வலையுலக 'வாத்தியார்' பாலகணேஷ் என் எழுத்துகளுக்கு துரோணாச்சாரியார் என்றால், என் நடிப்பு/திரை ஆசைக்கு Lays இட்டவர் என் 'திரையுலக பாலச்சந்தர்' துளசிதரன் அவர்கள் தான். 'பரோட்டா கார்த்திக்' என்ற குறும்படத்தில் சிறு வேடம் என்ற போதும் திடீர் வாய்ப்பு கொடுத்து தமிழ்நாடு, கேரளா என இரு மாநிலங்களில் பலருக்கும் என்னை அறிமுகப் படுத்தினார். அந்த குறும்படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய 'குடந்தை சரவணன்' அவர்கள் ஒரு குறும்படம் தயாரிக்க இருப்பதாய் சொல்ல ஆர்வம் மிகுதியில் அவரிடம் சென்று என்னையும் ஒரு உதவி இயக்குனனாய் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். அவரும் 'நீங்க இல்லாமலா?, நாமெல்லாம் சேர்ந்து தான் படம் பண்றோம்." என்றார். கேட்டதும் மனதிற்குள் ஒரு சந்தோசம். ஆயினும் சிறிது நாட்களுக்குப் பிறகு நானும் அதை மறந்து விட்டேன்.
ஒரு நாள் சரவணனிடமிருந்து போன். "ஆவி, நான் அன்னைக்கு சொன்ன மாதிரி ஒரு குறும்படம் பண்ணலாம்னு இருக்கேன். இதுதான் கதை" என்று சொன்னார். கதையை முதலில் கேட்டதும் சுமார் பத்து பதினைந்து நிமிடங்களுக்கு உரையாடினோம். பின் அதனுடைய திரைக்கதை வடிவத்தை அனுப்பி வைத்தார். கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றப்பட்டு அந்தக் கதை ஒரு நல்ல கமர்ஷியல் குறும்பட திரைக்கதையாக வடிவெடுத்தது. சுமார் அரைமணி நேரத்துக்கும் மேலாக ஓடக்கூடிய வகையில் தயாரான அந்த திரைக்கதையை படமாக எடுக்க ஒரு நாள் குறிக்கப்பட்டது. துளசி சார் பாலக்காட்டிலிருந்தும், நான் கோவையிலிருந்தும் சென்னை வர ரயில் டிக்கட் புக் செய்தாயிற்று.
அந்தக் கதையில் நான் ஒரு சிறு வேடம் ஏற்பதாகவும் இருந்தது. அப்போது அந்த கதையை படமாக்குவதில் இருந்த சில சிக்கல்களை மனதில் கொண்டு அந்த படத் தயாரிப்பு ஒத்திவைக்கப் பட்டது. ஆயினும் டைரக்டர் எங்களிடம் "நீங்க வாங்க, வேற ஒரு சப்ஜெக்ட் எடுப்போம்." என்றார். நானோ "பரவாயில்ல சார். அப்புறம் பார்த்துக்கலாம். " என்றேன். "இல்ல ஆவி. இன்னொரு சப்ஜெக்ட் என் வலைல மக்கள் மிகவும் ரசித்த ஒரு பதிவை குறும்படமா எடுக்கலாம்னு இருக்கேன். So ஒண்ணும் பிரச்சனையில்ல நீங்க வாங்க.." என்றார். "இதுல நீங்களும் அரசனும் லீட் ரோல் பண்றீங்க." என்றதும் எனக்குள் உறங்கிக் கொண்டிருந்த நாயகன் "Gangnam " ஸ்டைலில் நடனமாட தொடங்கிவிட்டான்.
அதன்பின் இருவாரங்களில் திரைக்கதை தயார் செய்து, தினமும் காலையிலும் மாலையிலும் என்னிடமும், அரசனிடமும் கதை விவாதம் செய்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தது எங்கள் 'சில நொடி சிநேகம்'. கீதா ரங்கன் மேடம் மற்றும் துளசி சாரின் உள்ளீடுகளால் இன்னமும் பட்டை தீட்டப்பட்டு மெருகேற்றப்பட்டது. திட்டமிட்டபடி ஒரு பேருந்து நிலையத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கோரி சென்னை போக்குவரத்து அலுவகத்தில் அனுமதி கேட்க சென்ற எங்கள் இயக்குனரிடம் நான்கைந்து இடங்களில் அனுமதி பெற்றாலே படப்பிடிப்பு நடத்த முடியும் என்று கூறியதும் கொஞ்சம் தளர்ந்து போனார். கூடுமானவரை முயற்சித்துவிட்டு பின் அதிக நேரமில்லாத காரணத்தால் படப்பிடிப்பை கும்பகோணத்தில் வைத்துக் கொள்ள தீர்மானித்தார். கடைசி இரண்டு நாட்களில் கும்பகோணத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி பெற்று மற்ற ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்திருந்தார். இந்த எல்லா முயற்சிகளையுமே அவரும் அவர் தம்பி இருவருமாகவே செய்து முடித்தனர். தொலைவிலிருந்து மனதளவில் மட்டுமே எங்களால் ஊக்கம் தர முடிந்தது.
படப்பிடிப்பு அன்று கும்பகோணம் வந்தடைந்த சென்னை, கேரளா மற்றும் கோவை நடிகர்கள் (?!!) முதல் காட்சி ஆட்டோ ஒன்றில் நடிக்க படமானது. மூதல் ஷாட்டே கிட்டத்தட்ட பத்து டேக் வரை போக டைரக்டர் டென்ஷனின் உச்சியில் இருந்தார். இதற்கும் மிகவும் எளிமையான ஒரு காட்சி அது. எல்லோரும் புதுமுகமாதலால் வந்த தடுமாற்றங்கள் அவை. ஒளிப்பதிவாளர்கள் ஜோன்ஸும், கார்த்திக்கும் துளசி சாரிடம் வந்து இயக்குனரை கொஞ்சம் அமைதிப்படுத்துமாறு கூறிவிட்டு சென்றனர். அதற்கு பிறகு வந்த காட்சிகளெல்லாம் ஓரிரு டேக்குகளில் ஒக்கே ஆக டைரக்டர் ஹேப்பி. மதியம் இயக்குனரின் குடும்பத்தாருடன் அமர்ந்து டீம் லஞ்ச் இனிதே முடிந்தது.
மதியம் நடுரோட்டில் ஒரு சில காட்சிகள் எடுத்தது, காலையில் பஸ் ஸ்டாண்டில் எடுத்ததை விட சிரமமாக இருந்தது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாதலால் முடிந்தவரை பப்ளிக் உள்ளே வராதவாறு பார்த்துக்கொண்டோம். அதிலும் துளசி சார் காரில் வரும் காட்சி ஒன்றை சிலமுறை எடுக்கவேண்டி இருந்ததால் முன்னும் பின்னும் ஒட்டியபடி எடுத்த அனுபவம் சொல்லில் வடிக்க முடியாதது. மாலை மீண்டும் பஸ் ஸ்டாண்டில் சில காட்சிகளை எடுத்துவிட்டு படப்பிடிப்பை இனிதே முடித்தோம். படப்பிடிப்பு என்பது வெறும் இருபத்தியைந்து சதவிகிதம் தான், மீதி எடிட்டிங், டப்பிங், கரெக்ஷன் என பல படிகளை உள்ளடக்கியது என்பதை அதற்கு பிறகு வந்த நாட்களில் புரிந்து கொண்டேன்.
அலுவலகம் முடித்து பின் எடிட்டிங் வந்து சேர்ந்த அரசன், இயக்குனர் மற்றும் கார்த்திக், ஜோன்ஸுடன் இரு வாரங்களுக்கு மேல் இரவில் கண்விழித்து காலை மூன்று அல்லது நான்கு மணிக்கு உறங்கி மீண்டும் அடுத்த நாள் வேலை செய்து என பரபரப்பாக சென்ற நாட்கள் அவை. பின்னர் ஒரு நள்ளிரவில் டப்பிங் வேலை நடந்தது. எல்லாம் முடிந்து நண்பர்கள் சிலருக்கு மட்டும் டைரக்டர் "ஸ்பெஷல் ஷோ" (?!!) ஏற்பாடு செய்ய Mixed Reviews கிடைத்தது. அதைக்கொண்டு மீண்டும் ஒரு வாரம் திருத்தங்கள், மாற்றங்கள் சில செய்து ஒரு வழியாக முடித்துவிட்டு பெருமூச்சு விட்டோம். பாலகணேஷ் சார் மற்றும் ஹர்ஷவர்த்தன் (இயக்குனரின் மகன்) அழகுற வடிவமைத்த போஸ்டர்கள் வெளியிடப்பட்டது.
நேற்று (அக் 13) இயக்குனர் தன் மானசீக குருவான இயக்குனர் பாக்யராஜ் அவர்களிடமிருந்து அழைப்பு வர அவசர அவசரமாக அவர் அலுவலகம் நோக்கி ஓடினோம். அலுவல் நாளானதால் மொத்த டீமும் கலந்து கொள்ள முடியாமல் போனது. எல்லோருடைய கண்ணும் படத்தை பார்த்து முடித்த 'திரைக்கதை வித்தகரின்' இதழ் அசைவை எதிர்நோக்கியபடி இருந்தது. அந்த இருபதுக்கு இருபது அறையில் மௌனம் மட்டுமே தாண்டவமாடியது. பாக்யராஜ் தன் தொண்டையை செருமிக்கொண்டு வாய்திறந்தார். அவர் என்ன சொல்லியிருப்பார் என்பதை நீங்க யூகித்து சொல்லுங்களேன்..! ;)
சிலநொடி சிநேகம் - டீசர்
-------------------------------
'பூக்கள் பூக்கும் தருணம் போலத்தான் நட்பு பூக்கும் தருணமும்..!' எந்த நொடியில் மலரும் என கணிக்க முடியாத ஒரு உறவு அது. பள்ளித் தோழன், கல்லூரி நண்பன், அலுவலக நட்பு என வாழ்க்கையில் பல்வேறு நட்புகளை சந்தித்திருப்போம். இதோ நட்பின் இன்னொரு வகையிலிருந்து சில துளிகள் மட்டும் உங்கள் பார்வைக்காய்..!
டீசர் அருமை நண்பரே
ReplyDelete26 ஆம் தேதி காண காத்திருக்கிறேன்
Thanks Sir!!
Deleteடீசர் முதலிலேயே பார்த்து விட்டேன் ஆவி.
ReplyDeleteஇயக்குநர், அரசன், துளசிதரன்ஜி, மற்றும் உங்களுக்கு வாழ்த்துகள்.
சீனுவின் பதிவையும் படித்து மகிழ்ந்தேன்.
நன்றி சார்.. நீங்க முகநூலில் கேட்ட கேள்வியையே நான் இங்கு பதிவில் கேட்டிருக்கிறேன்.. பார்க்கலாம் யாராவது பதில் சொல்கிறார்களா என்று.. ;)
Deleteவாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும்..
ReplyDeleteமுதலில் உங்கள் குழுவுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteடீசர் நல்லா வந்திருக்கு...
ஆவலுடன் எதிர் நோக்கி இருக்கிறோம்...
டைரக்டர் குடந்தை சரவணன். ஹீரோக்கள் அரசன் மற்றும் ஆவி உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDelete- அட்மாஸ்பியரில் நிற்கும் வாய்ப்பு விரைவில் கிட்டும் என காத்திருக்கும் அப்பாவி சினிமா ரசிகன்.
குறும்படம் எடுக்க பாடுபட்டதை அருமையாக விளக்கினீர்கள் ஆவி!
ReplyDeleteஅந்த டீசரும் நச்சுனு இருக்கு!!
மதுரை வலைப்பதிவர் சந்திப்பில் வெளியீடு சரியான தேர்வு!!!
எனக்கும் கலந்து கொள்ள ஆசைதான்; ஆனால், வாய்ப்பில்லையே!
குறும்படத்தைக் காண ஆவலுடன் காத்திருப்போம்!!!
Congrats to the team.... Wishing you all success for the short film. I seen the teaser and it created curiosity in me. Looking forward to watch it.
ReplyDeleteஆவி பதிவு சூப்பர்! ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க! - இருவரும்....
ReplyDeleteடீசர் மொபைலில் கிடைக்கவில்லை நாளை ஸ்கூலில் பார்க்க முயற்சிக்கின்றேன்-துளசி...
அந்தக் கடைசிக் கேள்விக்கு நாங்கள் பதில் சொல்ல முடியாதே! ஹ்ஹஹ..
ReplyDeleteமனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteடீசர் பார்க்க கிடைத்தது! ஆவி பால சந்தர் என்ற வார்த்தை பெரிது! அவர் எங்கே மலை........நான் இங்கே மடு.......ம்ம்ம் அப்போ நீங்க எங்கேயோ போகப் போறீங்க...பாலச்சந்தர் அறிமுகப் படுத்தனவங்க ஃபேமஸ் ஆனது போல?!!!!!?
ReplyDeleteஆவி! டீஸர் ரொம்ப நல்லாருக்கு ஆவி! குட் வொர்க்!! படம் நல்லா வந்துருக்கு போல தோணுது!
ReplyDeleteசந்தோசத்திலே பெரிய சந்தோசம் அடுத்தவர்களை சந்தோசப்படுத்தி பார்க்கிறது தான்...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள் ஆவி...
உன் திரையுலக பாலசந்தர் துளசிதரன் தன் மோதிரக் கையினால என்னைக் குட்டத் தயாரா இருந்தும் என்னாலதான் ‘ப.கா.’ ஷுட்டிங் வர முடியாமப் போயிருச்சு. அவ்வ்வ்வ்வ்வ்வ்.... நல்ல சான்ஸை மிஸ் பண்ணிட்டேன்.
ReplyDeleteஉன் இப்போதைய குறும்பட இயக்குனர் குடந்தையூரார் என்னை வெச்சுப் படம் எடுத்திருந்தா ரீச் இன்னும் எங்கயோ போயிருக்குமே.... அவ்வ்வ்வ்வ்.... மிஸ் பண்ணிட்டாரு.
ஹி... ஹி... ஹி....
வாழ்த்துகள் நண்பர்களே.. குறும்படத்தினை பார்க்கும் ஆவலுடன் நானும். உங்கள் தளத்தில் வெளியிடும் போது தான் பார்க்க வேண்டும் - மதுரை வர இயலாததால்...
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பா!
ReplyDelete
ReplyDeleteஉங்களுக்கு உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இதயகனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்..