Friday, April 10, 2015

ஷைனிங் ஸ்டாரும் 600D யும்..!

எச்சரிக்கை: புகைப்படம் பிடித்தல் இணையத்துக்கு கேடு!


                     இதுவரை எப்போதாவது நம்ம ஷைனிங் ஸ்டார் புகைப்படம் எடுக்கையில் அதில் வரும் பிம்பமாகும் வாய்ப்பு பெற்றிருக்கிறீர்களா? அவர் புகைப்படங்களின் ஓரத்தில் எட்டிப் பார்க்கும் வாய்ப்பாவது கிட்டியிருக்கிறதா? அட, அவர் புகைப்படம் எடுக்கையில் அந்த வழியாகவாவது  நீங்கள் கடந்து போயிருக்கிறீங்களா? இல்லை என்பது மட்டும் உங்கள் பதிலாக இருந்துவிட்டால் நீங்கள் ஒரு நல்ல சுகானுபவத்தை இழந்து விட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்!  தட்ஸ் ஒக்கே..! பரவாயில்லை, அட்லீஸ்ட் இந்த பதிவை படிப்பதால் அந்த அற்புத உணர்வை கொஞ்சம் சுவாசித்துப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது என்று நீங்கள் சந்தோஷித்துக் கொள்ளலாம்.                        புகைப்படம் எடுத்தல் என்பது ஒரு பொழுது போக்கான விஷயமாக பார்த்துக் கொண்டிருந்த எனக்கு அது ஒரு சாதாரண எலக்ட்ரானிக் கருவியல்ல, இராமனின் சிவதணுசு போல்,  கர்ணனின் கவச குண்டலம் போல் என உணர்ந்தது அதை ஷைனிங் ஸ்டைலாக கழுத்தில் மாட்டியிருந்த போது தான். மண்ணில் மடியப்போகும் மனிதர்களைத்தான் புகைப்படம் பிடிக்க வேண்டும் என்றில்லை,  காதலி மடித்து வைத்த கைக்குட்டையை கூட படமெடுக்கலாம் என்று அவரிடமிருந்து  ஒரு பாடமே கற்றுக் கொண்டேன். அவரிடம் நான் 'ஏலகைவனாய்' கற்றுக் கொண்ட சில அரிய வகை டெக்னிக்குகளை நண்பர்களாகிய உங்களோடும் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

                         

                        புகைப்படம் எடுக்கும் போது முக்கியமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று 'காமிரா ஆங்கிள்' (camera angle). ஒரு பொருளை சற்று சாய்வாக புகைப்படம் எடுக்க வேண்டுமென்றால் நாமும் அதே அளவு சாய்மானத்தில் (angle) நின்றபடியே தான் எடுக்க வேண்டும். காமிரா எப்போதும் சாய்ந்திருக்கக் கூடாது. லைட்டிங் சரியாக இருக்கிறதா என முப்பது செகண்டுகளுக்கு ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளுதல் நலம்.                           இரண்டாவது Focus, நாம் எடுக்க வேண்டிய ஆட்களை அல்லது பொருட்களை சுமார் இரண்டு நிமிடமாவது குறிபார்க்க வேண்டும். இந்த டெக்னிக்  ஆரம்ப நாட்களில் எளிதாக யாருக்கும் கைவசப்படாது. கொஞ்ச நாட்கள் ஷைனிங்கை உன்னிப்பாக கவனித்தும் பின்னர் தனியே முயற்சி செய்து அழகான புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். (புகைப்படம் எடுக்க நீண்ட நேரம் ஆகிறதே என்று எதிரில் இருக்கும் உங்கள் நண்பர் புலம்பினால் அவருக்கு போட்டோகிராபி பற்றி ஒன்றும் தெரியவில்லை என்று அர்த்தம் கொள்க!)

                   

                           மூன்றாவது மற்றும் முக்கியமான குறிப்பு இது. எதிரில் பொறுமையுடன் போஸ் கொடுத்து நிற்பவர்களுக்கு நீங்கள் நிஜமாவே போட்டோ எடுக்கிறீங்களா இல்லையா என்பது கடைசி வரை தெரியக் கூடாது. 'ஒன் மோர்' எனும் வார்த்தையை அடிக்கடி உபயோகப் படுத்திக் கொள்வதன் மூலம் அவர்களை எளிதாக ஏமாற்றலாம். புகைப்படம் எடுத்து முடித்த பின் உடனே அவர்களுக்கு படங்களை மறந்தும் காட்டிவிடக் கூடாது. 'பேஸ்புக் ல அப்லோட் பண்றேன், பாத்துக்குங்க பாஸ்' என்று சமாதானப் படுத்திவிட வேண்டும்.

                              அப்புறம் ஆற அமர இரண்டு மூன்று மாதங்கள் கழித்து நன்றாக வந்திருக்கும் புகைப்படங்களை மட்டும் அப்லோட் செய்யவும். அவ்வளவு நாட்களுக்கு பிறகு கிடைச்சதே இலாபம் என்ற நோக்கில் நண்பர்கள் பழைய கணக்குகள் ஒன்றையும் நினைவில் வைத்திருக்க மாட்டார்கள். இதில் கூறிய ஒவ்வொரு விதிகளையும் சரியாக பின்பற்றினால் நீங்களும் ஷைனிங் ஸ்டார் போல் அழகான புகைப்படங்கள் எடுக்கலாம். முயன்றால் முடியாதது எதுவுமில்லை நண்பர்களே!!16 comments:

 1. ஷைனிங் ஸ்டார் புகைப்படம் எடுக்கையில் அதில் வரும் பிம்பமாகும் வாய்ப்பு எனக்கு கிட்டவில்லை :( ஆனால் இந்த பதிவின் மூலம் அந்த அற்புத உணர்வை கொஞ்சம் சுவாசித்துப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியதில் மகிழ்ச்சி :) அவரின் அரிய நுணுக்கங்களை அறிந்து கொண்டதிலும் மகிழ்ச்சி ;) !!!!நன்றி ஆவி !!!!

  ReplyDelete
  Replies
  1. ஹஹஹா.. எல்லா புகழும் ஷைனிங்கிற்கே!!

   Delete
 2. இதுல இம்பூட்டு டெக்னிக்கு கீதா...? யப்பா.... ஆவியாரு கேமராவ எடுக்கறப்ப நான் கத்துகிட்டதவிட இது சூப்பராக் கீதே.

  ReplyDelete
  Replies
  1. ஹஹஹா.. இன்னும் சில டெக்னிக்குகளை மக்கள் நலன் கருதி எழுதாம விட்டுட்டன்..! ;)

   Delete
 3. இத்தனை நாட்களாக இந்த நுணுக்கங்கள் தெரியாமல் அல்லல்பட்டுவிட்டேன்.புரிய வைத்தமைக்கு நன்றி !!ஒ.ந.வுக்கும்!

  ReplyDelete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. இவ்வளவு சமாச்சாரம் இருக்கா ஆவி!

  ReplyDelete
 6. என்னா டெக்னிக்கு....!

  ReplyDelete
 7. செம டெக்னிக்ஸ்.....

  நானும் சில யுத்திகள் கற்றுக் கொண்டேன்....

  ReplyDelete
 8. பொறுமை திலகமா மாறனும்ன்னு சொல்றீங்க...!

  ReplyDelete
 9. கேமரா ஆங்கிளுக்கு நாம் சாய்ந்து கொள்ள வேண்டும் என்பது மிகவும் முக்கியமான எல்லோரும் அறிந்திராத ஒரு நல்ல டெக்னிக். இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்

  ReplyDelete
 10. Vaalthukal. en photography paathu konjam Advise koduga. qg

  ReplyDelete
 11. ஹஹஹஹஹஹ்......ஆவி! ஆனாலும் உங்களுக்குக் கொஞ்சம் குசும்பு கூடுதல்தான்....ஷைனிங்க இந்த அளவுக்கு.....கிரிக்கெட் பாலத் தேய்க்கறா மாதிரி தேச்சு ஷைன் பண்ண வைச்சுட்டீங்களே!

  ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...