Saturday, September 11, 2010

விடை இல்லா விடுகதை - பாகம் 5






அண்ணா விமான நிலையம்.. சென்னை 


                              விமானத்தில் இருந்து இறங்கி பெட்டிகளை பெற்றுக் கொண்டபின் தன் மனைவியுடன் வெளியே வர எத்தனித்த போது தூரத்தில் தன் தாயையும் தந்தையையும் பார்த்தான் ரிஷ்விக்.. வயதான இவர்களை தனியே தவிக்க விட்டுவிட்டு தான் மட்டும் அந்நிய தேசத்தில் சுகம் அனுபவித்துக் கொண்டிருப்பதை நினைத்து ஒரு நொடி கண்ணீர் சிந்தினான். 
                                   
                                 அவர்கள் நின்றிருந்த இடத்தை நெருங்க முயன்ற போது ஒரு பெருங்கூட்டம் ஒன்று அவனை சுற்றி வளைத்தது. அவனுக்கு எண்ணற்ற மாலைகள் அணிவித்து திக்கு முக்காடச் செய்தனர்..அவன் கணிப்பொறி உலகில் செய்த சாதனைகளுக்காக அமெரிக்காவில் உள்ள கார்நிகி-மெலன் பல்கலைக்கழகம் அவனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் கொடுத்ததை கொண்டாடும் விதமாக இந்திய அரசாங்கம் அவனுக்கு பத்மபூஷன் விருதை அறிவித்திருந்தது. 


                                 அடுத்த வாரம் ஜனாதிபதி டெல்லியில் இந்த விருதை வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.மறுநாள் மாலை தமிழக முதல்வருடன் தேநீர் விருந்து, இயக்குனர் ஷங்கர் தனது அடுத்த திரைப்படத்தின் கம்ப்யுட்டர் கிராபிக்ஸ் செய்வதற்கு நவீன யுத்திகளை பற்றி பேசுவதற்காக நேரம் கேட்டிருந்தார்.. அவருக்கு நாளை மறுநாள் வருவதாக சொல்லிவிட்டு கைபேசியை அமர்த்திய போது அம்மாவின் குரல் கேட்டது.. "ரிஷ்விக், டே ரிஷ்விக்" 


                                 தன் வளர்ச்சிக்கு மூல காரணமான தன் அன்னைக்கும் தந்தைக்கும்  ஏதாவது செய்ய வேண்டுமென எண்ணினான்.. "நான் கூப்பிட்டுகிட்டே இருக்கேன்.. என்னன்னு கேக்குறானா பாருங்க". அம்மா ஏதோ சொல்வதற்காக கூப்பிடுகிறாள்.. வாசலில் பக்கத்து வீட்டு கவிதா நின்று கொண்டிருக்கிறாள். இவள் இப்போது எதற்காக இங்கே வந்திருக்கிறாள். ஹாலில் ரேஷ்மா அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கிறாள். டீப்பாயில் ஆரஞ்சு பழச்சாறு பாதி மட்டும் இருக்கிறது. 


                                 லாவண்யாவும் வந்திருக்கிறாளா? என்ன விசேஷம் இன்னைக்கு என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே யாரோ பிரம்பால் அடிப்பது போன்ற உணர்வு.. துவண்டு எழுந்த போது எதிரில் அப்பா.. "எட்டு மணியாச்சு.. இன்னும் என்னடா தூக்கம். செகண்ட் ஷோ சினிமா பாத்துட்டு ராத்திரி பூராவும் உளறிகிட்டு இருக்கே.. ஆறாவது வகுப்பிலயே ரெண்டு வருஷமா படிச்சு கிட்டு இருக்கே.. இந்த வருசமாவது பாஸ் பண்ற வழியப் பாரு!!!"


                                                                     முற்றும்...


"ஆவ்வ்வ்வ்வ் .. இப்படி எல்லோரும் ஒட்டு மொத்தமா அடிக்க கிளம்பப் பெடாது.. எதுவா இருந்தாலும் பேசித் தீத்துக்கலாம்.."


5 comments:

  1. உங்க ஊருக்கு ஒரு பிளைட் டிக்கெட் புக் பண்ணிக்கொடுங்க நேர்ல வந்துதான் அடிக்கணும்.

    ReplyDelete
  2. ஆஹா... பத்மபூஷன் வாங்கப்போரன்னு நினைச்சா..கடைசிலே இப்படி பண்ணிடிங்களே..

    ReplyDelete
  3. என்ன முனி நீங்க.. ஆங்கிலத்தில் கிறிஸ்டோபர் நோலன் எடுத்தா பாக்குறீங்க.. அதையே தமிழ்லே ஆவி எழுதினா அடிக்க வரீங்க!! புரிஞ்சுக்கவே முடியல!! ;-)

    ReplyDelete
  4. நன்றி ஜானு!! வாசகர்களாகிய உங்களுடைய பின்னூட்டங்கள் தான் ரிஷ்விக்குக்கு கிடைத்த பத்மபூஷன், பத்மஸ்ரீ எல்லாம்..

    ReplyDelete
  5. அடப்பாவமே... திஸ் இஸ் டூ மச் ஐ சே... இவ்ளோ பில்ட் அப் குடுத்து... வெரி bad ... ஹா ஹா அஹ... ஜஸ்ட் கிட்டிங்... கொஞ்சம் கூட சந்தேகம் வராம அழகா கொண்டு போய் இருக்கீங்க ஆனந்த்... Nice write up

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...