளும் டூர் செல்லும் பாடல் காட்சியின் போது "அப்பா, நீயும் என்னை இங்கெல்லாம் கூட்டிட்டு போப்பா" என்றது. அனுஷ்காவும், அஜித் மகளும் வீட்டிற்குள் இருக்கும் போது ஆறு ரவுடிகள் அஜித்தின் வீட்டிற்கு வர, வீட்டு வாசலில் ஸ்டைலாக அஜீத் நிற்பதை பார்த்த அந்தப் பெண் "டே, இப்ப உள்ள வாங்கடா பார்க்கலாம்" என்றதை கேட்டு ரசித்தது அவள் பெற்றோர் மட்டுமல்ல நானும் அவ்வரிசையில் அமர்ந்திருந்த அனைவரும். மற்றொரு காட்சியில் அஜித்தின் மகள் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று அடம்பிடிக்க, "ப்ளீஸ் அஜீத் நோ சொல்லிடு" என்றாள். எனக்கோ ஆச்சர்யம். இந்த சிறு வயதில் (அதிகபட்சம் ஏழு வயதிருக்கலாம்) இவ்வளவு யோசிக்கிறாளே இந்தப் பெண் என்று.
பள்ளியில் பாடிகார்ட்ஸ் எல்லோரையும் கொன்றுவிட்டு அஜித்தின் மகளை அருண் விஜய் கடத்தி சென்றதும் தல கதறி அழும் காட்சி, தலயுடன் சேர்ந்து இந்தப் பெண்ணும் அழத்துவங்கி விட்டாள் (அவள் தந்தை இது சினிமாடா என்று சொல்லி தேற்ற சிறிது நேரமாயிற்று) பின் கடைசி காட்சியில் 'தல' அருண் விஜயை அடித்து இழுத்து வரும் காட்சியில் "அவனை துப்பாக்கியால சுட்டுட சொல்லுங்கப்பா" என்றது. பின் மீண்டும் அஜீத் தன் பெண்ணை அணைக்கும் காட்சியில் இந்தச் சிறுமியும் அவள் தந்தையை அணைத்தபடி "ஐ லவ் யூ பா" என்றது. அதைப் பார்த்த என் கண்களிலும் கொஞ்சம் வேர்த்தது. படம் முடிந்து அவர்கள் பின்னே நான் வெளியேறிக் கொண்டிருந்தேன். அந்தப் பெண் அவள் தந்தையிடம் "அப்பா, அடுத்த அஜீத் படம் எப்ப வரும் பா? என்றது..!
நண்பனின் திருமணத்திற்காய் சிவகாசி சென்றிருந்தேன். திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்த அதே தினம் தான் என் ஆதர்ச நாயகன் 'தல' படத்தின் வெளியீடும். நண்பனிடத்தில் முன்கூட்டியே கூறிவிட்டேன், திருமணம் முடிந்த அடுத்த நிமிடம் நான் திரையரங்கிற்கு சென்று விடுவேன் என்று. அவனும் எனக்காக 'என்னை அறிந்தால்' படத்திற்கு டிக்கட் எடுத்துத் தர முயற்சித்து தோற்றான். சிவகாசியின் செல்லப்பிள்ளை, தென் தமிழ்நாட்டின் போர்வாள் 'சிவகாசிக்காரன்' என்று செல்லமாக அழைக்கப்படும் ராம்குமாரிடம் கேட்டேன். 'டிக்கட் அங்கேயே கிடைக்கும் தல' என்று உறுதியான குரலில் கூறினார். இருந்தும் அரைமணி நேரம் முன்னரே சென்று டிக்கட் வாங்கி விட்டேன்.
அந்தப் பெண் மீண்டும் "அஜீத், ஆட்டோ டிரைவரா, நல்லாவே இல்லே. விஜய்தான் வேட்டைக்காரன்ல சூப்பரா இருந்தான்" என்றது. பின்னர் "ஐயே, போலீசா இதுவும் நல்லால்லே, விஜய் போக்கிரில நல்ல போலீசா வருவான்" என்றது. இதற்கு மேலும் பொறுக்க முடியாமல் நான் "குழந்தைய கொஞ்சம் பேசாம இருக்க சொல்லுங்க" என்று சொல்ல நினைத்து சொல்லாமல் இருந்துவிட்டேன். பின்னர் 'அதாரு உதாரு' பாடலை ரசித்த அவள் சீட்டில் அமர்ந்தபடியே ஆடத் துவங்கிவிட்டாள். சிறிது நேரம் கழித்து அந்தப் பெண் "அந்த பாப்பாவோட அம்மா இனி வரமாட்டாங்களா?" என்றது. அஜீத்தின் தோளில் அவர் மகள் சாயும் காட்சியில் இந்தப் பெண் அவள் தந்தையின் தோள்களில் சாய்ந்து கொண்டாள். இடைவேளை வந்தது. அந்தப் பெண் அவள் தந்தையிடம் அஜீத்துக்கு ஒண்ணும் ஆகாதில்லப்பா? என்று முகத்தை சோகமாக வைத்து கொண்டு கேட்டது. பின் தலை சாய்த்து தந்தை மடியில் படுத்துக் கொண்டது.
படம் மீண்டும் தொடங்கியவுடன் அமைதியாக படத்தை பார்க்க ஆரம்பித்தது. கையில் வைத்திருந்த பாப்கார்னை கூட விவேக் வரும் சில இடங்களில் மட்டும் தான் சாப்பிட்டது. அஜீத்தும் அவர் மகளும் டூர் செல்லும் பாடல் காட்சியின் போது "அப்பா, நீயும் என்னை இங்கெல்லாம் கூட்டிட்டு போப்பா" என்றது. அனுஷ்காவும், அஜித் மகளும் வீட்டிற்குள் இருக்கும் போது ஆறு ரவுடிகள் அஜித்தின் வீட்டிற்கு வர, வீட்டு வாசலில் ஸ்டைலாக அஜீத் நிற்பதை பார்த்த அந்தப் பெண் "டே, இப்ப உள்ள வாங்கடா பார்க்கலாம்" என்றதை கேட்டு ரசித்தது அவள் பெற்றோர் மட்டுமல்ல நானும் அவ்வரிசையில் அமர்ந்திருந்த அனைவரும். மற்றொரு காட்சியில் அஜித்தின் மகள் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று அடம்பிடிக்க, "ப்ளீஸ் அஜீத் நோ சொல்லிடு" என்றாள். எனக்கோ ஆச்சர்யம். இந்த சிறு வயதில் (அதிகபட்சம் ஏழு வயதிருக்கலாம்) இவ்வளவு யோசிக்கிறாளே இந்தப் பெண் என்று.
பள்ளியில் பாடிகார்ட்ஸ் எல்லோரையும் கொன்றுவிட்டு அஜித்தின் மகளை அருண் விஜய் கடத்தி சென்றதும் தல கதறி அழும் காட்சி, தலயுடன் சேர்ந்து இந்தப் பெண்ணும் அழத்துவங்கி விட்டாள் (அவள் தந்தை இது சினிமாடா என்று சொல்லி தேற்ற சிறிது நேரமாயிற்று) பின் கடைசி காட்சியில் 'தல' அருண் விஜயை அடித்து இழுத்து வரும் காட்சியில் "அவனை துப்பாக்கியால சுட்டுட சொல்லுங்கப்பா" என்றது. பின் மீண்டும் அஜீத் தன் பெண்ணை அணைக்கும் காட்சியில் இந்தச் சிறுமியும் அவள் தந்தையை அணைத்தபடி "ஐ லவ் யூ பா" என்றது. அதைப் பார்த்த என் கண்களிலும் கொஞ்சம் வேர்த்தது. படம் முடிந்து அவர்கள் பின்னே நான் வெளியேறிக் கொண்டிருந்தேன். அந்தப் பெண் அவள் தந்தையிடம் "அப்பா, அடுத்த அஜீத் படம் எப்ப வரும் பா? என்றது..!
சத்தியமா சொல்லுங்க,இப்புடியொரு சம்பவம் தியேட்டர்ல நடந்துச்சு?(பாவம்,பேபி ஆ.வி.)
ReplyDeleteநிஜமா நடந்துச்சுங்க.. ஆவியவே சந்தேகப் படறீங்களா? :(
Deleteஎப்படியோ படத்தோட 1 பதிவும் தேறிடிச்சு போல,
ReplyDeleteஆமா இன்னைக்குதான் தாங்கள் குப்புற வந்து தலை நிமிர்ந்த நாளாமே.
வாழ்த்துகள்.
நன்றிங்க..
Deleteவித்தியாசமா விமர்சனம் பண்ணியிருக்கீங்க ஆனந்த். குழந்தைகளுக்கப் பிடித்த படமா, குழந்தைகளுக்கும் பிடித்த படமா?
ReplyDeleteஅந்த ஊர் தியேட்டர் எப்படி இருந்ததுன்னு சொல்லவில்லையே....
கொஞ்சம் வயலன்ஸ் ஆனா குழந்தைகளும் ரசிச்சு பார்த்தாங்க சார்.. தியேட்டர் பிரமாதமா இல்லை. கிட்டத்தட்ட சைதை ராஜ் மாதிரி இருந்தது.. :)
Deleteகுழந்தைகள் தான் (கள்ளம் கபடம் இல்லாமல்) அதிகம் யோசிப்பார்கள்...
ReplyDeleteஆமா DD, நீங்க சொல்றது சரிதான்.
Deleteசூப்பர் அனுபவ விமர்சனம் அண்ணா !
ReplyDeleteநன்றி மேக்னேஷ்..
Deleteசூப்பர்ப்.
ReplyDeleteஆஹா, பிரம்மரிஷி பட்டம்.. ;)
Deleteஆவிக்கு கல்யாணம் ஆகிறப்ப தல படம் வராம பார்த்து கொள்ளனும் இல்லையென்றால் தாலி கட்டியவுடன் மனைவியைவிட்டு விட்டு படம் பார்க்க சென்று விடுவார் போல....
ReplyDeleteஅஹஹஹஹஹஹஹ் "அது" ...ஓ! இங்கயும் தல காத்து அடிச்சுருச்சுப்பா....
Deleteஹஹஹா பாஸ்..! யோசிக்க வேண்டிய விஷயம் தான்..
Deleteகீதா சேச்சி - ஹஹஹா..
Deleteகோட்டுக்கு அந்த பக்கம் படமும் கோட்டுக்கு இந்த பக்கம் குழந்தையையும் கவனித்திருக்கிறீர்கள்
ReplyDeleteபடம் பார்க்கிறப்ப டிஸ்டர்ப் பண்ற எதுவுமே எனக்கு பிடிக்காது.. ஆனா முதல் முறையா அந்த குழந்தையின் சேட்டையை ரசித்தேன் சார்..
Deleteஆவி! சூப்பர் ஆவி! ஒரு குட்டிப் பாப்பா சொன்ன கமென்ட்ஸ் வைச்சே படத்தைப் பத்தி சொல்லிட்டீங்க.....வித்தியாசமான விமர்சனம்!
ReplyDelete"அது" !!!!
நன்றி சார்..
Deleteவித்தியாசமான விமர்சனம். ஒரு குட்டிப் பெண்ணின் பார்வையில் உங்கள் கருத்தை சொல்லி விட்டீர்கள். விமர்சனம் எழுதுவது தனிக் கலை என்பதை நிரூபித்து விட்டீர்கள்
ReplyDeleteநன்றி முரளிதரன்.. படத்தையும் பார்த்துவிடுங்கள்.. ;)
Deleteசூப்பரான விமர்சனம் ஆவி ... இதுவரை படித்த எஅ விமர்சனத்தில் இது சுவராஸ்யமாக இருக்குது.அந்தப்புள்ளய ஏன் போட்டோ புடிச்சி போடல?
ReplyDeleteஅட.. அது தோணவே இல்லையே.. :)
Deleteநல்ல விமர்சனம்.
ReplyDeleteபொதுவாக அஜித் படம் பார்க்கப் போகும்போது, ஏதோ ஜாக்கிசான் படம் பார்ப்பது மாதிரி வெறும் ஜெண்ட்ஸாகவே தியேட்டரில் இருப்பார்கள்.
முதன்முதலாக குடும்பம் குடும்பமாக அஜித் படம் பார்க்க வருவது ஆச்சரியமாக இருக்கிறது.
ஆமா பாஸ்.. அதுவும் பர்ஸ்ட் டே வுக்கே நிறைய பேமிலி ஆடியன்ஸ்.. :)
Deleteகுழந்தையும் தெய்வமும் ஒண்ணுன்னு சும்மாவா சொன்னாங்க! குழந்தையை வைத்து விமர்சனம் புதிய பாணிதான்! அருமை!
ReplyDeleteகற்பனையாக இருந்தாலும் ரசிக்கும்படி இருந்தது விமர்சனம்
ReplyDeleteReally Great, Thanx For sharing Your Wonderful Experience Wit Us :)
ReplyDeleteஅட இது கூட நல்லாயிருக்கே...
ReplyDeleteவித்தியாசமான விமர்சனம்.
ReplyDeleteரசித்தேன் ஆவி.