Friday, October 26, 2012

மைனாவுக்கு இன்று பிறந்த நாள்!!







நிமிர்ந்து நிற்கும் சிந்து சமவெளிப் பூவே!
சிந்தனையில் நின்ற தெய்வத் திருமகளே!!
காதலில் சொதப்புவது எப்படி என இளைஞர்களுக்கு
கற்றுக் கொடுத்து அவர் மனங்களில் முப்பொழுதும் உன்
கற்பனைகளை விதைத்து வேட்டையாடும் மைனாவே!
இன்று பிறந்த நாள் கொண்டாடும்  நீ இன்றுபோல்
என்றும் RUN  BABY  RUN!!


Tuesday, October 16, 2012

கனவுகள் மெய்ப்படுமா??



தாய் போல வேண்டுமென்றேன்- சிறு 
பிள்ளையாய் நீ வந்தாய்!
'பெண் நட்பு' பாராட்டும் -நல்ல 
தோழியாகவும் நீ இருந்தாய்!



சிகரங்கள் வேண்டாம் - சின்ன சின்ன 
ஆசைகள் போதுமென்றாய்!
முன்னும் வேண்டாம், பின்புறமும் வேண்டாம் 
உடன் வரவே விரும்பினாய்!



விடியல் வந்தால் எனக்கென்னவென்று - ஏழரை 
மணிவரை முகம் புதைத்துறங்குகிறாய்!
நீ அழகாய் இருக்கிறாய் என்று தினம் நான் 
பொய்யுரைக்க ஆசைப்பட்டாய்!!

கனவுகள் மெய்ப்பட வேண்டுமென்று- நான் 
எப்போதோ படித்திருந்தேன்..
கனவாய்ப் போன நீ மெய்யாய் 
வேண்டுமென விரும்புகிறேன்!!

Saturday, October 13, 2012

மாற்றான் - திரை விமர்சனம்

                 சுமார் 3 மணி நேரம் ஓடும் இந்த மாற்றான் படத்தின் கதைச் சுருக்கம் இதுதான். இந்திய அரசாங்கத்தால் பல மட்டங்களிலும் பலரால் புறக்கணிக்கப் படும் ஒரு அறிவியல் ஆராய்ச்சியாளர், மனம் வெறுத்து தன கண்டுபிடிப்பை தீய வழிகளில் பயன்படுத்துகிறார். இதன் மூலம் பல குழந்தைகள் பாதிக்கப் படும் அபாயம் இருக்கிறது. இந்த விஷயம் இவருடைய பிள்ளைகளான இரட்டையர்களுக்கு தெரிய வரும் போது நிகழும் சம்பவங்களே கதை.


                    சூர்யா வழக்கம் போல் அசத்தல் நடிப்பு. படத்தின் முதுகெலும்பு என்று கூட சொல்லலாம். அகிலன்-விமலன் எனும் ஓட்டிப் பிறந்த இரட்டையர்கள் வேடம்.. இரண்டு வேடங்களுக்கும் மிகப்பெரிய வித்தியாசத்தை, வார்த்தை உச்சரிப்பு மற்றும் உடல் மொழி வாயிலாக வேறுபடுத்திக் காட்டுகிறார்.. யாரோ யாரோ பாடலில் கண்களில் நம்மையும் அறியாமல் எட்டிப் பார்க்க வைக்கிறார். தனது அண்ணனை புரிந்து கொள்ளாமல் விட்டுவிட்டு விமலன் ரத்த வெள்ளத்தில் கிடக்கும் போது  அகிலன் அழுது புலம்புவதாகட்டும் மனதில் நின்று விடுகிறார். 




                       கார்த்தி-காஜல் இடையே நாம் பார்த்த கெமிஸ்ட்ரி அண்ணன் சூர்யா- காஜல் ஜோடியிடம் இல்லை. தவிர வழக்கமான துருதுருப்போ, முக பாவனைகளோ, கவர்ந்திழுக்கும் நடனமோ காஜலிடம் இல்லை. விஞ்ஞானி அப்பாவாக நடித்திருப்பவர் (13 B  வில்லன்) தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை கச்சிதமாக செய்து போகிறார்.. இரண்டாம் பாதி காமெடி இல்லாததாலும், தேவையற்ற சில காட்சிகளாலும் தொய்வுடன் செல்கிறது..



                         இரட்டையர்களை காண்பிப்பதாகட்டும், வெளி நாடுகள், இயற்கை என்று அனைத்தையும் அற்புதமாக படம் பிடித்த புகைப்பட வல்லுனருக்கு ஒரு சொட்டு.. சிறந்த பின்னணி இசை மற்றும் பாடல்களை கொடுத்த ஹாரிஸ் ஜெயராஜ் தன்னை மீண்டும் ஒரு முறை சிறந்த இசையமைப்பாளராய் நிரூபித்துள்ளார்.. 


                         நல்ல கதை தேர்ந்தெடுத்து படம் இயக்கிய கே.வி. ஆனந்துக்கு பாராட்டு தெரிவிக்கும் அதே வேளையில் சில லாஜிக் இல்லா காட்சிகளை பற்றிய கேள்விகள். தன் நாட்டிலிருந்து உண்மை கண்டறிய வந்த வோல்கா ஏன்  மற்ற விளையாட்டு வீரர்களை முன்பே சந்திக்கவில்லை? தன் நண்பன் அசோக் மற்றும் வோல்கா இறப்புக்கு அழும் காஜல் தன் காதலன் இறந்த செய்தியை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விசாரணையில் குறியாய் இருப்பது நெருடல்.. இது போன்ற ஓட்டைகளை தவிர்த்து இழுவையான கிளைமாக்ஸை தவிர்த்திருந்தால் இந்தப் படம் உலகத் தரத்துக்கு இணையான படம் என்பதில் ஐயமில்லை!!


75 / 100

Monday, September 3, 2012

என் ஆசிரியருக்கு!!




சித்திரமோ, செந்தமிழோ,
சூத்திரமோ, அயல் மொழியோ-எம் 
சிந்தையிலே இருத்திடவே 
நாள் முழுதும் பாடுபட்டாய்!!

ஒன்னொன்னும் ரெண்டென்று  
நீர்  சொன்ன மனக்கணக்கு! 
முள் ரெண்டு உள்ளதென்று 
நீர் சொன்ன மணிக்கணக்கு!

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு -புரிய 
வைத்தீர் இனி ஏது தாழ்வு?
கற்பவை கசடற கற்றபின் உணர்ந்தேன் 
என் ஆசிரியரின் பெருமையை!!

 மரத்தினின்றும் விழுந்திட்ட ஆப்பிளைக் கொண்டு 
அறிவியலும் விளக்கி விட்டீர்- அதிசயமே!
மரங்களின் தேவை உணர்த்திய அசோகரை 
மனத்திரையில் வரலாறாய் ஓடவிட்டீர்- அது சுகமே!!

கணக்குகளோ, கவிதைகளோ, 
 கட்டிடமோ, திரைப்படமோ..
காலமெல்லாம் நான் படைக்க 
முதலெழுத்தை கற்பித்தீர்..மிக்க  நன்றி!

கையிலிருக்கும் உங்கள் எழுத்தாணி - நாங்கள் 
வாழ்வினில் உயர அது ஏணி!!
பாடத்தோடு பண்பினையும் பயிற்றுவித்த ஆசிரியரே 
உங்களை என்றும் மறவாது இந்த அணி!!


Saturday, August 18, 2012

புரியவில்லை!!


அவ்வளவு பெரிய கத்தியை வைத்திருக்கும் 
கசாப்புக் கடைக்காரரே கோபப்படவில்லை..
நீ மட்டும் ஏன்?? 
மூளை இருக்கிறதா என்ற என் கேள்விக்கு..


Saturday, August 4, 2012

கட்டப்பஞ்சாயத்து




காலங்கள் கடந்தாலும்,
மாற்றங்கள் நிகழ்ந்தாலும்,
கிராமத்தின் பெயர்சொல்லும் இந்த,
ஆலமரத்தடி பஞ்சாயத்துக்கள் ஓய்ந்தபாடில்லை.
மரத்தைச் சுற்றி மாந்தர்களின் கூட்டம்,
‘மா’ மரத்தின் ஒருபுறத்தில் காகங்கள் கரைய,
கரை போட்ட வேட்டியுடன் நரைத்த தலைகள் அமர்ந்திருக்க,
தழும்பிய நீருடன் செம்பொன்று காத்திருக்க,
காவலனாய் நின்றிருக்கும் அந்தத் தலைவன் வந்தமற,
அமைதி நாற்காலியிட்டு அமர்ந்திருந்தது.
சாதி சண்டையிலே காலுடைந்த கருப்பசாமி கைகட்டி நின்றிருக்க,
அவன் காலுடைத்ததை பெரும் சாதனையாக எண்ணி,
இறுமாப்புடன் அந்த முனியாண்டி நின்றிருக்க,
அமைதியின் ஆணவத்தை முறியடிக்க வந்த மாவீரன் போல்,
பற்களில் பலவற்றை இழந்துவிட்ட அந்த வாலிபக் கிழவர்,
“கருப்பசாமி உன் புகாரை சொல்லு” என்று தொடங்கினார்.
“சாமி, சாதிச்சண்டையில இவன் என் காலை உடைச்சிட்டாங்க”
தீராத மௌனவிரதத்தை திடுக்கென உடைத்துக்கொண்ட தலைவன்,
அவன் புகாருக்கு உன் பதில் என்ன?”
தலையில் முண்டாசு கட்டியிருந்த முனியாண்டி,
முழிகளை ஆட்டியவாறே தலைவனிடம்,
“சாமி, இவன் என் சாதியப் பத்திக் கேவலமாப் பேசிட்டான்”
“அதான் சாமி ஒரு கால  வாங்கிப்புட்டேன்.”
தலைவர் தீர்ப்பை சொல்ல தயாரானார்,
“எலே சாதி என்னலே சாதி,
பூமில ரெண்டே சாதிதான் ஒண்ணு ஆண்சாதி,
இன்னொன்னு பெண்சாதி,
இன்னும் எத்தன காலத்துக்கு
இந்த சாதி பேரச் சொல்லி அடிச்சுக்குவீங்க?
போங்கடா போங்க போயி,
வேலையப்பாருங்க” என்று கூறி துண்டை உதறி
தோளில் போட்டு வீடு நோக்கி நடந்தார்.
அரண்மனை போன்ற அந்த அழகான வீட்டின்முன்,
வாயிலில் ஓர் தோட்டத்துப் பணியாள்,
பசியாற கிண்ணத்திலிருந்த பாயசத்தை குடித்துக் கொண்டிருக்க,
கண்கள் சிவக்க அந்த தங்கத்தலைவன்,
தன் மனையாளைப் பார்த்து,
“ஏண்டி உனக்கு எத்தன முறை சொல்றது
கீழ்சாதிக்காரப் பயலுக்கு அலுமினியத்தட்டுல
திங்கக் குடுக்காதேன்னு!”   

Tuesday, August 16, 2011

சிங்கம் சிங்காநல்லூரில்..,


                            தாய்த் தமிழ் நாட்டைப் பார்த்துட்டு வரலாமேன்னு ஒரு விசிட் அடிக்க வந்தவனுக்கு ( 4 வருடத்திற்கு பிறகு) ஒரு சின்ன விபத்து ( அமெரிக்காவில் சிக்னல் எல்லாம் பாலோ பண்ணிட்டு நம்ப ஊர்லயும் அதே நினப்போட மஞ்சள் வந்ததும் வண்டிய நிறுத்திட்டேன்.  அப்புறம் என்ன டோட்டல் டேமேஜ் தான்...) தமிழ் நாட்டின் மண்வாசனையை நுகர்ந்த பிறகு ( You are right, கீழ விழுந்தப்புறம் தான்) அந்நிய தேசத்திற்கு திரும்பி செல்ல மனம் ஒப்பவில்லை. So, இனி சிங்கம் சிங்கா நல்லுர்ல இருக்க முடிவு செய்திருக்கு...

                            இணைய நண்பர்கள் பலரது படைப்புகளையும் ஓரிரு நாட்களில் கேட்ச் பண்ணிவிட்டு விரைவில் புதிய பொலிவோடு, புதிய படைப்புடன் வருகிறேன்..

                    


How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...