இன்ட்ரோ
'இன்டச்சபில்ஸ்' என்ற பிரெஞ்சு காமெடிப் படத்தின் தழுவல் தான் இந்த தோழா. தழுவல் என்ற போதும் நம் கலாச்சாரத்துக்குத் தேவையான விஷயங்களை பார்த்து பக்குவமாக மாற்றியதில் தான் மக்களின் மனதுக்குப் பிடித்தவனாகிறான் இந்த தோழா.
கதை
ஒரு விபத்தில் தலையைத் தவிர மற்ற உடல் உறுப்புகள் செயலிழந்த ஒரு பணக்காரன், தன்னை கவனித்துக் கொள்ள வரும் ஒரு ஏழையின் சிரிப்பில் தோழனைக் காண்கிறான். இந்த இருவருக்குள் தோன்றும் நட்பு இருவரின் வாழ்க்கையையும் எப்படி மாற்றுகிறது என்பதே கதை.
ஆக்க்ஷன்
கார்த்திக்கு நடிப்பில் பட்டையைக் கிளப்புகிறார். அவருடைய கேரியரில் இது ஒரு முக்கியமான படமாக இருக்கும். மெட்ராஸ் படத்துக்கும் இதற்கும் உடல்மொழி, உச்சரிப்பு என எதையும் மாற்ற வேண்டிய அவசியம் இல்லாவிட்டாலும் முன்னணி நடிகர்கள் வரிசையில் தன் பெயரையும் பதிவு செய்கிறார். நாகர்ஜுனா வீல் சேரிலிருந்து எழுந்திருக்காமலே நம்மை கதைக்குள் கட்டிப் போடுகிறார். சீனியர் அண்ட் சீசன்ட் ஆக்டிங்.
தமன்னா இதில் வெறும் கிளாமர் பதுமையாக வந்து போகிறார். நடிப்பில் இல்லாவிட்டாலும் முகத்தில் கொஞ்சமாய்த் தெரிகிறது முதிர்ச்சி. பிரகாஷ்ராஜ், ஜெயசுதா ஆங்காங்கே கதை ஓட்டத்துக்கு பயன்பட்டிருக்கிறார்கள். பட்ஜெட்டை பார்த்தபடி காட்சிகளை அமைத்ததால் சிறப்பாய் வந்திருக்க வேண்டிய கார் சேசிங் சீன அவ்வளவாக மனதில் இடம் பிடிக்கவில்லை.
தமன்னா இதில் வெறும் கிளாமர் பதுமையாக வந்து போகிறார். நடிப்பில் இல்லாவிட்டாலும் முகத்தில் கொஞ்சமாய்த் தெரிகிறது முதிர்ச்சி. பிரகாஷ்ராஜ், ஜெயசுதா ஆங்காங்கே கதை ஓட்டத்துக்கு பயன்பட்டிருக்கிறார்கள். பட்ஜெட்டை பார்த்தபடி காட்சிகளை அமைத்ததால் சிறப்பாய் வந்திருக்க வேண்டிய கார் சேசிங் சீன அவ்வளவாக மனதில் இடம் பிடிக்கவில்லை.
இசை- இயக்கம்
இசை கோபி சுந்தர், கொஞ்சம் தெலுங்கு கொஞ்சம் மலையாளம் என்று இசையில் கூட கொஞ்சம் அந்நியத் தன்மை. ஆனால் உருக்கமான காட்சிகளுக்கு நல்ல ரீ-ரெக்கார்டிங். வம்சியின் அழகான இயக்கமும், பிரவீனின் நேர்த்தியான படத்தொகுப்பும் நமக்கு விறுவிறுப்பைக் கூட்டுகிறது. ராஜு முருகனின் ஷார்ப் அண்ட் ஸ்வீட் வசனங்கள் படம் நெடுக கைதட்டலைப் பெறுகிறது.
ஆவிக்கு பிடித்த பாடல்/ காட்சி
கிளீஷேவாக இருந்தாலும் உறவுகள் ஒன்று சேரும் இடம் ஒரு அழகான கவிதை.
Aavee's Comments - Family Entertainer!
இனித்தான் பார்க்க வேண்டும் நாகர்ஜீர்னுக்காக[[
ReplyDeleteதெலுங்கு வாடை வந்தாலே ஜெர்க் ஆகுமே...இதுல இல்லை போல...நேசன் சொன்னமாதிரி நாகார்ஜூனுக்காக பார்க்கலாம்.
ReplyDeleteநல்ல அலசல் ....
ReplyDelete