Saturday, July 17, 2010

சிக்கன் (பேர கேட்டாலே எச்சில் ஊருதில்ல!!)

சிக்கனை உயிராக கொண்ட சிக்கடேரியன்களுக்கும், சிக்கனை சமைத்து போடும் எல்லா தாய்மார்களுக்கும், மிலிட்டரி ஹோட்டல்களுக்கும் இந்த கட்டுரை சமர்ப்பணம்.



சிக்கனுண்டு வாழ்வாரே வாழ்வார்- மற்றோரெல்லாம் 
சுவைமிகு அமிழ்தொன்றை இழப்பர்


என்ற அங்கண்ணன் வாக்கிற்கிணங்க சிக்கனின் பெருமை அறியாதார் பலர் அதை உண்ணாமல் உதாசீனப்படுத்தி வாழ்வில் எல்லோருக்கும் எளிதாய் கிடைக்கும் அமிழ்தை இழக்கின்றனர். சிக்கன் சாப்பிடுவதால் உண்டாகும் சில நன்மைகளை அவர்களுக்கு எடுத்து சொல்ல விழைகிறேன்.

  • WHO வின் ஆய்வின்படி நாம் உண்ணும் உணவு வகைகளில் சிக்கனில் தான் மிக அதிக ப்ரோட்டீன் உள்ளது. 
  • மேலும் அது கேன்சர் போன்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும் திறன் வாய்ந்தது.
  • எலும்புகளுக்கு வலுவைக் கொடுக்கிறது. 
  • மனத் திறனிழப்பு (Alzheimer's Disease) நோயிலிருந்து நம்மை காக்கிறது.
  • மேலும் அன்றாட வாழ்வுக்கு தேவையான வைட்டமின் B, B6 போன்றவற்றை கொடுக்கிறது.
அது மட்டுமன்றி 
  • உணர்வுகளை வெளிக்காட்ட முடியாத பாவப்பட்ட செடிகளின், காய்கறிகளின் வாழ்வு காப்பற்றப் படுகிறது. 
  • சிக்கன் சாப்பிடுபவர்களால் அந்த சிக்கனின் வாழ்க்கைக்கோர் அர்த்தம் கிடைக்கிறது. 
ஒரே ஒரு சிக்கனை வைத்துக் கொண்டு சிக்கன் குழம்பு, சிக்கன் வறுவல், சிக்கன் 65, சிக்கன் சாப்ஸ், சிக்கன் தந்தூரி, சில்லி சிக்கன், பட்டர் சிக்கன், சிக்கன் பிரியாணி, சிக்கன் பிரைடு ரைஸ்   இன்னும் பல வகைகள் செய்யலாம்.


அரசாங்கத்திடம் சில கோரிக்கைகள் 

  • சிக்கனை தீண்டாதவர்களை கடுமையான தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும்
  • சத்துணவில் சிக்கனையும் சேர்த்து வழங்க வேண்டும்
  • மலிவு விலை சிக்கன் கடைகளை அரசே நடத்த வேண்டும்.
  • சிக்கன் பண்ணைகளுக்கு சலுகைகளை அளிக்க வேண்டும் 

சிக்கனின் பெருமைகளை போற்றுவோம்!!  சிக்கனை உண்டு செவ்வனே வாழ்வோம்!!





10 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. yappaa, ssami, mudiyala.... eppidiyellaam yosikkiraanga..

    ReplyDelete
  3. பார்சல் வந்துகிட்டே இருக்கு முனி!

    ReplyDelete
  4. என் படைப்பை பிரபலமாக்கிய எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றி!!! இந்த வெற்றி சிக்கனுக்கு கிடைத்த பெரும் வெற்றியாகவே கருதுகிறேன்!!

    ReplyDelete
  5. U can become the Brand Ambassador for CHICKEN...ithai paarthavathu sila perr thirunthina paravallai:)

    ReplyDelete
  6. நன்றி ஜானு!! மக்களிடம் ( குறிப்பாக நண்பர்களிடம் ) சிக்கனை பற்றிய ஒரு விழுப்புணர்வு உண்டாக்கவே இந்த பதிவை எழுதினேன்..

    ReplyDelete
  7. :) என்னே ஒரு சிந்தனை... சோக்கா சொன்னிங்க, ஆனா என்ன எனக்கு தான் சாப்பிட மனசு இல்ல!

    ReplyDelete
  8. பதிவில் சிக்கனமாய் சமைக்க சிக்கனை நாடுங்கள் என சொல்லாமல் விட்டதனால் சிக்கன் சார்பாக ஐ,நாவில் வழக்கு தொடர்லாமா ?

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...