Saturday, August 16, 2014

ஆவி டாக்கீஸ் - அஞ்சான்


இன்ட்ரோ  
                          தமிழ் இயக்குனர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள். நீங்க காதல் படம் எடுங்க, காமெடி படம் எடுங்க, எந்த மொக்கை படம் வேணும்னாலும் எடுங்க. கேங்ஸ்டர் மூவிங்கிற பேர்ல மசாலா படம் எடுக்காதீங்க.. பார்க்கவே அருவருப்பா இருக்கு. "கேங்ஸ் ஆப் வசேப்பூர்" ன்னு ஒரு இந்திப்படம். படம் முடியும்போது ஆடியன்ஸ் ஒவ்வொருத்தனும் ஆடிப் போயிருப்பான். ஒவ்வொருத்தன் வயித்துலயும் ஒரு அமிலம் சுரந்திருக்கும்.. நம்மாளுக எடுக்கிற படத்தின் முடிவுல ஆடியன்ஸ் வயித்துல பாப்கார்ன் மட்டும் தான் நிறைஞ்சிருக்கு..!


                          

கதை
                             "வேலு நாயக்கர்", "மாணிக் பாட்ஷா" போன்ற மிகப்பெரிய தமிழ் தாதாக்கள் ஆண்ட மும்பையை  நோக்கி கன்னியாகுமரியிலிருந்து ஒரு டிரெயின் பிடித்து  தன் அண்ணனை தேடி வருகிறார் "ஒற்றைக் கால்" கிருஷ்ணா. வந்த இடத்தில் ரூம் போட்டு குளித்து விட்டு, அங்கேயிருந்த தாதாக்களிடம் எல்லாம் சென்று தன் அண்ணனை பற்றி விசாரிக்க கடைசியில் தன் அண்ணனும், அவன் நண்பனும் கொல்லப்பட்ட செய்தி கேட்டு அதிர்கிறான். தன் அண்ணனை கொன்றவர்களை என்ன செய்தான் என்பதே கதை (சரி, படத்தின் மாபெரும் ட்விஸ்ட்டை நாம் உடைப்பானேன்?) இடையில் அண்ணன் 'ராசுத் தம்பி' யின்  (ராஜு பாய் ன்னா தமிழ்ல ராசுத் தம்பி தானே) காதல் எபிசோடும் தண்டவாளத்தின் இன்னொரு டிராக்காக ஓடுகிறது.

                              இந்தப் படத்தை ஒரு ஐந்து வயது சிறுவனுடன் அமர்ந்து பார்த்தேன். படத்தில் அடுத்து வரும் ஒவ்வொரு காட்சியையும் (கிளைமாக்ஸ் உள்பட) அவன் சொன்னது சத்தியமாய் எனக்கு பிரமிப்பை ஏற்படுத்தவில்லை. 'ஜிகர்தண்டா' போலவே படத்தில் ஏகப்பட்ட ட்விஸ்ட் மற்றும் திருப்பங்கள் இருப்பதாக இயக்குனர் சொன்னார். ஆனால் படத்தில் அப்பப்போ கார்கள் திரும்புவதை மட்டுமே காண முடிந்தது.
                            
        
                                                                                                                                            ஆக்க்ஷன் 
                           சூர்யா, இவரது முந்தைய படங்கள் ஒவ்வொன்றும் அவருடைய நடிப்பு மெருகேறிக் கொண்டே வந்ததை காட்டியது. ஆனால் இந்தப் படம் நிச்சயம் சூர்யாவுக்கு பெருமை தேடித் தரக் கூடிய படங்கள் வரிசையில் இல்லை. ராஜு பாய் கேரக்டருக்கும்  கிருஷ்ணா கேரக்டருக்கும் உடல்மொழியில் வித்தியாசம் காட்டியிருப்பது பாராட்டத்தக்கது. வித்யூத் ஜம்வால் நடிப்பதற்கு இன்னும் கொஞ்சம் இடமளித்திருக்கலாம். இன்னும் கொஞ்சம் முயற்சித்தால், தமிழ் உச்சரிப்பை(வாயசைப்பை) சரி செய்தால் தேறலாம்.

                           ராஜு பாயிடம் அடிவாங்கி சாவதற்கென்றே வாயில் தக்காளி சாஸுடன் வரும் வில்லர்கள் பட்டாளம் நிறைய. அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது மனோஜ் பாஜ்பாய். மனிதர் ஹிந்தியில் இத்தனை வருடம் சம்பாதித்த அத்தனை பெயரையும் இந்த ஒரே படத்தில் தாரை வார்த்து கொடுத்து விட்டார். சூரி அப்பப்போ கிச்சு கிச்சு மூட்டுவதாக நினைத்து நம்மை வெறுப்பேற்றுகிறார்.


                           தொய்வான பாடல் காட்சிகளில் ரசிகர்கள் வெளியே செல்லாமலிருக்க குத்துவிளக்கை தந்தூரி அடுப்பாய் மாற்ற முயற்சித்து தோற்றிருக்கிறார்கள். அதாங்க சமந்தாவை கவர்ச்சி நாயகியாக்க வேண்டி ஸ்விம்சூட், பிகினி, பொத்தான் தொலைந்து போன சட்டை என  அணியவைத்து அசிங்கப்படுத்தியிருக்கிறார்கள். வெரி சாரி இதற்கெல்லாம் மயங்குகிற ஆட்கள் இல்லை நம் ரசிகர்கள். ஒக்கே ஒக்க காட்சியில் வரும் பிரம்மானந்தமும் அவ்வளவு பிரமாதம் இல்லை.

இசை- இயக்கம்-தயாரிப்பு
                              நம்ம யுவன்பாய்க்கு என்னதான் ஆச்சு? பின்னணி ரொம்ப ஆர்டினரி. அதுவும் வித்யுத் சாகிற காட்சியில் நமக்கு பரிதாபம் தோன்றுவதற்கு பதில் சீக்கிரம் செத்தால் தேவலை என்கிற உணர்வே இருந்தது. பாடல்கள் ஒலித்தட்டில் ரசிக்க முடிந்த ஒன்றிரண்டு கூட தேவையில்லாத இடங்களில் வந்து ரசிக்க முடியாமல் செய்வதோடு படத்தின் வேகத்தையும் குறைக்கிறது. லிங்குபாய், ஸ்க்ரீன்ப்ளேன்னு ஒரு விஷயம் எழுதீட்டு படம் எடுத்தீங்களா? இல்ல படம் எடுத்துட்டு அப்பால பேப்பர்ல நோட் பண்ணிகிட்டீங்களா? ஆனாலும் ஒரு விஷயத்துக்கு உங்கள பாராட்டியே ஆகணும். மத்த இயக்குனர்கள் மாதிரி இல்லாம அஞ்சான் முழுக்க முழுக்க கேங்ஸ்டர் மூவி கிடையாதுன்னு உண்மைய போட்டு உடைச்ச அந்த நேர்மை பிடிச்சிருந்தது.



                                      சரி, ஏதாவது நல்லாயிருக்கா?
                                படத்தில் திராபையான திரைக்கதை, பஞ்சரான பின்னணி இசை, மொக்கை காமெடிகள், தேவையற்ற இடங்களில் பாடல்கள், படத்தின் முதல் பாதி இவற்றைத் தவிர படம் நல்லாத்தாங்க இருந்தது. சந்தோஷ் சிவனின் அருமையான ஒளிப்பதிவு மும்பையின் கடற்கரை பிரதேசத்தையும், சமந்தாவின் "மத்தியபிரதேசத்தையும்" அழகாக காட்டியிருக்கிறது. பணமும் நேரமும் அதிகமாக இருக்கும் பட்சத்தில் ஒரு முறை பார்க்கலாம்..!

                           
Aavee's Comments -  Stylish Bheema!

29 comments:

  1. வணக்கம்
    ஆவியப்பா.

    தங்களின் பார்வையில் விமர்சனம் நன்று ஞாயிற்றுக்கிழமை சென்று பார்க்கிறேன். மலேசியாவில் சரியான ஓட்டம் ஓடுகிறது.... அண்ணா. பகிர்வுக்கு நன்றி
    த.ம 2வதுவாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரூபன்.. பார்த்துட்டு சொல்லுங்க..

      Delete
  2. மிஸ்டர் ஆவி கிட்ட பணமும் நேரமும் இருந்திருக்கிறது. எங்கிட்ட இல்லப்பா விரயம் பண்றதுக்கு நேரமும் பணமும் கூடிவே மனமும். தப்பிச்சேன்...

    ReplyDelete
    Replies
    1. //மிஸ்டர் ஆவி கிட்ட பணமும் நேரமும் இருந்திருக்கிறது// அவ்வ்வ்வ் நாம போட்ட பால நம்ம கோல் போஸ்ட்டுக்கே திருப்பி விட்டுட்டாரே?

      Delete
  3. ஸோ! படம் ஃப்ளாப்புனு சொல்லுங்க....உங்கள் விமர்சனம் ரொம்பவெ அருமை....
    //படத்தில் அப்பப்போ கார்கள் திரும்புவதை மட்டுமே காண முடிந்தது.//

    //அடிவாங்கி சாவதற்கென்றே வாயில் தக்காளி சாஸுடன் வரும் வில்லர்கள் பட்டாளம் நிறைய.// போன்ற வரிகள் ரசிக்க வைத்தன....

    ReplyDelete
    Replies
    1. படம் வசூல் செய்வதற்கான கமர்ஷியல் விஷயங்கள் எதுவும் குறையாமல் பார்த்துகிட்டார் லிங்கு. டிவியில் வரும் விளம்பரங்கள் என நிச்சயம் தோல்வி என்கிற அளவுக்கெல்லாம் போக விட மாட்டார். டீசருக்கே சக்சஸ் மீட் நடத்தினவரு, பத்து நாள்ல வெற்றி விழா கொண்டாடிட மாட்டாரு?

      Delete
    2. நீங்க ரசித்து படித்ததற்கு நன்றி..!

      Delete
  4. ஆமா!! இது ஆக்சன் பிலிமா ? காமெடி பிலிமா?

    ReplyDelete
    Replies
    1. நம்மள வச்சு காமெடி பண்ற ஆக்சன் படம்..!

      Delete
  5. உங்கள் எழுத்துகள் மெருகேறிகிட்டே வருது ஆனந்த்...

    //ஆடியன்ஸ் வயித்துல பாப்கார்ன் மட்டும் தான் நிறைஞ்சிருக்கு..!//
    // "வேலு நாயக்கர்", "மாணிக் பாட்ஷா" போன்ற மிகப்பெரிய தமிழ் தாதாக்கள் ஆண்ட மும்பையை நோக்கி//
    //ஆனால் படத்தில் அப்பப்போ கார்கள் திரும்புவதை மட்டுமே காண முடிந்தது.//
    // ராஜு பாயிடம் அடிவாங்கி சாவதற்கென்றே வாயில் தக்காளி சாஸுடன் வரும் வில்லர்கள் பட்டாளம்//
    //குத்துவிளக்கை தந்தூரி அடுப்பாய் மாற்ற//

    எல்லாம் நல்லாத்தான் சொன்னீங்க சரி, கீழே கண்ட வரிகளுக்கு என்னதான் அர்த்தம்? என்னதான் சொல்ல வர்றீங்க? யார் மனதும் புண்படக் கூடாதுன்னா!!!

    //இவற்றைத் தவிர படம் நல்லாத்தாங்க இருந்தது.//

    ReplyDelete
    Replies
    1. //யார் மனதும் புண்படக் கூடாதுன்னா// அப்படியில்ல சார், இரண்டாம் பாதி கொஞ்சம் தேவலாம்.. இன்டர்வெல் பிளாக் மற்றும் சில ஸ்டன்ட் காட்சிகள் ரசிக்கும்படி இருந்தது. வில்லனின் பர்த்டே பார்ட்டி ட்விஸ்ட் என சில நல்ல விஷயங்கள் இருந்தது.. விமர்சனத்தில் சொன்ன டெக்னிகல் விஷயங்களில் பல குளறுபடி இருந்ததால் இந்த பாசிட்டிவ் விஷயங்கள் எடுபடவில்லை. டெக்னிக்கல் பத்தி கவலைப்படாம அரைச்ச சட்னில மறுபடியும் சூர்யாவை சேர்த்து அரைச்சாலும் பார்க்க விரும்பற கூட்டம் கண்டிப்பா இதை ரசிச்சு பார்க்கும்.. அதற்கு சாட்சி நேத்து தியேட்டரில் விழுந்த அப்ளாஸ்.. ஸோ, மொக்கை படம்னு சொல்லி ஒதுக்கிட முடியாதுங்கறதை தான் அப்படி சொன்னேன். :)

      Delete
    2. //உங்கள் எழுத்துகள் மெருகேறிகிட்டே வருது ஆனந்த்.// தாங்க்ஸ் சார்!! :) :)

      Delete
    3. I too agree with Sriram...........

      Delete
  6. அலசியது அழகு.
    ஆளைக்கண்டு அருகில் சென்றால்
    ஊது காமாலை என்று பழைய வசனம் ஒன்று உள்ளது.

    அது போலத்தான் இந்த படமும் என்று
    சொல்லாது சொல்லி இருக்கிறீர்கள் .

    சுப்பு தாத்தா
    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தாத்தா.. வருகைக்கு நன்றி..

      Delete
  7. லிங்கு சாமி தனது பெயரை டங்கு சாமின்னு மாத்திக்கலாம். படம் பூரா டங்கு டங்குன்னு ஒரே இரும்பு அடிக்கிற சத்தம்.

    ReplyDelete
  8. காசு பணம் துட்டு மணி மணி..
    ஒண்ணுமில்லை. செலவு மிச்சப்பட்ட சந்தோஷத்துலே பாடுறேன்.

    ReplyDelete
  9. வணக்கம்,ஆ.வி.சார்!நலமா?/// §§§§சரி, ஏதாவது நல்லாயிருக்கா?§§§§இந்தக் கடேசிப் பத்தி எனக்குப் புடிச்சிருந்தது.///விமர்சனத்துக்கு நன்றி.

    ReplyDelete
  10. ஆவி பாய்,

    //சமந்தாவின் "மத்தியபிரதேசத்தையும்" அழகாக காட்டியிருக்கிறது. //

    ஒரு மத்தியபிரதேச(க)மோ ,உத்திரபிரதேசமோ படம் போட்டிருக்கலாம் ஹி...ஹி!

    # யூ டீவிக்கு ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் படம் தயாரிச்சு கொடுத்து பட்ஜெட்டிலேயே "துண்டு" போட்டு காசு எடுத்திருப்பார் லிங்கு எனவே அவருக்கு படம் ஓடுமா ,நல்லா இருக்குமானு என்ன கவலை ,அதான் படமும் எனோ தானோனு இருக்கு, இது மாரி ஃபர்ஸ்ட் காப்பியில் படம் எடுத்தே "கார்ப்போரெட் கம்பெனிகளை" காலி பண்ணிடுறாங்க நம்ம ஊரு டயரடக்கர்கள் அவ்வ்வ்!

    # இது போல ஒலகப்படமெல்லாம் ரசிக்க தெரியலை நம்ம மக்களூக்கு, சொல்லப்போனால் இந்த படம் "Bullet on the head" என்ற ஹாங்காங் மாஃபியா படத்தோட "காப்பி" (எப்புடி கண்டுப்புடிச்சேன் பார்த்தீரா)அதை கண்டுப்பிடிக்க முடியாத அளவுக்கு எடுத்தது தான் லிங்கு பாயோட திறமை, பாவம் இணைய காப்பி கண்டுபிடிப்பாளர்கள் தான் ஏமாந்துட்டாங்க அவ்வ்!

    ஹாங்காங்க் மாஃபியா படங்கள் பெரும்பாலும் ஒரே கதை தான் , ஆனால் அதிரடி மார்ஷல் ஆர்ட் சண்டைகளுக்காகவே கல்லா கட்டும்., இணைய புண்ணியத்டுல எல்லா மொழிப்படங்களும் காணக்கிடைப்பது நிகழ்காலத்தின் வரம்.

    ReplyDelete
    Replies
    1. bullet on the head us film , bullet in the head தான் ஹாங்காங் படம், ஆனால் அஞ்சான் கதை அது இல்ல, இன்னொரு ஹாங்காங்க் படம் பேரு மறந்துடுச்சு, ஜான் வூ இயக்கினது தான் என நினைக்கிறேன், ஜான் வூ ஹாலிவுட் போகும் முன் நிறைய ஹாங்காங் கேங்ஸ்டர் படம் இயக்கி இருக்காரு , எப்பவோ பார்த்தது என்பதால் பேரு குழப்பமாகிடுச்சு.

      மீண்டும் தேடி கண்டுப்பிடிச்சிடலாம் .ஹி...ஹி.

      Delete
    2. //மத்தியபிரதேச(க)மோ ,உத்திரபிரதேசமோ படம் போட்டிருக்கலாம்/// அந்த பிகினி படம் எடுத்து வச்சுட்டேன்.. அப்புறம் தாய்க்குலங்கள் சண்டைக்கு வருவாங்களேன்னு போடாம விட்டுட்டேன் பாஸ்!! :)

      Delete
    3. ஜான் வூ பெயரை சொல்லி அவருடைய PayCheck படத்தை நினைவு படுத்திவிட்டீர்கள்.. எனக்கு பிடித்தான படங்களில் அதுவும் ஒன்று..

      Delete
  11. சந்தோஷ் சிவனின் அருமையான ஒளிப்பதிவு மும்பையின் கடற்கரை பிரதேசத்தையும், சமந்தாவின் "மத்தியபிரதேசத்தையும்" அழகாக காட்டியிருக்கிறது. பணமும் நேரமும் அதிகமாக இருக்கும் பட்சத்தில் ஒரு முறை பார்க்கலாம்..!// உங்க ஸ்டைல் விமர்சனத்தை மிகவும் ரசிச்சேன்! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  12. விமர்சனம் நல்லா எழுதறீங்க நண்பா ரசிச்சேன் வரிகளை

    ReplyDelete
  13. soorya paavam..abuttethen solla mudiyum..ennagana sarithaane....

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...