Friday, September 10, 2010

விடை இல்லா விடுகதை - பாகம் 4


"வுட் யு லைக் டு ஹேவ் சம்திங்?"  என்ற குரல் கேட்டு கண்விழித்த போது விமானப் பணிப்பெண் குளிர் பான வண்டியுடன் நின்றிருந்தாள். 


"ஆரஞ்ச் ஜூஸ் ப்ளீஸ்"   என்றதும் அவன் கைகளில் ஆரஞ்சுப் பழச்சாறு ஊற்றிய ஒரு கோப்பையை திணித்துவிட்டு அடுத்த பயணியை நோக்கி நகர்ந்தாள் அவள். ரிஷ்விக் அருகில் உறங்கிக் கொண்டிருந்த தன் மனைவியை எழுப்ப மனமின்றி அவள் விழித்திராத வண்ணம் மெதுவாக அவள் தலையை தன் தோள்களில் இருந்து விலக்கி தான் கொண்டு வந்திருந்த "பயணத் தலையணையை" வைத்துவிட்டு சற்றே இளைப்பாறினான். சில்லென்ற ஆரஞ்சுப் பழச்சாற்றை தொட்ட போது அவனுக்கு கவுன்சிலிங் தினத்தன்று லாவண்யாவுடன் அங்கிருந்த கேண்டீனில் பழச்சாறு குடித்தது நினைவுக்கு வந்தது.


" ஆரஞ்ச் ஜுசுண்ணா எனக்கு ரொம்ப பிடிக்கும். உனக்கு ?"


" எனக்கும் பிடிக்கும்"   இப்போதும் ஒற்றை வார்த்தையில் நிறுத்தி கொண்டான். மனதுக்குள் பட்டாம்பூச்சிக் கூட்டம். அவளிடம் சொல்வதற்கான சரியான சமயத்திற்காகக் காத்திருந்தான்.


"என்னடா, என்னவோ சொல்லனும்னு கூட்டிட்டு வந்திட்டு சும்மா உக்காந்து கிட்டு இருக்கறே?"   பட்டென்று அவள் கேட்டதும் அவன் படபடப்பு அதிகமாகியது..

" அது வந்து ..."   அவன் நா வறண்டது. சொல்ல வந்த வார்த்தைகள் நாக்கின் அடியில் ஒளிந்து கொண்டு வர மறுத்தது.. சேரன் டவரில் ஜோடி ஜோடியாய் சுற்றித் திரியும் காதலர்கள் எல்லோரும் எவ்வளவு மனத்திடம் மிக்கவர்கள் என எண்ணிக்கொண்டான்.


"ஒண்ணுமில்ல.." என்று அவன் ஆரம்பிப்பதற்குள் அவள் இடைமறித்து..

"டேய் .. லவ் கிவ்வுன்னு எதாவது சொல்லி தொலைச்சுராதே. உன் அமைதியான கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நான் லொட லொடன்னு இப்படி பேசிக்கிட்டே இருக்கேன். நீ பொறுமையா எல்லாத்தையும் கேட்டது எல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சுது. கண்டிப்பா நமக்குள்ள ஒரு நல்ல வேவ் லெங்க்த் இருக்கு. அத ஒரு நல்ல நட்பா மாத்திக்கணும்னு நான் நினைக்கறேன். அதுக்கு காதல்ன்னு சாயம் பூச நீ நினைச்சா அதுக்கு நான் ஆள் இல்லே. என்ன என்கூட பிரெண்டா இருக்கியா? "

அவளுடைய பதில் அவனுக்கு ஏமாற்றத்தை தந்தாலும் அவளுடைய அணுகுமுறை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவளைப் போன்ற ஒரு தோழியை கொடுத்ததற்கு கடவுளிடம் நன்றி கூறினான். 


கடைசி சொட்டு பழச்சாறு காலியானதும் அவன் தன் நினைவுகளிலிருந்து கலைந்து விமான சிப்பந்தி கூறிய அறிவிப்பை கேட்டான். இன்னும் பதினைந்து நிமிடங்களில் சென்னை விமான நிலையத்தை அடையும் என்ற அறிவிப்பை கேட்டு மனதுக்குள் ஒரு சின்ன சந்தோஷம் தோன்றியது. ஆறு வருடங்களுக்குப் பின் அன்னை பூமியை மிதிக்கப் போகும் அவன் அங்கே நடக்கப் போகும் எதையும் அப்போது அறிந்திருக்கவில்லை..

 

4 comments:

 1. நல்ல போய்க்கிட்டு இருக்கு...முடிவுக்காக காத்திருக்கிறேன்

  ReplyDelete
 2. ஆஹா... இப்படி தொடரும் போட்டுடீங்களே ஆனந்த்... ரெம்ப சின்ன போஸ்ட்... படிக்க ஆரம்பிக்கறதுக்குள்ள முடிஞ்சு போச்சு... சீக்கரம் நெக்ஸ்ட் பார்ட் ப்ளீஸ்...Story great going

  ReplyDelete
 3. //நல்ல போய்க்கிட்டு இருக்கு...முடிவுக்காக காத்திருக்கிறேன்//

  நன்றி முனி.. யாருடைய முடிவுக்குன்னு சொல்லலயே!!! ;-)

  ReplyDelete
 4. ஆமாங்க புவனா.. இந்த பாகம் கொஞ்சம் சின்னதா போச்சு.. ஆனா நாளைக்கே அடுத்த பாகம் விட்டு இதை Compensate பண்ணிடறேன்.

  ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...