Friday, December 17, 2010

மேலே ஒரு சூரியன்!!

                            
    
                                            இந்தக் காதல் என்னுள் எப்போது தோன்றியது என்று சரியாக நினைவில் இல்லை. ஆறு மாதக் குழந்தையாய் இருந்த போது அன்னை தன் மடியிலிருத்தி அடுத்த வீட்டுப் பெண்குழந்தையைக் காட்டி சோறூட்டிய போதா? வளரும் வயதில் ராமராஜன் மற்றும் ராஜ்கிரணின் படங்களைப் பார்த்த போதா? வாலிபப் பருவத்தில் அழகே வடிவான அவள் தோற்றத்தைப் பார்த்தா? தும்பைப் பூவை தோற்கடிக்கும் அந்த வெள்ளை நிறத்தைப் பார்த்தா? எப்போது இந்தக் காதல் என்னுள் தோன்றியதென்று சரியாக நினைவில் இல்லை.
                          
                                            என்னங்க, டைட்டிலுக்கும், படத்திற்கும் சம்பந்தம் இல்லாம ஏதோ எழுதிகிட்டு இருக்கேன்னு பாக்கறீங்களா? அந்த விண்ணுக்கும் மண்ணுக்குமே சம்பந்தம் உண்டுன்னு "சின்னக் கவுண்டர்" " சொல்லி இருக்கும் போது இதுகளுக்குள்ள சம்பந்தம் இல்லாம போயிடுமா?? ( சரி.. சரி.. டென்சன் ஆவாதீங்க!!! விஷயத்துக்கு வர்றேன்)
                                          முதல் பத்தியில் நான் எழுதியது என் எதிர் வீட்டு கமலாவைப் பற்றியோ, கல்லூரியில் என்னுடன் படித்த விமலாவைப் பற்றியோ அல்ல. காய்கறிகள் ஏதுமில்லாத போதும் தாய்மார்களுக்கு ஆபத்பாந்தவனாய் இருப்பது, எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்ததும் ஏழைச் சிறுவர்களுக்கு கொடுத்தது.. Polymorphism எனப்படும் ஓருடல் பல வடிவம் எடுக்கும் திறன் படைத்த (?!!!) நம்ம முட்டையப் பத்தி தாங்க எழுதினேன். (இதுக்கும் சூரியனுக்கும் என்ன சம்பந்தம்னு நீங்க  கேக்கறது புரியுது, சொல்றேன்!!)
                            
                                        நல்லா படிச்சும் முட்டை வாங்கனும்கிற ஒரே காரணத்துக்காக பரிட்சையில வெள்ளைத் தாளை மடிச்சு கொடுத்துட்டு வந்தவங்க.. நண்பர்கள திட்ரதுன்னா கூட "ஆப்பாயில்"ன்னு தான் திட்டுவேன்னா பாத்துக்கோங்க. அதென்னமோ தெரியல.. முட்டைய விட்டு நான் விலகிப் போகப் போக அது என்னை நோக்கி நெருங்கி வந்துகிட்டே இருந்தது.. கோவையில் எங்க வீட்டுப் பக்கத்தில் ஒரு கோழிப் பண்ணை இருந்தது.. கல்லூரிக்காக வேற ஊர் போயிருவோம், முட்டைய பிரியப் போறோம்னு நெனச்சா போய் சேந்த ஊர் நாமக்கல். இப்படி முள்ளங்கி, முருங்கக்கா எதுவும் இல்லேன்னாலும் முட்டை இருந்தாப் போதும்னு சிம்பிளா வாழ்ந்துட்டு இருந்த என் வாழ்க்கையில வில்லனா இந்த அமெரிக்கா வரும்னு கொஞ்சம் கூட நெனச்சு பாக்கல.

                                      சமையல் செஞ்சு எரிவாயுவ வீணாக்க வேண்டாமேன்னு (?!!)ஹோட்டல்லயே சாப்பிட்டு பழகிய எனக்கு இங்க அமெரிக்காவுல எந்த ஹோட்டலிலும்  முட்டை கிடைக்காதது பெரிய ஏமாற்றமாக இருந்தது.. இந்திய உணவகத்தில் கூட பிரியாணியில் முட்டை இல்லாமதாங்க கொடுத்தாங்க..தேடி தேடி பார்த்ததுல சில உணவகத்துல "Scrambled Eggs " அப்புடீன்னு உப்பும் இல்லாம, ஓரப்பும் இல்லாம முட்டைய கொடுத்தாங்க. அதுவும் எனக்குப் பிடிச்ச ஆப்பாயில் எங்கயுமே கிடைக்கல. (குவார்டர் கட்டிங் கிடைக்காத சிவா மாதிரி தவிச்சு போயிட்டங்க)

                                       ஆறரை வருடங்களுக்கு பிறகு ஒரு நாள் ஹவாய் தீவுக்கு போன போது எதேச்சையா இந்த டென்னிஸ் உணவகத்துக்குள்ள போனேன். மெனு கார்ட பார்த்த எனக்கு 1000 வாட்ஸ் பல்பு. இருக்காதா பின்ன, அட்டை படத்துலயே ஆப்பாயில்.
சர்வர கூப்பிட்டு எனக்கு "Half boil " வேணும் என்று கேட்டேன். அவனுக்கு சத்தியமாய் நான் கேட்டது புரியவில்லை. நீண்ட விவாதத்துக்குப் பின் மெனு கார்டில் இருந்த ஆப்பாயிலை தொட்டுக் காட்டி எனக்கு அது வேண்டுமென்று சொன்னேன். அவனும் கொண்டு வந்து வைத்துவிட்டு அதன் பெயர் "Sunny side up" என்று சொல்லிவிட்டு சென்றான்.  மேல்நோக்கிய சூரியனை உள்நாக்கில் படாமல் உள்ளே தள்ளிய போது என் கால்கள் பூலோகத்தில் இல்லை..

.

18 comments:

 1. ஒரு முட்டைக்கு இந்த பாடா ... பாவமாக இருக்கிறது ...
  தங்களுக்கு எப்பொழுதும் முட்டை கிடைக்க எனது வாழ்த்துக்கள் !!

  ReplyDelete
 2. ஆஹா கோர்ட்டார் கட்டிங் படம் பார்த்தது போல இருக்குதே . நல்ல இருக்கு நண்பரே . தொடர்ந்து எழுதுங்கள்

  ReplyDelete
 3. @ ஜானு -
  நன்றி ஜானு!!

  ReplyDelete
 4. @ முனியாண்டி
  நன்றி முனி!!

  ReplyDelete
 5. @செந்தில்
  கதையின் நீளத்தை கருதி சில உண்மைகள் மறைக்கப்பட்டது உண்மைதான்!!! :-)

  ReplyDelete
 6. @பனித்துளி சங்கர்
  நன்றி சங்கர்.. (குவாட்டர் கட்டிங் படம் போல் இந்த கதை அவ்வளவு மொக்கையாக இருந்திருக்காது என நம்புகிறேன்) :-)

  ReplyDelete
 7. //வளரும் வயதில் ராமராஜன் மற்றும் ராஜ்கிரணின் படங்களைப் பார்த்த போதா?//
  என்னாது????????

  //சரி.. சரி.. டென்சன் ஆவாதீங்க!!! //
  ஆஹா...நம்ம ஊரு தமிழ்...கேக்க கேக்க காதில் தேன் வந்து பாயுதே... ஹா ஹா

  //மேல்நோக்கிய சூரியனை உள்நாக்கில் படாமல் உள்ளே தள்ளிய போது என் கால்கள் பூலோகத்தில் இல்லை//
  என்ன கொடும ஆனந்த் இது? ஹா ஹா அஹ... உங்க முட்டை புராணம் சூப்பர்... ராமன் தேடிய சீதை போல் "முட்டை தேடிய ஆனந்த்" என வரலாற்றில் உங்கள் பெயர் பதியப்படும்... ஹா ஹா ஹா

  ReplyDelete
 8. @ வைகறை
  நன்றி கவிஞர் வைகறை அவர்களே! உங்களுக்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. @ அப்பாவி தங்கமணி
  ரொம்ப நன்றிங்க. ஆஸ்கர் அவார்ட் கிடைச்சுருந்தா கூட இவ்வளவு சந்தோசப் பட்டிருக்க மாட்டேன்.

  ReplyDelete
 10. அரைவேக்காட்டுத்தனமா ஒரு ஹாஃப் பாயிலுக்கு அலைஞ்சிருக்கே! பேட் பாய்!

  ReplyDelete
  Replies
  1. ஹஹஹா.. அது ஒரு பொற்காலம் அக்கா..

   Delete
 11. அன்பின் ஆ.வி - முட்டைக்குப் படாத பாடு பட்டிருக்கீங்க போல - தினந்தினம் மூணு வேளையும் முட்ட கிடைக்க நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. உங்க வாழ்த்துகள் பலிக்கட்டும்.. நன்றி ஐயா..

   Delete
 12. அன்பின் கோவை ஆவி - சோறூட்டும் போது அம்மா பக்கத்து வுட்டுப் பொன்ணக் காட்டியே சோரூட்டினாங்களா - பலே பலே - அப்படியே அப்பவே ஆரம்பிச்சாச்சா - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 13. ஹஹஹா.. நன்றி ஐயா..

  ReplyDelete
 14. இந்த முட்டையை வைத்து பல பதிவுகள் எழுதலாம்.. முட்டையை உடைத்து அப்படியே சாப்பிடலாம், அவித்து வெள்ளை மற்றும் மஞ்சல் கரு தனிதனியாக சாப்பிடலாம், பொடிமாஸ் செய்யலாம், பிரியானியில் போடலாம், பிரைட் ரைஸ்சில் உடைத்து ஊற்றலாம், எத்தனை பரிமாணங்கள்....

  ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...