Sunday, April 27, 2014

IPL அப்டேட்ஸ்... 20140427


ஏப்ரல் 26 வரையிலான போட்டிகளின் முடிவில் அணிகளின் நிலவரம்...  




*  விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி வாகை சூடிய ஒரே அணியாகவும் முதலிடத்திலும் மொஹாலி  தற்சமயம் உள்ளது. 

* பெங்களூரு டெல்லியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதே இதுவரை அதிக விக்கெட் வித்தியாசத்தில் முடிந்த ஆட்டம்.  (பெங்களூரு ராஜஸ்தானுக்கு எதிராக எடுத்த 70 ரன்களே இந்த வருடத்தில் ஒரு அணி எடுத்த மிகக் குறைந்த ஸ்கோராகும்)

* சென்னை டெல்லியை 93 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதே அதிக ரன்கள் வித்தியாசத்தில் முடிந்த ஆட்டம்.

* சென்னை எடுத்த ரன்களை 205 ஓவர்டேக் செய்து மொஹாலி எடுத்த 206 ரன்களே அதிகபட்சமாக ஒரு அணி குவித்த ரன்கள்.

* பேட்டிங்கில் மொஹாலியின் மேக்ஸ்வெல் 294 ரன்களுடன் முதலிடத்திலும், ஸ்மித் 174 ரன்களுடன் இரண்டாமிடத்திலும் உள்ளனர்.

* மேக்ஸ்வெல் சென்னைக்கு எதிராக அடித்த 95 ரன்களே ஒரு வீரர் அதிகபட்சமாக அடித்த ரன்கள்.

* அதிக சிக்ஸர்கள் (17)  மற்றும் அதிக பவுண்டரிகள் (30)  அடித்து மேக்ஸ்வெல் முன்னிலையில் உள்ளார்.

* அதிக முறை டக் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் கம்பீர் (3) உள்ளார். (நான்கு போட்டிகளில் இவர் எடுத்த மொத்த ரன்(கள்) ஒன்றே ஒன்று..)

* அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் கொல்கட்டாவின் சுனில் நரேன்  ஒன்பது விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

* ஒரே ஆட்டத்தில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் பாலாஜி முதலிடம் பிடித்துள்ளார். (பதிமூன்று ரன்கள் கொடுத்து நாலு விக்கெட்டுகள்) 

* அதிக விக்கெட் வீழ்த்திய கீப்பர்கள் வரிசையில் பெங்களூரின் பார்த்திவ் பட்டேல் தலா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார் (நான்கு விக்கெட்டுகள்)

* சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த ரெய்னா அதிக கேட்சுகள் பிடித்தவர் வரிசையில் முதலிடம் பெறுகிறார். இவர் ஐந்து கேட்சுகள் பிடித்துள்ளார். ( கொல்கட்டாவின் க்றிஸ் லின் பெங்களூருக்கு எதிராக பிடித்த ஒரு கேட்ச்சே இந்த ஐ.பி.எல்லின் சிறந்த கேட்ச்சாக உள்ளது) 

* அதிக ரன்கள் குவித்த ஜோடி என்ற பெருமையை கொல்கட்டாவின்  காலிஸ், மனிஷ் பாண்டே ஜோடி மும்பைக்கு எதிராக  இரண்டாவது விக்கெட்டுக்கு இவர்கள் எடுத்த 131 ரன்கள் மூலம் தக்க வைத்துள்ளனர். 

                  மூன்று போட்டிகளிலும் மோசமாக தோற்ற மும்பை, ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ள ஹைதிராபாத் மற்றும் டெல்லி அணிகள் மேலும் புள்ளிகள் எடுக்க போராட வேண்டும். 

                   சிறப்பாக துவங்கி பின் இரு போட்டிகளில் சரிவைக் கண்ட பெங்களூரு பேட்டிங்கில் கெயிலை களமிறக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. கொல்கட்டாவும், ராஜஸ்தானும் தலா இரு போட்டிகளில் வென்று இரண்டில் தோல்வி கண்டுள்ளது. இவர்கள் அடுத்தடுத்த போட்டிகளில் கவனமாக விளையாட வேண்டும்.
                     சென்னை சிறப்பு என்று சொல்ல முடியாவிட்டாலும் மூன்று வெற்றிகளை பதிவு செய்துள்ளது. மொஹாலி ப்ரீத்தி ஜிந்தா கொடுக்கும் உற்சாகத்திலும் (?!!) மேக்ஸ்வெல்லின் அதிரடியிலும் முதலிடத்தில் உள்ளது.

                 இது முதல் பத்து நாட்களின் நிலவரம் மட்டுமே. அடுத்த  வாரம் இன்னும் சில போட்டிகளின் முடிவுகளுடன் அட்டவணையை பார்ப்போம்.. வர்ட்டா..


நன்றி: ESPNCricinfo

கடுப்பேத்துறார் மை லார்ட்..!


                         ஐ.பி.எல் போட்டிகளின் இடையே ஒளிபரப்பப்படும் சில விளம்பரங்கள் பார்த்தபோது கடுப்பேற்றிய சில விளம்பரங்கள் இவை.


                          விளம்பரம்1 : அமேசான்... கணவன் மனைவி இருவரும் அமர்ந்து கிரிக்கெட்டை ரசித்துக் கொண்டே தங்களுக்குள் பெட் (Bet) வைத்துக் கொள்கிறார்கள். சிக்ஸ் அடித்தாலோ, அல்லது பவுண்டரி அடித்தாலோ மனைவி தான் விரும்பிய பொருள் ஒன்றை வாங்கிக் கொள்ளலாம். அவுட் ஆகிவிட்டால் கணவன் தனக்கு இஷ்டமானதை வாங்கிக் கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் மனைவி வென்று பேக், ஷூ, போன்றவற்றை ஆர்டர் செய்கிறார். தான் ஜெயித்தால் கேமிங் கன்சோல் ஒன்று வாங்க விரும்பிய கணவன் ஒவ்வொரு முறையும் தோற்க, ஒரு முறை விக்கெட் விழுகிறது. சந்தோஷத்தில் வெற்றிக் குறியிட்டு கணவன் அதைக் கொண்டாட அம்பயரோ அதை நோ-பால் என அறிவிக்கிறார். கணவனின் சில நொடி சந்தோஷங்களை பார்த்துக் கொண்டிருந்த அந்த மனைவி இப்போது அந்தத் தோல்வியை கொண்டாடும் விதமாக "யெஸ்" என்று பொறாமையுடன் கூறி ஆனந்தப்படுகிறார்.


                     

                         விளம்பரம் 2: ஹேவல்ஸ் மிக்ஸி... கணவன் சாப்பிடுவதற்காக டேபிளில் அமர்கிறான். மனைவி அவன் தட்டில் இட்டிலிகளை வைக்கிறாள். அதைப் பார்த்ததுமே அவன் "சாப்டா இருக்கு இட்லி" என்று பாராட்டுகிறான். பின் இட்டிலிக்கு தொட்டுக் கொள்ள அந்த மனைவி கொஞ்சம் சாம்பார் ஊற்ற முகம் வாடும் கணவன் தன்னுடைய அம்மா தனக்கு பல வித சட்னி செய்து கொடுத்ததை நினைவு கூர்ந்து கொண்டே இட்லியை உண்கிறான். அந்த பாராட்டை ரசிக்காத மனைவி உள்ளே சென்று மிக்ஸியை எடுத்து வந்து அவன் முன்னே வைத்துவிட்டு "பல வகை சட்னி அரைக்க தேவையான பொருட்கள் இங்கே இருக்கு. அரைச்சுக்கோங்க" என்று கூறிவிட்டு எதிரில் அமர்ந்தவாறே "சட்னியா, பத்னியா(மனைவியா)" என்று கேட்பது போல் முடியும். கடைசியில் "Respect Woman" என்ற வாசகம் வேறு.

                                     

                            மேற்சொன்ன இரண்டு விளம்பரமுமே ஆண்-ஆதிக்கம் (ஆதிக்கம் செய்யப்படும் ஆண்கள் எனக் கொள்க ) நிறைந்த விளம்பரங்கள்.. வியாபார உக்தி என்று கொண்டாலும் மீடியாவில் வரும் இதுபோன்ற விளம்பரங்களால் இன்றைய இளைய தலைமுறை பெண்களின் மனப்பாங்கு மாறுவது மிகச் சாதாரணமாய் நிகழ்வது தவிர்க்க முடியாததாகிறது..


Saturday, April 26, 2014

ஆவி டாக்கீஸ் - அரிமா நம்பி (Music Review)

                                     
                      விக்ரம் பிரபு, ப்ரியா ஆனந்த் நடிக்க கலைப்புலி தாணு வழங்கும் அரிமா நம்பி. இந்தப் படத்தின் இசையமைப்பாளர் நமக்கு மிகவும் பரிச்சயமான "டிரம்ஸ்" சிவமணி தாங்க. முதல் முறை ஒரு திரைப்படத்திற்கு சிவமணி இசையமைக்கும் பாடல்கள்  எப்படி இருக்குன்னு பார்ப்போம்.


                       1.  "இதயம் என் இதயம்" காதல் வானில் பறக்கும் நாயகன் நாயகியை நினைத்து உருகி உருகி பாடும் பாடல். தமிழ் வார்த்தைகளுக்கு கூடுதல் அழுத்தத்தோடு ஜாவேத் அலி பாடியிருக்கும் மெல்லிசை.
             
                         2. ஸ்ரேயா கோஷல் பாடியிருக்கும் " நீயே..நீயே.." பாடல் தெவிட்டாத தெள்ளமுது. 'அதிரடி' மன்னன் சிவமணியிடமிருந்து இப்படி ஒரு மெல்லிய இசை நிச்சயம் சர்ப்ரைஸ் கிப்ட் தான். ஆனால் இந்தப் பாடல் அம்மணி முன்பு பாடியே 'சகாயனே' பாடலின் சாயலில் இருக்கிறது.

                         3. "நானும் உன்னில் பாதி" - அல்மா மற்றும் ரீட்டா பாடியிருக்கும் ஐட்டம் நம்பர். கிறக்கத்துடன் ஒலிக்கும் இந்தப் பாடலின் இடையில் 'ஊலலல்லா' பாடலுக்கு இடையே வரும் டிரம்ஸ் போலவே இதிலும் வருகிறது. ஹோம் தியேட்டரில் கேட்டு மகிழ நல்ல இசைக் கலவை அது.

                        4. ஷப்பிர் குமார், ரிஸ்வி இணைந்து பாடியிருக்கும் "யாரோ யார் அவள்" - தன் மனம் கவர்ந்த பெண்ணை பற்றி நாயகன் பாடும் பாடல். மற்ற படங்களுக்கு சிறப்பாய் டிரம்ஸ் வாசித்த சிவமணி தான் இசையமைக்கும் படத்துக்கு என்ன செய்வார்? இந்தப் பாடலும், பாடல் நெடுக ஒலிக்கும் டிரம்ஸ் இசையும், யூத் ரசிகர்களின் மனம் கவரும் வகையில் இருக்கிறது.

                         A.R. ரஹ்மானின் பல படங்களுக்கு உயிரூட்டியது சிவமணியின் இசை. இந்தப் படத்தில் இவர் செய்திருக்கும் தனி ஆவர்த்தனம் நிச்சயம் ரசிகர்களால் பாராட்டப் படக்கூடும்.  இன்னும் பல நல்ல ட்யூன்களோடு வந்து முன்னணி இசையமைப்பாளர்களுக்கு போட்டியாய் இருப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.. மொத்தத்தில் அரிமா நம்பி- அதிரடி.



                        

Thursday, April 24, 2014

என் வோட்டு 49-Oக்கு..!

               

                         "கல்யாணத்துக்கு முன்னாடி உனக்கு எத்தனை ப்ரெண்ட்ஸ் இருந்தாங்களோ தெரியாது, பட் கல்யாணத்துக்கு அப்புறம் நான் மட்டும் தான் உன் ப்ரெண்டா இருக்கணும்."

                       "ரோட்டுல போற ஏழைகள பார்த்து பரிதாபப்படலாம். ஆனா நம்ம வேலையெல்லாம் விட்டுட்டு அவங்களுக்கு உதவி செய்ய நினைக்கிறது முட்டாள்தனம்."

                           "மல்லிகா, நீ எங்கே வேணா வேலைக்கு போகலாம்.. அந்த ப்ரீடம் உனக்கு எப்பவும் கொடுப்பேன்.."
                   

                            "சரி ஒவ்வொருத்தர் கிட்டவும் கேள்வி கேக்கணும்னு சொல்லி கேட்டே.. இப்போ அவங்களுக்கு உன் பதில் என்ன? அவங்கள்ல யாரை தேர்ந்தெடுக்க போறே?"

                   ஒரு புன்முறுவலுடன் "என் வோட்டு 49-Oக்கு" என்றாள் மல்லிகா.


                                             *********** § **********

Tuesday, April 22, 2014

சுராஜ் வெஞ்சாரமூடு..!

                 ஹலோ, ஹலோ..இப்ப எதுக்கு என்ன திட்ட வர்றீங்க.. அட நான் உங்கள திட்டலீங்க..சுராஜ் வெஞ்சாரமூடுங்கிறது ஒரு மலையாள நடிகரின் பெயர். இவர் காமெடி, குணச்சித்திரம், இப்ப ஹீரோன்னு கிட்டத்தட்ட எல்லா ரோலும் செய்யக் கூடிய திறமையான நடிகர். 2001 ல் காமெடியனா அறிமுகமான இவர் "சேதுராம அய்யர் CBI" படத்தில் மம்மூட்டியுடன் நடித்ததில் இருந்து பிரபலம் ஆனார். தொடர்ந்து ரசதந்திரம், கிளாஸ்மேட்ஸ், அரபிக்கதா, கேரளா கபே, வெறுதே ஒரு பார்யா போன்ற படங்களில் முன்னணி கதாநாயகர்களுடன் சேர்ந்து  சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.



                    இவர் காமெடியனாக நடித்த 'ராக் அண்ட் ரோல்' திரைப்படத்தில் வரும் P.P. ஷிஜு கதாப்பாத்திரத்தை ரசிக்காத மலையாளப் பட ரசிகர்களே இருக்க முடியாது எனலாம். காமெடி மட்டுமல்லாது குணச்சித்திர நடிப்பும் 'வாய்' வந்த கலை இவருக்கு. பெரும்பாலும் மம்மூட்டி, மோகன்லால் படங்களில் வரும்பொழுது இவர் கதாப்பாத்திரம் மிளர்வதை காணலாம். நூற்று எண்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்ட இவர் சமீபத்தில் வெளியான  "பேரறியாத்தவர்"  படத்தில் நடித்ததற்காக தேசிய விருது கொடுக்கப் பட்டுள்ளது.

                       (இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு நேற்று துளசிதரன் அவர்களின் தளத்தில் வெளியான இந்த பதிவை படியுங்கள்.)

Monday, April 21, 2014

ஆவி டாக்கீஸ் - வடகறி (Music)

                                       


                    தயாநிதி அழகிரியின் மீகா எண்டர்டெயின்மென்ட் வழங்கும் வடகறி.  ஜெய், சுவாதி நடிக்கும் இந்தப் படத்திற்கு இசை விவேக் சிவா மற்றும் மெர்வின் சாலமன். ( முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டு பின் வேறு படங்களில் பிஸியாக இருந்த காரணத்தால் ஒரு பாடலோடு இதிலிருந்து யுவன்ஷங்கர்ராஜா  விலகி விட்டது குறிப்பிடத்தக்கது)

1. ப்ரியா ஹிமேஷ், சத்யன் இணைந்து பாடியிருக்கும் டூயட்  " உயிரின் மேலொரு உயிர்வந்து கலந்தால்" பாடல். தனது வழக்கமான Genre அல்லாமல் மெலடியிலும் ரசிக்க வைக்கிறார் ப்ரியா. யுவனின் இன்னிசை நம்மை மெய்மறக்க வைக்கிறது.

2. "லோ-ஆனா லைப்" -  அனிருத் தன் இசையில் அல்லாது தன் நண்பர்களுக்காக பாடியிருக்கும் பாடல் இது.. பார்ட்டி சாங்காக வரும் இந்த பாடலுக்கு ஆண்ட்ரியாவின் கவர்ந்திழுக்கும் குரல் பக்க பலமாக இருக்கிறது. திரையில் இந்த பாடலுக்கு தமிழில் முதல் முறையாக அறிமுகம் ஆகும் சன்னி லியோனின் நடனம் ரசிகர்களுக்கு கூடுதல் போனஸ்.

3. விஜயபிரகாஷ், மற்றும் சூப்பர் சிங்கர்ஸ்  அஜீஸ் மற்றும் திவாகர்  பாடியிருக்கும் "நெஞ்சுக்குள்ளே நீ"  உற்சாக மின்னல் வெட்டிச் செல்லும் பாடல். காதலியை கவர்ந்திழுக்க வேண்டி நாயகன் பாடும் பாடல் இது.

4. "உள்ளங்கையில் என்னை வைத்து" பாடல்  செல்பேசியை பயனுள்ள முறையில் பயன்படுத்த சொல்லி நம்மை பயமுறுத்தும் பாடல். சித்தார்த் மகாதேவன் தந்தை ஷங்கர் மகாதேவனை போலவே முயற்சித்திருக்கிறார். "அறிவியலை அழிவிற்கென மாற்றினாய்" போன்ற வரிகள் பாடல் வரிகளாய் இருந்தாலும் நிச்சயம் ஒவ்வொருவரையும் சிந்திக்க வைக்கும்  வரிகள்.

5. ஹீரோ ஹீரோயின் இல்லாம கூட படம் வரலாம். கானா பாலா பாடல் இல்லாத தமிழ்ப் படமா என்ற விதிக்கு இந்தப்படமும் விலக்கல்ல. "கேளுங்கண்ணே கேளுங்க" என வழக்கம்போல் ஆங்கிலம் பாதி தமிழ் பாதி கலந்து தத்துவங்களை பாட்டாய்ப்  படிக்கிறார்.

                              மொத்தத்தில் வடகறி காதுகளுக்கு விருந்தாய் அமைகிறது..

Sunday, April 20, 2014

IPL அப்டேட்ஸ்... 20140420



 முதல்  ஆறு போட்டிகளின் முடிவில் அணிகளின் நிலவரம்...  (ஏப்ரல் 19 வரை)  
        
அணிகள்
மொத்த போட்டிகள்
வெற்றி
தோல்வி
டை
புள்ளிகள்
ரன் விகிதம்
Bangalore T20
2
2
0
0
4
1.168
Kolkata T20
2
1
1
0
2
0.909
Mohali T20
1
1
0
0
2
0.688
Jaipur T20
1
1
0
0
2
0.273
Delhi T20
2
1
1
0
2
-0.61
Hyderabad T20
1
0
1
0
0
-0.273
Chennai T20
1
0
1
0
0
-0.688
Mumbai T20
2
0
2
0
0
-1.515









*  விளையாடிய இரு போட்டிகளிலும் வெற்றி வாகை சூடிய ஒரே அணியாகவும் முதலிடத்திலும் பெங்களூரு தற்சமயம் உள்ளது. 

* பெங்களூரு டெல்லியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதே இதுவரை அதிக விக்கெட் வித்தியாசத்தில் முடிந்த ஆட்டம்.  

* கொல்கட்டா மும்பையை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதே அதிக ரன்கள் வித்தியாசத்தில் முடிந்த ஆட்டம்.

* சென்னை எடுத்த ரன்களை 205 ஓவர்டேக் செய்து மொஹாலி எடுத்த 206 ரன்களே அதிகபட்சமாக ஒரு அணி குவித்த ரன்கள்.

* பேட்டிங்கில் டெல்லியின் டுமினி 119 ரன்களுடன் முதலிடத்திலும், மனிஷ் பாண்டே 112 ரன்களுடன் இரண்டாமிடத்திலும் உள்ளனர்.

* மேக்ஸ்வெல் சென்னைக்கு எதிராக அடித்த 95 ரன்களே ஒரு வீரர் அதிகபட்சமாக அடித்த ரன்கள்.

* அதிக சிக்ஸர்களை டுமினியும் ( 6 ) அதிக பவுண்டரிகளை (15)  மேக்ஸ்வெல்லும் அடித்துள்ளனர்.

* அதிக முறை டக் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் கம்பீர் (2) உள்ளார்.  IPL வரலாற்றில் மொத்தமாக சேர்த்து இவர் இரண்டாமிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதலிடத்தில் காலிஸ் உள்ளார். (இருவரும் கொல்கட்டாவை சேர்ந்தவர்கள் என்பதை கவனிக்க..)

* அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் கொல்கட்டாவின் சுனில் நரேனும், மும்பையின் மலிங்காவும் தலா ஐந்து விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளனர்.

* ஒரே ஆட்டத்தில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையிலும் இதே ஜோடி உள்ளது. (நான்கு விக்கெட்டுகள்)

* அதிக விக்கெட் வீழ்த்திய கீப்பர்கள் வரிசையில் பெங்களூரின் பார்த்திவ் பட்டேலும், கொல்கட்டாவின் உத்தப்பாவும் தலா இரண்டு விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளனர். 

* ஜெய்ப்பூர் அணியை சேர்ந்த ரிச்சர்ட்சன் அதிக கேட்சுகள் பிடித்தவர் வரிசையில் முதலிடம் பெறுகிறார். இவர் மூன்று கேட்சுகள் பிடித்துள்ளார்.

* அதிக ரன்கள் குவித்த ஜோடி என்ற பெருமையை கொல்கட்டாவின்  காலிஸ், மனிஷ் பாண்டே ஜோடி மும்பைக்கு எதிராக  இரண்டாவது விக்கெட்டுக்கு இவர்கள் எடுத்த 131 ரன்கள் மூலம் தக்க வைத்துள்ளனர். 

                   இரண்டு போட்டிகளிலும் மோசமாக தோற்ற மும்பை, அதிக ரன்கள் எடுத்தும் மோசமான பவுலிங் மற்றும் பீல்டிங் காரணமாக தோற்ற சென்னை அணி, சுமாராக விளையாடிய சன்ரைசர்ஸ் அணி ஆகியவை முதல் புள்ளியை எடுக்க போராட வேண்டும். 

                  ஆடிய ஒரு போட்டியில் வெற்றியை ருசித்துள்ள ஜெய்பூர் மற்றும் டெல்லி இன்னும் ஆர்வத்துடன் விளையாடி முதலிடத்துக்கு வர முயற்சி செய்ய வேண்டும்.  விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றியும் மற்றொன்றில் தோல்வியும் பெற்ற டெல்லி மற்றும் கொல்கட்டா அணிகள் கவனத்துடன் விளையாட வேண்டும். 
 
                   பெங்களூரு அணி (இதுவரை கெயில் எனும் பிரம்மாஸ்திரத்தை பயன்படுத்தாமலே) இரண்டு வெற்றிகளை பெற்று முதலிடத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறது. அணியின் ஒரு வீரரை மட்டும் நம்பி இருக்காமல் தேவைக்கேற்ப எல்லோரும் ஒரே அணியாக விளையாடுவதை தொடர வேண்டும். 

                 இது முதல் ஆறு போட்டிகளின் நிலவரம் மட்டுமே. அடுத்த  வாரம் இன்னும் சில போட்டிகளின் முடிவுகளுடன் அட்டவனையை பார்ப்போம்.. வர்ட்டா..


நன்றி: ESPNCricinfo

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...