இன்ட்ரோ
கொஞ்சம் மொக்கை காமெடிகளை குறைத்துக் கொண்டு கதையின் வீரியத்தை ஆழமாக சொல்லியிருந்தால் படத்தின் வீச்சு நிச்சயம் வேறாக இருந்திருக்கும். சமூக கருத்துகளை மேலோட்டமாக சொல்லிவிடுவதாலேயே சிறந்த படமென சொல்லிவிட முடியாது. கண்ணன் இன்னும் கொஞ்சம் கைவரிசை காட்டியிருக்கலாம்..!
கதை
ஸ்டீல் கம்பெனி ஒன்றில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அங்கிருக்கும் பழுதடைந்த முதலாளிகள் மற்றும் இயந்திரங்களால் ஏற்படும் உடல் பாதிப்பையும், ஆதிக்க சமூகத்தின் அலட்சிய போக்கையும் சுட்டிக் காட்ட முயலும் ஒரு பெண்ணுக்கு உதவ வரும் இரண்டு வருத்தப்படாத வாலிபர் சங்க உறுப்பினர்கள். அவர்கள் மூவரும் சேர்ந்து கார்பொரேட் முதலைக்கு எதிராக போராடி அவர் மனதை மாற்றுவது தான் கதை.
ஆக்க்ஷன்
விமல், நோ கமெண்ட்ஸ். சூரிக்கு இதுபோன்ற ஹீரோக்களுடன் நடிப்பதால் நிச்சயம் தன் காமெடியன் அந்தஸ்திலிருந்து காமெடி ஹீரோ அந்தஸ்திற்கு உயர்த்திக்கொள்ள முடியும். ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ் வரை சரி பகுதி ஆக்க்ஷன் இவருக்கும். நாசர் பலமுறை இவரை இதுபோன்ற பாத்திரங்களில் பார்த்து சலித்து விட்டதால் படத்தின் இறுக்கத்திற்கு பயன்படாமலே போகிறார்.
ப்ரியா ஆனந்த்- ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார். படத்தின் முக்கிய காட்சிகளில் பாஸ் மார்க்கும் வாங்கி விடுகிறார். ஆனாலும் இதுபோன்ற படங்களில் கிளிவேஜ் தெரிய காஸ்டியும்ஸ், இனியாவின் ஐட்டம் டான்ஸ், படம் எங்கும் தெளிக்கப்பட்டிருக்கும் மொக்கை காமெடிகள் போன்றவை படத்தை ஆவரேஜ்ஜுக்கும் கீழ் கொண்டு செல்கிறது.
விசாகா சிங் அழகான கதாப்பாத்திரத்தில் வந்து போகிறார். ஒரு தொழிலாளி உயிர் விட்டதை விட தொழிலாளிகளுக்கு காது கேளாமல் போவது முக்கியமாக போய்விட்டதா, கோர்ட் காட்சிகளில் வசனங்கள் ஷார்ப்பாக இருந்திருக்கலாம்.

இசை-இயக்கம்
இமான் சுமாருக்கு சற்று மேல். பாடல்கள் ஒக்கே. ரீரெக்கார்டிங் இன்னும் பெட்டராக இருந்திருக்கலாம். 'ஜெயம்கொண்டான்' கண்ணனை எதிர்பார்த்து போனால் அங்கே 'சேட்டை' கண்ணன் தெரிவது ஏமாற்றம்.
ஆவிக்கு பிடித்த பாடல்/ காட்சி
'மழைக்காத்தா' மற்றும் 'சுந்தரிப் பெண்ணே' பாடல்கள் இனிமை. லக்ஷ்மி மேனனின் குரல் ஆளுமையில் 'குக்குறு' பாடல் கேட்பதற்கு அருமை.
Aavee's Comments - Powerless kings !
இரண்டு கூஜா என்று வைத்திருக்கலாமோ...?
ReplyDeleteஹஹஹா நல்ல தலைப்பு
Deleteநண்பா ஒருநொடி சினேகம் நேற்று மீண்டும் தனிமையில் கண்டேன் இயல்பாக நடித்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள். எமது மதுரை பதிவு காண வருக...
ReplyDeletehttp://killergee.blogspot.ae/2014/11/blog-post.html?showComment=1415420880776#c4879358193824623794
நல்ல தலைப்பு .... நல்ல விமர்சனம் ...
ReplyDeleteஅருமையான விமர்சனம் நண்பரே...
ReplyDelete