Saturday, July 24, 2010

அஜய் - THE HERO!

இக்கதையில் வரும் அனைத்தும் கற்பனையே! யாரையும் குறிப்பிடுவன அல்ல!!!

                     கோடம்பாக்கமே வெலவெலத்துப் போயிருந்தது. எங்கு பார்த்தாலும் போலிஸ் வண்டிகள் நின்றிருந்தன. எல்லா தொலைகாட்சிகளும் நடிகர் அஜய் காணாமல் போனதை பற்றிய செய்தியை திரும்ப திரும்ப அறிவித்து கொண்டிருந்தது. அவர் காணாமல் போய் இன்றோடு மூன்று நாட்கள் ஆகிறது, அவரைபற்றிய எந்த தகவலும் போலிசுக்கு கிடைக்கவில்லை.
                      சமீபத்தில் தான் அவர் தனது நூறாவது படத்தை நடித்து இருந்தார். திரும்ப திரும்ப ஒரே மாதிரி கேரக்டரும், கதையே இல்லாத படங்களில் நடித்ததும், தேவையே இல்லாத பஞ்ச் டயலாக்குகளும்,  மக்களிடம் அவருக்கு ஒரு வெறுப்பை ஏற்படுத்தியிருந்தது என்னவோ உண்மைதான். ஆனாலும் அவர் காணாமல் போனது எல்லோருக்கும் ஒரு வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது.
                        போலிஸ் தீவிர விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர். தீவிரவாதிகள் யாரும் கடத்தியிருக்கக் கூடும் அல்லது அவர் புதிய கட்சி ஆரம்பிக்க போவதாக சொல்லியிருந்ததால் அரசியல் கட்சிகளால் ஏதாவது ஆபத்து நேர்ந்திருக்கலாம் என்றும் விசாரித்துக் கொண்டிருந்தனர். தகவல் தருபவர்களுக்கு பத்து லட்சம் ருபாய் சன்மானம் அளிப்பதாக அவர் தந்தை டைரக்டர் எஸ்.சி.சோமசேகரன் அறிவித்திருந்தார். 
                          அதே சமயம் விழுப்புரத்தை அடுத்த ஊருக்கு ஒதுக்குபுறமான ஒரு கட்டடத்தில் நான்கு இளைஞர்கள் ஒரு அறையின் முன் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த அறையின் உள்ளே நடிகர் அஜய் ஒரு சேரில் கட்டி வைக்கப்பட்டிருந்தார். அவருக்கு முன் இருந்த ஒரு தொலைக்காட்சியில் தொடர்ந்து அவர் திரையில் நடித்த படங்கள் இடைவிடாமல் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது ஒருவன் அறையின் உள்ளே நுழைந்தான்.. 
                            அவனிடம் அஜய் "சார்.. தயவு செஞ்சு இந்த படங்கள நிறுத்துங்க.  மூணு நாளா நான் என் படங்களையே பார்த்து எனக்கு பைத்தியம் பிடிச்சிடும் போலிருக்கு. நான் பண்ணின தவறு எனக்கு புரிஞ்சிடிச்சு.. இனிமே தரமான, நல்ல கதையுள்ள படங்களில் மட்டும் தான் நான் நடிப்பேன். ரசிகர்களோட கஷ்டத்த நான் இப்போதான் புரிஞ்சுகிட்டேன்" என்றான்.







8 comments:

  1. உண்மையில நல்ல இருக்கு. கற்பனை என்று சொல்வது எல்லாம் சும்மா... உங்களால் செய்ய முடியாதத நான்கு இளையர்களை வைத்து செய்து விட்டிர்கள். ஆனால் என்னால் விஜய் அண்ட் எஸ். ஏ. சந்திரசேகர் உடனே நினைவுக்கு வருவது தவிர்க்கமுடியவில்லை. நல்ல முயற்சி தொடர்க.

    உன்னையை சொன்னால் இவாறான கதை நான் ஒன்று யோசித்து வைத்திருந்தேன் வாட போச்சு...

    ReplyDelete
  2. கதை சூப்பர் ...கற்பனை கதை தானே, பெயரை விஜய் என்றே வைத்து இருக்கலாம்...பொருத்தமாக இருக்கும்:)

    ReplyDelete
  3. நல்ல கற்பனை பாசு..... சிரிப்பு தாங்க முடியல

    ReplyDelete
  4. வாழ்த்துக்கு நன்றி கௌதமன்

    ReplyDelete
  5. நன்றி ஜானு!

    ReplyDelete
  6. நன்றி முனி! எதிர்பார்க்கும் ரசிகர்களை தொடர்ந்து ஏமாற்றும் எல்லா நடிகர்களுக்கும் இது பொருந்தும்..

    ReplyDelete
  7. nalla irukku anand..keep it up.

    Aaana namba mudiyala...eppadi Ajay 3 naal thaaku pidichaar nnu

    ReplyDelete
  8. நன்றி சரவணா.
    அவரெல்லாம் எவ்வளவோ பாத்துட்டாரு. இத பாக்க மாட்டாரா?

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...