Wednesday, August 6, 2014

பரோட்டா கார்த்திக் - குறும்பட முன்னோட்டம் (ஆவியின் முதல் திரைக்காவியம்..!)


கதைச்சுருக்கம்:

                நேர்மையான போலிஸ் அதிகாரி மயில்வாகனம் (குடந்தையூர் சரவணன்) புதிதாக பதவியேற்கிறார். அந்த ஸ்டேஷனில் இருக்கும் இன்ஸ்பெக்டர் தில்லு துரைராஜ் (DD ) மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆல்பர்ட் விநாயகம் (ஆவி) ஆகியோரால் இவருக்கு தொல்லை ஏற்படுகிறது. அதனால் கோபமடையும் மயில்வாகனம் தனது போலிஸ் வேலையை துறந்து அரசியலில் குதிக்கிறார். மந்திரியான மயில்வாகனம் தனக்கு குடைச்சல் குடுத்த இருவரையும் எப்படி பழிவாங்குகிறார் என்பதே கதை.




                   மேலே சொன்ன கதைச் சுருக்கம் வெறும் கற்பனையே. எதார்த்த கதையை நாளை (ஆக 7 மாலை ஆறரைக்கு காண வாருங்கள்). பதிவர் மற்றும் குறும்பட இயக்குனர் "துளசிதரன்" அவர்களின் மற்றுமொரு படைப்பு. "பரோட்டா கார்த்திக்" - குறும்பட திரையிடல் நிகழ்வு! 

"சமூகத்தின் அவலங்களை தட்டிக் கேட்க காந்தியடிகளும், பெரியாரும் வர வேண்டிய அவசியமில்லை. நல்ல மனம் கொண்ட பள்ளிச் சிறுவர்களே போதும் என்ற உயரிய கருத்தை வலியுறுத்தும் படம். "


                      சில "குளிர்பான" இயக்குனர்கள் தங்கள் படங்களில் உள்ள ட்விஸ்ட் ஐ வெளியே சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்வார்கள். ஆனா நாங்க எங்க படத்தை பார்த்து எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளும்படி வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.!   
                     
 நன்றி..
வணக்கம்..


புன்னகைகளுடன்,
கோவை ஆவி


                   
           
                     




                   

27 comments:

  1. மிஸ்டர் ஆவி... உங்களோட கற்பனைக் கதைய வெச்சு நீங்க ஒரு குறும்படம் எடுததிடுங்க. நல்லாவே இருக்கு. ‘குளிர்பான இயக்குனர்கள்..’ யாரை இப்படிக் குத்தறீங்கன்னு நெசமாவே எனக்குப் புரியலீங்கோ....

    ReplyDelete
    Replies
    1. Oru "thanda"maana padaththai eduththa iyakkunarai sonnen..!

      Delete
  2. பெப்ஸி இயக்குனர்களைச் சொல்கிறாரோ ஆவி...?

    வாழ்த்துகள் DD, ஆவி, குடந்தையூர் சரவணன், துளசிதரன்ஜி ..

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா.. கோர்த்து விடாதீங்க சார்..

      Delete
  3. நண்பர்கள் துளசிதரன் ..DD, ஆவி, குடந்தையூர் சரவணன், ஆகியோருக்கு உளம் கனிந்த நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. Vaalthukkal nanbare.... Box office hit aaga vaalthukkal :-)

    ReplyDelete
  5. துளசிதரன் ஐயா, நண்பர் தின்டுக்கல் தனபாலன், நண்பர் குடந்தையார், நண்பர் ஆவி அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. பதிவை ரசித்தேன் ஆவி

    ReplyDelete
  7. குறுந்தகடு விழா வெற்றி பெற வாழ்த்துக்கள் ! துளசிதரன் ஜி ,DDji,சரவணன் ஜி ,,நன்றி உரை சொல்லப் போகும் ஆவி ஜி க்கும் நன்றி !
    த ம 4

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா நன்றி ஜி..யு-ட்யுபில் அப்லோட் செய்துவிட்டு லிங்க் தருகிறோம்..

      Delete
  8. ஹா... ஹா...!
    நல்லா கதை கட்டுறீங்க!

    ReplyDelete
  9. ஹா... ஹா...!
    நல்லா கதை கட்டுறீங்க!

    ReplyDelete
  10. துளசிதரன் ..DD, ஆவி, குடந்தையூர் சரவணன், ஆகியோருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete

  11. ஆவி நடிச்சதால் இது பேய்ப்படமா போல இருக்கும் என நினைக்கும் போதே மேலேயுள்ள போலிஸ்காரர்களின் படத்தை பார்க்கும் போது அதிலும் அந்த போட்டோ நடுவில் இருக்கும் போலீஸை பார்க்கும் போது காமெடி போலீஸ் மாதிரி இருப்பதால் இது காமெடி படம் போலவும் தோன்றுகிறது படம் பார்த்தால் தான் எப்படி என்று தெரியும் போல...ஹும்ம்ம்ம்ம் என்னங்க தமிழகத்தில் ரிலீஸ் பண்ணும் போதே அமெரிக்காவிலும் ரீலீஸ் பண்ன முயற்ச்சித்து இருக்கலாமே

    ReplyDelete
    Replies
    1. DD-உங்களை காமெடி போலிஸ் ங்கறார்.. என்னன்னு கேளுங்க..! ஹஹஹா.. நன்றி சார்.. யு-ட்யுபில் அப்லோட் செய்துவிட்டு லிங்க் தருகிறோம்..

      Delete
  12. கற்பனை கதைக்கு சத்தியராஜ் பொறுத்தமாக இருப்பார், நக்கல் நையாண்டி அரசியல் கலந்து இன்னொரு அதிரடிபடையாக வந்துவிடும்.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா சொல்றீங்க.. அப்ப கோவை ஆவி நடிக்க வேண்டாம்னு சொல்றீங்க அப்படித்தானே? ஹஹஹா..

      Delete
  13. இந்தப் புகைப் படத்தை எவ்வளவு அருமையாக உபயோகப்படுத்தியிருக்கின்றீர்கள் ஆவி!! அதுவும் ரொம்ப ஆப்டாகக் கதை புனைந்து குறும்படத்தோடு லிங்க் செய்து போட்டு இருக்கின்றீர்கள்! க்ரேட்! இதை நேற்று இரவே போட்டோம் கமென்ட் எங்க போச்சுன்னே தெரில ஆவி! ஆவியாகி விட்டதோ?!!!!

    எங்கள் தளத்திலும் ஒரு சின்ன பதிவு இன்றைய திரையிடல் பற்றி நேற்று இரவு போட முயற்சித்து பதிவு ஏறாமல் இதோ இப்போது வெளியிடப் போகின்றோம்........முடிந்தால் பாருங்கள்.

    ReplyDelete
  14. எனக்கு ஒண்ணுமே புரியல அண்ணா

    ReplyDelete
    Replies
    1. ஒரு ஷார்ட் பிலிம் நடிச்சிருக்கேன்பா.. அதோட ப்ரிவ்யு க்கு இன்விடேஷன் தான் அது..!

      Delete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...