"என்னங்க, என்ன ஒரே யோசனைல இருக்கீங்க. நம்ம பிளைட் போர்டிங் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.. " நினைவுகளிலிருந்து மீண்ட போது எதிரில் ரேஷ்மா நின்று கொண்டிருந்தாள்.
"அப்புறம் இதோ இந்த அம்மாவோட பசங்க ரெண்டு பேரும் இங்க யு.எஸ் ல தான் இருக்காங்க. அவங்க இங்கயே சிட்டிசன்ஷிப் வாங்கியிருக்காங்க.. ஆனா இந்தம்மாவுக்கு நம்ம ஊர்ல இருக்கத்தான் பிரியமாம். ஆனாலும் பசங்க இல்லாம தனியா இருக்க கஷ்டமா இருக்காம்"
"ரிஷ்விக், நீ எங்களையெல்லாம் விட்டுட்டு தனியா இருக்கப் போறேன்னு நினைக்காதே! உன்னப் பத்தி இப்போ தாழ்வா நினைக்கிறவங்க முன்னாடி நீ ஜெயிச்சு காட்டணும். உன் அம்மா நான், உன்கூட எப்பவும் இருப்பேன். தைரியமா போயிட்டு வா."
அம்மாவின் குரல் இன்னும் காதுகளில் ஒலித்துக்கொண்டிருந்தது.
போர்டிங் பாஸை காண்பித்து விட்டு பிளைட்டினுள் இருவரும் ஏறினர். வழக்கம் போல் விண்டோ சீட்டில் உட்கார்ந்து கொண்டாள் ரேஷ்மா.
"மீறிப் போனா ஒரு பத்து நிமிஷம். அதுக்குள்ள தூங்கிடுவே. அதுக்கெதுக்கு விண்டோ சீட்?" என்றவாறே அருகிலிருந்த சீட்டில் அமர்ந்தான்.
தனது ஐ-போனை சுவிட்ச் ஆப் செய்ய எத்தனித்த போது தனது நண்பன் வலைப்பதிவில் பிரசுரித்திருந்த ஒரு கவிதையைப் படித்தான். சில நொடிகளில் எண்ண வலையில் சிறைப்பட்டிருந்தான்.
_______________________________________________________________________
"நல்லா கவிதை எழுதற ஒரு பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு அம்மாகிட்டே சொன்னியாமே, உண்மையா?"
"கவிதா, உன் பேரே ஒரு அழகான கவிதை. உனக்கு கவிதை எழுதத் தெரியாட்டியும் பரவாயில்லே, உன்னையே கல்யாணம் செய்துக்கறேன்."
_______________________________________________________________________
"லைப்ல காதல் ஒரு சின்ன பாகம் மட்டும் தான். உனக்கு டேலன்ட் இருக்கு, நல்ல வேலைக்கு வருவேன்னு ஒரு தப்புக் கணக்கு போட்டுட்டேன். இப்படி வருசத்துக்கு மூணு கம்பனில வேலைய விட்டுட்டு வந்து நிக்கற உன்னை நம்பி நான் எப்படி கழுத்த நீட்டுவேன். நீயே சொல்லு"
"என்ன கவி, இப்படியெல்லாம் பேசுறே. நான் மனசுக்கு பிடிக்காம சும்மா கோடிங் எழுதி பணம் சம்பாதிக்க எனக்கு விருப்பமில்லே. இதே நம்ம கல்யாணத்துக்கு பின்னாடி நடந்திருந்தா, என்ன பண்ணியிருப்பே?"
"கண்டிப்பா டைவர்ஸ் பண்ணியிருப்பேன்"
_______________________________________________________________________
"ரிஷ்விக், எனக்கு தெரியும், நீ எப்படியும் லைப்ல மேல வந்துடுவேன்னு. உனக்கு இன்னும் எம்மேல கோபமா?"
"கவி, இப்போ எனக்கு அமெரிக்காவுல வேலை கிடைச்சிருக்கு. மறுபடியும் என்ன தேடி வந்து பேசறே. இப்போ இந்த வேலையும் வேண்டான்னு சொல்லிட்டா இப்போவே திரும்பி போயிடுவ தானே!!"
_______________________________________________________________________
"ரேஷ்மா, என் பேரு கவிதா. ரிஷ்விக்கை பத்தி ஒரு விஷயம் சொல்லணும்"
"சொல்லுங்க"
"...................."
"இத பாருங்க, என் கணவரைப் பத்தி எனக்கு நல்லா தெரியும். அவரை கல்யாணம் பண்ணிக்கறதுக்கு எட்டு வருஷம் முன்னாடியே தெரியும். அவருக்கு நிறைய கேர்ள் பிரெண்ட்ஸ் இருக்கலாம். ஆனா யார்கிட்டயும் தவறான முறையில் பழகினது இல்லே. உங்களைப் பத்தியும் சொல்லியிருக்கார். அவர் மேல எனக்கு நம்பிக்கையிருக்கு!"
_______________________________________________________________________
தன் அன்னைக்கு அடுத்தபடியாக தன் மேல் முழு நம்பிக்கை வைத்திருக்கும் தன் மனைவியை பெருமையுடன் பார்த்தான் ரிஷ்விக். மெல்ல அவள் தலையை தன் தோள்களில் சாய்த்துக்கொண்டு கண்ணயர்ந்தான்.
(பி.கு. என்னடா, லாவண்யாவப் பத்தி ஒண்ணுமே சொல்லலேன்னு பாக்கறீங்களா. லாங் ஜேர்னி. ரிஷ்விக் இப்போதான் தூங்கப் போயிருக்கான். அவன் எழுந்த உடனே கேட்கலாமே, ப்ளீஸ்!!)
Very good...enakku idha pathi onnum theriyadhu ppa.
ReplyDeleteindha varam pona varatha vida nalla poikinu irukku. Btw, story is more or less about Rishvik. WOuldn;t it have been more interesting if the narrator is Rishvik.
I know its a pretty long journey so far. Keep going my lord :-)
Thanks for the comments Saravana.. Shhh.. yeppa.. indha payyan yellarkittayum solliduvaan polirukkae..
ReplyDeleteநல்ல போகுது. கொஞ்சம் முன்னும் பின்னும் போறிங்க அது கொஞ்சம் சரி செய்யலாம்.
ReplyDeleteசாரி, ஒரே அத்தியாயத்தில் முன்னும் பின்னும் கதை பயணிப்பதை தவிர்க்கலாம். போன பின்னுடத்தில் சரியா சொல்லாமல் பதுப்படையாக சொல்லிவிட்டேன்.
ReplyDeleteவாவ் ... கதை நல்ல டேக் ஆப் ஆகுது... லாவண்யா என்னங்க ஆச்சு? சீக்கரம் நெக்ஸ்ட் பார்ட் ப்ளீஸ்...
ReplyDelete//indha payyan yellarkittayum solliduvaan polirukkae..//
enna sir...matter edho irukkum pola irukke? ha ha ha
@ முனியாண்டி-- நன்றி முனி. இதை நிச்சயம் மனதில் கொள்கிறேன். இந்த கதையின் ஓட்டத்திற்கு அது தேவைப்பட்டது.
ReplyDelete@அப்பாவி தங்கமணி -- ஒரே ஒரு வாரம் பொறுத்துக்கோங்க.. லாவண்யா வந்துகிட்டே இருக்கா.
ReplyDelete@சரவணா -- சிக்க விட்டுட்டியே சரவணா!!!
ReplyDeleteNarayana ....Narayana....
ReplyDelete