Tuesday, October 30, 2012

அமெரிக்காவின் சோகம்!!

                           பணம் உள்ளவன் வீட்டில் தான் பிரச்சனைகளும், கவலைகளும் அதிகம் இருக்கும் என்பது போல வல்லரசான, வலிமை மிக்க அமெரிக்காவுக்கு தான் எத்தனை எத்தனை சோகங்கள்!



                                2001  TWIN TOWER சோகத்தை நம்மால் இன்றும் மறக்க முடியாது.இது மட்டுமல்லாமல் ஒவ்வொரு வருடமும் தாக்கும் புயல் மழையும், பனிப்பேரழிவுகளும், டொர்னாடோ எனப்படும் சூறாவளியாலும் வீடிழந்து, உற்றார் உறவினர்களை இழந்து தவிப்பவர்கள் ஏராளம் பேர் அமெரிக்காவில் உள்ளனர்.



                                   நான் ஆறு வருடங்கள் அமெரிக்காவில் வசித்த போது  கேட்டிராத ஒரு வார்த்தை "POWER CUT".. ஆனால் இன்று நிலைமையோ தலைகீழ்.. அமெரிக்காவின் நியுயார்க் மற்றும் நியுஜெர்சி நகரங்களில் மின்சாரம் மற்றும் குடிநீர் முற்றிலும் துண்டிக்கப் பட்டிருக்கிறது காரணம் "Sandy" என்று செல்லமாக அழைக்கப்படும் இந்த கொடூரப் புயலினால் "ஈஸ்ட் கோஸ்ட்" என்று சொல்லப்படும் நியுயார்க், நியுஜெர்சி, நார்த் கரோலினா, மாசசூசட்ஸ், வாஷிங்டன்  டி.சி. கென்டக்கி (KFC யின் பிறப்பிடம்), வர்ஜீனியா, மேரிலேண்ட் போன்ற கிழக்கு கடலோர மாநிலங்களும், சிகாகோ, மிசிகன், விஸ்கான்சின், போன்ற மாநிலங்களும் தாக்கப் பட்டிருக்கிறது..


                             அமெரிக்காவில் பரவலாக பாதிப்புகள் இருந்தாலும் பெரும் பாதிப்பு என்னவோ நியுயார்க் நகரத்தில் தான்!! தூங்க நகரமான "மன்ஹட்டன்" இன்று இருளில் மூழ்கிக்  கிடக்கிறது.. மேலும் இது பற்றிய தகவல்களை அறிய பின்வரும் சுட்டியை கிளிக்கவும்.. http://www.huffingtonpost.com/huff-wires/20121029/us-superstorm-sandy/




                             மாநிலமே வெள்ளக்காடாய் மாறியிருக்கிறது. 11 பேரை பலியும் வாங்கியிருக்கிறது.. இந்தப் புயல் இத்தோடு  நின்றாலே மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப குறைந்தது ஓரிரு மாதங்கள் ஆகும்.. இதுவும் கடந்து போகும் என்றாலும் இவை விட்டுச் செல்லும் சோகங்கள், நம்மைப் போல் அங்கு வாழும் மக்கள் படும் சிரமங்கள் குறைய நாம்  பிரார்த்திப்போமாக!!
                              

7 comments:

  1. இயற்கையை சீற்றம் அவ்வப்போது தான் இருப்பதை உணர்த்துகிறது !

    அமெரிக்காவில் தேர்தல் நடக்க போகிறது என்று படித்தேன்.

    ReplyDelete
  2. ஆம்.. ஒவ்வொரு முறை வரும் போதும் பேரழிவை உண்டாக்கிச் செல்கிறது!!

    Dec 04 is the election!!
    யார் வந்தாலும் அவர்களுக்கு இந்த "Sandy" ஒரு சவாலாய் இருக்குமென்பதில் ஐயமில்லை..

    ReplyDelete
  3. ஈராக்கிலும்,ஆப்கானிலும் அமெரிக்கா ஏற்படுத்தி வரும் பேரழிவுக்கு... இயற்கை ‘சாண்டி’ மூலம் பதில் சொல்கிறதோ !

    ReplyDelete
  4. என்ன நண்பரே, எல்லாம் தெரிஞ்ச நீங்களே இப்படி சொல்லலாமா? போர்கள் நடத்தியது அரசியல்வாதிகள்.. பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள்..

    பெற்றோர் செய்த பாவம் பிள்ளைக்கு என்பது போல் இருக்கிறது!!

    ReplyDelete
  5. இயற்கை அழிவை தடுத்து நிறுத்த முடியாது.
    ஆனால் செயற்கை அழிவை நிறுத்த முடியும்.

    இதே அமெரிக்க மக்கள் பொங்கி எழுந்து வியட்நாம் போரை நிறுத்தினார்கள்.

    ஈராக் போரில் அமெரிக்கர்கள் நடந்து கொண்டதைப்போல்தான்...
    நாமும் ஈழ விடுதலைப்போரில் நடந்து கொண்டோம்.
    நாமும் குற்றவாளிகள்தான்.

    ReplyDelete
  6. வரும்...

    வரும் முன் காப்போம்...

    ReplyDelete
  7. சில விஷயங்களை எவ்வளவு கவனமாக இருந்தாலும் தடுக்க முடியாது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.. நன்றி தனபாலன்..

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...