Friday, February 13, 2015

அனேகன்-அசல்தானா?

                      அனேகன் ஏதோ இங்க்லீஷ் படத்தோட காப்பின்னு சொல்றாய்ங்க. ஆனா பழைய படங்கள் நிறைய பார்த்தவங்க டக்குன்னு  சொல்லிடுவாங்க   'நெஞ்சம் மறப்பதில்லை' மாதிரி இருக்குன்னு.   அந்தப் படம் பார்க்காதவங்களுக்காக சிறிய கதைச் சுருக்கம்.  பணக்கார கதாநாயகனும் ஏழை நாயகியும் காதலிக்கிறாங்க. அது நாயகனோட அப்பா நம்பியாருக்கு பிடிக்கல. ஸோ அவங்களை பிரிக்க நெனைச்சு ரெண்டு பேரையும் சுட்டுக் கொன்னுடறாரு. அத்தோட முடிஞ்சுதான்னா இல்ல. அவங்க ரெண்டு பேரும் அதே ஊர்ல திரும்ப பிறந்து ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்றாங்க. ரெண்டு பேருக்கும் பூர்வ ஜென்மத்துல நடந்த விஷயங்கள் தெரிய வரும்போது மறுபடியும் நம்பியார் வந்து (அவரு போன ஜென்மத்துல செத்திருக்க மாட்டாரு)  இவங்களை பிரிக்க வருவாரு. அப்புறம் கிளைமாக்ஸ். இதே கதையை கொஞ்சம் ஐ.டி, டிப்ரஷன், ஹிப்னாடிசம், ரங்கூன்,  டங்கா மாரின்னு பல மசாலா சேர்த்து கொடுத்திருக்காங்க.

தனுஷ் தி பெர்பார்மர் 

                      தனுஷ் தான் தேர்ந்தெடுக்கும் கதைகள் தான் அவருக்கு பலம் என்று எண்ணிவிட முடியாது. வேலையில்லா பட்டதாரி போன்ற கதைகளுக்கும் சரி, ஷமிதாப், அனேகன் போன்ற படங்களுக்கும் சரி தன் நூறு சதவிகித உழைப்பையும் கொட்டி நடித்ததற்கே பாராட்ட வேண்டும். சில இடங்களில் குறிப்பாக காளி கேரக்டரில் 'புதுப்பேட்டை' தனுஷை கண் முன் கொண்டு வருகிறார். இன்னொரு தேசிய விருது பார்சல்!


அமேஸிங் அமைரா 

                      'உசிரே போகுதே உசிரே போகுதே உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையிலே' என்ற பாட்டு இவருக்காக அல்லவா எழுதப்பட்டிருக்க வேண்டும். அடடடடடடடா அம்சமாக இருக்கிறார் அமைரா. இனி பார்பி டால் ரோல்களுக்கு ஒரு நடிகை கிடைச்சாச்சு. நல்லா நடிக்கவும் செய்யுறார்.


 டங்கா ஹாரிஸ் 

                    ஹாரிஸ் ஜெயராஜ் இசை சுமார் தான், ஓரிரு பாடல்கள் அசத்தல். பட் பெண்களையும் தியேட்டரில் ஆட்டம் போட வைத்த 'டங்கா மாரிக்காகவே' இவரை மன்னித்து விடலாம்.


சூப்பர் சுபா 

                     'ஆரம்பம்'  படத்தில் சொல்லிக்கொள்ளும்படி வசனம் இல்லாவிட்டாலும் இந்தப் படத்தில் 'நச்' வசனங்கள் மூலம் நம்மை அசத்துவது இந்த இருவரே.


'அடுத்த ஷங்கர்' ஆனந்த் 

                        பிரம்மாண்டம் என்பதில் அடுத்த ஷங்கராக உருவெடுத்து வருகிறார் கே.வி. ஆனந்த். இதிலும் அதே பாணியை பாலோ செய்திருக்கிறார். 'கனா கண்டேன்' போன்ற படங்கள் இவர் இனி செய்வாரா என்பது சந்தேகமே.                         ஓம் பிரகாஷின் அழகான போட்டோகிராபி ரங்கூனையும் சென்னையையும் அழகாக காட்டுகிறது. ஆஷிஷ் வித்யார்த்தி, தலைவாசல் விஜய், ஜெகன் ஆங்காங்கே வந்து போகிறார்கள். கார்த்திக் நவரசத்தையும் பிழிந்து கொடுக்க முயற்சித்து,  சுரேஷ் கோபியிடம் சில பாயிண்டுகளில் தோற்கிறார். மொத்ததுல படம் "டங்கா மாரிக்காண்டியும், அந்த கோதுமை குல்பிக்காகவும் ஒருவாட்டி  பாக்கலாம்பா"


8 comments:

 1. வணக்கம்
  ஆவி அண்ணா

  படம் இன்னும் பார்க்க வில்லை... விமர்சனத்தை பார்த்த பின் படம் பார்க்கவேண்டும் என்ற ஆசை மிக விரைவில் பார்க்கிறேன்... நன்றாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 2
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. விமர்சனம் படித்தேன். ரசித்தேன்.

  ReplyDelete
 3. நெஞ்சம் மறப்பதில்லை... என்றும் நெஞ்சம் மறப்பதில்லை...

  ReplyDelete
 4. இப்படி சொதப்பி எழுதி இருக்கீங்களே.
  பூர்வ ஜென்ம ஞாபகம் யாருக்கும் வராது. பர்மா,இளவரசன்,எல்லாம் அதே மாதிரி உள்ள வீடியோ கேமின் பாதிப்புகள். உபயம்-போதை மாத்திரைகள்.
  காளி கதையை மூர்த்தி தான் சொல்லியிருப்பார் + ஒவிய விளக்கத்துடன்.
  காளி-கல்யாணியும் அதே முக அமைப்புடன் பிறந்தது ஒன்று தான் விசயம்.
  அது சாத்தியமா என்றால் சினிமாவில் சாத்தியமே.
  காளி கதையை சொல்லுமிடமும்,இன்ஸ்பெக்டர் ஒரு எவிடென்ஸ்ஸை மறைப்பதும் கதானாயகியோட மாமன் ஏதோ ஒரு திருடன் போல சித்தரிக்கப்பட்டது இவைகள் தான் நெருடல். அதுவும் ஒரு திரில்லர் பட லாஜிக் மீறல் மட்டுமே.
  நெஞ்சம் மறப்பதில்லை காப்பியெல்லாம் இல்லை.வேற ஏதாவது ஹாலிவுட் பட பெயர் சொல்லுங்க.

  ReplyDelete
 5. டங்குமாரி ஏதோ திட்டுற வார்த்தை போல...

  ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails