பாகம் 1
ரிஷ்விக் வெளியே சென்று கொண்டிருந்த ஒரு லுப்தான்சா விமானத்தை பார்த்தான். தன்னையும் அறியாமல் லாவண்யாவின் நினைவுகளில் மூழ்கினான்.
"எனக்கும் லுப்தான்சாவுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு தெரியுமா?.. ரெண்டு பேரும் "எல்" ல ஆரம்பிச்சு "ஏ" ல முடியும்".
"ஜேர்னி டைம் அரைமணி நேரம் தான்னாலும் எனக்கு தூங்கவோ, பாட்டு கேக்கவோ பிடிக்காது. யார் கூடவாவது பேசிகிட்டு வரணும். ஏம் ஐ டிஸ்டர்பிங் யு?"
"இல்லங்க"
"பை தி பை.. ஐயாம் லாவண்யா.. நீங்க"
"ரிஷ்விக்" என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டாலும் அவளுடன் பேசிக்கொண்டு வரவே அவன் விரும்பினான். பேச வேண்டும் என்ற ஆசை, ஆனால் என்ன பேசுவது என்றும் அறியாமல் தவித்துக் கொண்டிருந்த போது அவளே ஆரம்பித்தாள்.
"பர்ஸ்ட் டைம் ப்ளை பண்ணறீங்களா?"
"ஆமா, உங்களுக்கு எப்படி தெரியும்?"
"ப்ளைட் டேக் ஆப் ஆகி பத்து நிமிடம் ஆன பின்னும் பெல்ட் கழட்டாம இருக்கீங்களே!"
"ஒ.. மறந்துட்டேன்.. தேங்க்ஸ்"
" யு ஆர் வெல்கம். என்ன விஷயமா சென்னை போறீங்க?"
"நாளைக்கு இன்ஜினியரிங் கவுன்சலிங்"
"வாவ்... வாட் எ சர்ப்ரைஸ்... நானும் கவுன்சிலிங்குக்கு தான் போறேன். ஆமா உங்க நேடிவ் எது"
"கோயம்புத்தூர் தான்! நீங்க"
" நான் பக்கம்தான்- ஈரோடு. படிச்சதெல்லாம் Presentation ல தான். நீங்க"
" நான் மைக்கேல்ஸ். ஒரு காம்பவுண்ட் சுவருக்கு அந்தப்புரம் தான்!!"
"அமேசிங்.. ஐ ஜஸ்ட் கான்ட் பிலீவ் இட்.."
அவள் நுனி நாக்கு ஆங்கிலத்தை கேட்ட போது இவளைப்போல ஒரு பெண் தனக்கு மனைவியாய் அமைந்தால் நன்றாக இருக்கும் என யோசித்தான். அவள் அணிந்திருந்த டி-ஷர்டும், கையில் வைத்திருந்த செல்போனும் அவள் நிச்சயம் ஒரு வசதியான வீட்டுப் பெண் என்பதை காட்டியது. அதனால் தானோ என்னவோ அவளிடம் நட்பு பாராட்ட மனம் இணங்க மறுத்தது. இருந்த போதும் அவள் முகத்தை திரும்பத் திரும்ப பார்க்காமல் இருக்க அவனால் முடியவில்லை.
"பேசிட்டு இருந்ததில நேரம் போனதே தெரியல. பிளைட் எறங்க போவுது. பெல்ட் போட்டுக்குங்க"
ப்ளைட் தரை இறங்கியதும் மறுநாள் பார்ப்பதாக சொல்லிவிட்டு அவள் வேகமாக இறங்கிச் சென்றாள். அவளிடம் ஏதோ சொல்ல வேண்டும் என்ற உணர்வு . அது நட்பா, காதலா, பருவத்தின் ஈர்ப்பா? - ஒரு விடுகதையாய் தோன்றியது அவனுக்கு.அவள் உருவம் புள்ளியாய் தேயும் வரை பார்த்துவிட்டு பின் அவள் போன் நம்பர் எதுவும் வாங்கிக் கொள்ளாததை நினைத்து தன்னைத்தானே திட்டிக் கொண்டான். நாளை கவுன்சிலிங்குக்கு வரும்போது தன் மனதில் உள்ளதை சொல்லி விட வேண்டும் என எண்ணினான்.
அவன் சொன்னானா? அவள் ஏற்றாளா? -- தொடரும்...
நல்ல இருக்கு தொடருங்கள் காத்திருக்கிறேன்
ReplyDeleteinteresting...
ReplyDelete