சில விஷயங்கள்ல சில பேர் கிட்ட இருந்து இன்ஸ்பிரேஷன் எடுத்துப்போம் இல்லையா?
அந்த மாதிரி ஒரு நபர்தான் இந்த ஒடக்காரரும்!
.
2011 ஆம் வருஷம்னு நெனைக்கிறேன். கொடைக்கானல் ஏரியில் போட்டிங்
போகலாம்னு போனபோதுதான் அவரை முதன்முதலா சந்திச்சேன். அது எப்படின்னு அப்புறம்
சொல்றேன். அதுக்கு முன்னாடி அந்தத் துடிப்பான மனிதரைப் பத்தி சில விஷயம் சொல்லிடறேன்.
.
இவர் பக்கத்துல பத்து நிமிஷம் நின்னா 'டர்போ'
சார்ஜர் மாதிரி நமக்கு ரீபிள் ஆயிடும். அவ்வளவு எனர்ஜி மனுஷனுக்குள்ள. 'வாவ், வாட்
எ மேன்' அப்படின்னு ஒரு ரஜினி படத்துல டயலாக் வரும். அது சூப்பர்ஸ்டாருக்கு
பொருந்துதோ இல்லையோ, இந்த மனுஷனுக்கு நிச்சயம் பொருந்தும். இவரை நேர்ல பார்த்த
எல்லோரும் அதை நிச்சயமா ஒத்துப்பாங்க.
.
அதே மாதிரி இவர் பேச ஆரம்பிச்சா, கேட்டுகிட்டே
இருக்கலாம். அவ்வளவு விஷய ஞானம் உள்ளவர். ஆனா இவர்கிட்ட விவாதம் அப்படின்னு
யாராவது பண்ணனும்னு நெனச்சா, அவங்களுக்காக நாம 'கூட்டுப் பிரார்த்தனை' பண்ண
வேண்டியிருக்கும்.
.
பேசுவதில் மட்டுமல்லாமல் எழுதுவதிலும் இவர்
'ஜித்து ஜில்லாடி'. இவர் கொஞ்சம் வயதான மனிதர்தான். ஆனால் சூடம் அடிச்சு சத்தியம்
பண்ணினாலும், அந்த அய்யனாரே அதை நம்ப மாட்டார். 'அன்பார்ச்சுனேட்லி' அந்த அய்யனார
இவர் நம்பறது இல்ல.
.
நான் சொன்னதெல்லாம் வெச்சு, இவரை ஒரு
படிக்காத மேதைன்னு நீங்க எல்லாம் நெனச்சிருப்பீங்க. ஆனா, இவர் படிச்ச புக்ஸ 'கன்னிமரா'
லைப்ரரியன் கூட படிச்சிருக்க மாட்டார். தூங்கும்போது கூட தலையணைக்கு பதிலா 'நாலு
புஸ்தகம் இருந்தா கொடு தம்பி' ன்னு கேட்டு வாங்கி என்னை ஆச்சரியத்தில்
மூழ்கடித்தவர்.
.
சரி, இன்ட்ரோ போதும், அவரை நான் கொடைக்கானல்ல
சந்திச்சேன்னு சொன்னேன் இல்ல. அது நேரடி சந்திப்பு கிடையாது. அவர் எங்கோ எப்போதோ
எழுதி வைத்த விஷயம் ஒண்ணு கொடைக்கானல் ஏரில பாட்டில்ல மிதந்து வந்தது. அந்த
பாட்டில் அமெரிக்கால செய்யப்பட்டது. 'எ பிராடக்ட் ப்ரம் மார்க்' னு
எழுதியிருந்தது. அத படிச்சுட்டு எனக்கு ரொம்ப பிடிச்சுப் போகவே என் பதிலை
(பாராட்டை) அந்த பாட்டிலிலேயே அனுப்பி வச்சேன். ஆனா அதை அவர் பார்த்திருப்பாரான்னு
கூட எனக்குத் தெரியல.
.
அப்புறமா இன்னொரு சந்தர்ப்பத்துல நான் ஒரு
தெருவுல சுத்திட்டு இருந்தேன். அப்போ அங்கிருந்த ஒரு கூட்டத்தலைவர் (அவரை எல்லாரும்
செல்லமா 'டான்' னு கூப்பிட்டாங்க. பார்க்க
டெரரா இருப்பார்னு நெனைக்காதீங்க. இவரு கொஞ்சம் சாஃப்ட் பார்ன், ஐ மீன் சாஃப்ட்
டான். அவர பத்தி வேறொரு நாள் சொல்றேன்.) என்னையும் அவர் கூட்டத்துல
சேர்த்துவிட்டார். அங்கதான் இந்த ஓடக்காரர் கிட்ட பேசற வாய்ப்பு எனக்கு கெடச்சுது.
இப்பவும் நான் ஒரு சுவத்துல எழுதி வச்சுட்டு போயிடுவேன். அவர் வந்து பதில்
சொல்லியிருப்பார். நேர்ல சந்திச்சுக்கல.
.
இப்படியா போய்கிட்ட இருந்த போது, ஓடக்காரர்
வாழ்க்கையில ஒரு புயல். எல்லோரும் வந்து ஆறுதல் சொன்னாங்க. நான் கொஞ்சம் தூரமா
நின்னு வருத்தப்பட்டுகிட்டு இருந்தேன். ஆறுதல் சொல்ற வயசு இருக்கான்னு தெரியாம
தள்ளியே இருந்தேன். அப்ப ஒருநாள் மெரீனா பீச்சுக்கு போயிருந்தேன். என் பக்கத்துல
ஒருத்தர் வந்து உக்காந்தார். 'தம்பி நீங்கதானே ஆவி' ன்னு கேட்டார். 'ஆமா நீங்க'
என்றேன்.
.
அவர் தெலுங்கு படத்துல கிருஷ்ணன் வேஷத்துல
வந்த என்டிஆர் மாதிரி கலர்ல இருந்தார். அதேமாதிரி சிரிப்பு. 'நான்தான்
ஓடக்காரன்'ன்னு சொன்னார். எனக்கு ஒரு நிமிஷம் கையும் ஓடல, காலும் ஓடல. ஐயோ ராமா,
இந்த மனுஷன தேடி நான் எங்க எங்கயோ போனேனே, இவர் எம் பக்கத்துல வந்து உக்காந்திருக்காரேன்னு
நெம்ப சந்தோஷமா போச்சு.
.
சரி வாங்க தம்பின்னு (இன்னைக்கு வரைக்கும் என்னை வாங்க,
போங்கன்னுதான் கூப்புடுவார். அவர் வயச குறைச்சு காண்பிக்கவா இருக்கும்னு நெனச்சு
நானும் அப்படியே விட்டுட்டேன்) கூப்பிட்டு தன்னுடைய ஓடத்த எடுத்துகிட்டு என்னையும்
அதுல உட்கார வச்சு, ஒரு பெரிய கடலுக்குள்ள கூட்டிட்டு போனாரு. ஆறு மாசம் ரெண்டு
பேரும் ஒண்ணாவேதான் சுத்துனோம்.
.
பல 'ஜென்' இரவுகள், சினிமா கதைகள்,
சுவாரஸ்யமான ஹாஸ்யங்கள்னு போய்கிட்டு இருந்தப்ப திடீர்னு என்னாச்சுன்னு தெரியல. 'தம்பி,
என்னுடைய தேடல் வேற, உங்க தேடல் வேற' ன்னு சொல்ற மாதிரி திடீர்னு என்னை ஒரு ஐலேண்ட்ல
இறக்கிவிட்டுட்டு அவர் ஓடத்தை எடுத்துட்டு போயிட்டார். என்னைக்காவது கண்ணுல
தென்படுவார்னு பார்த்தேன், இதுவரைக்கும் அகப்படல.
.
இன்னைக்கு காலைல எங்க கூட்டத்து கூடாரத்துல
பார்த்தப்போ 'ஒடக்காரருக்கு பொறந்தநாள்' ன்னு எழுதி எல்லாரும் வாழ்த்து
சொல்லிக்கிட்டு இருந்தாங்க. நானும் தூரமா நின்னு, வாழ்த்த வயதில்லைன்னு
வணங்கிகிட்டு இருக்கேன்!
.
பாய் இருக்கா? பிறாண்டனும். நான் இப்பத்தான் முடி வெட்டினேன். எனவே சிண்டு போறாது!
ReplyDeleteஹஹஹா, உங்களுக்கும் அந்த ஓடக்காரர் நல்ல பரிச்சயம் இருக்கும்னு நெனைக்கிறேன் சார். :)
Deleteபரிசல்?
Deleteஓ...
வாழ்த்துகள். வாழ்த்துகள்.
ஓடக்காரருக்கு வாழ்த்துகள்!
ReplyDeleteமுதல்ல...கொடைக்கானல் உங்க அனுபவம்னு பார்த்தா....நடுக்க...ஓடம் திரும்பிருச்ச....சரி....வேற னு வந்தா...ஸ்ரீராம் பதில் சொல்லுச்சு....பரிசல் னு...அவரைச் சந்ததித்தது...இல்லை...
ReplyDeleteமனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்
விவரணமும்..சூப்பர்
ஹாஹா :) நான் நிஜ ஓடக்காரரை சந்திச்ச அனுபவம்னு நினைச்சிட்டேன் :)
ReplyDelete//டீர்னு என்னை ஒரு ஐலேண்ட்ல இறக்கிவிட்டுட்டு அவர் ஓடத்தை எடுத்துட்டு போயிட்டார். என்னைக்காவது கண்ணுல தென்படுவார்னு பார்த்தேன், இதுவரைக்கும் அகப்படல//அப்போ நீங்க இன்னும் ஐலன்ட்லதானா ??
உங்கள் ஓடக்காரருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteஇதற்கு பின்-நவீனத்துவப் பதிவு என்று பெயர் வைக்கலாமா?
ReplyDelete