400 வது பதிவு!
‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க?’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்கொண்டிருந்தது.
‘நான் எங்கே கிண்டல் பண்ணினேன் செல்லம். உப்புமா கிடைக்கிறது பாக்கியம்ன்னு தானே சொன்னேன்’ என்றேன் அப்பாவியாக.
‘சரி, அத விடுங்க. தயிர்சாதத்தை ஏன் கிண்டல் பண்ணினீங்க?’ இம்முறை கடலைப்பருப்பும் சேர்ந்து வெடித்தது.
‘அச்சோ, ஒரு மணி நேரம் கஷ்டப்பட்டு, நீ எனக்கு
தயிர்சாதம் செய்து கொடுத்தேன்னு உன்னை பாராட்டத்தானே செஞ்சேன். டோன்ட் ஆங்ரி மீ’’ என்ற என் ஆங்கிலத்தைக் கேட்டு அவள் விழித்து நிற்க,
‘என் மேல கோபப்படாதேன்னு சொன்னேன் கண்ணு’ என்றேன். அதுவரை இருந்த இறுக்கம் போய் உதட்டைக் கடந்து பொங்கி வந்த சிரிப்பிற்கு அணை போடமுடியாமல் சிரித்துவிட்டாள்.
‘சரி, இன்னைக்காவது கிண்டல் பண்ணாம சாப்பிட்டு வாங்க. எப்படி இருக்குன்னு போன் பண்ணி சொல்லுங்க’ என்றாள்.
‘சரிம்மா’, சரிம்மா’ என்றேன் ‘மெர்சல்’ வெற்றிமாறன் குரலில்.
மதியம் இரண்டு மணி.
டிபன் பாக்ஸை எடுத்துக்கொண்டு கேண்டீன் சென்று அமர்ந்தேன். சாதத்துடன் சற்று உருளைக்கிழங்கு பொரியல்.
(அப்பாடா! - பெருமூச்சு)
மற்றொரு டப்பாவில் குழம்பு வடிவத்தில் ஏதோ இருந்தது. அதில் ஆங்காங்கே தக்காளியும் வெங்காயமும் நிறைந்திருந்தது.
டப்பாவைத் திறந்ததும் கடுகு கூட்டம் கூட்டமாக என்னை வரவேற்றது.
அதை கொஞ்சமாக டிபன் பாக்ஸில் ஊற்றி உண்ணத் துவங்கினேன்.
அருகே இருந்த நண்பர் ஒருவர், ‘சார் அந்த தக்காளித் தொக்கை குடுங்க’ என்றார். கொடுத்தேன். அவர் ஊற்றிவிட்டு, 'ரசமா?' என்றார். அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் குழம்பி நின்றேன்.
அந்த நேரம் பார்த்து போன் அடிக்கத் துவங்கியது.
அவளேதான்! இப்போது இருதயம் இன்னும் இரண்டு மடங்கு அதிகமாக அடிக்கத் துவங்கியது. போனை எடுத்ததும் இன்று சமைத்தது என்ன? என்ற கடினமான கேள்வியை என் முன் வைத்துவிடுவாளோ என்ற பயம்தான்.
மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டே அதை எடுத்தேன்.
‘ஏங்க, புளிக்குழம்பு நல்லா இருந்ததா?’ என்றாள்.
ஓ, இதுதான் புளிக்குழம்பா? இத்தனை நாள், ஊர்ல எல்லாரும் வேற எதையோ கொடுத்து, புளிக்குழம்புன்னு நம்ப வச்சுட்டாங்களே. ப்ளடி ராஸ்கல்ஸ் -இது என் மைண்ட் வாய்ஸ்.
‘வாவ்..சூப்பரா இருந்தது மா. கொஞ்சம் உப்பு கம்மி. காரம் கம்மி. அப்புறம் புளிப்பு சுத்தமா இல்ல. மத்தபடி அருமையா இருந்தது மா’ என்றேன்.
‘நல்லவேளை, உங்களுக்கு பிடிக்குமோ பிடிக்காதோன்னு பயந்துட்டே இருந்தேன்.’என்றாள்.
மீ - ???????????
.
#அவளும்_நானும் #புளிக்குழம்பு

திருமணம் சந்தோஷங்களை மட்டுமல்ல, புதிய உணவு வகைகளின் அறிமுகங்களை, அதனாலேயே சில சோதனைகளையும், அதனால் சில பதிவுகளையும் அதனால் பிளாக்கை மறு திறப்பு செய்யும் வாய்ப்பையும் கூடத் தருகிறது!!!!!!
ReplyDeleteஅடடா....
ReplyDeleteஎன்னா புளிக்குழம்பு...
அடிப்பிடிச்சதை மாமா கவனிக்கலைன்னு உன் பாரியாள் என்கிட்ட சொல்லி சந்தோசப்பட்டதை உன்கிட்ட சொல்ல மாட்டேனே
ReplyDeleteஅட இது எப்போ நடந்தது :) fb ல இல்லாததால் ஒண்ணும் தெரியாமயே போச்சு
ReplyDeleteஸ்ரீராம் கமென்ட் பார்த்து புரிஞ்சிக்கிட்டேன் :)
சிங்கத்தை உப்புமா சாப்பிட வச்ச பிள்ளைக்கும் உனக்கும் இனிய வாழ்த்துக்கள் :)
கர்ர்ர்ர்
ReplyDelete// கொஞ்சம் உப்பு கம்மி. காரம் கம்மி. அப்புறம் புளிப்பு சுத்தமா இல்ல. மத்தபடி அருமையா இருந்தது மா’ என்றேன்.//
ஹாஆஆ எப்படி சொல்லலாம் இல்ல னு ..திருமதி ஆனந்த் விடாதேம்மா :) இந்த மாதிரி சொல்ல விடாதே
துளசி: ஓ! ஆவி குடித்தனம் தொடங்கியாச்சா!! அது சரி! இனி இப்படிப் பதிவுகள் வருமோ!!!
ReplyDeleteகீதா: ஹேய் ஆவி!!! என்னப்பா! இவ்வளவு நாள் சமையலும் நானே கினிபிக்கும் நானேனு இருந்து இப்ப நிஜமாக்வே கினிபிக்!!!?????!!!!! ஹாஹாஹாஹாஹா!!
கடைசில இப்படிச் சொல்லிட்டீங்களேப்பா...பாருங்க இனி உங்களுக்கு உறைக்கரா மாதிரி எல்லாம் போடப்போறாங்க!!... ஹாஹாஹா...ஹப்பா நல்லகாலம் அவங்க எழுத்து கூட்டி வாசிக்கறதுக்குள்ள நீங்க 1000 பதிவு போட்டுருவீங்க!!
கயல்விழியாள் சமைக்கிறாள் - 3 அப்படினா ஏற்கனவெ ரெண்டு போட்டுருக்கீங்களா?!
ReplyDeleteபாவம் புள்ள முதல்ல அவங்களுக்கு தமிழ சீக்கிரமா கத்துக் கொடுக்கணும்!! அப்பத்தான் உங்களுக்கு எதிர்ப்பதிவு அவங்க போட முடியும்!! ஹாஹாஹாஹா..
கீதா
ஆனாலும் தைரியம் அதிகமாத் தான் இருக்கு ஆவி! அட கீதா சேச்சி சொன்னது தான் காரணமா.... சென்னை நண்பர்களே, சீக்கிரம் மிஸஸ் ஆவிக்கு தமிழ் சொல்லிக் கொடுங்கப்பா!
ReplyDeleteஇது தான் ஆரம்பம்! அப்புறம் பழகிடும்! அவங்க சமைக்கறதை ஒண்ணுமே சொல்லாம சாப்பிட பழகிடும்னு சொல்ல வந்தேன்!
400-வது பதிவு - வாழ்த்துகள்.
அருமையான பதிவு.
ReplyDeleteமிகவும் நன்று ...
For Tamil News Visit..
மாலைமலர் | தினத்தந்தி