Friday, April 3, 2015

நிழலின் காவலன்




விசித்திரங்கள் நிறைந்த விடுகதை 
என் வாழ்க்கை என்றால் -
அதில் விரித்துப் பொருள் 
விளங்க முடியாத புதிர் நீ!

முரட்டுத் தனமான அன்பினால்
உயிரின் அடிவரை நேசித்தாய் 
மென்மையான கோபத்தால் 
நிதமும் என்னை நிந்தித்தாய்.

ன் மகிழ்ச்சியை மையெழுதிய
உன்னிரு கண்கள் சொல்லும்,
உன் சினத்தை பிறைவடிவான
உன்னிதழ்கள் உரைக்கும்.

டலும் காதலின் ஒரு பகுதியென
ஊடகங்கள் பலதும் உணர்த்திய போதும்
உள்ளங்கைகளிலிருந்து காதலின்று உயரே பறந்துவிட 
ஊசலாடும் மனதிற்கு என்ன உரைப்பேன் ஆறுதலாய்?

சிறுபிள்ளையாய் மாரில் தலைவைத்து 
உறங்கிய நாட்களை மறந்துவிட்டு- 
சீற்றத்தின் பிடியில் மதியிழந்து 
எனை நீங்கிச் சென்றாய் 

னக்காய்  சிந்தும் கண்ணீரைக் கூட 
துடைத்திட முடியவில்லை - கதிரவன்
சாய்ந்திடும் தொடுவானத்தை மட்டும் 
தொட்டுவிட முடியுமா என்ன?

நிழலாய் உன்னுடன் நடைபோட 
நினைத்திருந்தேன் முடியவில்லை- போகட்டும் உன்
நிழலின் காவலனாய் தொடர்ந்து வர
நிச்சயம் உன் அனுமதி தேவையில்லை..!

10 comments:

  1. அருமையான கவி நண்பரே வாழ்த்துகள்.
    தமிழ் மணம் 3

    ReplyDelete
  2. வணக்கம்
    கவிதையின் வரிகள் தித்திக்கிறது.... பகிர்வுக்கு நன்றி த.ம4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. ஆவி! வாவ்! இது உங்கள் தமிழ் வரிகளுக்கு!

    ஆனால், வரிகள் சொல்லும் அந்த கனத்தைத் தாங்க முடியலை ஆவி!ம்ம்ம் சில நினைவுகள்....!!!

    ஊடலும் காதலின் ஒரு பகுதியென
    ஊடகங்கள் பலதும் உணர்த்திய போதும்
    உள்ளங்கைகளிலிருந்து காதலின்று உயரே பறந்துவிட
    ஊசலாடும் மனதிற்கு என்ன உரைப்பேன் ஆறுதலாய்?

    சிறுபிள்ளையாய் மாரில் தலைவைத்து
    உறங்கிய நாட்களை மறந்துவிட்டு-
    சீற்றத்தின் பிடியில் மதியிழந்து
    எனை நீங்கிச் சென்றாய் //
    ----------------------------------------------------------------
    நிழலாய் உன்னுடன் நடைபோட
    நினைத்திருந்தேன் முடியவில்லை- போகட்டும் உன்
    நிழலின் காவலனாய் தொடர்ந்து வர
    நிச்சயம் உன் அனுமதி தேவையில்லை..!

    நச்! எங்கேயோ போயிட்டீங்க!
    -கீதா

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் சேச்சி

      Delete
  5. புரிகிறது ஆவி...! கொடுத்து வைக்காதவர்கள்...!

    ReplyDelete
  6. கனமான வரிகள். கனக்க வைத்த வரிகள்.

    ReplyDelete
  7. அருமையான வரிகளுடன் நல்ல கவிதை...

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...