உலகக் கோப்பை கிரிக்கெட் துவங்குவதற்கு இன்னும் பதினாறு நாட்களே உள்ள நிலையில் அதை பற்றிய ஒரு முன்னோட்டம் இதோ இங்கே....இந்த உலகக் கோப்பைக்கு குரூப் A மற்றும் குருப் B என்ற இரு வேறு குழுக்களில் மொத்த அணிகளும் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளன.
இந்தியா குரூப் B யில் உள்ளது. இந்த குழுவில் நெதர்லாந்து, அயர்லாந்து மற்றும் பங்களாதேஷை தவிர மற்ற எல்லா அணிகளும் சிறப்பாக விளையாடி வருகின்றன. குரூப் A வில் கனடா, ஜிம்பாப்வே மற்றும் கென்யா அணிகள் உள்ளதால் இக்குழுவில் உள்ள அணிகள் எளிதாக அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது.
வெற்றி வாய்ப்பு: மூன்று முறை தொடர்ந்து (ஹாட்ரிக்) வெற்றி பெற்று உலகக் கோப்பையை தக்க வைத்திருக்கும் ஆஸ்திரேலியா இம்முறை சற்று பலம் குறைந்து காணப்படுகிறது. ஏ குழுவில் ஸ்ரீலங்கா மற்றும் பாகிஸ்தான் பலம் மிகுந்த அணிகளாக உள்ளது. பி குழுவில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் போன்ற அணிகள் பலம் மிகுந்ததாக தெரிந்தாலும் தோனியின் தலைமையில் இளஞ்சிங்கங்களை உள்ளடக்கிய இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது.
சொந்த மண்ணில் விளையாடுவதாலும், கடந்த இரண்டு வருடங்களாகவே ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருவதாலும் இந்தியா வெற்றி பெற வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. இதற்கு மகுடம் வைத்தாற்போல் கிரிக்கெட் உலகின் சூப்பர்ஸ்டார் "சச்சின்" இந்திய அணியில் உள்ளது மிகப்பெரிய பலம். (அவர் இன்றும் மற்ற அணிகளுக்கு டெர்ரர் ஆகவே உள்ளார் என்பது நமக்கெல்லாம் சந்தோஷமான செய்தி). இந்த வெற்றிக் கூட்டணி உலகக் கோப்பையை நமக்கு இரண்டாவது முறையாக மீட்டுத் தரப்போவதை பொறுத்திருந்து காண்போம்!!
வங்கதேசத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம்
ReplyDeleteகனடா எல்லாம் வேர்ல்ட் கப் வருதா? கொடுமைடா சாமி ... இவங்களுக்கு ஐஸ் ஹாக்கி தானே வரும்... இது எங்க இருந்து வந்ததோ... Nice prologue before the season Anand... reminded on funfilled school days watching late night matches... betting with cousins...unbelievable centiments while watching... ha ha ha... gone are those days...hmmm...
ReplyDelete//சொந்த மண்ணில் விளையாடுவதாலும், கடந்த இரண்டு வருடங்களாகவே ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருவதாலும் இந்தியா வெற்றி பெற வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது//
ReplyDeleteவாவ்... நடக்கட்டும்... ட்ரீட் தந்து கொண்டாடுறேன்...
விரிவான அலசலை எதிர்பார்த்தேன்...
ReplyDeleteஎல்.கே. உங்க கருத்தை ஒத்துக்கறேன். பங்களாதேஷ் நிச்சயம் நல்ல விளையாடுவாங்கன்னு நானும் எதிர் பாக்குறேன்.. ஆனா இந்தியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளை பார்க்கும் போது கொஞ்சம் வீக்கா இருக்கு..
ReplyDeleteபுவனா, கனடா தகுதிச் சுற்றுகளில் எல்லாம் நல்லா விளையாடிருக்காங்க.. ஆமா நீங்க யாருக்கு சப்போர்ட் இப்போ? பிறந்த வீட்டுக்கா? புகுந்த வீட்டுக்கா?
ReplyDeleteபிரபாகரன், விரிவா எழுதனும்னு தான் ஆரம்பிச்சேன்.. கொஞ்சம் நேரமின்மை காரணமா பதிவை சுருக்கிட்டேன்.. அடுத்த கிரிக்கெட் பற்றிய பதிவில் இன்னும் விரிவாக எழுத முயற்சிக்கிறேன்..
ReplyDeleteசொந்த நாட்டில் விளையாடுகிறோம்! பார்ப்போம்! என்ன நடக்கிறது என்று!
ReplyDeleteஎஸ். கே.. இப்படி தோற்கின் எப்படை வெல்லும் ??
ReplyDelete//நீங்க யாருக்கு சப்போர்ட் இப்போ? பிறந்த வீட்டுக்கா? புகுந்த வீட்டுக்கா?//
ReplyDeleteஎன்ன இருந்தாலும் பிறந்த வீடு பிறந்த வீடு தான்... My support always for India only...:)