Tuesday, July 13, 2010

பார்த்த ஞாபகம் இல்லையோ

கடவுளை கண்டவர் இலர் - அதே போல் 
ஆவியை காணாதவரும் இலர்.


நண்பர்களுடன் அரட்டை அடித்தபடியே 
தேனிர் அருந்தும் போது


ஊட்டி மலை ஏறிடும் புகைவண்டியின் எஞ்சினில் 
அமர்ந்து கொண்டு புகை விடும்போது


அம்மா அடுப்பிலிருந்து இறக்கி வைத்த இட்லி 
தட்டின் மேலிருந்து நர்தனம் ஆடும் போது 


பால் குக்கருக்குள்ளிருந்து வாலிபன் போல் 
விசில் அடிக்கும் போது 


குளிர்கால விடியலில்  கம்பளியின் கதகதப்பில் 
சுவாசக்காற்று வெளியேறும் போது 


இப்படி ஆவியை நாம் அன்றாடம் பார்த்தும் 
பார்த்த ஞாபகம் இல்லாதது போல் உணர்வதேன்!!!



6 comments:

  1. nice one...thought u were going to say that u were also an aavee:))
    I think there is a spelling mistake in காணாதவரும்.

    ReplyDelete
  2. கோவை ஆவியை காணாதவர் இலர் என்றும் சொல்லலாம் அந்த அளவுக்கு அருமையான ஆவி.

    ReplyDelete
  3. Thanks Jaanu.. I'll correct it!

    ReplyDelete
  4. நன்றி முனியாண்டி!!

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails