Showing posts with label குறும்படம். Show all posts
Showing posts with label குறும்படம். Show all posts

Wednesday, August 26, 2015

தலைவாரிப் பூச்சூடி உன்னை- சில நன்றிகள்


                          குறும்படத்தின் எடிட்டிங் வேலைகளை நானே பார்த்துக் கொண்டதால் கொஞ்சம் தாமதமாக வந்திருக்கிறது. இந்த கதையை முதன் முதலில் நான் சொன்னது ருபக்கிடம். மாஞ்சோலையில் வைத்து நான் சொன்னபோது 'நல்லா வரும் பாஸ். பண்ணுங்க' என்று முதல் உற்சாகம் கொடுத்தார். பின்னர் எப்போதும் போல் கீதா சேச்சி, மொக்கையான கதை சொன்னாலும் நல்லா இருக்கு ஆவி என்று தன் பாசத்தை பொழிபவர். படத்தின் கதை முடிவான பின் அனன்யா அவர்களுக்கு போன் செய்து 'அக்கா உங்களை பார்த்து ஒரு கதை சொல்லணும்' என்றதும் சரி என்றார்.

                           மறுநாள் அவர் வீட்டுக்குச் சென்று கதை சொன்னதும் 'நான் உன்னோட சோகக் கதை சொல்வேன்னு பார்த்தா, ஷார்ட் பிலிமா?' என்று உற்சாகத்துடன் பேச ஆரம்பித்தார். 'எப்போ வச்சுக்கலாம் ஷூட்டிங், நாளைக்கா?' என்று எனக்கு ஸ்க்ரிப்ட் எழுதக் கூட சமயம் தராமல் (ஸ்க்ரிப்ட் எழுதாததற்கு ஏதாவது காரணம் சொல்லணுமே) படப்பிடிப்புக்கு தயாரானார்.
படப்பிடிப்புக்கென வீட்டைக் கொடுத்ததோடு படப்பிடிப்பு தினங்களில் உணவு பகிர்ந்தளித்து அன்பைப் பொழிந்தார். (கம்பெனிக்கு அதிகம் செலவு வைக்காத ஆர்டிஸ்ட் அவர் என்பதை இவ்விடம் பெருமையாக கூறிக் கொள்கிறேன்)

                                ஷூட்டிங் டைமில் எங்க ஹீரோயினின் நிஜ ஹீரோ மகாதேவன் சார் அவர்களின் ஒத்துழைப்பு பற்றி கூறியே ஆகவேண்டும். அனன்யா பெரும்பாலும் ஒரே டேக்கில் ஒகே செய்து விடுவார் எனினும் ஓரிரு இடங்களில் எக்ஸ்பிரஷன் மிஸ் செய்யும்போதெல்லாம் அவர் சரி செய்து கொடுத்து படத்தை விரைவாய் முடிக்க உதவினார். படம் பண்ணலாம் என்று சொன்னவுடன் என் ஆஸ்தான காமிராமேன் அஷ்வினிடம் கூறினேன். அவர் சிறிது பிஸியாக இருந்ததால் அந்த பொறுப்பை நானே கையாள வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டேன். சுகமாய் அந்த சுமையை ஏற்றுக்கொள்ள தயாரானேன்.

                                ஷைனிங் ஸ்டார் சீனு தன் காமிராவை  (அதற்கு தங்கம் என்று பெயரிட்டிருக்கிறார். கோவா செல்கையில் தங்கம் எங்க வச்சுருக்கீங்க என்று எதார்த்தமாக நான் கேட்டுவிட எதிரில் அமர்ந்தவர்கள் அந்த காமிரா பையை குறுகுறுவென பார்த்தது தனி கதை) கொடுத்து உதவி படப்பிடிப்பு இனிதே நடக்க உதவினார். படத்தின் இரண்டாம் பாகத்தில் (கடைசி இரண்டு நிமிடத்தில்) வரும் பிரின்சிபால் கதாபாத்திரத்தில் நடிக்க குடந்தை சரவணன் அவர்களை அழைத்தேன். பணிச்சுமை காரணமாக அவர் பிஸியாக, கீதா சேச்சியின் உறவினர் பாபு (காதல் போயின் காதல் சமயத்திலிருந்தே இவர் எங்கள் குழுவிற்கு செய்த உதவிகள் பல) அந்த கதாபாத்திரத்துக்கு தேர்வானார்.

                                  படம் எடுக்க ப்ளான் செய்ததும் நான் அழைத்தவுடன் முதலில் ஓடோடி வந்தது ஸ்கூல் பையன் கார்த்திக் சரவணன். கொஞ்சம் கேமிராவில் உதவி, கேமிரா கோணங்கள் பற்றிய பகிர்வு என தானாக முன்வந்து சில உதவிகள் செய்தார். அடுத்து பாலகணேஷ் சார். வழக்கம் போல் போஸ்டர் ரெடி பண்ணுவதில் ஆரம்பித்து ஷூட்டிங் ஸ்பாட்டில் கலந்து கொண்டு உற்சாகப் படுத்தி ஊக்கப் படுத்தினார். 'பெர்முடா' இயக்குனர் திவான் தானாக முன்வந்து படத்திற்கு ஒரு போஸ்டர் வடிவமைத்துக் கொடுத்தார்.



                                   அடுத்து நான் முக்கியமாக குறிப்பிட வேண்டியது இருவரைப் பற்றி. முதலாமவர் செய்தி வாசிப்பாளர் ஸ்ரீவித்யா, படத்தில் வரும் செய்திகளை வாசித்திருப்பது இவரே. படத்தில் அந்த இரு வரிகளின் வலிமை ஐந்து நிமிட குறும்படத்தின் உயிர்நாடி. லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், எங்கள் பிளாக் ஸ்ரீராம் சார். இவர் எங்கள் படத்தில் பிரின்சிபாலுக்கு குரல் கொடுத்து மிடுக்கை சேர்த்திருக்கிறார் என்றால் மிகையாகாது. டப்பிங் அனுப்பிவிட்டு இது போதுமா, இன்னொரு முறை வேண்டுமா என்று கேட்டுக் கேட்டு செய்து கொடுத்தார்.


                                    இறுதியாக படத்தின் முதல் காப்பியை பார்த்துவிட்டு நேர்மையாக தன் கருத்துகளை பகிர்ந்தார் 'ஒளிர் நாயகன்' சீனு. அவர் சொன்ன கருத்துகளை நீண்ட யோசனைக்கு பின் நிராகரித்து விட்டேன். இருப்பினும் அவர் என்னை புரிந்து கொள்வார் என்ற நம்பிக்கை உண்டு. இதுவரை இக்குறும்படத்தினை பார்த்தவர்களுக்கும் இனி பார்க்கப் போகும் பெற்றோர் மற்றும் ஆசிரியர், ஏனைய ரசிகர்களுக்கும் ஒரு சிறிய வேண்டுகோள். இந்தப் படம் பிடித்திருந்தால் தயவு செய்து உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்களேன்!







Saturday, February 14, 2015

காதல் போயின் காதல் - டீசர்

                   ஆவி டாக்கீஸின் முதல் படைப்பான "காதல் போயின் காதல்" குறும்படத்தின் டீசர் இதோ.  இந்த டீசரை காணும் எல்லோருக்கும் டீம் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். குறும்படம் பிப்ரவரி 23 அன்று வெளியாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி..!





                    அனைவருக்கும் என் காதலர் தின வாழ்த்துகள்!

Thursday, October 30, 2014

"ஆவி டாக்கீஸ்" - வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..! (குறும்பட- சிறுகதை போட்டி)





"ஆவி டாக்கீஸ்" - வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..!
குறும்பட- சிறுகதை போட்டி


ஆவி டாக்கீஸ்- வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..! குறும்பட - சிறுகதை போட்டியை அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். நடுவர் குழு தேர்ந்தெடுக்கும் சிறந்த மூன்று கதைகளுக்குக் கீழ்க்கண்டவாறு பரிசுகள் உண்டு: முதல் பரிசு பெறும் கதை குறும்படமாக எடுக்கப்படும்.

முதல் பரிசு:      ரூ.2000
இரண்டாம் பரிசு: ரூ.1000
மூன்றாம் பரிசு:  ரூ.500
ஆறுதல் பரிசு :   ரூ.250   (இரண்டு பரிசுகள்)

தேர்வுக்குழு:

"எங்கள் பிளாக்" ஸ்ரீராம் அவர்கள்,
"வீடு" சுரேஷ்குமார் அவர்கள்,
"மெட்ராஸ்பவன்" சிவகுமார் அவர்கள்,

மற்றும் உங்கள் "ஆவி"


விதிமுறைகளும், நிபந்தனைகளும்:
  • உங்கள் படைப்புகள்  ​​​400 வார்த்தைகளுக்கு குறையாமலும், 600 வார்த்தைகளுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

  • கதைகள் நகைச்சுவைகாதல், க்ரைம், சமூக உணர்வுக் கதைகள், விழிப்புணர்வுக் கதைகள் என எந்த வகையில் வேண்டுமானாலும் இருக்கலாம். தவறான வார்த்தைகளோ, யார் மனதையும் புண்படுத்துவதாகவோ இருத்தல் கூடாது.

  • தேர்ந்தெடுக்கப்படும்/ போட்டிக்கு அனுப்பப்பட்ட சிறுகதைகளில் முதல் பரிசு பெறும் கதை குறும்படமாக எடுக்கப்படலாம். அச்சமயம் 'கதை' இன்னாரென்று க்ரெடிட் மட்டுமே மட்டுமே கொடுக்கப்படும். (முதல் பரிசு தவிர வேறு சன்மானங்கள் அளிக்கப்பட மாட்டாது. )

  • கதை உங்கள் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும். வேறு தின,வார, மாத இதழ்களுக்கோ, இணைய ஊடகங்களுக்கோ அனுப்பியதாய்  இருத்தல் கூடாது.

  • கதை உங்கள் தளங்களிலோ, வேறு ஊடகங்கள் எதிலாவதோ வெளியாகியிருத்தல் கூடாது.  அப்படித் தெரிந்தால் கதை உடனே போட்டியிலிருந்து நீக்கப்படும்.

  • எந்த ஒரு கதையையும் தேர்ந்தெடுக்கவோ, நிராகரிக்கவோ போட்டி நடத்துபவருக்கும், தேர்வுக் குழுவுக்கும் மட்டுமே உரிமை உண்டு.

  •  போட்டிக்கு அனுப்பி வைக்கப்படும் கதைகள் சிறுகதைத் தொகுப்பு நூலாகவும் வெளியிடப்படலாம்.

  • ஒருவர் அதிகபட்சமாக இரண்டு கதைகளை மட்டுமே அனுப்பலாம். (ஒரே மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்புதல் அவசியம்). 

  • கதைகள் தமிழ் மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும். கதைக்கு தேவையெனில் பிறமொழிச் சொற்கள் பயன்படுத்தலாம். ஆனால் அவை தமிழிலேயே தட்டச்சு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

  •            உங்கள் படைப்புகளை அனுப்ப கடைசித் தேதி: ஜனவரி 23, 2015 இரவு 12 மணிக்குள் (IST)

  •          போட்டியின் முடிவுகள் ஏப்ரல் 14, 2015 அன்று வெளியாகும்.

  •             தேர்வுக்கு அனுப்பிய கதைகளை தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் (ஏப்ரல் 14, 2015 க்கு பிறகு) படைப்பாளி தங்கள் தளங்களில் பகிர்ந்து கொள்ளலாம்.

  • .    ​   போட்டி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து போட்டி முடியும் நாள் வரை போட்டியார்கள் தேர்வுக் குழுவை சேர்ந்த யாரையும் போட்டி சம்பந்தமாக அலைபேசியிலோ /முகநூலிலோ  தொடர்பு கொள்ளுதல் கூடாது. போட்டி விதிமுறை குறித்த சந்தேகங்களுக்கு மேலே குறிப்பிட்ட மின்னஞ்சலுக்கு மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும். ​


கதைகளை அனுப்பும் முறை:


  •    நேர்த்தியாக Format செய்யப்பட்டு MS-Word இல் அனுப்ப வேண்டும். 

  • MS-Word பைலின் பெயரில் உங்கள் கதையின் பெயர் ஆங்கிலத்தில் இடைவெளியின்றி எழுதப்பட்டிருக்க வேண்டும். 

  • (எ.கா)  உங்கள் கதையின் தலைப்பு "காதல் போயின் காதல்" என்றால் MS-Word File, KadhalPoyinKadhal என்ற பெயரில் Save செய்யப்பட்டிருக்க வேண்டும்.

  •  கதைக்கு பொருத்தமான ஏதாவது ஒரு படத்தையோ,  நீங்களே எடுத்த புகைப்படத்தையோ அனுப்பலாம். ஆனால் புகைப்படம் அனுப்புவது கட்டாயமல்ல. (புகைப்படம் தேர்வுக் குழுவுக்கு பிடித்திருந்தால் மட்டுமே வெளியிடப்படும்)

  • MS-Word  பைலையும் புகைப்படத்தையும் (Optional) தனித்தனி Attachment ஆக இணைத்து aaveetalkies@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

  •  Subject இல் Aavee Talkies ShortFilm-ShortStory Contest 2015 என்று குறிப்பிடுதல் அவசியம்.

  • Body இல்  பின்வரும் தகவல்கள் உள்ளீடு செய்திருத்தல் அவசியம்.

  •  MS -Word இல் தமிழில் உள்ளீடு செய்ய முடியாதவர்கள் ஒழுங்காக பத்தி பிரிக்கப்பட்ட கதையை டைப் செய்து ஈமெயிலின் சப்ஜெக்டில் கீழ்வரும் தகவல்கள் உடன்  சேர்த்து அனுப்பவும்.
  • (PDF வடிவில் அனுப்பப்படும் கதைகள் ஏற்றுக்கொள்ளப் பட மாட்டாது.)


பெயர்* : 
புனைபெயர்:
(Optional )
வசிக்கும் நகரம்:
(தமிழ்நாடு அல்லாத வெளியூர்/ வெளிநாட்டு படைப்பாளிகள் உங்கள் நகரம்/  நாடு சேர்த்து குறிப்பிடவும்.)
அலைபேசி எண்* :
வலைத்தளம்:
(Optional )
கதையின் தலைப்பு* :
கதை எண்* : 



Dates to Remember

                  


How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...