கதைச்சுருக்கம்:
நேர்மையான போலிஸ் அதிகாரி மயில்வாகனம் (குடந்தையூர் சரவணன்) புதிதாக பதவியேற்கிறார். அந்த ஸ்டேஷனில் இருக்கும் இன்ஸ்பெக்டர் தில்லு துரைராஜ் (DD ) மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆல்பர்ட் விநாயகம் (ஆவி) ஆகியோரால் இவருக்கு தொல்லை ஏற்படுகிறது. அதனால் கோபமடையும் மயில்வாகனம் தனது போலிஸ் வேலையை துறந்து அரசியலில் குதிக்கிறார். மந்திரியான மயில்வாகனம் தனக்கு குடைச்சல் குடுத்த இருவரையும் எப்படி பழிவாங்குகிறார் என்பதே கதை.
மேலே சொன்ன கதைச் சுருக்கம் வெறும் கற்பனையே. எதார்த்த கதையை நாளை (ஆக 7 மாலை ஆறரைக்கு காண வாருங்கள்). பதிவர் மற்றும் குறும்பட இயக்குனர் "துளசிதரன்" அவர்களின் மற்றுமொரு படைப்பு. "பரோட்டா கார்த்திக்" - குறும்பட திரையிடல் நிகழ்வு!
"சமூகத்தின் அவலங்களை தட்டிக் கேட்க காந்தியடிகளும், பெரியாரும் வர வேண்டிய அவசியமில்லை. நல்ல மனம் கொண்ட பள்ளிச் சிறுவர்களே போதும் என்ற உயரிய கருத்தை வலியுறுத்தும் படம். "
சில "குளிர்பான" இயக்குனர்கள் தங்கள் படங்களில் உள்ள ட்விஸ்ட் ஐ வெளியே சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்வார்கள். ஆனா நாங்க எங்க படத்தை பார்த்து எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளும்படி வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.!
நன்றி..
வணக்கம்..
புன்னகைகளுடன்,
கோவை ஆவி
வணக்கம்..
புன்னகைகளுடன்,
கோவை ஆவி