வேலை வெட்டி எதுவும் இல்லாத, நண்பனின் சலூனில் அரட்டை அடித்தும், ஊர் சுற்றியும், பல முறை அரியர் எழுதியும் பாசாக முடியாமல் தவிக்கும் பாஸ்கரன், வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறுவது தான் கதை.. இந்த மெல்லிய கதைக்கு பலம் மூன்று பேர் - ஒன்று நாயகன் ஆர்யா.. இரண்டு கிட்டத்தட்ட நாயகனுக்கு சமமாக நடித்திருக்கும் சந்தானம். மூன்றாவது டைரக்டர் ராஜேஷ்.
படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரை ஆர்யாவும் சந்தானமும் செய்யும் காமெடி சேட்டைகள் அட்டகாசம். குறிப்பாக "நண்பேண்டா " என ரஜினி ஸ்டைலில் இவர்கள் மாறி மாறி சொல்லும் போது விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறார்கள். "ஊர்ல அவனவன் பத்து பதினைந்து நண்பார்களை வச்சுட்டு சந்தோசமா இருக்கான். நான் ஒரே ஒரு பிரெண்ட வச்சுட்டு முடியலே" என்று சந்தானம் புலம்புமிடம் தியேட்டரில் விசில் பார்க்கிறது.
இசை யுவன் சங்கர் ராஜா. பின்னணி இசை அருமை. பாடல்கள் பரவாயில்லை ரகம். "யார் இந்தப் பெண்தான் என்று" பாடல் இனிமை. இடையிடையே இளையராஜாவின் இசையை பயன்படுத்தியிருப்பது புத்திசாலித்தனம்.. நாயகி நயன்தாரா, நல்ல கேரக்டர், அம்சமாக வந்து போயிருக்கிறார். அண்ணன் கேரக்டரில் வருபவர் நல்ல குணச்சித்திர நடிகராக வர வாய்ப்பிருக்கிறது.
"அரியர் மேட்" , "தல தளபதி", "அப்பா டக்கர்", "டோகோமோ கம்பெனி ஓனர்", "பாடன்" இப்படி பல ஒன் லைனர்களின் மூலம் கிச்சு கிச்சு மூட்டியிருக்கிறார்கள்.மொத்தத்தில் பாஸ் என்கிற பாஸ்கரன் டிஸ்டிங்ஷனில் பாஸ் பண்ணியிருக்கிறார்..
75 / 100
No comments:
Post a Comment
படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..