Wednesday, July 14, 2010
அம்மா-அப்பா
நாள் : வெள்ளிக்கிழமை, நேரம்: குழந்தை பிறக்க பத்து நிமிடத்திற்கு முன்...
அப்பா ஆபரேஷன் தியேட்டருக்கு முன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார். உள்ளிருந்து அம்மாவின் அலறல் கேட்டு மனம் பதைத்து கொண்டிருந்தவர் பத்து நிமிடத்திற்கு பின்னர் வெளியே வந்த டாக்டரிடம் " என்னாச்சு டாக்டர்" என்றார்.
"ஒண்ணும் கவலை படாதீங்க.. உங்களுக்கு ஆண் பிள்ளை பிறந்திருக்கான். ஆனா அவங்களுக்கு தான் நிறைய ரத்தம் போயிடுச்சு.. ரொம்ப சிரமப்பட்டாங்க. நீங்க உள்ள போய் பாக்கலாம் " என்றார். உள்ளே சென்ற அப்பா அந்த பிள்ளையை கையில் ஏந்தி, அதன் பிஞ்சு விரல்களை முத்தமிட்டவாரே " அம்மாவை கஷ்ட படுத்திட்டயே படவா!"
ஒரு வயது குழந்தையை தொட்டிலில் போட்டுவிட்டு அம்மா அடுப்பில் பணி செய்கிறாள்... பக்கத்துக்கு வீட்டு பெண் " நாங்கல்லாம் புதுசா ரிலீஸ் ஆகியிருக்கற படத்துக்கு போறோம். நீ வரியா". "இந்த குட்டிய விட்டுட்டு நான் எப்டி வர்றது. நீங்க போயிட்டு வாங்க"
எட்டாம் அகவையில் மூன்றாம் வகுப்பில் படிக்கும் அந்த சிறுவன் பள்ளிக்கு செல்கையில்.. "அப்பா, ரொம்ப தூரம் நடக்க கால் வலிக்குது." " வாடா ராஜா நான் தூக்கிக்கறேன்". "இவ்வளவு பெரிய பையனாயிட்டு அப்பா இடுப்பில உக்காந்துட்டு இருக்கியே" ஆசிரியர் வினவ இறங்கி பள்ளிக்குள் ஓடினான்.
பத்தாம் வகுப்பில் படிக்கும் விடலையின் தாய் பணியிடத்தில் மயங்கி விழ...
"ஏம்மா, அவர்தான் கைநிறைய சம்பதிக்கராரே, அப்புறம் ஏன் நீங்களும் இப்படி கஷ்டப்படறீங்க". " இந்த காலத்துல ரெண்டு பெரும் சம்பாதிச்சாதானே பிள்ளைங்களை நல்லா படிக்க வைக்க முடியும்"
இரண்டாமாண்டு எஞ்சினியரிங் படிக்கும் இளைஞன் அப்பாவிடம்..
" அப்பா, காலேஜ்ல எல்லாரும் டூர் போறாங்க. நானும் போகணும் - ஒரு ரெண்டாயிரம் வேணும்." " ஆபிஸ்ல லோன் போட்டிருக்கேன். வந்ததும் கொடுக்கரேண்டா கண்ணு"
IT யில் பணிபுரியும் மகனிடம் மருந்து வாங்கி வரும்படி தந்தையிடம் சொல்லும் தாய்.. "அவனுக்கே இப்பதான் வேலை கிடைச்சிருக்கு. நிறைய செலவிருக்கும். ரெண்டு நாள்லே என் சம்பளம் வந்திடும். வாங்கி தர்ரேன்"
"டார்லிங்.. இன்னைக்கு ஈவனிங் சத்யம்லே சினிமாக்கு போவோமா ?"
திருமணத்தை குறித்த தீவிர சர்ச்சையில் தாயுடன் பிள்ளை..
" பட்டிக்காடு மாதிரி பேசாதேம்மா.. இப்போல்லாம் அரேஞ்சுடு மேரேஜ் எல்லாம் கிடையவே கிடையாது. யாரும் சாதி மதம் எல்லாம் பாக்கறதும் இல்ல. உனக்கும் பெருசுக்கும் பிடிக்கலேன்ன பேசாம இருங்க. போதும்"
நாள் : சனிக்கிழமை, நேரம்: குழந்தை பிறக்க பத்து நிமிடத்திற்கு முன்...
Subscribe to:
Post Comments (Atom)
How to sell your Infosys stocks through buyback?
Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why? Basically a com...
-
கல்லூரிக் கால நினைவலைகளை புத்தகமாய் மாற்ற சிற்பியாய் மாறி ஒவ்வொரு பக்கங்களையும் செதுக்கி சிலையாய் வடித்துக் கொடுத்தத...
-
கிராபிக்ஸ் கலக்கல் : ' வாத்தியார் ' பாலகணேஷ் 300 வது பதிவு: இதுவரையிலும்...
-
"கதை பேசுவோம்" என்றொரு கலந்துரையாடல் நிகழ்ச்சியை டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் அவர்கள் எழுத்தாளர் எஸ்....
நெறையா விசயத்த ஒரே பதிவில் சொல்ல முயாற்சித்திருக்கிர்கள்.
ReplyDeleteSuper thalaivarae,life is circle :)(valakai oru vattam,thitumalai dialgue ela nga :) )
ReplyDeletewhat you r doing today,will be happen for you tommorow