Friday, February 18, 2011

பயணம் - திரை விமர்சனம்



மொழி, அபியும் நானும் போன்ற மெல்லிய படங்களை கொடுத்த ராதா மோகன் படமா இது, அட! 

                       இப்படித்தான் சொல்லணும்னு ஆரம்பிச்சேன்.. ஆனா எதார்த்த சினிமாவை காட்டுவதாக சொல்லி எல்லா காட்சிகளும் எதிர்பார்த்தபடியே இருக்க சிறிது அலுப்பு தட்டுவது மறுக்க முடியாது.. பிளைட் ஹைஜாக் பற்றிய கதையை முடிந்த வரையில் லோ பட்ஜெட்டில் சொல்ல முனைந்திருக்கிறார்கள்.. 

                       இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட குழந்தை, சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் பெண், துறுதுறுப்பான டாக்டர், அன்னியோன்யமான தம்பதி, பாசமே வடிவான ஒரு பாதிரியார், ஒரு நடிகன், அவனுடைய ரசிகன், ஜோதிட சிகாமணி, கார்ல்மார்க்ஸ் வழி நடக்கும் பட்டதாரி இளைஞன், ஒரு மாஜி மிலிட்டரி மற்றும் ஒரு அரசியல்வாதி. இவர்களுடன் மதத்திற்கு கட்டுப்பட்ட, பண்பாடுகளை மதிக்கிற, பெரியோர்களை போற்றுகிற, குழந்தைகளையும் நேசிக்கும் மனம் கொண்ட நான்கைந்து நல்ல (???) தீவிரவாதிகளும் கடத்தப்பட்ட அந்த விமானத்தில் பயணம் செய்தால் எப்படியிருக்கும்.. இதுதான் கதை..



                        விமானத்தில் சிறை வைக்கப்பட்ட இவர்கள் அனைவரையும் சேதாரமின்றி கமாண்டோ நாகார்ஜுன் காப்பாற்றுவது கிளைமாக்ஸ். வித்தியாசமான ஒரு படத்தை கொடுக்க நினைத்த இயக்குனருக்கு முதல் பாராட்டு.. பெரிய பட்ஜெட்டுக்கு சங்கர் பேமஸ் என்றால் கைக்கு அடக்கமான பட்ஜெட்டில் படமெடுக்க ராதா மோகனால் மட்டுமே முடியும்! கொடுக்கப்பட்ட சிறிய பட்ஜெட்டில் ரெண்டு பிளைட்டையும், நாகார்ஜுன், பிரகாஷ்ராஜ், பிரம்மானந்தம் ( தெலுங்கின் காஸ்ட்லி காமெடியன்) ஆகியோரை மிகச் சாமர்த்தியமாக கையண்டிருப்படிருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனம்.

                         பிளைட் ஹைஜாக், நான்கு நாட்கள் சிறை வைக்கப்பட்ட மக்கள், காப்பாற்ற துடிக்கும் கமாண்டோக்கள். இந்த கதையில், காமெடி இருக்க முடியுமா, சென்டிமென்ட் இருக்குமா, ஆக்க்ஷன் இருக்குமா, மெசேஜ் இருக்குமா. எல்லாமே இருக்குங்க. குறிப்பாக தன் ஆதர்ச நடிகன் அருகில் இருப்பதை மனைவிக்கு போன செய்து சொல்லும் ரசிகன், "சார் போன படத்துல பறந்து வந்த புல்லட்ட பல்லால கடிச்சு துப்பனீங்களே!!" "தாய்க்கு ஒண்ணுன்னா ஆம்புலன்சை கூப்பிடுவேன்.. தாய்நாட்டுக்கு ஒண்ணுன்னா நானே ஓடுவேன்" போன்ற டயலாக்குகள் நம்மையும் அறியாமல் சிரிக்க(சிந்திக்க) வைக்கிறது!!



                          காஷ்மீர் ஆபரேஷன் காட்சிகள் படத்திற்கு பலம் சேர்க்கிறது. இசை பிரவின் மணி- பரவாயில்லை.. பாதிரியாராக வரும் எம்.எஸ்.பாஸ்கர் அடிக்கடி புல்லரிக்க வைப்பது கொஞ்சம் ஓவர்.. ஐந்து நிமிடமே வந்தாலும் கமாண்டோ காட்சிகள் நன்றாக வந்திருக்கிறது. பிரம்மானந்தம் நாகர்ஜுனாவிடம் எப்போது அடி வாங்கப் போகிறார் என்று எதிர்பார்த்திருந்த என் போன்ற ரசிகர்களுக்கு சிறு ஏமாற்றம்.

                             பயணம் -- ஏர் பஸ் அல்ல டூர் பஸ்!!

55/ 100 

         


9 comments:

  1. நிதர்சனமான விமர்சனம் !!!

    ReplyDelete
  2. படம் நல்லாயிருக்கு?

    ReplyDelete
  3. என்னப்பு , கடைப் பக்கமே காணோம்?

    ReplyDelete
  4. நன்றி கார்த்திக்!

    ReplyDelete
  5. சுரேஷ், படம் ஸ்லோ டிராமா. ஒருமுறை பார்க்கலாம்!!

    ReplyDelete
  6. தல சூப்பர் விமர்சனம். ம்ம்ம்.. அசத்துங்க!!

    ReplyDelete
  7. //பயணம் -- ஏர் பஸ் அல்ல டூர் பஸ்!!//

    ஒற்றை வசனத்திலேயே சொல்லிட்டீங்க..


    சினேகமுடன் பா்ஹாத்
    பிளாக்கரில் மேல் பகுதியில் உள்ள பட்டியை (Nav Bar) நீக்க -(பிளாக்கா் டிப்ஸ்)

    ReplyDelete
  8. I was expecting this movie for a while... sad to hear didn't mark the expectations.. innum paakalai...nice review here...

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...