Wednesday, August 26, 2015

தலைவாரிப் பூச்சூடி உன்னை- சில நன்றிகள்


                          குறும்படத்தின் எடிட்டிங் வேலைகளை நானே பார்த்துக் கொண்டதால் கொஞ்சம் தாமதமாக வந்திருக்கிறது. இந்த கதையை முதன் முதலில் நான் சொன்னது ருபக்கிடம். மாஞ்சோலையில் வைத்து நான் சொன்னபோது 'நல்லா வரும் பாஸ். பண்ணுங்க' என்று முதல் உற்சாகம் கொடுத்தார். பின்னர் எப்போதும் போல் கீதா சேச்சி, மொக்கையான கதை சொன்னாலும் நல்லா இருக்கு ஆவி என்று தன் பாசத்தை பொழிபவர். படத்தின் கதை முடிவான பின் அனன்யா அவர்களுக்கு போன் செய்து 'அக்கா உங்களை பார்த்து ஒரு கதை சொல்லணும்' என்றதும் சரி என்றார்.

                           மறுநாள் அவர் வீட்டுக்குச் சென்று கதை சொன்னதும் 'நான் உன்னோட சோகக் கதை சொல்வேன்னு பார்த்தா, ஷார்ட் பிலிமா?' என்று உற்சாகத்துடன் பேச ஆரம்பித்தார். 'எப்போ வச்சுக்கலாம் ஷூட்டிங், நாளைக்கா?' என்று எனக்கு ஸ்க்ரிப்ட் எழுதக் கூட சமயம் தராமல் (ஸ்க்ரிப்ட் எழுதாததற்கு ஏதாவது காரணம் சொல்லணுமே) படப்பிடிப்புக்கு தயாரானார்.
படப்பிடிப்புக்கென வீட்டைக் கொடுத்ததோடு படப்பிடிப்பு தினங்களில் உணவு பகிர்ந்தளித்து அன்பைப் பொழிந்தார். (கம்பெனிக்கு அதிகம் செலவு வைக்காத ஆர்டிஸ்ட் அவர் என்பதை இவ்விடம் பெருமையாக கூறிக் கொள்கிறேன்)

                                ஷூட்டிங் டைமில் எங்க ஹீரோயினின் நிஜ ஹீரோ மகாதேவன் சார் அவர்களின் ஒத்துழைப்பு பற்றி கூறியே ஆகவேண்டும். அனன்யா பெரும்பாலும் ஒரே டேக்கில் ஒகே செய்து விடுவார் எனினும் ஓரிரு இடங்களில் எக்ஸ்பிரஷன் மிஸ் செய்யும்போதெல்லாம் அவர் சரி செய்து கொடுத்து படத்தை விரைவாய் முடிக்க உதவினார். படம் பண்ணலாம் என்று சொன்னவுடன் என் ஆஸ்தான காமிராமேன் அஷ்வினிடம் கூறினேன். அவர் சிறிது பிஸியாக இருந்ததால் அந்த பொறுப்பை நானே கையாள வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டேன். சுகமாய் அந்த சுமையை ஏற்றுக்கொள்ள தயாரானேன்.

                                ஷைனிங் ஸ்டார் சீனு தன் காமிராவை  (அதற்கு தங்கம் என்று பெயரிட்டிருக்கிறார். கோவா செல்கையில் தங்கம் எங்க வச்சுருக்கீங்க என்று எதார்த்தமாக நான் கேட்டுவிட எதிரில் அமர்ந்தவர்கள் அந்த காமிரா பையை குறுகுறுவென பார்த்தது தனி கதை) கொடுத்து உதவி படப்பிடிப்பு இனிதே நடக்க உதவினார். படத்தின் இரண்டாம் பாகத்தில் (கடைசி இரண்டு நிமிடத்தில்) வரும் பிரின்சிபால் கதாபாத்திரத்தில் நடிக்க குடந்தை சரவணன் அவர்களை அழைத்தேன். பணிச்சுமை காரணமாக அவர் பிஸியாக, கீதா சேச்சியின் உறவினர் பாபு (காதல் போயின் காதல் சமயத்திலிருந்தே இவர் எங்கள் குழுவிற்கு செய்த உதவிகள் பல) அந்த கதாபாத்திரத்துக்கு தேர்வானார்.

                                  படம் எடுக்க ப்ளான் செய்ததும் நான் அழைத்தவுடன் முதலில் ஓடோடி வந்தது ஸ்கூல் பையன் கார்த்திக் சரவணன். கொஞ்சம் கேமிராவில் உதவி, கேமிரா கோணங்கள் பற்றிய பகிர்வு என தானாக முன்வந்து சில உதவிகள் செய்தார். அடுத்து பாலகணேஷ் சார். வழக்கம் போல் போஸ்டர் ரெடி பண்ணுவதில் ஆரம்பித்து ஷூட்டிங் ஸ்பாட்டில் கலந்து கொண்டு உற்சாகப் படுத்தி ஊக்கப் படுத்தினார். 'பெர்முடா' இயக்குனர் திவான் தானாக முன்வந்து படத்திற்கு ஒரு போஸ்டர் வடிவமைத்துக் கொடுத்தார்.



                                   அடுத்து நான் முக்கியமாக குறிப்பிட வேண்டியது இருவரைப் பற்றி. முதலாமவர் செய்தி வாசிப்பாளர் ஸ்ரீவித்யா, படத்தில் வரும் செய்திகளை வாசித்திருப்பது இவரே. படத்தில் அந்த இரு வரிகளின் வலிமை ஐந்து நிமிட குறும்படத்தின் உயிர்நாடி. லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், எங்கள் பிளாக் ஸ்ரீராம் சார். இவர் எங்கள் படத்தில் பிரின்சிபாலுக்கு குரல் கொடுத்து மிடுக்கை சேர்த்திருக்கிறார் என்றால் மிகையாகாது. டப்பிங் அனுப்பிவிட்டு இது போதுமா, இன்னொரு முறை வேண்டுமா என்று கேட்டுக் கேட்டு செய்து கொடுத்தார்.


                                    இறுதியாக படத்தின் முதல் காப்பியை பார்த்துவிட்டு நேர்மையாக தன் கருத்துகளை பகிர்ந்தார் 'ஒளிர் நாயகன்' சீனு. அவர் சொன்ன கருத்துகளை நீண்ட யோசனைக்கு பின் நிராகரித்து விட்டேன். இருப்பினும் அவர் என்னை புரிந்து கொள்வார் என்ற நம்பிக்கை உண்டு. இதுவரை இக்குறும்படத்தினை பார்த்தவர்களுக்கும் இனி பார்க்கப் போகும் பெற்றோர் மற்றும் ஆசிரியர், ஏனைய ரசிகர்களுக்கும் ஒரு சிறிய வேண்டுகோள். இந்தப் படம் பிடித்திருந்தால் தயவு செய்து உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்களேன்!







53 comments:

  1. வாழ்த்துகள் ஆனந்த். உங்கள் முயற்சியில் எனக்கும் ஒரு சிறு பங்கு கொடுத்ததற்கு நன்றிகள். அனன்யாவுக்கும் 'ப்ரின்சிபாலு'க்கும் பாராட்டுகள். குறும்படம் நன்றாக இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. சார், இனிவரும் ப்ராஜெக்ட் களில் உங்களை எப்படியாவது நடிக்க வைத்துவிடுவது என்று ஒரு குழுவாக யோசித்துக் கொண்டிருக்கிறோம்.

      Delete
  2. நல்லா இருந்தது. எங்கள் ப்ளாகில் கதையின் முடிவைக் கிட்டத்தட்டச் சொல்லிட்டேன். அப்புறமா வேணாம்னு தோணி எடுத்தேன். நல்ல தெளிவான ஒலி, ஒளிப்பதிவுகள். தெளிவாகக் காட்சிகள் எடுத்திருக்கும் விதமும் ஃப்ரேமுக்கு ஃப்ரேம் தேர்ந்த ஒளிப்பதிவாளர் என்பதைக் காட்டுகிறது. நல்லவேளையாப்பின்னணி இசை காதைக் கிழிக்கவில்லை.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா, ஒளிப்பதிவு என் முதல் முயற்சி.. தவறுகள் எங்கேன உணர்ந்து கொண்டேன். அடுத்த முறை இன்னும் சிறப்பா கொடுத்திடலாம். உங்க பாராட்டுக்கு நன்றிகள்

      Delete
  3. பெயர் போடும்போதே காமிராவின் பெயரையும் சேர்த்துப் போட்டுச் சீனுவுக்கும் காமிராவுக்கும் பெருமை சேர்த்திருக்கீங்க! :)

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா.. உறவினர்கள் கூட பிரதிபலன் பாராமல் ஒரு விஷயம் செய்யத் தயங்கும் போது, என் முதல் முயற்சிக்கு தன் காமிராவை என்னை நம்பி ஒப்படைத்த சீனுவுக்கு அந்த நன்றி எனும் வார்த்தை மிகவும் சிறியதே.

      Delete
  4. அனன்யா அம்மாவாக அசத்தி விட்டார். கடைசி நிமிட பன்ச் சூப்பர்.. ஸ்ரீராம் குரல் ப்ரினிசிபாலுக்கு நன்றாகப் பொருந்துகிறது..

    குறும்படத்துக்கே குறும்படம் கருத்து அபாரம். ஆவிக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. அனன்யா நான் சொன்னது போல பெரும்பாலான காட்சிகள் சிங்கிள் டேக் தான். அசத்திட்டார். பாபு (பிரின்சிபால்) நடிப்பும், ஸ்ரீராம் சார் குரலும் கதைக்கு தூண்கள்.

      உங்க வாழ்த்துக்கு நன்றிகள்.

      Delete
  5. அருமை நண்பரே சிறிய கதையில் பெரிய விடயம் தந்து இருக்கின்றீர்கள் வாழ்த்துகள்
    தமிழ் மணம் 3

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி

      Delete
  6. intendedஆ தெரியவில்லை.. நானறிந்த பெண்கள் பலரும் இப்படித்தான்.. "இதோ கிளம்பியாச்சு.. வந்துகிட்டே இருக்கேன்" என்று சொல்லிவிட்டு மேக்கப் போடத் தொடங்குவார்கள்.. nice touch.

    எத்தனையோ பேருடைய உழைப்பில் எவ்வளோ முயற்சி செய்து குறும்படம் எடுக்கிறீர்கள்.. கொஞ்சம் சத்துள்ள கதையாகப் தேர்ந்தெடுக்கக் கூடாதோ?

    ReplyDelete
    Replies
    1. அடுத்த குறும்படத்துக்கு கதாசிரியர் அப்பாதுரை ஆக
      அனௌன்ஸ் செய்துவிடுங்கள் ஆவி சார் !!

      சுப்பு தாத்தா

      Delete
    2. ஹஹஹா, அப்பாதுரை சார்.. சத்தியமா சொல்றேன் நீங்க ஒருத்தர் தான் இந்த விஷயத்தை கவனிச்சிருக்கீங்க. அது intention ஆ வச்சது தான். இன்னொரு காட்சியில் குழந்தை படிப்பில் அவ்வளவு அக்கறை கொண்ட அம்மா, PTA மீட்டிங்கை மறந்து விடுவார். அதுவும் வேண்டுமென்று வைத்த காட்சி தான்.

      Delete
    3. தாத்தா, அப்பாதுரை சார் கதை ஒன்னு (சிறுகதை போட்டி) என்னோட குறும்பட லிஸ்டில் இருக்கு.. சமயம் வரும்போது அவர் கூட ஒர்க் பண்ணனும்.. :)

      Delete
  7. ஸ்ரீராமுக்கு ஒரு ஸ்மூத் வில்லன் பாத்திரம் கொடுங்கள் அடுத்த படத்தில். இந்தக் குரலை வைத்துக் கொண்டு பின்னி எடுத்து விடுவார்.

    ReplyDelete
    Replies
    1. நான் நினைச்சேன் நீங்க சொல்லீட்டீங்க.

      Delete
  8. இன்னொரு நல்முயற்சி பாராட்டுகள் . கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் தேவை. 5 நிமிடங்கள் ஓடும் குறும்படம் எடுப்பது சாதாரண விஷயமல்ல .அனன்யாவின் நடிப்பு அருமை.ஸ்ரீராம் சாரின் குரல் கச்சிதம்
    வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. அடுத்த முயற்சியில் சரி செய்து கொள்கிறேன் முரளி..

      Delete
  9. எங்கள் ப்ளாக் லே பார்த்தேன்.
    பலே !! பலே !! என்றேன்.

    அனன்யா அவர்களின் இயல்பான நடிப்பு அபாரம்.

    ஆவி அவர்கள் இந்த குறும்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை
    சிறப்பாக அமைத்துள்ளார்.

    ஆவி சார் !! இனி உங்கள் கவனம் முழு நேரப் படம் தயாரிப்பதில்
    திரும்பட்டும்.

    வெற்றி நிச்சயம். போட்டுப் பாரடா எதிர் நீச்சல். !!

    சுப்பு தாத்தா

    ReplyDelete
    Replies
    1. தாத்தா உங்க ஆசிகளுடன் தொடரும்..!

      Delete
  10. கதை மிகு வேகத்தில் செல்லும்போது,
    அங்கே நச் என்று வைத்தீர்கள், கதை முடிவை!
    பாராட்டுகள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி நிஜாமுதீன்.

      Delete
  11. //(கடைசி இரண்டு நிமிடத்தில்) வரும் பிரின்சிபால் கதாபாத்திரத்தில் நடிக்க குடந்தை சரவணன் அவர்களை அழைத்தேன்.//

    ஹா... ஹா... ஹா...!
    படம் மொத்தமே 5 நிமிடம்தான்... இதில் "கடைசி 2 நிமிடம்'
    என்ற வார்த்தை, சிரிப்பை வரவழைத்தது.

    ReplyDelete
  12. அடடா..
    எங்கள் பிரின்சிபால் சரவணனை (நண்பரை) மிஸ் பண்ணிட்டீங்களே!

    தமிழ்மணம் 4.

    ReplyDelete
  13. "தலைவாரி பூச்சூடி உன்னை"
    - பாரதிதாசன் பாடல்தானே?
    எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
    அதனால், தலைப்பு மிக அருமை!

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் அந்த பாடல் மிகப் பிடிக்கும்..

      Delete
  14. ஆவி உங்கள் முதல் கன்னி முயற்சி ஒன் மேன் ஷோவிற்கு வாழ்த்துகள்! நமக்கே தெரியும் அதில் என்னென்ன குறைகள் என்று. அதை அடுத்ததில் சரி செய்து விடலாம்...

    //பின்னர் எப்போதும் போல் கீதா சேச்சி, மொக்கையான கதை சொன்னாலும் நல்லா இருக்கு ஆவி// சின்னத் தம்பி தட்டிக் கொடுக்கலாம்னா அடப் பாவி!!!! ஹஹஹஹ் // என்று தனது பாசத்தைப் பொழிபவர்// கவுத்துட்டீங்க...பொழச்சீங்க...ஹஹஹஹ்ஹ

    கதை நல்லாருந்தாலும் நாம் பேசிக் கொண்டதுதான்....இன்னும் மெருகேற்றிருக்கலாம்தான்...என்று...இட்ஸ் ஓகே....உங்களது பரீட்சை என்பதால் ....அடுத்ததில் சரி செய்து கொள்ளலாம்....வாழ்த்துகள் ஆவி!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நன்றி சேச்சி, அது விளையாட்டாக சொன்னது. சீரியசாக எடுத்துக்காதீங்க :)

      Delete
  15. சூப்பர்! சூப்பர்!
    குறும்படத்தில் பெரிய விஷயத்தை சொல்லியிருக்கிங்க.
    நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும்.
    வாழ்த்துகள் தொடருங்கள்.

    ReplyDelete
  16. பிள்ளைங்க டென்ஷனா இருக்கோ இல்லையோ ?

    பெற்றோர்கள்தான் அதிகமாக டென்ஷன் எடுத்து குழந்தைகளுக்கு பாரமாகி விடுகின்றனர்...!

    செமையா இருக்கு, அந்த நியூஸ் வாசிச்சவிங்க குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது, கிளைமாக்ஸ் சும்மா "நச்சின்னு" இருக்கு...யாவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. ந்யூஸ் வாசிச்சவங்க பேர் ஸ்ரீவித்யா . அவங்க பாலிமர் நியுஸ் ல செய்தி வாசிக்கறாங்க அண்ணே..

      Delete
  17. பிள்ளைங்க டென்ஷனா இருக்கோ இல்லையோ ?

    பெற்றோர்கள்தான் அதிகமாக டென்ஷன் எடுத்து குழந்தைகளுக்கு பாரமாகி விடுகின்றனர்...!

    செமையா இருக்கு, அந்த நியூஸ் வாசிச்சவிங்க குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது, கிளைமாக்ஸ் சும்மா "நச்சின்னு" இருக்கு...யாவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete

  18. அன்புள்ள அய்யா,

    ‘தலைவாரிப் பூச்சூடி உன்னை ’- ஆவியின் குறும்படம் பார்க்கின்ற வாய்ப்பை Thulasidharan V Thillaiakathu வலைத்தளம் மூலமாகக் பார்க்க வைத்ததற்கு முதலில் திரு.துளசிதரன் அய்யா அவர்களுக்கு நன்றி.


    ‘தலைவாரிப் பூச்சூடி உன்னை’ முதலில் தலைப்‘பூ’ அசத்தால்... பாரதிதாசனின் பாடலோடு தொடங்கும் படம்... இரண்டு பாத்திரங்களோடு இன்றையப் பெற்றோரின் மனநிலையைப் படம் பிடித்துக்காட்டும் ஒரு நல்ல படம். அவசியம் பெற்றோர்கள் பார்க்க வேண்டிய படம். 85 மதிப்பெண்ணுக்கு மேல் வாங்கும் புதல்வி மேலும் இவர்களின் மருத்துவராக்க வேண்டும் என்கிற கனவிற்கு இளம் தளிரை சருகாக்கும் அவலம்.

    இன்னும் ஒரு படிமேலே போய் கணக்கில் 99 எடுத்த மகளைப் பாராட்டாமல் எப்படி ஒரு மதிப்பெண்ணைக் கோட்டை விட்டாய் எனத் திட்டும் பொற்றோரை என்ன சொல்ல...?

    கவிஞர் முத்துநிலவன் அய்யாவின் ’முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே...!’ அந்த நூலின் நகலைத்தான் என் வீட்டில் மகளின் பார்வையில் படும்படி ஒட்டி வைத்துள்ளேன். அவளும் பத்தாம் வகுப்பு படிக்கின்றாள். படிப்பு... எதுவரை போகுமோ அதுவரை இயல்பாய் போகலாம்...!

    கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்கம், தயாரிப்பு என்று கோவை. ஆவி அனைத்தும் அவரே பொறுப்பு எடுத்து மிக நேர்த்தியாக... அழகாக கொண்டு சென்றிருப்பது பாராட்டுக்குரியது.

    அன்னையாக வருபவர் நன்றாகத் தன் பங்கையாற்றியிருக்கிறார். ’வாசிங் மெஷினை சாத்துகின்ற பொழுது அவரின் கோபத்திற்குத் தகுந்தாற்போல ’டோர்’ சாத்தப்படும் இசை. ஒலி & ஒளி நன்றாக இருக்கிறது.

    பிரின்சிபால் தன்பங்கை நிறைவு செய்திருக்கிறார். ஒரு இடத்தில் ‘நீங்க....பூர்ணிமா மதர்தானே...?’ என்கிற இடத்தில் ‘நீங்க’ அவரின் வாயசைவு இல்லாமல் இருப்பதை ஒரு குறையாகச் சொல்லமுடியாது.

    கோவை ஆவியின் தனிப்பட்ட கன்னி முயற்சி என்று சொல்ல முடியாத அளவிற்கு அருமையாக அழகாக சொல்ல வருவதை ‘நச்’ சென்று சொல்லிச் செல்கிறார். சபாஷ்...!
    கன்னி முயற்சி அல்ல... கண்ணியமான முயற்சி! பாராட்டுகளுடன் வாழ்த்துகள்!

    மலைவாழை அல்லவோ கல்வி? - நீ

    வாயார உண்ணுவாய் போ என் புதல்வி! ||

    (ஒரு கையால் தட்டச்சு செய்கிறேன்...பிழையிருந்தால் பொருத்தருள்க)

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. எப்போதும் போல் மிக நீண்ட வாழ்த்துகளால் எங்கள் மனங்களை நிறையச் செய்து விட்டீர்கள் சார்!

      Delete
  19. நல்ல கரு...
    நல்ல முயற்சி...
    நானும் பகிர்ந்திருந்தேன்...

    ReplyDelete
    Replies
    1. பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி நண்பா

      Delete
  20. நேரிலேயே சொல்லி விட்டேன். இங்கும். நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. நேரிலேயே சொல்லி விட்டேன். இங்கும். நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. நேரிலேயே சொல்லி விட்டேன். இங்கும். நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நேர்ல சொன்னீங்க, ஆமா ஒத்துகிட்டேன். இங்க ஏன் கோர்ட்ல சொல்ற மாதிரி மூணு முறை சொல்றீங்க.. ஹஹஹா ;)

      Delete
  23. ரொம்ப நல்லா இருக்கு குறும்படம் .ஆரம்ப சீனில் /feeling worried /status உண்மைத்தான் :) எங்க இண்டியன் மாம்ஸ் இங்கே அடிக்கடி செய்றாங்க .அருமையான கான்செப்ட் .

    sriram //இவர் எங்கள் படத்தில் பிரின்சிபாலுக்கு குரல் கொடுத்து மிடுக்கை சேர்த்திருக்கிறார் என்றால் மிகையாகாது. // true :)

    ReplyDelete
  24. நல்ல கதை கரு.. இரண்டே கதாப்பாத்திரங்கள் இன்றைய சமுதாயத்தை பிரதிபலிக்கும் விதம் அருமை.

    http://magalirkadal.ucoz.com/forum/51-191-13434-16-1441084267 என்ற இடத்தில் பகிர்ந்துள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. பகிர்வுக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி.

      Delete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...