Saturday, November 8, 2014

ஆவி டாக்கீஸ் - இன்டெர்ஸ்டெல்லர் (Interstellar)


இன்ட்ரோ  
                              சயின்ஸ் பிக்க்ஷன்களின் வரிசையில் வந்திருக்கும் மற்றொரு படம் என்று ஒற்றை வரியில் சொல்லிவிட்டு போகக்கூடிய படமாய் நிச்சயம் இது இல்லை. தவிர கிறிஸ்டோபர் நோலன் எனும் மந்திரச் சொல் நிச்சயம் மாயம் செய்திருக்கிறது. விண்வெளிப் பயணம் என்ற அகன்ற வெளிக்குள் அப்பா-மகள் சென்டிமென்ட், விவசாயத்தின் வேதனைகள், சுய எள்ளல்கள் போன்றவற்றையும் கலந்து காக்டெயிலாக தந்த நோலனுக்கு ஒரு சல்யுட்..!


                          




கதை
                         
                           71 சதவிகிதம் நீராலும் 29 சதவிதிகம் நிலத்தாலும் சூழப்பட்ட இந்த பூமிதான் மனிதன் வாழ்வதற்காக படைக்கப்பட்டதா? இல்லை வேறேதும் நிலம் நீர் மற்றும் உயிர் வாழதகுந்த ஒரு  கிரகத்தில் வாழ்ந்திருக்க வேண்டியவர்களா இந்த மனிதர்கள் என்று தீர்க்கமாக யோசிக்க வேண்டிய உட்கருத்தை பிஸிக்ஸும் பீலிங்ஸும் ஒரு சேர கற்பனை கலந்து சொல்வதுதான் கதை. சில நாட்கள் முன் வந்த கிராவிட்டி, எலிசியம் போன்ற படங்களை தொடர்ந்து வந்திருக்கும் இந்தப்படம் ஹாலிவுட் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்வதையே காட்டுகிறது. ( இன்னமும் பேஸ் வாய்ஸில் 'நான்தாண்டா கொமாரு' என்று படமெடுக்கும் கோலிவுட் இயக்குனர்கள் இதை கவனிப்பார்களா?)
                             
        
                                                                                                                                            ஆக்க்ஷன் 
                           நாயகன் மேத்யு பல பரிமாணங்களில் ஜொலிக்கிறார், நோலன் தன் ஆஸ்தான நாயகன் கிறிஸ்டியன் பேல்லை விடுத்து இவரை தேர்வு செய்ததை இவர் சிறப்பான நடிப்பின் மூலம் நியாயப்படுத்தியிருக்கிறார். மெக்கன்ஸி பாய் (மர்ப்ப்) குழந்தை நட்சத்திரம் என்பதையும் தாண்டி மனதை வருடுகிறார். அன் ஹேத்வே தனக்கு கிடைத்த வாய்ப்பை சரிவர பயன்படுத்தியிருக்கிறார்.  சிறிது நேரமே வந்தாலும் மேட் டேமன் கலக்கல் நடிப்பு. தான் ஒரு பெரிய ஹீரோ என்கிற பந்தா இல்லாமல் ஒரு நெகடிவ் கேரக்டரில் நடிக்க சம்மதித்தற்காகவே இவரை பாராட்ட வேண்டும்.

                          கேஸ் மற்றும் டார்ஸ்  ரோபோட்டுக்கு குரல் கொடுத்தவர்கள் சிறப்பான முறையில் செய்திருக்கிறார்கள்.
                               

இசை-இயக்கம்
                           நோலனின் படங்களுக்கு பக்க பலமாக இருக்கும் ஹன்ஸ் ஜிம்மரின் இசை இதில் அதகளம் செய்திருக்கிறது. விண்வெளிக்கு சென்றவர்களுடன் நாமும் பயணித்தது போன்ற உணர்வை கொடுத்தது ஹன்சின் இசை. நல்ல இசைக்கட்டமைப்பு உள்ள திரையரங்கில் பார்க்க ஆவி டாக்கீஸ் பரிந்துரைக்கிறது. (பெங்களூர் மற்றும் வெளியூர் வாசிகள் முடிந்தால் ஐ-மேக்ஸில் பாருங்கள்)
  
                           நோலனின் படங்கள் முதல் காணலில் புரியாது என்ற வாதங்கள் ஒவ்வொரு முறையும் வைக்கப்படும். ஆனால் சிக்கலான இந்த கதையையும் எளியவர்களுக்கும் புரியும் வண்ணம் திரைக்கதை அமைத்து வெற்றி காண்கிறார் நோலன். கிளைமாக்ஸ் புரிதலுக்காக வைக்கப்பட்ட Ghost காட்சிகள் சிறு குழந்தைகளும் புரிந்து கொள்ளும் வண்ணம் உள்ளது.

                                      ஆவிக்கு பிடித்த பாடல்/ காட்சி 
                                'ப்ளாக் ஹோல்' வழியாக விண்வெளி ஓடம் பயணிக்கும் காட்சி மயிர்கூச்செறிய வைக்கும் அருமையான காட்சி. குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க அருமையான படம்.

                


Aavee's Comments -  A Journey to Space!

8 comments:

  1. நல்லதொரு அலசல் நண்பா....

    ReplyDelete
  2. ஆலிவுட் படத்தில் கூட ஆவிக்கு பிடித்த பாடல்/காட்சி வைக்கும் உங்க நேர்மை புடிச்சிருக்கு ;-)

    ReplyDelete
  3. இன்னைக்குத்தான் சேலத்துல ரிலிஸ்ணா ! ஈவ்னிங் ஷோதான் புக் பண்ணிருக்கேன் . நான் இந்த வருஷத்துல அதிகமா எதிர்பார்த்த படம் இதுதான் .

    நோலனோட ஆஸ்தான ஹீரோனு கிறிஸ்டியன்பேல சொல்லமுடியாது . பேட்மேன் ட்ரையாலஜி தவிர்த்து பார்த்த , தி பிரஸ்டீஜ் மட்டுமே பேல் நடிச்சிருக்கார் . மைக்கேல் கைன் வேனும்னா , நோலனோட ஆஸ்தான நடிகர்னு தாராளமா சொல்லளாம் .

    ReplyDelete
  4. //
    @சீனு
    //ஆலிவுட் படத்தில் கூட ஆவிக்கு பிடித்த பாடல்/காட்சி வைக்கும் உங்க நேர்மை புடிச்சிருக்கு ;-)//

    ஏன்? ஆலிவுட் படத்துல ஹாப்பி பர்த்டே பாடுற சீனே வராதா? படுவா.

    ReplyDelete
  5. சிறந்த விமர்சனம் நண்பரே...

    ReplyDelete
  6. நன்றி நண்பரே அவசியம் பார்க்கிறேன்
    தம 3

    ReplyDelete
  7. வணக்கம்,ஆ.வி.சார்!நலமா?///சிக்கென்று அழகான விமர்சனம்.நன்றி!

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...