அமைதியாக நடந்த பட்டிமன்றங்களை
ஆரவாரம் மிக்கதாக மாற்றியது நியாயமா ?
தொடர்மழையென பேசும் பேச்சாளர்களின் மத்தியில்
அழகிய சாரல் மழையாய் நீங்கள் பேசுவது நியாயமா ?
சாலமன் பாப்பையாவின் படைகளுக்கு தலைமை தாங்கி
எதிர் பேச்சாளர்களை திண்டாடச் செய்வது நியாயமா ?
கருத்துச் செழுமை மட்டும் நிறைந்திருந்த பட்டிமன்றங்களில்
மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தது நியாயமா ?
செந்தமிழாய் பேசிய அரங்கங்களில்
'சென்னை' த் தமிழையும் உலவ விட்டது நியாயமா ?
வள்ளுவனையும் பாரதியையும் துணைக்கழைக்காமல்
அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளையே பேசுவது நியாயமா ?
இவை மட்டுமா ? ஆசையாய் பழக வந்த
சூப்பர் ஸ்டாருக்கு "நோ " சொன்னது நியாயமா?
இதுபோல் நகைச்சுவையாய் பேசி எங்கள்
உள்ளங்களை கொள்ளை கொண்டது நியாயமா ?
.
(பி. கு) சிகாகோவில் ஒரு பட்டிமன்றத்தில் கலந்து கொள்ள வந்த ராஜாவிடம் கொடுக்கப்பட்ட புகார் கவிதை இது.. இந்தக் கவிதையைப் படித்து விட்டு "நியாயமா என்ற கேள்விக்கு என் பதில்.. சின்னதாய் ஒரு புன்னகை" என்று எழுதி கையொப்பமிட்டுத் தந்தார்..
Super Kostin... super answer..ha ha...I never miss his speech... he and Bharathi as well...
ReplyDeleteNever had a chance to see their program in person... எங்க ஊர் பக்கம் வர்றதே இல்லை ஏனோ? அடுத்த வாட்டி அவரை பாத்தீங்கன்னா இந்த கொஸ்டினயும் என் சார்பா கேளுங்க..... :)))
நிச்சயம் கேக்குறேன் புவனா!! இங்கு நடந்த பட்டிமன்றத்தையும் முழுவதுமாக வீடியோ எடுத்திருக்கோம். அதை யு-டியுபில் அப்லோட் செய்துட்டு லிங்க் அனுப்பறேன். (அவர் "கோ" மற்றும் "மாப்பிள்ளை" போன்ற திரைப்படங்களிலும் நடிப்பதாக கூறினார்.
ReplyDeleteஅன்பின் ஆவி - ராஜா பட்டி மன்றத்தில் ராஜா தான் - புகார் கடிதம் அருமை - தங்களின் ஆதங்கம் புரிகிறாது - இருப்பினும் ராஜாவின் தனித்துவம் பாராட்டுக்குரியது - புகாருக்குப் பதில் சின்னதாய் ஒரு புன்னகை - பதிவு நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteநன்றி ஐயா.. பட்டிமன்றத்தை விட நேரில் மிகவும் நகைச்சுவையாய் பேசுபவர் அவர்..
Deleteஅன்பின் ஆவி - வீடியோ எனக்கும் ஒரு லின்க் பிளீஸ் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteவிரைவில் அனுப்புகிறேன் ஐயா..
Deleteம்ம்ம்ம்.. இப்படியெல்லாம் பதிவு எழுதி எம்மைக் கலங்கடிக்கிறீரே, இது நியாமா?
ReplyDeleteஇப்போதுதான் இந்தப் பதிவு படிச்சேன். வீடியோ லிங்க் வேறெங்காவது கொடுத்திருக்கிறீர்களா? எனக்கும் வேணும்.
ReplyDelete