Friday, May 31, 2013

குட்டிப்புலி - திரை விமர்சனம்

                                  சிங்கம் பார்ட் 2 வருதுன்னு தெரிஞ்சதுமே படத்துக்கு குட்டிப்புலின்னு வச்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன். சசிகுமாரின் முந்தைய படமான சுந்தரபாண்டியனிலும் கிராமத்து கதாப்பாத்திரம் என்பதால் பார்த்த விஷயங்களையே மீண்டும் பார்ப்பது போன்ற ஒரு சலிப்பு.


                                 கதையின்னு பெருசா ஒன்னும் இல்ல. சொந்த ஊருக்குள் சண்டியராய் சுற்றி வரும் சசிகுமார் தாயின் மேல் அளவுகடந்த பிரியம் வைத்திருந்தாலும் தன உயிருக்கு ஆபத்து இருப்பதால் தாய் பலமுறை வற்புறுத்தியும் திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் லக்ஷ்மி மேனனை விரும்புகிறார். பின் தன் அடாவடிகளை நிறுத்த, பர்ஸ்ட் ஹாபில் இவரால் பாதிக்கப்பட்ட வில்லர்கள் இவரை தாக்க வர அவர்களிடமிருந்து தப்பித்தாரா, திருமணம் நடந்ததா என்பதை ஒரு வித்தியாசமான கிளைமாக்ஸோடு  முடிக்கிறார் இயக்குனர்.


                                  சசிகுமார் சார், போதும் சார் சிம்புளா சில அட்வைஸ், ஒண்ணு  கேரக்டர மாத்துங்க.. அப்புறம் ஹீரோயின மாத்துங்க.. சில சீன்ல மறுபடியும் சுந்தரபாண்டியன் பார்த்த பீலிங். முக்கியமா ரோமென்ஸ் காட்சிகள குறைச்சுகோங்க.. சத்தியமா தாங்கல. அதுலயும் நீங்க விடுற ரொமேன்டிக் லுக் கவுண்டமணி சாரையும் மிஞ்சிடுது. நீங்க நல்லா தானே டைரக்ட் பண்ணிட்டு இருந்தீங்க?? அதையே பண்ணுங்களேன்..



                                   போன வாரம் முழுவதும் குருவாயூரிலேயே சுற்றியதலேயோ என்னவோ லக்ஷ்மி மேனன் கொஞ்சம் சுமாராகத் தான் தெரிந்தார். அம்மணி, கொஞ்சம் நடிக்கவும் செய்யலாம். அஞ்சு நிமிஷத்துக்கு ஒருமுறை அரிவாளால் வெட்டிய  போது  கூட வரவில்லை. காமெடி என்ற பெயரில் ஆளாளுக்கு கடித்து துப்ப AC  அரங்கில் அத்தனை ரத்த வெள்ளம். இன்னும் எத்தனை படங்களில் இளையராஜாவின் பாடல்களை பின்னணியில் காட்டி போரடிப்பீர்கள். போங்கப்பா!! மழை வருதுங்கற காரணத்துக்காக கூட இந்தப் படம் ஓடுற தியேட்டருக்குள்ள போயிடாதீங்க மக்களே..!

25 / 100

13 comments:

  1. Ha... Ha... Ha... Mazhai Vanthal Kooda Nichayam Naan Poga Matten Aavi. Yetho Lakshmi Menonkkaga pogalamannu oru sabalam irunthuchu....! hi... hi...!

    ReplyDelete
    Replies
    1. திருமதி தமிழ் என்ற ஓர் ஒப்பற்ற காவியத்தை பார்த்த உங்களால் எந்த படத்தையும் பார்க்க முடியும்.. இருந்தாலும் ரிஸ்க் எடுக்க வேணாம் சார்.

      Delete
  2. இந்தப்படத்தைப் பார்க்காமல் காப்பாற்றியதற்கு அன்பு நன்றி உங்களுக்கு!!

    ReplyDelete
    Replies
    1. ஏதோ என்னால முடிஞ்சது மேடம்..!

      Delete
  3. சசிகுமார் தனது பாதையை கொஞ்சம் மாற்றிக்கொள்ளுதல் நலம்...நன்றி...

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க.. சும்மா ஒரே மாதிரி சிரிச்சுகிட்டு, ஜூனியர் ஆர்டிஸ்ட் புண்ணியத்துல டான்ஸ் ஆடாம தப்பிச்சுகிட்டே இருக்க முடியுமா.. இவர் மலையாளத்துல "மாஸ்டர்ஸ்" அப்படின்னு ஒரு படம் நடிச்சிருந்தார்.. அது மாதிரி நல்ல படங்களை தமிழிலும் செய்தால் நல்லா இருக்கும்..

      Delete
  4. சேம் பிளட்.

    புலி கடிச்சா தொப்புளை சுத்தி ஊசி போடணுமாமே !

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் போயிட்டீங்களா.. ஐயய்யோ..

      இந்தப் புலி கடிக்க வேணாம், நாம அத பார்த்தாலே ரத்தம் கொட்டுதே..

      //புலி கடிச்சா தொப்புளை சுத்தி ஊசி போடணுமாமே !

      ஆமா சார்.. சசிகுமார் தொப்புளை சுத்தி..

      Delete
  5. சசிகுமார் நடிக்கும் படம் மினிமம் கேரண்டியுடன் பார்க்கலாம் எனும் எல்லையை மீறிவிட்டதா இந்தப்படம்..

    ReplyDelete
  6. தெரியா தனமா போய்ட்டேன்பா...புலி சென்டிமென்டாலேயே பிறாண்டிடுத்து !

    ReplyDelete
  7. புலிக்கு நானு இரை...! நொந்துட்டே..

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...