Wednesday, March 2, 2011

Unknown - திரை விமர்சனம்

                                       டேக்கன், பேட்மன் பிகின்ஸ் போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த லய்ம் நீசனின் பிரமாதமான நடிப்பில் வெளிவந்திருக்கும் படமிது.


                            


                         தன் மனைவியுடன் ஒரு அறிவியல் மாநாட்டிற்கு பெர்லின் செல்லும் மார்டின் ஹாரிஸ் எனும் விஞ்ஞானி (லய்ம் நீசன்) ஏர்போர்ட்டில் தன் பெட்டியை தவற விட்டுவிட்டு, தான் தங்கப் போகும் ஹோட்டலுக்கு செல்ல, ஹோட்டலை அடைந்ததும் தன் மனைவியிடம் தங்கும் அறையின் சாவியை பெறச் சொல்லிவிட்டு டாக்சிக்கு பணம் கொடுத்து அனுப்புகிறார். பின்னர் தான் கொண்டுவந்த பெட்டிகளில் தன் ப்ரீப் கேசை விட்டுவிட்டதை உணர்ந்த அவர் டாக்சியை நிறுத்த முயல, அதற்குள் டாக்சி சென்று விட, உள்ளே சென்ற மனைவியிடம் கூறிவிட்டு செல்ல போதிய சமயம் இல்லாததால் அவரிடம் சொல்லாமலே இன்னொரு டாக்சியை பிடித்து ஏர்போர்டிட்கு செல்லுமாறு கூறுகிறார். மார்டினின் உந்துதலால் வேகமாக வண்டி ஓட்டிச் சென்ற அந்த பெண்மணி ஒரு விபத்தில் சிக்கி இருவரும் ஆற்றில் விழுகின்றனர். படத்தின் முதல் பத்து நிமிடங்களில் நம்மை சீட்டின் நுனிக்கு கொண்டு செல்லும் இவர்கள் இறுதி வரை இந்த சஸ்பென்சை கொண்டு செல்கிறார்கள்.


                                        
                                      கிட்டத்தட்ட வெற்றிவிழா கமலின் கேரக்டரை நினைவு படுத்துகிறார் லய்ம் நீசன். டாக்டர் மார்டின் ஹாரிசாக வரும் இவர் முன் கூறிய விபத்தில் நினைவை இழந்து விட, நான்கு நாட்களுக்கு பின் நினைவுக்கு வந்ததும் தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்று தன் மனைவியை தேட, அவரோ இவரை யாரென்றே தெரியாது என சாதிக்கிறார். அது மட்டுமல்ல தன் கணவர் மார்டின் ஹாரிஸ் என்ற பெயரில் மற்றொருவரை காட்டுகிறார்.  பின் தான் சந்திக்கவிருந்த புரொபசர் ஒருவரை சந்திக்க முயல அங்கும் டுப்ளிகேட் மார்டின் வந்து, தன் மனைவியுடன் அவர் எடுத்துக்கொண்ட அதே புகைப்படத்தை காட்ட மயங்கி விழுவது லயம் நீசன் மட்டுமல்ல, நாமும் தான். 


                                       தான் யார் என்பதை ஒரு டிடக்டிவ் உதவியுடன் கண்டுபிடிக்க முயலும் இவருக்கு உதவுவது முதல் காட்சியில் வந்த டாக்சி டிரைவர் (டயன் க்ரூகர்) . கொஞ்ச நேரமே வந்தாலும் கலக்கல் நடிப்பு இவருடையது. தான்தான் உண்மையான மார்டின் ஹாரிஸ் என்பதை நிரூபித்தாரா? தன் மனைவி தன்னை கண்டும் காணாதது போல் இருந்தது ஏன் என கண்டுபிடித்தாரா? இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என தெரிந்ததா? வெண்திரையில் காண்க..

                                  
                                          விறுவிறுப்பான இந்த திரைக்கதையில் பல ஓட்டைகள் இருந்தாலும், இரண்டு மணிநேரம் செல்வதை நாம் உணர்வதற்கு சந்தர்ப்பம் அளிக்கவில்லை.. தன்னை கொல்ல வரும் வில்லனிடமிருந்து தப்பிக்க நடக்கும் கார் சேஸிங் சீன் ஒன்றே ஹாலிவுட் படங்கள் இன்றும் தரமுள்ளதாய் இருப்பதற்கு சாட்சி.. எல்லாம் சரி.. பெர்லினில் எல்லா டாக்சிகளும் மெர்சிடிஸ் பென்சாக இருப்பதை கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை. .

                                            Unknown - த்ரில்லர் விரும்பிகளுக்காக..

70  / 100

9 comments:

  1. படக்கதை நல்லாயிருக்கே! பார்க்கிறேன்!

    ReplyDelete
  2. Seems like a good one...will look up... thanks

    We watched a movie in netflix last night "Date Night" expecting a family movie... ended up watching a hilarious (light)thriller...ha ha..:)

    ReplyDelete
  3. தங்களைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் இருந்தால் வந்து பார்க்கவும்

    பாரி தாண்டவமூர்த்தி
    http://blogintamil.blogspot.com/2011/03/3.html

    ReplyDelete
  4. அறிமுகத்திற்கு நன்றி திரு.பாரி தாண்டவமூர்த்தி!! என் பதிவுகள் உங்களுக்கு பிடித்திருப்பது மிக்க மகிழ்ச்சி. இதன் மூலம் மற்ற பதிவர்களைப் பற்றியும் அறிந்து கொள்ள முடிந்தது..

    ReplyDelete
  5. நன்றி எஸ். கே. நல்ல திரில்லர் மூவி!!

    ReplyDelete
  6. புவனா, நல்லா இருந்தது இந்த படம். லைம் நீசன் நடிச்ச டேக்கன் படத்த நம்ம விஜயகாந்த் விருதகிரி படத்துல காப்பி அடிச்சிருந்தாரு!! இந்த படத்தையும் எப்படியும் நம்ம ஆளுக விடமாட்டாங்க!!

    ReplyDelete
  7. நன்றி குமார்!!

    ReplyDelete
  8. சினிமா... பார்க்க வேண்டிய தூண்டல்

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails