அமெரிக்கா சென்ற புதிதில் பாஸ்டன் நகரத்தில் தங்குவதற்கு ஒரு அபார்ட்மெண்டை வாடகைக்கு எடுத்தேன். அச்சமயம் சிங்கிள் பெட்ரூம் கிடைக்காததால் ஒரு டபுள் பெட்ரூமை வாடகைக்கு எடுத்திருந்தேன். அதன் முழு தொகையையும் செலுத்தும் அளவிற்கு அப்போது வசதி இல்லாததால் அந்த அபார்ட்மெண்ட்டை ஷேர் செய்ய ஒரு ரூம் மேட் தேவை என இணையத்தில் ஒரு விளம்பரம் கொடுத்திருந்தேன். நான் விளம்பரம் கொடுத்து மூன்று வாரம் வரை எதுவும் ரெஸ்பான்ஸ் இல்லாமல் இருந்தது. ஒரு வெள்ளிக்கிழமை மாலை அலுவல் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது ஒரு போன் கால். இணையத்தில் என் விளம்பரத்தை பார்த்ததாகவும் அபார்ட்மெண்டை பார்க்க விரும்புவதாகவும், பிடித்திருந்தால் ரூம் மேட் ஆக சம்மதம் எனவும் கூறியது. மறுமுனையில் ஒலித்தது ஒரு பெண் குரல் போலிருந்தது. நான் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்ததால் அது மென்குரல் கொண்ட ஆணினுடையதா இல்லை பெண்ணினுடையதா என்று அனுமானிக்க முடியவில்லை. பெயரையும் நான் சரியாக கேட்காமல் விட்டுவிட்டேன். இருப்பினும் நாளை காலை வருமாறு கூறிவிட்டு போனை அணைத்துவிட்டேன்.
மறுநாள் விடுமுறை நாளாதலால் காலையிலேயே "ஐடாகோ" உருளைக்கிழங்கை கொண்டு பிரமாதமான ஒரு சாம்பார் வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது வீட்டின் அழைப்பு மணி அடிக்கும் ஓசை கேட்டு நான் அணிந்திருந்த "ஏப்ரனோடு" சென்று கதவைத் திறந்தேன். எதிரே பத்தொன்பது, இருபது வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் நின்றிருந்தாள். அமெரிக்கர்களுக்கே உரிய தங்க நிறத்தில் ஜொலித்த அவள் கூந்தல் அவள் தோள் வரை நீண்டிருந்தது. நீலக் கண்களும், பளீரென்ற பல்வரிசையும், முழுக்கை டீஷர்ட் மற்றும் ஜீன்ஸில் ஒளிந்திருந்த அழகுகளும் அவள் பேரழகி என்று பறை சாற்றியது. கதவின் தாளை முழுதும் விலக்காமல் "யெஸ்" என்றேன். "அனாந்த ராஜா" என்று எதோ ஒரு பெயரை உச்சரித்தாள். ஓரிரு நொடிகளுக்கு பின் தான் அவள் உச்சரித்தது என் பெயர் தான் என்று விளங்கியது. "எஸ், இட்ஸ் மீ" என்றேன் தாளை விலக்காமல். "ஐ, ஸ்போக் டு யு எஸ்டர்டே" என்று தன் தேன் குரலில் சொன்னபோது கொஞ்சம் சிலையாகிப் போனேன்.
ரூம் மேட் தேவை என்று சொல்லியிருந்தேன். ஆனால் ரூம் மேட்டாக வேண்டி ஒரு தேவதையே வந்து கதவை தட்டும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதுவும் ஒரு அமெரிக்க தேவதை அதிகாலையில் என் வாசல் கதவை தட்டும் என்று கனவிலும் நினைக்கவில்லை.அவசர அவசரமாக கதவை திறந்து "ப்ளீஸ், கம் இன் " என்றேன். உள்ளே நுழைந்த அவள் ஒவ்வொரு அறையாக பார்க்க ஆரம்பித்துவிட்டாள். நேற்று அழைத்துச் சொல்லியிருந்த போதும் நான் தயாராக இல்லாததால் ஆங்காங்கே இறைந்து கிடந்த என் உடைமைகளை பொறுக்கியபடியே அவளிடம் "சாரி, ஐ டிடின் கெட் யுவர் நேம் ஓவர் தி போன்" என்றேன். "ஒ.. ஐயம் மெலிஸா" என்றபடி அவள் மெல்லிய கைகளை நீட்டினாள். வலக்கையில் வைத்திருந்த சாம்பார் கரண்டியை இடக்கைக்கு மாற்றி வலக்கையை அவளுக்கு நீட்டினேன். பஞ்சு போன்ற அவள் கரங்களை பற்றியபோது அவள் பெற்றோர் அவளுக்கு பொருத்தமான பெயரை இட்டதாகவே உணர்ந்தேன்.
அறையை நான் எப்போதும் சுத்தமாக வைத்திருப்பேன் என்பதால் எல்லா அறையையும் சுற்றிக் காண்பித்தேன். பின் அபத்தமாக ஒரு கேள்வியை கேட்டு வைத்தேன். "திஸ் ரூம் ஈஸ் பார் யு, ஆர் பார் சம்படி எல்ஸ்?" என்றவுடன், அவள் நிதானமாக என் கண்களைப் பார்த்து "பார் மைசெல்ப்" என்றாள். இன்னமும் ஆச்சர்யம் விலகாத நிலையில் நான் "ஐ வாஸ் எக்ஸ்பெக்டிங் எ மேல்" என்று உண்மையை உளறிவைத்தேன். ஹாலின் மையத்தில் நின்று கொண்டிருந்த அவள் சட்டென்று திரும்பி "ஈஸ் தேர் எ ப்ராப்ளம்?" என்றாள். "நோ, நாட் அட் ஆல். இட்ஸ் ஜஸ்ட் தட் ஐ பெல்ட் யு மைட் பீல் அன்கம்பர்டபில்". "வொய் ஷுட் ஐ பீல் அன்கம்பர்டபில்?" என்று அவள் உடனடியாக கேட்ட கேள்விக்கு நான் கொஞ்சம் தயங்கியபடியே கொடுத்த பதில் "இட்ஸ் நாட் ஸோ காமன் இன் இண்டியா" என்றேன்.
"ஒய் ஈஸ் தட்" என்றவளிடம் நான் தமிழ்நாட்டின் கலாச்சாரங்களையும், ஆண்களும் பெண்களும் ஒரே அறையில் தங்குவது என்பது அரிதாய் கூட நடக்காது என்பதையும் கூறினேன். அப்பொழுதும் அவள் சந்தேகம் தீர்ந்த பாடில்லை. "இஸ் தேர் சம்திங் ராங் இன் தட்" என்றவளுக்கு திருமணத்துக்கு முன் ஒரு ஆணும் பெண்ணும் தனியாய் தங்கும் வழக்கம் இல்லை என்று கூறினேன். அவள் அடுத்த கேள்விக் கணையை அனுப்பும் முன்னரே நான் " பிகாஸ் இன் இண்டியா ப்ரீ-மாரிடல் செக்ஸ் இஸ் நாட் அலவுட்" என்று நான் சொன்னதை ஆச்சர்யத்தோடு கேட்டுவிட்டு என்னிடம் "ஸோ, ஆர் யூ சேயிங் பீபிள் இன் இண்டியா நெவர் ஹேவ் செக்ஸ் பிபோர் மேரேஜ்?" என்றாள். கொஞ்சம் பப்பி ஷேமாக இருந்தாலும் "யெஸ், அண்ட் மோஸ்ட் ஆப் தெம் கெட் மேரீட் ஒன்லி எபவ் ட்வண்டி பைவ் ஆர் சிக்ஸ்." என்றேன். அவள் அன்று நான் சொன்னதை முழுதாக நம்பவில்லை என்பது எனக்கு நன்றாக தெரிந்தது.
ஆனால் இன்று நிச்சயம் அதே நிலைமை இல்லை. சென்ற பத்து பதினைந்து வருடங்களில் "வெஸ்டர்னைசேஷன்" என்ற பெயரில் கலாச்சாரத்தை இழந்து இன்று செக்ஸ் என்பது கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் கூட வியாபித்திருக்கிறது என்பதே திடுக்கிட வைக்கும் உண்மையாக இருக்கிறது. இலைமறை காயாக இருந்த விஷயங்கள் பலவற்றையும் இணையத்தில் தரவிறக்கி கற்றுக் கொள்ளும் தலைமுறைக்கு கலாச்சார பாடங்கள் என்பது நகைப்புக்குரிய விஷயங்களாகிவிட்டது. சென்ற வார "இந்தியா டுடே" நாளிதழைப் படித்த என் தலைமுறைக்கு முந்தையவர்களுக்கு எல்லாம் அந்த செய்திகள் நிச்சயம் அதிர்ச்சிகரமான தகவல்களாகத்தான் இருக்க முடியும். பெரும்பாலான பள்ளி/கல்லூரி செல்லும் பதின்வயது பாலகர்கள் தம்முடன் பயிலும் மற்ற பாலினத்தவரோடு உடலுறவு வைத்திருந்ததாக கூறும் அந்த புள்ளிவிவரங்கள் நம் வயிற்றில் புளியை கரைக்கின்றன.
மேலும் டேட்டிங், லிவ்விங் டுகெதர் போன்ற மேலைநாட்டு கலாச்சாரங்களை பின்பற்றும் தலைமுறை நமக்கு அச்சமூட்டுபவையாகத்தான் இருக்கிறது. மேலை நாடுகளில் உள்ளது போன்ற சட்ட திட்டங்களோ, தவறுகளுக்கான தண்டனைகளோ நம் நாட்டில் இல்லை என்பதே நம் நாட்டில் ஆங்காங்கே நடக்கும் பாலின கொடுமைகளுக்கான முக்கிய காரணம். இணையத்தை பயன்படுத்த வயது வரம்பு, சிறுவர்களின் இணையப் பயன்பாட்டின் போது பெற்றோரின் கண்காணிப்பு போன்ற விஷயங்கள் செயல்படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் பல இருந்த போதும் அரசாங்கமும் மக்களும் இந்த விஷயத்தில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தினாலே அன்றி எதிர்கால இந்தியா ஒளிரப்போவது இல்லை..!
மேலும் டேட்டிங், லிவ்விங் டுகெதர் போன்ற மேலைநாட்டு கலாச்சாரங்களை பின்பற்றும் தலைமுறை நமக்கு அச்சமூட்டுபவையாகத்தான் இருக்கிறது. மேலை நாடுகளில் உள்ளது போன்ற சட்ட திட்டங்களோ, தவறுகளுக்கான தண்டனைகளோ நம் நாட்டில் இல்லை என்பதே நம் நாட்டில் ஆங்காங்கே நடக்கும் பாலின கொடுமைகளுக்கான முக்கிய காரணம். இணையத்தை பயன்படுத்த வயது வரம்பு, சிறுவர்களின் இணையப் பயன்பாட்டின் போது பெற்றோரின் கண்காணிப்பு போன்ற விஷயங்கள் செயல்படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் பல இருந்த போதும் அரசாங்கமும் மக்களும் இந்த விஷயத்தில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தினாலே அன்றி எதிர்கால இந்தியா ஒளிரப்போவது இல்லை..!
unmaikal ithai vida athirchchiyaaka irukkum
ReplyDeleteஉண்மைதான் நண்பா. சபை நாகரீகம் கருதி அதிகம் ஆழமாக எழுதவில்லை. நெஞ்சை உறைய வைக்கும் செய்திகள் அவை..
Deleteஆவிக்கு மிக கண்டனம் அந்த பெண் உங்களுடன் வீட்டை ஷேர் பண்ணினாலா இல்லையா என்பது இந்த பதிவில் சொல்லப்படவில்லை. அதை சொல்லாமல் பதிவை வேறு திசையில் கொண்டு போய் முடித்துள்ளீர்கள்....இதை வன்மையாக கண்டிக்கிறேன்
ReplyDeleteஹஹஹா.. இந்தப் பதிவின் நோக்கம் அதுவல்லவே சார். இந்தியா டுடேவில் வந்த கட்டுரையை படித்துவிட்டு பத்து வருடங்களுக்கு முன் இருந்த நிலைமையோடு ஒப்பிட்டு பார்த்த போது தோன்றியதை எழுதினேன். பை தி வே அந்தப் பெண் எனக்கு ஆறு மாதங்கள் ரூம் மேட்டாய் இருந்தாள்..
Deleteமுதல்ல இந்தியா டுடே ஆர்டிக்கிள் பத்தி பேசிட்டு அப்பறம் உன் அனுபவத்தைச் சொல்லி, கடைசில உன் கருத்தைச் சொல்லி முடிச்சிருந்தா முழுமை இருந்திருக்கும். இப்ப... கதையா, கட்டுரையா, அனுபவக் குறிப்பான்னே தெரியாம அந்தரத்துல தொங்கிட்டிருக்கு. அவ்வ்வ்வ்வ்...
ReplyDeleteஅது வழக்கமான கட்டுரையா ஆகியிருக்குமே வாத்தியாரே.. என் அனுபவத்தை சொல்லிவிட்டு பின் இப்போ சம்முவம் போற பாதையையும் ஒப்பிட்டு சொல்லியிருக்கேன் அம்புட்டுதான்.
Deleteவாத்தியார் - நான் என்ன நினைச்சனோ அத அப்படியே சொல்லிருக்கீங்க...
Delete//பின் இப்போ சம்முவம் போற பாதையையும் ஒப்பிட்டு சொல்லியிருக்கேன் அம்புட்டுதான்.// நிச்சயமா வலைப்பூ நம்ம பயிற்சிக் களம் தான், இருந்தாலும் தீவிரமான விசயங்களில் கட்டுரையின் அமைப்பு இன்னும் தீவிரமா இருந்தா இன்னும் சிறப்பான கவனம் பெரும் என்பது சகபதிவனின் தாழ்மையான வேண்டுகோள் :-)
அடங்கொன்னியான் ...
Deleteஇலக்கு வைத்துத்தான் இயக்கம் ..
வாழ்த்துகள்
முடிவில் மெலிஸாக சொல்லாமல் அழுத்தம் திருந்தமாக உண்மையை சொல்லி விட்டீர்கள்...?...!
ReplyDeleteநன்றி DD..
Deleteஅருமையான பகிர்வு அண்ணா !!! ்நான்கூட ஏதோ படத்தின்விமர்சனம் என்று உள்நுழைந்தேன் .
ReplyDeleteநன்றி மேக்னேஷ்..
Deleteஅருமையான பதிவு ஆவி! நோ டௌட்! எழுதிய விதமும் மெலிசாவைப் போல் அழகு! மெலிசாவையும் உங்கள் எழுத்தையும் ஒப்பிட்டு இன்னும் விவரிக்கலாம் ஆனால் வேண்டாம் யாராவது அப்புறம் சென்சார் போட்டுருவாங்க....
ReplyDeleteஇறுதியில் அழுத்தமான கருத்தைப் பதிவு செய்திருக்கின்றீர்கள். இந்த ப்ரீ மாரிடல் செக்ஸ் பத்தி பேசி குஷ்பு மாட்டினாங்க....மெலிசா சொன்னதுல தப்பும் இல்ல ...இப்பனு இல்ல இந்த ப்ரீ மாரிட்டல் செக்ஸ் சங்க காலத்துல, அதற்கும் முந்தைய காலக் கட்டதுலருந்தே, சொல்லப் போனால் ஆதிமனிதன் தோன்றியதிலிருந்தே இருக்கு...கல்யாணம் என்ற ஒரு சமூக கட்டுப்பாடு வந்தது ஒரு காலகட்டத்தில் தான்....ஆதாரங்கள் உள்ளன. இப்ப இங்க சொன்னா அது ஒரு பதிவு போல் நீண்டுவிடும் (ஹலோ எப்பவுமே நீங்க அப்படித்தானே எழுதறீங்க நு நீங்க சொல்றது காதுல விழுது..அஹ்ஹஹ்) ஸோ இங்க இப்போதைக்கு முற்றுப் புள்ளி....
நன்றி ஒரு இடுகையைத் தேத்த உங்களின் இந்தப் பதிவு உதவுகின்றது...
பெற்றோர்களின் கையில் தான் இருக்கின்றது பிள்ளைகளின் பாதை...
இப்போ பெற்றோர்கள் பேச்சை கேட்டு நடக்கிற பிள்ளைகள் மிக மிகக் குறைவே.. :(
Deleteதவிர அந்த கட்டுரையிலேயே அதைப் பற்றியும் பேசியிருக்காங்க. பசங்க இந்த மாதிரி விஷயங்கள பெற்றோரிடம் விவாதிப்பது இல்லை என்கிறது அந்த புள்ளிவிவரம்.
பல வருடங்களுக்கு முன்னரே இந்த நிலமை வடக்கில் இருந்தது ஆவி. எனக்கும் உங்களைப் போலவே இப்படி ஒரு அனுபவம் உண்டு. :) பிறிதொரு சமயத்தில் இது பற்றி எழுதுகிறேன்.
ReplyDeleteஆஹா சுவாரசியமான பதிவு காத்திருக்கு
Deleteபகிருங்கள் வெங்கட் சார், படிக்க ஆவலாக இருக்கிறேன்.
Delete
ReplyDeleteஇந்த கலாசாரம் நம் நாட்டில் அதிகமாகி இருப்பது வருந்தத்தக்கதுதான். விவாக ரத்துகள் அதிகரிப்பதற்கு இதுவம் ஒரு காரணம்.தனிக்குடித்தனங்களும் நினத்தபோதெல்லாம் உறவு கொள்ள வாய்ப்புகளும் சீக்கிரமே வாழ்க்கையில் சலிப்பை ஏற்படுத்தி விடும் அபாயம் உண்டு
ஆமாங்க முரளி, மேலை நாட்டு கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்வது தவறில்லை. அதை சரியாக புரிந்து கொள்ளாமல் அரை குறையாய் பின்பற்றுவதில் தான் சிக்கல்கள் வருகிறது. விவாகரத்துகள் அதிகரிக்கிறது.
Deleteஆவி!
ReplyDeleteநீங்க சிட்டி, பெரிய ஊர்கள் பற்றி பேசுகிறீர்கள். உண்மையில் நீங்க கிராமத்திற்கு செல்லுங்கள்! கண்ணால் காண்பீர்கள் எத்தனை புள்ளைக கரும்பு கம்பு காட்டில் வயதுப் பயன்களுடன் ஒதுங்குகிறார்கள்; எல்லோரும் சம்பாதிக்க வேண்டும்; பெற்றோர்கள் பெண்களை ஒன்றும் செய்ய முடியாது! கரும்பு ஆலை போட்டு இரவு பகலாக வெல்லம் காச்சும் போது, ஒதுங்காதா இடம் இல்லை. பம்ப்செட்டு ரூம்கள் ஏரளாமான கதைகள் சொல்லும். பெரிய பண்ணையார்கள் பெண்கள் இதில் மாட்டாது--அவர்கள் பாதுகாப்பாக வீட்டில் இருப்பார்கள். நான் சொல்வது 90 விழுக்காடு மக்கள் -ஏழை மக்கள்.
கொத்து என்றால் என்ன என்று தெரியுமா? மேஸ்திரி மாதிரி--ஒரு அருவடை, நாத்து நடுவது---இப்படி வேலைக்கு ஐம்பது ஆட்கள் கூட்டிக்கொண்டு வரும் ஏஜென்ட்.. என்ன என்று யூகித்து கொள்ளுங்கள். premarital sex வெளிநாட்டுக்கு சென்றதே இங்கிருந்து தான்--களவொழுக்கம் தெரியுமா? இப்ப காலை பாலவாக்கம், பெசன்ட் நகர் பீச்சில் சென்று பாருங்கள். ஊரில் இருக்கும் அப்பன் ஆத்தாவிற்க்கு என்ன தெரியும்? முன்பு இலை மறைவு காய் மறைவாக இருந்தது--இப்போ பெண்கள் கையில் பணம்--வெளியில் தெரிய ஆரம்பிதுள்ளது. அவ்வளவு தான்.
[[எல்லோரும் சம்பாதிக்க வேண்டும்; பெற்றோர்கள் பெண்களை ஒன்றும் செய்ய முடியாது! ]] என்று சொன்னது ஒழுங்காக விவசாய வேலை செய்து கூலி வாங்கவது; மற்றபடி மனதுக்கு பிடித்த பையனுடன் ஒதுங்குவது ஆசைக்காக! பணத்திற்காக அல்ல! அல்லவே அல்ல!
ReplyDeleteஇன்னும் சற்று ஆழமாக அலசியிருந்தால் பதிவு வேறொரு தளத்திற்கு சென்றிருக்கும் தல. மேலோட்டமாக பேசியிருப்பதாக உணர்வை தருகிறது.
ReplyDeleteஎக்ஸாட்லி... ஆவி தீவிரமான எழுத்துக்கு தன்னை மாற்றிக்கொள்ளக் கூடாது என்று கங்கணம் கட்டி கக்னம் ஆடியிருக்கிறார் போல :-)
Deleteஅருமையாக சொல்லியிருக்கீங்க...
ReplyDeleteமுக்கியமான கவலை அந்த மெலிசாவின் போட்டோ போடவில்லை, மெலிசா பற்றி முழுசா ஒரு பதிவு வருமா? மனதை அரிக்கும் கவலை அது.
ReplyDeleteஅடுத்ததாக அந்த இந்தியா டுடே நான் படிக்கவில்லை.
அப்புறம் இந்த சமூகப் பிரச்னை. இந்தப் பழக்கங்கள் ஆதி காலத்திலிருந்தே இருந்திருக்கலாம். இப்போதைய மீடியாவின் அசுர வளர்ச்சி அதை உலகுக்கு முகத்தில் அறைந்து சொல்கிறது. வெளிநாட்டிலிருந்து சுத்தத்தை, சுகாதாரத்தை, நேர்மையை கைகொள்கிறோமோ இல்லையோ, இதை டக்கெனப் பிடித்துக் கொள்கிறோம்!
ஒரு ஜெர்மன்காரர் என்னை பார்த்து கேட்டார் /எங்கே முதலில் இருவரும் சந்தித்தீர்கள் ? நான் சொன்னேன் .
ReplyDeleteஎங்க வீட்டில் பெற்றோர் பார்த்த அலையன்ஸ் ...//அதற்கு கோபமா கேட்டார் ..எதற்கு இந்தியர்கள் இப்படி இருக்கீங்க உன் வாழ்க்கையை பெற்றோர் எப்படி தீர்மானிக்கலாம்னு !அப்புறம் சொன்னார் //உங்க மகளை சுயமாக சிந்திக்க விடுங்கள்.
வெளிநாட்டினருக்கு நம் கலாசாரம் விந்தைதான் ..
இது மேலைக் கலாச்சாரம் என்று சொல்வது அத்தனை சரியாகத் தோன்றவில்லை. வடக்கே மட்டுமல்லாமல் தெற்கேயும் குறிப்பாக பெங்களூர் சென்னை நகரங்களில் இருந்தது. திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வது மேற்கிலும் அனுமதிக்கப்பட்ட பழக்கம் என்றும் சொல்ல முடியாது. ஏற்புடைய பழக்கமாக இருந்தாலும்.
ReplyDeleteதிருமணத்திற்கு முன் உடலுறவுக்கு இசைந்த பெண்ணை உயிர்க்காதலியாக இருந்தாலும் ஆண்கள் மதிப்பார்களா என்ற கேள்வி இன்றைக்கும் எழுகிறது.
// பசங்க இந்த மாதிரி விஷயங்கள பெற்றோரிடம் விவாதிப்பது இல்லை என்கிறது அந்த புள்ளிவிவரம்.//
ReplyDeleteம்ம் :( புரிதல் இல்லை ..இன்னும் நம் நாட்டு பேரன்ட்சுக்கும் பிள்ளைகளுக்கும் .. .
பத்து வருடங்களுக்கு முன்பே, பெங்களூருவில் இம்மாதிரி விசயங்களைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியாகி, அதிர்ச்சியான என்னைப் பார்த்து சிரித்தவர்களையும் நினைத்துப் பார்க்கிறேன்....
ReplyDeleteபெற்றோர் பிள்ளைகள் மேல் அதிக கவனம் எடுத்து கொள்ள வேண்டும் ஆசிரியர்களும் தான்
ReplyDeleteஇளம் வயதினருக்கு இது. பற்றிய புரிதல் வேண்டும்
ReplyDelete