Saturday, March 26, 2016

தள்ளிப் போகாதே..


அப்படி என்ன இருக்கு இந்தப் பாட்டுல. ஏ.ஆர். ரகுமான் எதை வாசிச்சாலும் அதைக் கொண்டாட ஒரு கூட்டமே இருக்கு. இந்த வருஷத்திலேயே நான் கேட்ட ஒரு சுமாரான பாட்டு இது தான். என்ன இருந்தாலும் எங்க இ******* போல வருமா? எத்தனை பாட்டு போட்டிருக்கார் தெரியுமா?


-ஒரு ஞான சூனியம் பேசிகிட்டே போச்சு இது மாதிரி. அடேய், அவரும் நல்லா தான் போட்டார், இவரும் நல்லா தான் வாசிக்கறார். மைசூர்பாவையும் பாதுஷாவையும் ஏண்டா கம்ஃபேர் பண்ணறீங்க? ரெண்டுமே நல்லா தான் இருக்கும். உனக்கு இந்தப் பாட்டோட  அருமை தெரியலேன்னா கேளு நான் சொல்றேன்.நல்லா கண்ணை மூடி இந்தப் பாட்டோட இசையை மட்டும் கேளு. வரிகளை மறந்துவிட்டு அந்த இசையில் மட்டும் கவனம் வை. எந்த மூடில் இருந்தாலும் தலையை வருடிக் கொடுப்பது போல ஒரு இதமான ஒரு ஃபீலிங்  கிடைக்குதா?  அமைதியாய் ஐந்து நிமிடம் கேட்ட அவன் முகத்தில் சிறு மாற்றம்.

சரி ஒகே, இப்போ வரிகளுக்கு வருவோம். (மீண்டும் முதல் இருந்து பாடலைக் கேட்கிறான்)


ஏனோ வானிலை மாறுதே, 
மணித்துளி போகுதே. 
மார்பின் வேகம் கூடுதே.
மனமோ ஏதோ சொல்ல வார்த்தை தேடுதே, 

கண்ணெல்லாம் நீயே தான் நிற்கின்றாய்,
விழியின் மேல் நான் கோபம் கொண்டேன். 
இமை மூடிடு என்றேன். 
நகரும் நொடிகள்..
கசையடி போலே..
முதுகின் மேலே..
விழுவதினாலே..
வரிவரிக் கவிதை.

எழுதும் வலிகள்,
எழுதா மொழிகள், எனதே.

கடல் போல பெரிதாக நீ நின்றாய். 
சிறுவன் நான், சிறு அலை மட்டும் தான்.

பார்க்கிறேன், பார்க்கிறேன்.
எரியும் தீயில் என்னை நீ ஊற்று.
நான் வந்து நீராடும் நீரூற்று!

ஓ.. ஊரெல்லாம், கண்மூடித் தூங்கும் 
ஓசைகள் இல்லாத இரவே.. ஓ..ஒ 

நான் மட்டும் தூங்காமல் ஏங்கி 
உன் போல காய்கின்றேன், நிலவே!

கலாபம் போலாடும்,
கனவில் வாழ்கின்றேனே!

கைநீட்டி..
உன்னை..
தீண்டவே..
பார்த்தேன்..
ஏன் அதில் 
தோற்றேன்?

ஏன் முதல் முத்தம்..
தரத் தாமதம் ஆகுது? 
தாமரை வேகுது.

தள்ளிப்போகாதே.. எனையும்
தள்ளிப் போக சொல்லாதே..

(இந்த வரிகள் வரும் போது அவனும் உடன் சேர்ந்து பாட ஆரம்பித்து விட்டான். இது அவனையும் அறியாமல் நடந்தது. )

இருவர் இதழும்
மலர் எனும் முள் தானே.


தள்ளிப்போகாதே.. எனையும்
தள்ளிப் போக சொல்லாதே..
இருவர் இதழும்
மலர் எனும் முள் தானே.


தேகம் தடையில்லை, 
என நானும்..
ஒரு வார்த்தை சொல்கின்றேன்.

ஆனால் அது பொய் தான் 
என நீயும்,
அறிவாய் என்கின்றேன். 

அருகினில் வா!


தள்ளிப்போகாதே.. எனையும்
தள்ளிப் போக சொல்லாதே..
இருவர் இதழும்
மலர் எனும் முள் தானே. (தள்ளிப் போகாதே 3)

பாடலை முழுமையாக ஒருமுறை கேட்ட அவன் இப்போது "டே மாப்ளே, ரொம்ப நல்லா இருக்குடா" என்று கூறிவிட்டு சென்றான்.

பாடலை தூரத்தில் இருந்தே அரைகுறையாக கேட்டுவிட்டு கூறும் பலரின் நிலையும்  இதுதான். ஒரே ஒரு முறை முழுதாகக் கேட்டால் நிச்சயம் பிடிக்கலேன்னு சொல்ல முடியாது.


                                             *********** x ***********
8 comments:

 1. //ஒரு ஞான சூனியம் பேசிகிட்டே போச்சு இது மாதிரி. அடேய், அவரும் நல்லா தான் போட்டார், இவரும் நல்லா தான் வாசிக்கறார். மைசூர்பாவுக்கும் பாதுஷாவுக்கும் ஏண்டா கம்ஃபேர் பண்ணறீங்க? ரெண்டுமே நல்லா தான் இருக்கும்.//

  ஹா.... ஹா.... ஹா.....

  ஒன்றைப் பிடிக்கும் என்றால் கட்டாயம் இன்னொன்றை பிடிக்காது என்றுதான் அர்த்தமா என்ன!

  ReplyDelete
 2. முழுப் பாட்டும் கேட்ட பிறகு...

  ReplyDelete
  Replies
  1. பிடிச்சுதா, பிடிக்கலையா சார்?

   Delete
 3. நீங்க சொன்ன மாதிரி ஏராளமான ஞான சூனியங்கள் இங்கே திரியுது. ரஹ்மானின் இசையை வெறுப்பது மட்டுமே அவர்களுக்கு தெரிந்தது. ஏனென்றால்...... சரி அதை விட்டுவிடுவோம். எல்லாம் தெரிந்ததுதானே....

  ரஹ்மானின் இசையமைப்பில் கொஞ்சம் கொஞ்சமாக விரியும் இசை இலைகள் ஒவ்வொரு முறை கேட்கும்போதும் பாடலை அடுத்த பரிமானத்திற்கு நகர்த்திச் செல்கின்றன. சொல்லப்போனால் ரஹ்மான் இப்போது இருக்கும் மற்ற எல்லோரையும்விட அதிக இசையறிவு கொண்டவர் என்றே சொல்லத் தோன்றுகிறது. அவரின் வருகைக்குப் பிறகே நம் இசை இத்தனை தூரம் அகன்று பல இசை வகைகள் வர முடிந்தது.

  மனதை தாலாட்டும் கவிதை வரிகள். அந்த வரிகளை மரியாதை செய்யும் இசை. அபாரம்!

  ReplyDelete
 4. நல்ல முயற்சி

  ReplyDelete
 5. நல்ல முயற்சி

  ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...