ஆவி டாக்கீஸ்- வெள்ளைத்தாள் டூ
வெள்ளித்திரை..! குறும்பட - சிறுகதை போட்டியை அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.
நடுவர் குழு தேர்ந்தெடுக்கும் சிறந்த மூன்று கதைகளுக்குக் கீழ்க்கண்டவாறு பரிசுகள்
உண்டு: முதல் பரிசு பெறும் கதை குறும்படமாக எடுக்கப்படும்.
முதல் பரிசு: ரூ.2000
இரண்டாம் பரிசு: ரூ.1000
மூன்றாம் பரிசு: ரூ.500
இரண்டாம் பரிசு: ரூ.1000
மூன்றாம் பரிசு: ரூ.500
ஆறுதல் பரிசு : ரூ.250
(இரண்டு பரிசுகள்)
தேர்வுக்குழு:
"எங்கள் பிளாக்" ஸ்ரீராம்
அவர்கள்,
"வீடு" சுரேஷ்குமார் அவர்கள்,
"மெட்ராஸ்பவன்"
சிவகுமார் அவர்கள்,
மற்றும் உங்கள்
"ஆவி"
விதிமுறைகளும், நிபந்தனைகளும்:
- உங்கள் படைப்புகள் 400 வார்த்தைகளுக்கு குறையாமலும், 600 வார்த்தைகளுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
- கதைகள் நகைச்சுவை, காதல், க்ரைம், சமூக உணர்வுக் கதைகள், விழிப்புணர்வுக் கதைகள் என எந்த வகையில் வேண்டுமானாலும் இருக்கலாம். தவறான வார்த்தைகளோ, யார் மனதையும் புண்படுத்துவதாகவோ இருத்தல் கூடாது.
- தேர்ந்தெடுக்கப்படும்/ போட்டிக்கு அனுப்பப்பட்ட சிறுகதைகளில் முதல் பரிசு பெறும் கதை குறும்படமாக எடுக்கப்படலாம். அச்சமயம் 'கதை' இன்னாரென்று க்ரெடிட் மட்டுமே மட்டுமே கொடுக்கப்படும். (முதல் பரிசு தவிர வேறு சன்மானங்கள் அளிக்கப்பட மாட்டாது. )
- கதை உங்கள் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும். வேறு தின,வார, மாத இதழ்களுக்கோ, இணைய ஊடகங்களுக்கோ அனுப்பியதாய் இருத்தல் கூடாது.
- கதை உங்கள் தளங்களிலோ, வேறு ஊடகங்கள் எதிலாவதோ வெளியாகியிருத்தல் கூடாது. அப்படித் தெரிந்தால் கதை உடனே போட்டியிலிருந்து நீக்கப்படும்.
- எந்த ஒரு கதையையும் தேர்ந்தெடுக்கவோ, நிராகரிக்கவோ போட்டி நடத்துபவருக்கும், தேர்வுக் குழுவுக்கும் மட்டுமே உரிமை உண்டு.
- போட்டிக்கு அனுப்பி வைக்கப்படும் கதைகள் சிறுகதைத் தொகுப்பு நூலாகவும் வெளியிடப்படலாம்.
- ஒருவர் அதிகபட்சமாக இரண்டு கதைகளை மட்டுமே அனுப்பலாம். (ஒரே மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்புதல் அவசியம்).
- கதைகள் தமிழ் மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும். கதைக்கு தேவையெனில் பிறமொழிச் சொற்கள் பயன்படுத்தலாம். ஆனால் அவை தமிழிலேயே தட்டச்சு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
- உங்கள் படைப்புகளை அனுப்ப கடைசித் தேதி: ஜனவரி 23, 2015 இரவு 12 மணிக்குள் (IST)
- போட்டியின் முடிவுகள் ஏப்ரல் 14, 2015 அன்று வெளியாகும்.
- தேர்வுக்கு அனுப்பிய கதைகளை தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் (ஏப்ரல் 14, 2015 க்கு பிறகு) படைப்பாளி தங்கள் தளங்களில் பகிர்ந்து கொள்ளலாம்.
- . போட்டி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து போட்டி முடியும் நாள் வரை போட்டியார்கள் தேர்வுக் குழுவை சேர்ந்த யாரையும் போட்டி சம்பந்தமாக அலைபேசியிலோ /முகநூலிலோ தொடர்பு கொள்ளுதல் கூடாது. போட்டி விதிமுறை குறித்த சந்தேகங்களுக்கு மேலே குறிப்பிட்ட மின்னஞ்சலுக்கு மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும்.
கதைகளை
அனுப்பும் முறை:
- நேர்த்தியாக Format செய்யப்பட்டு MS-Word இல் அனுப்ப வேண்டும்.
- MS-Word பைலின் பெயரில் உங்கள் கதையின் பெயர் ஆங்கிலத்தில் இடைவெளியின்றி எழுதப்பட்டிருக்க வேண்டும்.
- (எ.கா) உங்கள் கதையின் தலைப்பு "காதல் போயின் காதல்" என்றால் MS-Word File, KadhalPoyinKadhal என்ற பெயரில் Save செய்யப்பட்டிருக்க வேண்டும்.
- கதைக்கு பொருத்தமான ஏதாவது ஒரு படத்தையோ, நீங்களே எடுத்த புகைப்படத்தையோ அனுப்பலாம். ஆனால் புகைப்படம் அனுப்புவது கட்டாயமல்ல. (புகைப்படம் தேர்வுக் குழுவுக்கு பிடித்திருந்தால் மட்டுமே வெளியிடப்படும்)
- MS-Word பைலையும் புகைப்படத்தையும் (Optional) தனித்தனி Attachment ஆக இணைத்து aaveetalkies@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
- Subject இல் Aavee Talkies ShortFilm-ShortStory Contest 2015 என்று குறிப்பிடுதல் அவசியம்.
- Body இல் பின்வரும் தகவல்கள் உள்ளீடு செய்திருத்தல் அவசியம்.
- MS -Word இல் தமிழில் உள்ளீடு செய்ய முடியாதவர்கள் ஒழுங்காக பத்தி பிரிக்கப்பட்ட கதையை டைப் செய்து ஈமெயிலின் சப்ஜெக்டில் கீழ்வரும் தகவல்கள் உடன் சேர்த்து அனுப்பவும்.
- (PDF வடிவில் அனுப்பப்படும் கதைகள் ஏற்றுக்கொள்ளப் பட மாட்டாது.)
பெயர்* :
புனைபெயர்:
(Optional )
வசிக்கும்
நகரம்:
(தமிழ்நாடு அல்லாத வெளியூர்/ வெளிநாட்டு
படைப்பாளிகள் உங்கள் நகரம்/ நாடு சேர்த்து
குறிப்பிடவும்.)
அலைபேசி எண்* :
வலைத்தளம்:
(Optional )
கதையின்
தலைப்பு* :
கதை எண்* :
Dates to Remember :
வாழ்த்துக்கள் நண்பா. கலக்குங்க
ReplyDeleteவாழ்த்துக்கள் எனக்கா, போட்டியாளர்களுக்கா?
Delete//கலக்குங்க//
கலக்க வேண்டியது நீங்க தான். "Process முடிஞ்சிருச்சு சார். சொன்ன நேரத்துல போட்டி Announce பண்ணிட்டேன். எந்த சாக்கு போக்கும் சொல்லாம கதையோட ரெடியா வாங்க." ;) ;)
வாழ்த்துக்கள் நண்பா! என் சார்பா சீனு கலந்துக் கொள்வார். :)
ReplyDeleteநன்றி நண்பா.!
Deleteஉங்களுக்கு பதிலா சீனு, சீனுவுக்கு பதிலா அரசன், அரசனுக்கு பதிலா தீவிரவாதி, தீவிரவாதிக்கு பதிலா நீங்க.. எப்படியோ எனக்கு உங்ககிட்ட இருந்து ஒரு கதை வரணும். அவ்வளவுதான். டாட்..! ;) ;)
'என் இனிய இயந்திரா' மாதிரி ஒரு சயின்ஸ் பிக்ஸன் கதையை உங்களிடமிருந்து எதிர்பார்த்திருந்தால் நீங்க இப்படி சொல்றீங்களே? ;)
வணக்கம்,ஆ.வி.சார்!நலமா?///காப்பி பேஸ்ட் சேத்துக்குவீங்களா?ஹி!ஹி!!ஹீ!!!(ச்சும்மா.)
ReplyDelete//காப்பி பேஸ்ட் சேத்துக்குவீங்களா?//
Deleteபேஸ்ட்டுக்கு அப்புறம் தானே காப்பி? உங்க வீட்டுல 'பெட்' காப்பியோ? ;)
:))))))))))))))))
Deleteகோவை ஆவி said::::பேஸ்ட்டுக்கு அப்புறம் தானே காப்பி? உங்க வீட்டுல 'பெட்' காப்பியோ? ;)Yes!
Deleteவாழ்த்துக்கள் ஆவி! ம்ம்ம் நாங்கல்லாம் கலந்துக்க முடியாதுப்பா..ஹஹ்..ஏன்னு கேக்கறீங்களா வார்த்தைகள் ரொம்பச் சிக்கனமா இருக்கே!...எங்களுக்குச் சிக்கனம் பழக்கமில்லையே....துளசியாவது ஓகே....அதுவும் கீதாவுக்கு......ஹஹ்ஹஹ்ஹ்ஹ.....போட்டியாளர்களுக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteம்ம்ம்.. அப்படியெல்லாம் சொல்லி எஸ்கேப் ஆகிட முடியாது. உங்களுக்கு சீனுவுக்கு எல்லாம் கதை எழுதுவது சேலஞ்சாக இருக்காது. கதையை சுருக்கமாக எழுதுவது தான் மிகப்பெரும் சவாலாக இருக்கும். :) கண்டிப்பாக உங்களிடமிருந்து படைப்புகளை எதிர்பார்க்கிறேன்..
Deleteகலந்துகொள்ள முயற்சிக்கிறேன் ஆவி...
ReplyDeleteமுயற்சியா? என்னப்பா ஒவ்வொருத்தரும் இப்படி சொல்றீங்க.. கதாசிரியர்களே முயற்சி மட்டும் பண்றேன்னு சொன்னா எப்படி?
Deleteகலந்து கொள்ளப்போகும் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துகள்.
ReplyDeleteபோட்டி வெற்றி பெற வாழ்த்துகள்..!
ReplyDeleteமேடம் நீங்களும் எழுதலாமே!
Deleteபோட்டியாளருக்கு வாழ்த்துக்கள்.வெற்றியடையட்டும் ஆவியின் கனவு.
ReplyDeleteநேசன், எப்ப அனுப்பப் போறீங்க உங்க கதைய?
Deleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி சுரேஷ்.. நீங்களும் கலந்து கொள்ளுங்கள்!! உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!
Deleteபொளந்து கட்டலாம் வாங்க.
ReplyDeleteஅது சரி ஆவி கொஞ்சம் உடம்பை காய வைய்த்தால் ....? பார்க்க சூர்யா மாதிரியே!? இருப்ப்பீங்க முயற்ச்சி பன்னுங்களேன்
சூர்யா மாதிரியா, சூரி மாதிரியா? ஹஹஹா.. முயற்சிக்கிறேன் பாஸ்! :)
Deleteஅன்புள்ள அய்யா,
ReplyDeleteவணக்கம். ‘சில நொடி சிநேகம் - குறும்படம் ’ பார்த்தேன்.
முதல் குறும்படம் இது என்பது போல இல்லை...கைதேர்ந்த பல படங்களை இயக்கிய இயக்குநர் இயக்கியதைப் போன்று படம் அருமையாக இருக்கிறது.
‘கோவை ஆவிப்பா’ போலவே அழகான ஆனந்த் விஜயராகவன், நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். “பஸ்டாண்டு...வந்திருச்சுன்னு சொல்லாதிங்க...வரப்போகுதுன்னு சொல்லுங்க...”
அரசன் அவர்களும் ‘பிரண்ட்தான் மாமா’ நடிப்பில் இயல்பாக சிரித்து நடித்து அசத்தி இருக்கிறார்.
அய்யா துளசிதரன் அவர்கள் இன்டிகா காரை நன்றாக ஓட்டி வந்து கை அசைவுகள் எல்லாம் அருமையாகச் செய்து நன்றாகப் பேசி நடித்துள்ளார். (அவரைப் பார்த்த பொழுது எனக்கு ‘16 வயதினேலே’ வரும் டாக்டரைப் பார்ப்பது போல இருந்த்து).
‘தேட்ஸ் குட்...!’
எடிட்டிங் மற்றும் சவுண்ட் எபக்ட் ஜோன்ஸ் அவர்கள் நன்றாகச் செய்திருக்கிறார்கள். ‘அப்படித்தான் இருக்கனும்’ என்று அரசன் சொல்லி காருக்குள் அமர்வதுக்குள் கார் கதவைச் சாத்தும் சத்தம் கேட்கிறது.
‘மன்னார்குடி பஸ்‘ வந்து விட்டது என்று பட்டுக்கோட்டை பஸ்ஸில் கேவை ஆவி ஏறுகிறார்? பட்டுக்கோட்டை பஸ் மன்னார்குடி போகுமா என்று தெரியவில்லை!
எழுதி இயக்கி நடித்தும் இருக்கும் இயக்குநர்
குடந்தை ஆர்.வி. சரவணன் தம் பணியைச் செம்மையாகவும்...
நேர்த்தியாகவும் செய்து இருப்பது அவருக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கின்றது என்பதை பறைசாற்றுவதாகவே குறும்படம் இருக்கிறது. சில நொடி சிநேகிதத்தில்’ மனிதாபிமானத்தை...நேயத்தை நிசப்படுத்திக் காட்டியிருப்பது சபாஷ். மிகுந்த பாராட்டுகளுடன் வாழ்த்துகள்.
நன்றி.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
Manavaijamestamilpandit.blogspot.in
வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteநன்றி.. நீங்களும் கலந்துக்குங்க.
Deleteதம 5
ReplyDeleteஅன்புள்ள அய்யா,
ReplyDeleteவணக்கம். சில நொடி சினேகம் பல நொடி சினேகமாய் மாறியது கண்டு பிரமித்துப் போனேன்.
குறும்படம் எடுக்கப்பட்ட விவத்தைப்பற்றி விரிவாக விளக்கி இருக்கி இருக்றீர்கள்.
ஒரு பெண் கர்பம் அடைவதே பெரிய விசயம். அவளுக்கு முதல் பிரவசம் என்கிற பொழுது அதை அனுபவித்தவளுக்குத் தானே தெரியும் அதன் வலி! ஒரு தந்தையாக நீங்கள் அருகில் இருந்து பார்த்ததால் அவளின் வலியை அனுபவித்து விளக்கி இருந்தது அருமை.
எங்கு படப்பிடிப்பு நடத்துவது என்பதே ஒரு போராட்டமாக இருந்திருக்கிறது. பேருந்து நிலையத்தில் படப்பிடிப்பு வெகு சிரமங்களுக்கிடையே நடத்தியிருப்பது நன்றாக இருக்கிறது.... இயல்பாக இருக்கிறது. இயக்குநர் அவர்களின் குடும்பமே மகன் ஹர்ஷவத்தன் உட்பட பணியாற்றி இருப்பது கண்டு மகிழ்கின்றேன்.
நொடிக்குள் நண்பனாகி...ஒருவருக்காக ஒருவர்...விட்டுச் செல்லாமல் அழைத்துச் செல்ல...அலைவது...தேடுவது... அருமை...கூடி வாழ்வது தானே வாழ்க்கை. நடித்த, குறும்படம் உருவாக காரணமாக இருந்த அனைவருக்கும் வாழ்த்துகள்.
குறும்படத்தை முதலில் இயக்குனரின் அபிமான இயக்குனர் திரு பாக்கியராஜ் அவர்கள்தான் வெளியிடுவதாக இருந்தது என்பதை அறிந்தேன். இயக்குனர் பாக்கியராஜ் வெளியிட்டு இருந்தால் இன்னும் சிறப்புச் சேர்த்திருக்கும். பாக்யா இதழில் பணியாற்றும் அண்ணன் திரு.மணவை பொன் மாணிக்கம் எனது நெருங்கிய நண்பர்.
தொடரட்டும் தங்களின் பணி...!
நன்றி.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
Manavaijamestamilpandit.blogspot.in
ஐயா, உங்கள் மேலான கருத்தையும், ஆழ்ந்த அலசலையும் கண்டு மகிழ்ச்சியுற்றேன். எங்க முயற்சிக்கு வந்த பாராட்டுகளிலேயே ரத்தினம் பதித்ததாய் அமைந்தது உங்கள் வார்த்தைகள். இது எங்களை மென்மேலும் முன்னோக்கி செல்ல உந்து சக்தியாய் அமையும் என நம்புகிறேன்.நன்றி!
Delete//இயக்குநர் அவர்களின் குடும்பமே மகன் ஹர்ஷவத்தன் உட்பட பணியாற்றி இருப்பது கண்டு மகிழ்கின்றேன். // எங்கள் இயக்குனர் சரவணன் அவர்களுக்கு கிடைத்த பெரிய பலமே அவரது குடும்பத்தார் எனலாம். திரையின் முன் தோன்றாவிட்டாலும், திரைக்கு பின் முழு ஆதரவையும் அளித்து ஊக்குவித்ததாலேயே இந்தக் குறும்படம் சிறப்பாய் வந்தது என நான் நினைக்கிறேன்..
Deleteஅன்புள்ள கோவை ஆவி,
Deleteஆவிப்பா...வாங்கிப் படித்தேன்...
அப்பப்பா... அழகான படங்கள்...
பூரிப்பால்...உள்ளம் மகிழ்ந்தேன்...
‘பிரிதல் மிகுதியானால்
புரிதல் தோன்றலாம்...
புரிதல் மிகுதியானால்
புரிதலும் தோன்றுமோ?’
‘இது என்ன மாயம்
பகலில் நீ சொல்ல மறுப்பதையெல்லாம்
இரவில் சொல்கிறாய்...
என் கனவில்!’
‘ இரண்டாய் வெட்டப்பட்ட
வெங்காயத்திற்கு கூட
கண்ணீர் அஞ்சலி செய்கிறாய்...’
கைக்கு அடக்கமாக.. நூல் முழுக்க .அழகாக கவிதைகளில் அசத்தி... காதலை உசத்திக் காட்டுகிறது. ஆயில் பிரிண்டில் வித்தியாசமாக வெளியிட்டு இருக்கும் ஆவிப்பா தங்களின் ஆயுள் முழுக்க பேசும்...ப்...பா...
நன்றி.
ரசித்து பாராட்டியமைக்கு நன்றி சார்..!
Deleteபோட்டியில் பங்கு பெறப் போகும் நண்பர்களுக்கு வாழ்த்துகள்......
ReplyDeleteவெற்றிகரமாக நடத்த உங்களுக்கு வாழ்த்துகள்.
நன்றி பாஸ்!
Delete
ReplyDelete@Manavai James
//ஒரு பெண் கர்பம் அடைவதே பெரிய விசயம்//.
ஆமாம் ஐயா. அருமையான கருத்தை பதிவு செய்துள்ளீர்கள். நன்றியும், வாழ்த்துகளும்.
விதிமுறைகள் கடுமையாக இருக்கிறதே.. :-) போட்டியில் கலந்து கொண்டு பரிசு வெல்பவர்களுக்கு வாழ்த்துக்கள் .
ReplyDeleteபங்கு பெறுவோருக்கு வாழ்த்துகள்....
ReplyDeleteநானும் முயற்சி செய்து பார்க்கிறேன்..
நானும் சினிமா பற்றி எழுதுபவன்தான். ஆனால், மிகப்பெரும்பாலும் சினிமா பற்றியே எழுதிக்கொண்டிருப்பதால் உங்கள் தளத்தின் பக்கம் அதிகம் வராமல் இருந்துவிட்டேன் மன்னியுங்கள் நண்பரே. சென்னையில் உங்களைப் பார்த்தது மிகுந்த மகிழ்ச்சியளித்தது. இனித் தொடர்வேன். போட்டிகள் சிறப்பாக நடக்கவும் நல்ல எழுத்துகளை நாடுபோற்றவும் வாழ்த்துகள். வணக்கம்
ReplyDelete