Monday, December 13, 2010

தி டூரிஸ்ட் - திரை விமர்சனம்


                              
                                    கதாநாயகி கதாநாயகன், பணக்கார வில்லன், துரத்தும் போலிஸ், இடையிடையே பாடல், கொஞ்சம் காதல் இப்படி தமிழில் பலமுறை பார்த்து அலுத்துப் போன கதை, சிறு சிறு திருப்பங்களுடன்(?) அமெரிக்க அழகி ஏஞ்சலினா ஜோலி மற்றும் ஜானி டெப் நடித்திருக்கும் இந்த படம்தான் "தி டூரிஸ்ட்".

                                   இரண்டு வரிகளில் அடங்கி விடக்கூடிய கதை. வெனிஸ் நகரில் உள்ள ஒரு பெரும் பணக்காரனிடமிருந்து  (வில்லன்)  எழுநூறு மில்லியன் டாலர் கொள்ளையடித்த அலெக்ஸாண்டர் பியர்ஸ் என்பவனைத் தேடி ஸ்காட்லாந்து போலிஸ் தெருவெங்கும் அலைகிறது. அவனை இதற்கு முன்னர் யாரும் பார்த்தது கிடையாது. (பணத்தை பறிகுடுத்த வில்லன் மற்றும் மனதை பறிகொடுத்த நாயகி உள்பட). இந்த சூழ்நிலையில் அவர்களுக்கு இருக்கும் ஒரே துருப்புச் சீட்டு பியர்சின் காதலி எலிஸ் (ஏஞ்சலினா ஜோலி) மட்டுமே!! அவளை சந்திக்கும் எல்லோரையும் கைது செய்து விசாரிக்கும் போலிஸ்  ஒவ்வொரு முறையும் பல்பை வாங்கிக் கொள்கிறார்கள்.

                                      
                                      போலிசை குழப்புவதற்காக தன் காதலி எலிசிடம் தன் போன்ற உயரமுள்ள ஒருவனை தேர்ந்தடுத்து அவனுடன் நெருங்கி பழகுமாறு கூறுகிறான் அலெக்ஸ். அப்படி அவள் தேர்ந்தடுக்கும் நபர் அமெரிக்காவிலிருந்து வரும் ஒரு கல்லூரி ஆசிரியரான "ப்ரான்க்" (ஜானி டெப் ). எலிசின் அழகில் மயங்கிய பிரான்க் அவளுடன் வெனிஸ் செல்ல, வம்பில் மாட்டிக் கொள்கிறான். அங்கே அவனை போலிஸ் துரத்த, கூடவே வில்லனின் ஆட்களும் துரத்த ஓடி ஓடி வாழ்கையின் எல்லைக்கே ஓடுகிறான்.

                                      இதற்கிடையில் இவன் படும் பாட்டை பார்த்த எலிஸ் அவன்மேல் பரிதாபப் பட அது பின்னர் காதலாக மாறுகிறது. இதற்காக அவள் அவன் காதலனையும் காட்டிக் கொடுக்க துணிகிறாள். ஒரு கட்டத்தில் அவளும் ஸ்காட்லாந்து போலீசில் பணிபுரிகிறாள் என்பது தெரிய வருகிறது. வில்லன் அவளைக் கடத்தி அவள் மூலம் அலெக்சை பிடிக்க திட்டமிடுகிறான். போலிஸ் அவனை பிடித்தார்களா? எலிஸ் தப்பித்தாளா? பிராங்கின் காதல் என்னவாயிற்று என்பதை வெண் திரையில் காண்க..

                                      
                                       அழகு, அதிரடி இரண்டிலும் வழக்கம் போல் கலக்கி இருக்கும் ஏஞ்சலினா. வித்தியாசமான நடிப்பில் ஜானி டெப். இவர்களுக்கு இடையே இருக்கும் அழகான வேதியியல் (Chemistry ??) படத்திற்கு பெரிய பலம். இது போன்ற கதைகளை நாம் பலமுறை பார்த்துவிட்டதாலும், வில்லன் நம்முடைய நம்பியாரை நினைவு படுத்துவதாலும் கொஞ்சம் அலுக்கிறது. இருந்தாலும் எழில் மிகுந்த வெனிசும், அழகுக்கு அழகு சேர்க்கும் ஏஞ்சலினா ஜோலியும் சினிமா டூரிஸ்டுகளை நிச்சயம் மயங்க வைக்கும்!!!

 4௦ / 100                                    

.

3 comments:

  1. I didn't see it yet...4/100aa? theraadhu pola irukke...hmm...okay okay can see once for Angelina...ha ha

    ReplyDelete
  2. புவனா, அது 40 /100 . படம் ஒரு முறை பார்க்கலாம். வெனிஸ் நகரத்தை இன்னும் அழகாக காட்டி இருக்கிறார்கள்.. மன்மதன் அம்பு படம் கூட வெனிஸ் நகரத்தில் படம் பிடித்திருப்பதாக கேள்வி!!

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...