Friday, July 15, 2016

Blind Date ம் "ஙே" மொமேன்ட்டுகளும்


Blind Date என்பது முன்பின் அறிமுகமில்லாத இருவர் (புகைப்படங்களில் கூட பார்த்திராத) சந்திக்கும் ஒரு நிகழ்வென மேலைநாட்டு கலாச்சாரம் கூறுகிறது.. பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் என்று தொழில்நுட்பம் எங்கோ சென்றுவிட்ட காலத்தில் இதெல்லாம் சாத்தியமா? என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். இன்றும் முன் பின் தெரியாத நபர்களைத் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்தும் கலாச்சாரம் இந்தியாவில் ஆங்காங்கே இருந்து கொண்டு தானே இருக்கிறது இந்தியாவில். அது எல்லாமே இந்த Blind Date வகையைத் தானே சேரும்?



சரி, அதெல்லாம் இருக்கட்டும், நான் கூறவந்தது நான் சென்ற ஒரு Blind Date பற்றி. இந்த Blind Date க்கும் மேற்சொன்ன Blind Date க்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்று உறுதியளித்துக் கொண்டு, புதியதோர் விஷயத்தை மட்டும் தெரிந்து கொள்ளும் ஒரு குழந்தை மனதுடன் மேலே தொடர்வோம். சத்யம் தியேட்டரில் Blind Date என்ற ஒரு Concept இருக்கிறது. இதில் நாம் டிக்கெட் புக் செய்யும் போது மற்ற படங்களுக்கு புக் செய்வது போல ரிசர்வேஷன் செய்தோ, நேரில் சென்றோ டிக்கெட் வாங்கலாம்.

ஒரே வித்தியாசம், அன்று நாம் பார்க்கப் போகும் திரைப்படம் என்னவென்று நமக்கு சுத்தமாகத் தெரியாது. அது எந்த மொழியாக வேண்டுமானாலும் இருக்கும். பழைய படமாக இருக்கலாம், புத்தம் புதிய படமாக இருக்கலாம், அரை மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரம் வரை ஓடலாம். அவை கார்ட்டூன் படங்களாக இருக்கலாம், காமரசம் சொட்டும் படமாக இருக்கலாம். அதற்காக முன்கூட்டியே அவர்கள் 18+ டேக் அளித்து பெரியவர்களுக்கு மட்டும்தான் அனுமதி அளிக்கிறார்கள்.



நீண்ட நாட்களாக இதற்குச் செல்ல வேண்டும் என்று எண்ணி, பல்வேறு காரணங்களால் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இதற்கு செல்ல வேண்டும் என்ற ஆவலே, என்னவென்று தெரியாமல் ஒரு விஷயத்தை எதிர்கொள்ளும் த்ரில் அனுபவத்தை உணர வேண்டித்தான்.இந்த வாரம் வேறு எந்தப் படமும் பார்க்கவில்லை என்பதால் முதலில் Blind Date பார்த்துவிட்டு பின்னர் 'தில்லுக்குத் துட்டு' பார்க்கலாம் என்று முடிவு செய்து, Blind Date புக் செய்துவிட்டு அடுத்த படத்திற்கு டிக்கெட் இருக்கிறதா என்று பார்த்தேன். நிறைய இடங்கள் இருந்த காரணத்தால் நேராக சென்று வாங்கிக் கொள்ளலாம், வீணாக முப்பது ரூபாய் ஆன்லைன் புக்கிங்கிற்கு செலவு செய்வானேன் என்று விட்டுவிட்டேன்.

மாலை அலுவலகம் முடிந்து சத்யம் தியேட்டரில் பார்க்கிங் செய்து விட்டு டிக்கெட் கவுண்டர் சென்றேன். அங்கே கியூவில் நிற்கையில் வேறு படங்கள் என்னென்ன ஓடுகிறது என்று பார்த்தபடி இருந்தேன். அப்போது நள்ளிரவுக் காட்சியிலிருந்து "ICE AGE 5" திரையிடப்படுவதாகக் கூற உடனே மனதை மாற்றிக் கொண்டு தில்லுக்குத் துட்டை புறம் தள்ளிவிட்டு ஐஸ் ஏஜ் புக் செய்துவிட்டு அவசர அவசரமாக தியேட்டருக்குள் நுழைந்தேன்.


அங்கு சென்று அமர்ந்ததும் பல்பு தயாராகக் காத்திருந்தது. அங்கே Blind Date ல்  "ICE AGE 5" திரையிடப்பட்டது. படம் முடியும் வரை என்னை நானே திட்டியபடி அமர்ந்திருந்தேன். படம் முடிந்ததும் டிக்கெட் கவுண்டருக்கு விரைந்து அங்கே "Finding  Dory", "sultan' பார்கக வந்தவர்களிடமெல்லாம் ஐஸ் ஏஜ் நல்ல படம் சார், சூப்பரா இருக்கு சார் என்று விளம்பரம் செய்து அந்த  டிக்கெட்டை ஒரு நல்ல ஆத்மா கையில் ஒப்படைத்துவிட்டு வருவதற்குள் "ஆவி" போனது எனக்கு மட்டும் தான் தெரியும். 

10 comments:

  1. இப்படி ஒன்று இருக்கிறதா? காதலியே மனைவி ஆவது போல!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சார், அதுதான் கொடுமையே..ஹஹஹா ;) ;)

      Delete
    2. ஹஹஹஹ் காதலியே மனைவி ஆவது போல..eஎன்ன.கம்பேரிசன்!!! ஆனாலும் உங்க ரெண்டு பேருக்கும் ரொம்பத்தான் லொள்ளு...ஹஹஹ்

      கீதா

      Delete
  2. நல்ல ஆத்மா ?

    எனக்கும ஸ்ரீராமுக்கும்
    நல்ல உப்புமா தான் தெரியும்.

    அ.ம கிட்டே கேட்கணும்.

    அரிசி மாவை சொன்னேன்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா, தாத்தா, ஏதோ குறியீடு போலத் தெரியுதே..

      Delete
  3. இப்படி ஒன்று இருக்கிறதா?
    அது சரி...
    பணம் கொடுத்து பல நேரங்களில் கொடுமை அனுபவிக்கனுமா?

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் ரிஸ்க் தான்.

      Delete
  4. ஹஹாஹ்ஹ் ரொம்பவே பளிச் பல்பு போலத் தெரியுதே...எப்படியோ டிக்கெட்டை விற்க முடிஞ்சுச்சே...ப்ளைன்ட் டேட்ல பார்த்த படமே கூட வர சான்ஸ் இருக்கே,...இங்கேயும் இப்படி எல்லாம் கான்செப்ட் வருதே பரவால்ல...

    கீதா

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...