Friday, December 24, 2010

மன்மதன் அம்பு - கமலின் பார்வையில்

                        

                           கலைஞானியின் பேட்டி என்றால் சும்மாவா? கவிஞர் அறிவுமணி தன்னுடைய "எதையோ எழுதறேன் " ப்ளாகிற்காக கமலிடம் பேட்டி எடுக்க ஆசைப்படுவதாக கூற, கமலும் சம்மதிக்க உற்சாகத்துடன் கிளம்பிய அறிவுமணி ஆழ்வார்பேட்டையில் கமல் வீட்டின் வரவேற்பறையில்...
                        
                           "வணக்கம், மிஸ்டர் அறிவுமணி!!" என்றபடி உள்ளே நுழைந்த கமல் அறிவுமணிக்கு எதிரில் இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தார்.
அறிவுமணி :  " வணக்கம் சார்.. என்னைப் போல சாதாரண மனிதனுக்கும் பேட்டி கொடுக்க ஒத்துக் கொண்டதற்கு நன்றி."
கமல் :                " நானும் உங்களைப் போல ஒரு சாதாரண மனுஷன் தான்..என்ன, நான் சினிமாவுல இருக்கேன். நீங்க இல்ல அவ்வளவுதான்"
அறிவுமணி :  " மன்மதன் அம்பு படத்துல இன்னும் இளமையா தெரியரீங்கலே, எப்படி?
கமல்:                " நீங்க இந்த மாதிரி சொல்லும் பொய்களை நம்பி விடுகிறேன், அதனாலதான்!
அறிவுமணி:  " இந்த படத்தை எல்லா தரப்பு மக்களும், குறிப்பா குழந்தைகள் பாக்க முடியாது போலிருக்கே.."
கமல்:               " இந்த காலத்து பசங்க எல்லாம் படு சுட்டி. இதெல்லாம் அவங்களுக்கு நாம கத்து தர வேண்டியது இல்லை. தவிர, இந்த மாதிரி இன்னும் எவ்வளவு காலத்துக்கு சொல்லிட்டு இருக்கப் போகிறோம். எத்தனையோ வன்முறைகளை எல்லாம் பசங்க சினிமாவின் மூலம் கத்துக்கறாங்க. நல்ல விஷயம் கெட்ட விஷயம் ரெண்டும் கொட்டிக் கிடக்கு. நல்லதை மட்டும் எடுக்க பெற்றோர் தான் பிள்ளைங்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
அறிவுமணி :  " இது ஒரு முழு நீள நகைச்சுவைப் படம்னு சொன்னாங்களே?"
கமல்:                " அப்படியா, யாரு சொன்னது? "
அறிவுமணி:   " த்ரிஷாவுடன் முதல் படம். அது பற்றி.."
கமல் :               " வெல், கதைக்கு தேவையான அளவு வந்து போயிருக்காங்க.  அவங்க மட்டும் இல்ல, மாதவன், சங்கீதா, ரமேஷ் அர்விந்த், ஊர்வசி , உஷா உதூப் இப்படி ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே கதையின் ஓட்டத்திற்கு உதவியிருக்காங்க..
அறிவுமணி : "ஒ, இந்த படத்தின் கதை, திரைக்க்கதை, வசனம் எல்லாமே.. நீங்க தான் எழுதியிருக்கீங்கன்னு போட்டிருக்கு, ஆனால் இந்த கதை ஏற்கனவே வந்த "There's Something about Mary" ங்கிற படத்தின் தழுவல்னு பேசிக்கறாங்களே!!
கமல் :               " சொல்றவங்க சொல்லிகிட்டே தான் இருப்பாங்க.. அதெல்லாம் பார்த்திருந்தா நமக்கு கம்ப ராமாயணம் கிடைச்சிருக்காது, லேட்டஸ்டா ஒரு எந்திரனும் கிடைச்சிருக்காது"
அறிவுமணி :  " அந்த சர்ச்சைக்குரிய பாடலைப் பற்றி.."
கமல்:                " நான் எது எழுதினாலும் சர்ச்சைக்குள்ளாயிடுது. இப்படித்தான் குணாவில் கண்மணி அன்போட ன்னு நான் எழுதின பாட்டைக் கேட்டுட்டு கண்மணின்ற பொண்ணோட வீட்டுக்காரர் கேஸ் போட்டுட்டார்"
அறிவுமணி :  " ம்ம்.. பாவம் சார் நீங்க.. அதுசரி. அவ்வளவு செலவு பண்ணி படத்தை பாரிஸ், வெனிஸ் மற்றும் கப்பலில் எல்லாம் எடுத்திருக்கிறீர்களே.. இதே கதைய ஏன் பாரிஸ் கார்னரிலோ, நேப்பியர் பிரிட்ஜ் கிட்டயோ ஏடுத்திருக்கலாமே?"
கமல் :                " ஓசில ஒரு உல்லாசப் பயணம் போக சந்தர்ப்பம் கிடைக்கும் போது கூவத்தில் படமெடுப்பது என்னைப் பொறுத்தவரை முட்டாள்தனம் தான்.
அறிவுமணி : "சரி, இந்த படம் மூலம் என்ன சொல்ல வர்றீங்க?"
கமல் :               " எல்லாத்திலயும் ஒரு மெசேஜ் எதிர் பார்த்தா எப்படிங்க?"
அறிவுமணி :  " இதுல, நடிகைகள் மோசமானவர்கள் என்பது போல் சித்தரிச்சுருக்கீங்களே?"
கமல் :               " அட, நான் எங்கீங்க நடிகைகள மோசமானவங்கன்னு சொன்னேன். அவங்க நல்லவங்களா இருந்துருக்கலாமேன்னு தானே சொன்னேன்."
அறிவுமணி :  " சரி, இந்த பேட்டி மூலம் மக்களுக்கு ஏதாவது சொல்ல விரும்பறீங்களா?"
கமல் :               " எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் மற்றும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!"

தலைவர் படத்துக்கு விமர்சனமா?  அது நிச்சயம் தேவையில்லை. இந்தப் படத்திற்கு செல்பவர்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள். இந்தப் படத்தில் பெரிய நகைச்சுவயையோ, சண்டைக் காட்சிகளையோ, எதிர்பார்த்து செல்ல வேண்டாம். ஒரு முழு நீள நாடகத்தை விரும்புவர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும்!!

3 comments:

  1. ஆமா ஆமா இந்த படத்துக்கெல்லாம் விமர்சனம் தேவையில்லை. கதையே இல்ல. ஆனா இந்த படத்துக்கு ஒலி வெளியீடு விழாவைப்பார்த்து கொஞ்சம் கூடுதல் எதிர்பார்ப்பு ஆகிருச்சு.

    ReplyDelete
  2. mmm....appuram?

    wow...blog open panninnaa paatu ellam varudhe..kalakkareenga... good... Happy New Year to you and your family

    ReplyDelete
  3. நன்றி புவனா,
    உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...