இன்னும் சில மணி நேரங்களில் எங்கள் குடும்பத்தின் புது வரவை வரவேற்க தயாராய் எல்லோரும் ஆவலாய் காத்திருந்தோம். என் தங்கை மட்டும் கொஞ்சம் டென்ஷனாய் மேடிட்ட வயிற்றை தடவியபடி கணவர் அருணுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்தாள். அவளை ஆசுவாசப்படுத்தியபடி முதுகில் ஆதரவாய் தடவிக் கொடுத்து இன்னும் கொஞ்சம் நடக்க வைத்தார். தங்கையை லேபர் ரூமிற்கு அழைத்து செல்லும் வரை உடன் இருந்தேன். முந்தைய நாளின் களைப்பும் சேர்ந்து கொள்ள சுமார் பதினோரு மணிக்கு வீட்டிற்கு சென்றேன். சற்று கண்ணயர்ந்த போதும் புதிதாய் பிறக்கப் போகும் அந்த சிசுவை காணும் ஆவலில் உறக்கம் பிடிபட மறுத்தது. அதிகாலையில் அருண் செல்பேசியில் விளித்து தங்கைக்கு ஓர் இராஜகுமாரி பிறந்திருப்பதாய் சொல்ல உற்சாகம் கரைபுரண்டோட மருத்துவமனை நோக்கி விக்கியையும் (Vignesh) அழைத்துக் கொண்டு பறந்தேன்.
அந்த மென்மையான பிஞ்சு விரல்களை என் கைகளில் பிடித்தபோது தன் பொக்கை வாய் கொண்டு மெலிதாய் ஒரு புன்னகை செய்தாள் அந்த குட்டித் தேவதை. இப்போதுதான் நிகழ்ந்தது போலிருக்கிறது. ஆனால் இதோ என்று எங்க வீட்டு குட்டி இராஜகுமாரிக்கு Star Birthday. அன்பு செல்லத்திற்கு இந்த மாம்ஸின் பிறந்த நாள் வாழ்த்துகள்! Happi Bday Sanaa!
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteஎனது வாழ்த்தையும் நான் சொன்னதாக பேபியிடம் சொல்லி விடுங்கள் நண்பரே...
ReplyDeleteஎங்கள் வாழ்த்துகளையும் குழந்தையிடம் சொல்லி விடுங்கள் ஆனந்த்.
ReplyDeleteஉங்கள் வீட்டு ராஜகுமாரி சனாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 🎁🎊🎉🎈
ReplyDeleteஇனிய நினைவுகளின் பதிவு அருமை.
எனது வாழ்த்துக்களையும் சனாவின் சின்னஞ்சிறு காதில் சொல்லிவிடுங்கள்
ReplyDeleteஇனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்திய அனைவருக்கும் நன்றி
ReplyDeleteஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteகுழந்தை சனாவிற்கு எனது வாழ்த்துகளும்.....
ReplyDelete