Tuesday, November 12, 2019

ஒத்த செருப்பும் கார்னிவல் சினிமாஸு ம்..

சினிமா பார்க்கறது ஒரு சுகமான அனுபவம்னா, புதுப்புது தியேட்டர்ல போய் பார்க்கிறது அதைவிட ஒரு அலாதி சுகம் தர்ற அனுபவம் எனக்கு. கோவையில் இருந்த வரை பெரும்பாலும் எல்லா தியேட்டருக்கும் ஒரு விசிட் விட்டிருக்கேன். இப்போ இருக்கிற ஜெனரேஷனுக்கு ப்ரோஃஜோன் மால், ப்ரூக்பீல்ட்ஸ், ஃபன் சினிமாஸ்தான் சுகம். அவங்களுக்கு கேஜி, கற்பகம் காம்ப்ளக்ஸ், செந்தில் குமரன், சென்ட்ரல், பாபா காம்ப்ளக்ஸ் தெரிஞ்சிருந்தாலே பெரிய விஷயம்.

ஆனா என் பால்ய காலத்துல (அதாவது ஒன்ஸ் அபான் எ டைம் இன் கோவை) ராயல், கர்னாடிக், மாருதி, டிலைட், ராஜா, நாஸ், இருதயா, கீதாலயா, ஜிபி, சாந்தி, உக்கடம் லட்சுமி தியேட்டர், சிங்காநல்லூர் மணீஸ், அம்பாள், ஜெயசாந்தி, கவுண்டம்பாளையம் கல்பனா தியேட்டர்ன்னு நான் படம் பார்த்த லிஸ்ட் கொஞ்சம் நீளமாவே இருக்கும்.

சென்னை வந்தப்புறமும் ஸ்டார் தியேட்டர், சைதை ராஜ், ஆனந்த் தியேட்டர்,  மேடவாக்கம் குமரன், வில்லிவாக்கம் நாதமுனிவரை தேடித் தேடி பார்த்தது ஒரு பசுமையான அனுபவம். சமீப காலமா அந்த அனுபவங்களை எல்லாம் அசைபோட்டபடி படம் பாக்கணும்னா கமலா தியேட்டர்னு செட்டில் ஆகி சைலண்ட்டா இருந்தப்போதான் ஒருநாள் உள்ள உறங்கிகிட்டு இருந்த உலகநாயகன் விழிச்சுகிட்டு, புது தியேட்டர் போயி ரொம்ப நாள் ஆச்சேன்னு எங்கே போலாம்னு தேடின போதுதான் கார்னிவல் சினிமாஸ் கண்ணுல பட்டுது. என்னடா இது புதுசா இருக்கே, ஈசிஆர் மாயாஜால், கோயம்பேடு ரோகினி, மவுண்ட் ரோட்டுல சத்யம், தேவி, புரசைவாக்கம் ஹைவேல சங்கம், ஈகா, பக்கத்துல ஆல்பட், பெரம்பூர் எஸ்2, ஆலந்தூர் மார்லன் சினிமாஸ் வரை நாம எல்லா தியேட்டரிலும் படம் பார்த்து, கங்கை கொண்ட சோழனின் பெருமிதத்துடன் அமர்ந்திருந்த வேளையில் இத பார்த்ததும் எப்படி மிஸ் பண்ணினோம்னு ஒரு சிந்தனை.எவ்



ரைட்டு, அது எப்படி இருக்குன்னு பார்க்கலாம்னு லக்கேஜ்களோட (முன்ன மாதிரி தனியா போக முடியாது இல்ல) மேப் போட்டு பூந்தமல்லி வழியா அகத்தியர் பொதிகை மலையை கடந்த மாதிரி குண்டும் குழியும் இருக்கிற வழியில (அதுக்கு பெங்களூரு ஹைவேன்னு பேர் வச்சிருக்காங்க). கிட்டத்தட்ட பதினாலு கிலோமீட்டர் பயணம் செஞ்சு ஒரு வழியா கார்னிவல் சினிமாஸ் திரையரங்கை அடைந்தோம்.

அங்க ஆறேழு ஸ்க்ரீன் இருந்தாலும் நாங்க எல்லா படத்தையும் பார்த்துட்டதால வேற வழி இல்லாம "ஒத்த செருப்பு" படத்துக்கு டிக்கெட் வாங்கிட்டு போய் உட்கார்ந்தோம். ஊருக்கு ஒதுக்குப்புறமா இருந்தாலும்
தியேட்டர் நல்லா இருந்தது. குட்டீஸ் விளையாட ப்ளே ஏரியா, சுத்தமான கழிவறைகள், கேபிடேரியான்னு சகல வசதிகளோட இருந்தது ஆறுதல்.

"ஒத்த செருப்பு" ன்னு டைட்டில்  போடும்போது திரும்பிப் பார்த்தா யாரையும் காணோம். நல்ல வேளை நான் குடும்பத்தோட வந்ததால, ஒத்த செருப்பை ஒத்தையா பார்க்கிற அனுபவம் கிடைக்கல. பார்த்திபன் முதல் காட்சியில் வர்றார், இரண்டாவது காட்சியில் வர்றார். மூணாவது காட்சியிலும் வர்றார். அட கடைசி வரை அவர் மட்டும்தான் வர்றார், இதை எப்படி சலிப்பில்லாம பார்க்கிறதுன்னு நண்பர் ஒருவர் கேட்டது நினைவுக்கு வந்தது. பெரும்பாலான ரஜினி படங்களை அப்படித்தானே பார்ப்போம். இதுல செகண்ட் ஹாப்ல டூயல் ரோல்ல வேற வருவார். அதையெல்லாம் நாம் சகிச்சுகிட்டு பார்க்கலையா?



கதையைப் பத்தி பெண்ணியவாதிகள் துவைச்சு தொங்கப்போட்டுட்ட நிலையில் நான் அதைப் பத்தி பேசல, பட் ஸ்க்ரீன் ப்ளே, புதுசா ஒரு முயற்சி. கடைசி வரை ஆடியன்சை (எங்க மூணு பேரையும்தான் சொல்றேன்) வெளியே போகாம கட்டிப் போட்டிருந்தது. படம் முடிஞ்சு வந்த போது அந்த பரந்து விரிந்திருந்த பார்க்கிங் லாட்டில் இருந்து பைக்கை எடுத்துகிட்டு, ஹெல்மெட்டை மாட்டிகிட்டு, மறுபடியும் அந்த சபாரி ரைடுக்கு தயாரானபோது சூரியன் மறையத் தொடங்கியிருந்தது!









11 comments:

  1. வாங்க... ஆஆஆஆவி...!

    /// பெரும்பாலான ரஜினி படங்களை அப்படித்தானே பார்ப்போம்...///

    ஓ...!

    இங்கும் தொடருங்கள்... நன்றி...

    ReplyDelete
  2. அடிக்கடி எழுதிக்கொண்டிருங்கள். வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. இனி தொடர்ந்து எழுத முயற்சி செய்கிறேன், ஐயா.

      Delete
  3. யாரோ இந்த தளத்தை ஹேக் பண்ணி எழுத ஆரம்பிச்சுருக்காங்க போல இருக்கே

    ReplyDelete
    Replies
    1. ம்க்கும்.. உள்ளே வந்து படிக்கிறதே நாலோ அஞ்சோ பேர்தான். ரெண்டு வருஷத்துக்கு அப்புறம் வந்து ஒட்டடை எல்லாம் எடுத்து கிளீன் பண்ணி ஒரு போஸ்ட் போட்டா, ஹேக்கிங்காம்ல ஹேக்கிங்!

      Delete
  4. இந்த படத்தை பார்த்த ஒரே ஃபேமிலிக்கு பரிசு கிடைத்ததா😀

    ReplyDelete
    Replies
    1. ம்ம்.. கிடைச்சுதே.. சரோஜா தேவி யூஸ் பண்ணின சோப்பு டப்பா கிடைச்சுது.. ;)

      Delete
  5. Super! Love your writing and the casual tone in it, and yes, please do write often❣️

    ReplyDelete
  6. ஹம். இருக்கட்டும். இருக்கட்டும்

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...