Thursday, April 2, 2015

கொம்பன்.. 100 DAYS OF LOVE

கொம்பன்



                      குட்டிப்புலி படத்துல இருந்த மைனஸ் எல்லாத்தையும் சரி பண்ணி அதே கதையை பட்டி டிங்கரிங் பார்த்து இயக்கியிருக்கிறார் இயக்குனர் முத்தையா. கார்த்திக்கு கிராமத்து வேடம் இயல்பாக அமைந்திருக்கிறது. மெட்ராஸ் திரைப்படத்திற்கு பிறகு வெற்றிக்காக இன்னும் நிறைய உழைத்திருப்பது தெரிகிறது. லக்ஷ்மி மேனன் கதாப்பாத்திரம் இன்னும் கொஞ்சம் நீட்டியிருக்கலாம். ராஜ்கிரண் வேட்டியை மடித்துக் கட்டிய போதும் அமைதியாக வருவது தமிழ் சினிமாவுக்கு புதுசு. அதுவும் மாப்பிள்ளை கார்த்தியிடம் பணிந்து போகும் கதாப்பாத்திரத்தில் அசத்துகிறார்.

                         மாமாவாக வரும் தம்பி ராமையா, வில்லர்கள்,  கோவை சரளா  மற்றும் கருணாஸ் ஆகியோருடைய கதாப்பாத்திரங்கள் அழுத்தமாக இல்லாதது படத்தின் மைனஸ். மேலும் ஜீ.வி பிரகாஷின் இசை சொல்லிக் கொள்ளும்படி இல்லை. 'கருப்பு நிறத்தழகி'' பாடலை தவிர வேறெதுவும் மனதில் நிற்கவில்லை. உன்னிப்பாக கவனித்தால் சாதியின் சுவடுகள் ஆங்காங்கே தென்பட்ட போதும், சாதி குறித்த சர்ச்சை படத்தின் பிரமோஷனுக்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறது.

ப்ளஸ் - கார்த்தி, ராஜ்கிரண், ஆக்க்ஷன் காட்சிகள்
மைனஸ் -  பின்னணி இசை, வலுவற்ற இரண்டாம் பகுதி

                                                                  ***



100 Days Of Love




                         துல்கர் சல்மான் கேரளத்தின் நம்பிக்கை நட்சத்திரமாய் வளர்ந்து வருவதற்கு  அவர் தேர்வு செய்யும் கதாப்பாதிரங்களே சாட்சி. தன்னுடைய மிக மோசமான ஒரு நாளில் தான் சந்தித்த பெயர் தெரியாத ஒரு பெண்ணை தேடிக் கண்டுபிடித்து நூறு நாட்களில் காதல் செய்வது தான் கதை. அதில் வரும் பிரச்சனைகள், சுவாரஸ்யங்கள் தான் படத்தை நகர்த்திச் செல்கின்றது.

                           அரதப் பழசான இந்த கதைக்கு வலு சேர்ப்பது மூன்றே மூன்று பேர் நாயகன் துல்கர், நாயகி நித்யா மேனன் மற்றும் நண்பனாக வரும் சேகர் மேனன். காதல் தோல்வியில் குடித்துவிட்டு தன் முன்னாள் காதலியை திட்டி ஒரு FB ஸ்டேட்டஸ் போடுவதும், தான் தேடும் பெண் யாரென தெரிந்ததும் 'எஸ்' ஆவதும் என நடிப்பில் வெரைட்டி காண்பிக்கிறார் துல்கர். நித்யா மேனன், இவருடைய மலையாள உச்சரிப்பை நம்ம ஸ்ருதியின் தமிழ் உச்சரிப்போடு ஒப்பிடலாம். மற்றபடி பணக்கார தோழியாய் வந்து போகிறார். துல்கர் குடித்துவிட்டு இவர் வீட்டுக்கு வரும் காட்சியில் நல்ல நடிப்பு. நண்பராக வரும் சேகர் மேனனின் உடல் பருமன் உறுத்தலாக தெரிந்தாலும், அதை தன் இலகுவான நடிப்பில் கடந்து போக செய்கிறார். க்ளீஷேவான முடிவு என்ற போதும் ரசிக்க முடிகிறது.

ப்ளஸ் - துல்கர், சேகர், நித்யா, இசை
மைனஸ் - பின்பாதி இழுவை,

                                                                    ***

7 comments:

  1. வணக்கம்
    தங்களின் பார்வையில் விமர்சனத்தை சொல்லிய விதம் நன்று... நிச்சயம் பார்க்கிறோம் படத்தை. பகிர்வுக்கு நன்றி த.ம2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. பாழாப் போனது பிரமோஷனுக்காவது பயன்படுதே...!

    ReplyDelete
  3. அப்படியே கார்த்திக்குக்கு ஒரு அட்வைஸ் " ஏன் இப்படி ஒரே காரெக்டரா பண்றீங்க கொஞ்சம் மாத்துங்கப்பா ரூட்ட" . தமிழ் திரைப்படக்காரர்களுக்கு..கொஞ்சம் அண்டை மாநிலமான கேரளாவை எட்டிப் பாருங்கள் காப்பி அடிக்க அல்ல....அவங்கள மாதிரி கொஞ்சம் வித்தியாசமான கதைகளை படமா எடுக்களேன் அப்படினுதான்

    துல்கர் படம் பார்க்கணும். துல்கருக்காகவே!

    ReplyDelete
  4. அருமை.துணைமுதல்வர் எப்படி உள்ளது?

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...