Tuesday, November 11, 2014

ஈரோடு போயி திருச்சி வந்தா பின்னே தஞ்சாவூரானு..! (Three Angels)
கொங்கு மண்ணை கீழே உதறிவிட்டு - இரயில் நிலையம்
வந்தவனை வரவேற்றது சில படிக்கட்டு. என்னுடனே
சிற்சில சம்பாஷணைகளோடு வந்தது ஒரு அடித்தட்டு. சேருமிடம்
வேறேன்பதால் ஆங்கே பிரிந்தோம் Bye சொல்லிவிட்டு.

இரயிலுக்காய் காத்திருந்த நேரத்தில்
 எதிரே ஒளிர்ந்ததோர் காண்டீன்
கத்தி படம் பார்த்த பின்னே
கொஞ்ச காலம் புறக்கணித்திருந்தேன் Coke-Tin.

ரயில் நீரை மட்டும் வாங்கிக் கொண்டு
காத்திருக்கையில் கடந்தது பல teen.
இரயில் வந்து நின்றதும் Chart நோக்க
என் கம்பார்ட்மெண்டில் மூன்று F18.

இரவுப் பொழுதில் உறக்கம் வராவிடில் படிக்க
வைத்திருந்தேன் ஒரு புத்தகம், அதன் பேர் கள்ளம்.
வயதுக்கே உரிய அழகுகளுடன், கொஞ்சிக் கொஞ்சி பேசிய
தேவதைகளை கண்டவுடன் குதுகளித்ததோ என் உள்ளம்.

குலுங்கலோடு புறப்பட்ட தொடர்வண்டியில் புத்தகத்தை
மாரில் சாய்த்தபடி கட்டியணைத்தேன் நித்ராதேவியை.
கனவுதேசத்தில் காப்பி குடிக்க நிறுத்திய போது வண்ண வண்ண
ஆடைகளோடு காஜலோடு இம்மூவரும் சுற்றி வந்தனர் ஆவியை.

கட்-கட் என்ற 'சரவணரின்' ஒலி கேட்டு கண்விழித்தால்
வண்டி அசையாது நின்றிருந்தது ஈரோட்டில் - முகம் மட்டும் தெரிய
கம்பளிக் கதகதப்பில் கண்ணுறக்கம் கொண்டிருந்த
கோதைகளை நிழற்படமாய் மாட்டிவிட்டேன் என் மனப்பேரேட்டில்

அதன்பின் உறங்க மறுத்து
என் இமைகள் போராட்டம் ஒன்றை நடத்த,
புத்தகமும் போரடிக்க, வழியேதும்
நான் அறியவில்லை நேரம் கடத்த.

செல்போனில் சில நேரம்,
ஐ-பாடில் சில நேரம்,
நிற்காமல் ஓடிச்சென்ற சூப்பர் பாஸ்ட்
எக்ஸ்பிரெஸாய் கடந்தது என் நேரம்.

டீ-காபி, காபி-டீ என்ற இரைச்சல்
மீண்டும் கேட்கத் துவங்கிய அந்நேரம்,
எக்ஸ்க்யுஸ்மீ என்றொரு மெல்லிய இசை ஒலித்தது
படிக்கட்டில் நின்றிருந்த என் காதோரம்.

இறக்கைகளை Backpack இல் மடித்து வைத்துவிட்டு
இறங்கத் தயாரான அந்த தேவதைகளை,
கண்டபோது வந்த திசை அறியாமல் நெஞ்சில்
பச்சக் என்று ஒட்டிக் கொண்டது மனக்கவலை.

ஆவியை துயரமென்று சிலர்
நினைப்பதுண்டு.
ஆவியே, துயரமென்று நினைத்ததிந்த
திருச்சியைத் தானோ?

களையிழந்த கம்பார்ட்மென்ட்
கப்சிப்பென்று முகாரி வாசிக்க- எதற்கும்
கட்டுப்படாத காலத்தைப் போல்
கடந்து சென்றது தொடர்வண்டி.


அதுவரை 'அராத்தாய்'  அடங்கோண்டு
போராடிய என் கண்மணிகள்
இப்போது 'சமத்தாய்' சமந்தாவை எண்ணிக்கொண்டு
உறங்க முடிவு செய்தது.


முப்பத்து ஐந்தில் இந்தியன் கிரிக்கட் டீமில்
இடம்கிடைத்து உடனே ரிட்டையர் ஆன ப்ளேயர்போல்
தூக்கத்தின் 'சுகானுபவத்தை' ரசிக்க முடியாமல்
கெடுக்க வந்து சேர்ந்தது தஞ்சாவூர் ஸ்டேஷன்.

சூரியன் இன்னும் கண்விழிக்காத காலையிலே,
இராஜராஜன் நடை பயின்ற தஞ்சையில
ஆவி தன் கால் பதித்த அந்த வேளையிலே
அங்கும் வரவேற்றது ராம்ராஜ் வேட்டிகளே!

நேரத்தே எழுப்பி நண்பனின் துயில் கலைக்க
வேண்டாமமென நான் நினைக்க
பிளாட்பார்மில் பல்துலக்கி, தேநீர் குடிக்க,
இப்படியாய் அரைமணி நேரமும் மெதுவாய் கடக்க

 நிமிடத்திற்கு பன்னிரண்டு முறை மட்டுமே ஒலித்த
அந்த விளம்பரத்தை கேட்க முடியாமல் நான் தவிக்க
வேறு வழியின்றி செல்போனை எடுக்க
தஞ்சை வரும் அந்த தென்காசி அலைஸ் சென்னை நண்பனை அழைக்க

முதல்முறை முழு அழைப்பும் ஓயும் வரை எடுக்காமல் இருக்க
பின் பத்து நிமிடம் வரை மாறி மாறி இரு நம்பர்களுக்கும் விளிக்க
திடீரென அழைப்பு மணி ஓய்ந்து அவன் போனை எடுக்க
'ஹலோ' என்ற சொல்லோடு அவன் குரல் கேட்க நான் காத்திருக்க

மறுமுனையில் அவன் சொன்னான்
'என்ன பாஸ், மிட்நைட்ல எழுப்பிட்டீங்க?'


- தொடரும் (என்று தான் நினைக்கிறேன்.)
(பி.கு: ) இது சத்தியமாய் கவிதை நடையல்ல. 'கவிதாவின்' நடை என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள். (கவிதா யாரென்று பின்னூட்டத்தில் கேள்வி கேட்பவர்களுக்கு 'அண்ணன்' சீனு பதிலளிப்பார்). ஆகையால் யாரும் 'கவிதை நன்றாக உள்ளது' என்ற பின்னூட்டத்தை மட்டும் போட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப் படுகிறது.

38 comments:

 1. சீனு உடனே வந்து பதில் சொல்லவும்?

  ReplyDelete
  Replies
  1. அவர் இப்போது நிஷ்டையில் இருப்பார். நாளைக் காலையில் தான் வருவார்..! ;)

   Delete
  2. //சீனு உடனே வந்து பதில் சொல்லவும்?// ஏண்ணே இப்புடி :-)

   Delete
  3. ச்சே டக்குன்னு சீனுவை கலாய்க்க வரலையே ...

   Delete
 2. So, trip started..... looking forward for more ! Kavitha is super..... naan Kavithaavaithaan sonnen !!

  ReplyDelete
 3. தலைப்பை "திரீ"புரசுந்தரிகள் ன்னு வச்சிருக்கலாமே...

  ReplyDelete
  Replies
  1. // "திரீ"புரசுந்தரிகள்// அட, செம டைட்டில்

   Delete
 4. வடித்து விட்டீர்கள் பதிவை. படித்து விட்டேன் மெதுவாய். ஆட்டோ கிடைக்காததால் உடனே வர முடியவில்லை. எதற்கு என்று சொல்ல வார்த்தைகள் படியவில்லை!

  ReplyDelete
  Replies
  1. ஹஹஹா.. எசப்பாட்டு சூப்பர்..!

   Delete
 5. அடுத்த கவிதாவை காண ஆவலுடன் இருக்கிறேன் நண்பா,,,,

  ReplyDelete
  Replies
  1. ஹஹஹா போட்டுடலாம் பாஸ்

   Delete
 6. ஆஹா சூப்பர் உங்களோடு பயணம் செய்ய வைத்துவிட்டீர்களே..

  ReplyDelete
 7. கவிதை இல்லைன்னு சொல்லிட்டீங்க! நம்பிட்டேன்! தஞ்சாவூர் பயண அனுபவங்கள் தொடரட்டும்!

  ReplyDelete
  Replies
  1. என் மேல் நம்பிக்கை வைத்து நான் சொன்ன உண்மையை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி நண்பா :)

   Delete
 8. கவிதை இல்லைன்னு நல்லாவே தெரியுது.... உரைநடைல டி.ஆர். ஸ்டைல்ல எதுகை மோனை சேர்த்திருக்கீங்க.... அழகா மூணு பொண்ணுங்க இருக்கும்போது எப்படி புத்தகத்தையும் நித்ரா தேவியையும் கட்டி அணைக்க முடியுது?

  ReplyDelete
  Replies
  1. //புத்தகத்தையும் நித்ரா தேவியையும் கட்டி அணைக்க முடியுது?//
   :-)

   Delete
 9. கவிதா நடையில்... சை... கவிதை நடையில் ஒரு கதையா?
  அருமை... அருமை...

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க குமார்..

   Delete
 10. கவிதாவா - க்ம் அது ஒன்னு தான் கொறச்சல். ஆமா உங்களுக்கு யாரு பாஸ் இப்டியெல்லாம் யோசிக்க சொல்லி கொடுக்காது. எதுவும் ஏழு பேர் கொண்ட குழு வச்சி இருக்கீங்களா...

  ReplyDelete
  Replies
  1. இல்லைன்னா மட்டும் தங்களை கலாய்க்க முடியாது என்று திடமாக நம்புகிறீர்களா தோழர் தம்பி ...

   Delete
  2. //ஏழு பேர் கொண்ட குழு வச்சி இருக்கீங்களா/// 'அண்ணன்' அரசனின் கேள்வியை நானும் மொழிகிறேன்.. ச்சே வழிமொழிகிறேன்..

   Delete
 11. கவிதை நன்றாக உள்ளது !

  ReplyDelete
  Replies
  1. கவிதைகள் [குறிப்பிட்டிருக்கலாம் சார் ... அதான் தொடருமுன்னு ;போட்டிருக்கார்ல

   Delete
  2. //கவிதை நன்றாக உள்ளது !/ நன்றி சார்.. இதெல்லாம் கவிதைன்னு சொன்னா கவிதா கூட நம்பாது.. ;)

   Delete
  3. //கவிதைகள் குறிப்பிட்டிருக்கலாம் சார் ..// இது கவி-விதைகள் அரசன், இதை படிக்கிற ஒவ்வொருத்தருக்கும் கவிதை எழுதற ஆசை முளைக்கும்.. ;)

   Delete
 12. தங்களின் சுகானுபவங்களை கேட்க சாரி படிக்க நான் தீவிர இலக்கிய வெறியோடு காத்திருக்கிறேன் தோழர் ...

  ReplyDelete
  Replies
  1. ஹரஹரமகாதேவகி :-)

   Delete
  2. // தங்களின் சுகானுபவங்களை கேட்க சாரி படிக்க நான் தீவிர இலக்கிய வெறியோடு காத்திருக்கிறேன் தோழர் ..// அதெப்படி டோலர் நானே இதை ஆடியோவா வெளியிடலாமான்னு யோசிச்சுட்டு இருந்தேன். ;)

   Delete
  3. //ஹரஹரமகாதேவகி// தேவகி???

   Delete
 13. பின்னிட்டீங்க ஆவி!

  இரயில் வந்து நின்றதும் Chart நோக்க
  என் கம்பார்ட்மெண்டில் மூன்று F18.//

  இறக்கைகளை Backpack இல் மடித்து வைத்துவிட்டு
  இறங்கத் தயாரான அந்த தேவதைகளை,//

  ஆவி தன் கால் பதித்த அந்த வேளையிலே
  அங்கும் வரவேற்றது ராம்ராஜ் வேட்டிகளே!//

  ரொம்பவே ரசித்தோம் இந்த வரிகளை! வரிகளை மட்டுமல்ல கவிதாவை மிகவும் ரசித்தோம்...ஸோ கவிதா திரும்பவும் வருவாங்கல்ல.....

  ReplyDelete
 14. கனவில் வந்த காந்தி

  மிக்க நன்றி!
  திரு பி.ஜம்புலிங்கம்
  திரு துளசிதரன் வி.தில்லைஅகத்து

  புதுவைவேலு/யாதவன் நம்பி
  http://www.kuzhalinnisai.blogspot.fr

  ("உலகம் சம நிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வு இல்லா நிலை வேண்டும்".)

  ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...