Thursday, March 17, 2011

நீ வருவாய் என ..




நீ வருவாய் என 
     வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறேன்
நீ கடந்து போனதும் 
     மனதுக்குள் தவியாய் தவிக்கிறேன்.

உனை மீண்டும் 
      எப்போது காண்பேன் என ஏங்குகிறேன்.
நீ உடன் இருக்கும் போது 
      கடிகாரம் மெதுவாய் செல்ல விரும்புகிறேன்.

உன் தரிசனம் காண 
       ஒவ்வொரு வாரமும் ஐந்து நாட்கள் காத்திருக்கிறேன்,
எனைப் போலவே 
         உனைக் காண பலரும் தவம் கிடக்கின்றனர்.

திங்களில் தொடங்கும் 
          எதிர்பார்ப்பு வெள்ளியில் முடியும் பொதுவாக,
ஏ வீக்கெண்டே  
           நீ எப்போது வரப் போகிறாய்!!


12 comments:

  1. ஹஹஹாஹ் காதல் கவிதைன்னு நினைச்சா

    ReplyDelete
  2. செந்தில்March 17, 2011 at 10:22 AM

    ஆனந்தராஜா இன்னும் இரண்டு தினம் பொருத்திறு. கவிதை அருமை. ஆனா வேற யாருக்கோ காத்திருப்பது போல தெரிகிறது.

    ReplyDelete
  3. எல்லோருக்கும் இருக்கும் அதே ஏக்கம்:-) கடைசி அந்த ட்விஸ்ட் நல்லா இருந்தது!

    ReplyDelete
  4. ஏமாற்றிவிட்டிங்களளே சார்

    ReplyDelete
  5. //ஏ வீக்கெண்டே, நீ எப்போது வரப் போகிறாய்//

    நான் ஒரு வாரம் கூட தவறாம பாடும் பல்லவி தான் இது... As if there is no more work life after that friday...what a joy on that friday evening... ஹா ஹா ஹா... ஆனா செம twist in your post I say...:))))
    (But, பின் விளைவுகள் பத்தி சொல்லலியே பிரதர்...I mean... வேற மாதிரி ஆரம்பிச்சு வேற மாதிரி முடிச்சு அதனால் வீட்டில் நடந்த சில பல டேமேஜ்கள் பற்றி....ஹா ஹா ஹா...:))))

    ReplyDelete
  6. நன்றி எல் கே
    காதலி/ மனைவிக்கு அடுத்த படியாக நம்மை காத்திருக்க வைப்பது இந்த வீக்கெண்டு தானே!!

    ReplyDelete
  7. என்ன செந்தில் நீங்க குடும்பத்தில கோக் ஊத்திருவீங்க போல இருக்கே !!!

    ReplyDelete
  8. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரவி மீண்டும் வருக !!!

    ReplyDelete
  9. நன்றி எஸ் . கே

    ReplyDelete
  10. படத்தைப் பார்த்து ஏமாறாதீர் !!! நன்றி ஹாசிம்!!

    ReplyDelete
  11. புவனா அதெல்லாம் இப்புடி பப்ளிக்கா கேக்கப்பிடாது.. :-)

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...