Friday, July 24, 2015

ஆஷா மிஸ் அடிச்சுட்டாங்க..!

ஷா மிஸ் - இதுதான் பள்ளியில் எல்லோரும் அவரை அன்புடன் அழைக்கும் பெயர். வயது இருபத்தி சொச்சத்தில் இருக்கும். மகனின் கிளாஸ் டீச்சர். அவரை முதன் முதலில் சந்தித்த நாள் இன்னும் என் நினைவில் உள்ளது. அன்று அவர் ஒரு ஊதா நிற சேலை அணிந்திருந்தார். "ஆ. விஜயராகவன்" என்ற என் மகனின் பெயரை ஆவி ஜெயராகவன் என்று தப்பாக வாசித்த போது அவரிடம் "தப்பா எழுதியிருக்கீங்க, அது ஆ. விஜயராகவன்" என்றேன். உங்க பேர் "ஆவி தானே சார்?" என்றார். "ஆமா, ஆனா என் பையன் பேர் விஜயராகவன், ஜெயராகவன் இல்லே" என்றதும் தான் செய்த தவறை புரிந்து திருத்திக் கொண்டார்.  

மகனை பள்ளியில் கொண்டு போய் விடுவது மட்டுமே என்னால் சாத்தியம். மற்றபடி அவன் படிப்பை கவனித்துக் 'கொல்வதெல்லாம்' என் மனைவியின் வேலை. என்றைக்காவது விடுப்பிருந்தால் மாலையிலும் அவனை பள்ளியிலிருந்து அழைத்து வருவேன். பள்ளி விடுவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே சென்று விடுவேன். அந்த நேரத்தில் என்னையே சில கண்கள் குறுகுறுவென்று பார்க்கும். (அல்லது பார்ப்பதாக எனக்கு தோன்றும்). ஒரு நாள் அவர்கள் பேசுவது எனக்கு கேட்டுவிட்டது. "ஏய், இவர் தாண்டி நஸ்ரியாவோட வீட்டுக்காரர்." "அப்படியா நான் கூட யாரோன்னு நினைச்சேன்". "அது சரி, நாலு மணிக்கு விடப்போற ஸ்கூலுக்கு ரெண்டு மணிக்கு வந்து நிக்கறாரு" என்று கூறிவிட்டு அவர்களுக்குள்ளாகவே ஒரு சிரிப்பு.

சரி ஓவர் டூ ஆஷா மிஸ். கடந்த வெள்ளிக்கிழமை என்று நினைவு (ரெண்டு நாளைக்கு முன்னால நடந்ததுன்னு சொன்னா போறாதான்னு உங்க மைன்ட் வாய்ஸ் கேக்கறது புரியுது. ஒரு கதை சொல்ல ஆரம்பிக்கும் போது இப்படித்தான் பில்டப் கொடுக்கணும்). அலுவலகத்திலிருந்து வந்ததும் என் மகன் ஓடிவந்து "அப்பா, என்னை அந்த ஆஷா மிஸ் அடிச்சுட்டாங்க." என்றான். எனக்கோ கடும் கோபம். "ஏன் அடிச்சாங்க?" என்றேன். என் மனைவியோ "இவன் என்ன செஞ்சான்னு கேளுங்க" என்றாள். "என்ன செஞ்சே?" என்றேன். "கிளாஸ்ல இடம் மாறி உட்கார்தேன் பா, அதுக்கு அடிச்சுட்டாங்க." என்றாள்.


இடம் மாறி உட்கார்ந்ததற்காகவா அடித்தார்கள்? இதெல்லாம் ஒரு காரணமா? என் மகன் பிறந்ததிலிருந்து எவ்வளவோ சேட்டைகள் செய்திருக்கிறான். ஊர் வம்பை விலைக்கு வாங்கியும் இருக்கிறான். ஒரு நாள் கூட அவனை கையை நீட்டி அடித்ததில்லை. இந்த ஸ்கூல் மிஸ்சுக்கு அவ்வளவு தைரியமா? இதை தட்டிக் கேட்காவிட்டால் என் மகனுக்கு என் மேல் இருக்கும் மதிப்பு என்னாகும். இதை நான் யோசித்துக் கொண்டிருக்கும் போதே என் மனைவி என் உள்ளக் கொதிப்பை புரிந்து கொண்டு "லேசா தான் அடிச்சாங்களாம்" என்றாள். "நீ மிஸ் கிட்ட கேக்கலையா?" என்றேன். "விடுங்க இந்த விஷயத்த பெருசு பண்ணாதீங்க" என்றாள். எனக்கு ஆறவில்லை. இன்னும் டென்ஷன் தலைக்கேறியது. "அதெப்படி விட முடியும். நாளைக்கு நான் போய் கேக்குறேன்" என்றேன்.

உறக்கமில்லா அந்த இரவை அவசர அவசரமாக கடந்துவிட்டு அடுத்த நாள் பாகுபலியின் நெஞ்சுரத்தோடு போருக்குத் தயாரானேன். ஆம் போர்தான். பள்ளியில் மாணவர்களை அடிக்கும் ஆசிரியர்களுக்கு எதிரான போர். அடுத்த நாள் பள்ளிக்குச் எட்டரை மணிக்கெல்லாம் சென்றுவிட்டேன். மகனையும் உடன் அழைத்துக் கொண்டு போயிருந்தேன். அவன் கன்னங்களில் நேற்று அடித்ததற்கான கைகளின் தடம் இன்னும் மெல்லிசாய் படிந்திருந்தது.  அவன் கைகளை பற்றியபடி டீச்சர்ஸ்  ரூமுக்கு சென்றேன். எதிரே வந்த ஆசிரியர் ஒருவரிடம் "ஆஷா மிஸ்" என்றேன். "ஆஷா மிஸ் உங்கள பார்க்க யாரோ வந்திருக்காங்க" என்று கூறிவிட்டு அகன்றார். உள்ளிருந்து ஆஷா மிஸ் வெளியே வந்தார்.

அவர் அழகு என்னை ஒரு நிமிடம் நிலைதடுமாறச் செய்த போதும் என் உள்ளே ஸ்லீப்பிங் மோடில் இருந்த கோபக் குட்டிச்சாத்தான்களை கட்டவிழ்த்து விட்டேன். "பையன போட்டு இப்படித்தான் அடிக்கறதா? அவன் கன்னத்துல இன்னும் வரிகள் இருக்கு பாருங்க. இடம் மாறி உட்கார்ந்ததுக்கெல்லாம் அடிக்கிறதா? அதுவும் காட்டு மிராண்டித்தனமா? இதுதான் உங்க டீச்சர் ட்ரேயனிங்ல சொல்லிக் கொடுக்கறாங்களா? பொரிந்து தள்ளினேன். எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த ஆஷா மிஸ் "பேசி முடிச்சிட்டீங்களா? ப்ளஸ் டூ படிக்கிற உங்க பையன் இடம் மாறி உட்கார்ந்தது என் மடில, உட்கார வச்சு கொஞ்ச சொல்றீங்களா?" என்று அவர் கேட்டதும் என் மொத்த கோபமும் அருகே நின்றிருந்த என் மகனின் மேல் திரும்பியது. அந்த இடத்தை விட்டு அவன் எப்போதோ ஓடிப் போயிருந்தான்.


                          ***********************  x      *************************

50 comments:

  1. யோவ், கடைசி பாரா தவிர அம்புட்டும் காப்பி பேஸ்ட்... வன்மையாகக் கண்டிக்கிறேன்....

    ReplyDelete
  2. மத்தவங்கள்லாம் லேசா கலாய்ச்சாங்க.... இது ரொம்ப ஓவரால்ல இருக்கு!!!

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா.. சிரிப்பதற்கு மட்டுமே..!

      Delete
  3. போய்த் தொலையும்... தமிழ்மணத்துல சேத்து ஓட்டும் போட்டாச்சு.....

    ReplyDelete
  4. யோவ் ஆவி... ஆளாளுக்கு கதை சொல்லி சொல்லியே பையனை ப்ளஸ் டூ வரை வளர்த்து பாஸ் பண்ண வச்சுட்டிங்களே??

    இந்த விஷயம் ஸ்பைக்கு தெரியுமா?

    ReplyDelete
    Replies
    1. அதான் மேல பொங்கியிருக்காரே.

      Delete
  5. ஹா... ஹா... நாமே நிலைதடுமாற போது பையன் எப்படி இருப்பான்... ஹா... ஹா...

    ReplyDelete
  6. அது சரி... கலக்கிட்டீங்க... குட்டி பதினாறு அடி பாயுதோ...

    ReplyDelete
    Replies
    1. பதினாறா? முப்பத்தியாறு அடி பாயுதுங்க

      Delete
  7. ராக்ஸ்ய்ய்யா ஆவி.. ஏதோ ட்விஸ்ட் இருக்கும்னு நெனச்சன் ஆனா இப்படி மடில வைப்பீங்கன்னு எதிர்பார்க்கல. மெய்யாலுமே வாய் தானா சிரிச்சிடுச்சு .

    ReplyDelete
  8. ச்ச்சீ... குறும்பு!

    ReplyDelete
  9. ஹாஹ்ஹஹஹ் ஆவி செம! நீங்களும் தொடர் சுற்று விட்டுருக்கீங்கனு நினச்சு வந்தாலும் கண்டிப்பா..ட்விஸ்ட் கடைசில இருக்கும்னு நினைச்சோம்......ஏமாத்தலை..(எல்லாம் தவாபூஉ உபயம் தான்..ஹஹஹ்) ..செம கடைசி முடிவு...ரொம்பத்தான் உங்களுக்கு ரொம்ப குறும்பு...

    பாவம் கார்த்திக் சரவணன்..! அஹஹ்ஹ் எல்லாரும் போட்டு இந்த வாங்கு வாங்கறீங்க.. ஹஹ(நாங்க வேற விதமா வாங்கறாதா இருந்தோம் எல்லாரும் போட்டுட்டதுனால யோசனையா இருக்கு இந்த கீதா எழுதறதுல சோம்பேறி....ஹிஹிஹி..)

    "//ஏய், இவர் தாண்டி நஸ்ரியாவோட வீட்டுக்காரர்." "அப்படியா நான் கூட யாரோன்னு நினைச்சேன்". // ஹ்ஹஹ் இன்னும் நஸ்ரியாவா...
    "அது சரி, நாலு மணிக்கு விடப்போற ஸ்கூலுக்கு ரெண்டு மணிக்கு வந்து நிக்கறாரு....சம்திங்க் மிஸ்ஸிங்க் (அதுவும் கூலிங்க் க்ளாஸ் போட்டுக்கிட்டு!!!!) இங்கு ஃபில் அப் த ப்ளாங்க்ஸ் நீங்க மறைவா சொன்னது எங்களுக்கு மட்டும் தெரிஞ்சுச்சு...

    அது சரி கார்த்திக்கின் குட்டி பெண் இந்தக் கதையில் பையன் ஆனதன் மர்மம் புரிஞ்சுருச்சு...அஹஹ்

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா.
      //நாலு மணிக்கு விடப்போற ஸ்கூலுக்கு ரெண்டு மணிக்கு வந்து நிக்கறாரு// மறைவா சொல்லியிருந்தத பப்ளிக்ல போட்டு உடைச்சுட்டீங்களே. இப்படிப் பண்றீங்களே மா! :)

      Delete
  10. Replies
    1. நன்றி நண்பா.. நீங்க சென்னை வந்த போது சந்திக்க முடியாம போயிடுச்சு :(

      Delete
  11. டீச்சர் அடிச்ச கதை எழுதுறதுனு நானும் தீர்மானிச்சுட்டேங்க..

    ReplyDelete
    Replies
    1. ஐ ஆம் வெயிடிங் :-)

      Delete
    2. வாவ் அப்பாதுரை சார் எழுதுங்க.. மீ ஆல்சோ வெயிட்டிங்.

      Delete
  12. Replies
    1. குருவை எப்போதுமே மிஞ்ச முடியாதே முரளி.. முயற்சிக்கலாம் அவ்வளவுதான்.. நன்றி நண்பா.

      Delete
  13. //"ஏய், இவர் தாண்டி நஸ்ரியாவோட வீட்டுக்காரர்.// இங்க சத்தமா சிரிச்சு என் பையன் என்னமானு பக்கத்துல வந்துட்டான். :-)

    இரண்டு மணிக்கேப் போனதன் காரணம், //அவர் அழகு என்னை ஒரு நிமிடம் நிலைதடுமாறச் செய்த போதும்// இங்க புரிஞ்சுடுச்சு.

    வச்சீங்க பாருங்க ட்விஸ்டு :-) ஹாஹாஹா

    பையன்கிட்ட உனக்கு அப்புறமா இந்த கதை சொல்றேன்னு சொன்னேன், இப்போ நான் ட்விஸ்ட ட்விஸ்டாக்கி நேராக்கணும் :-) :-)

    த.ம.+1

    ReplyDelete
    Replies
    1. ஆஹா.. ரொம்ப கஷ்டமான வேலையாச்சே .. இதை பையனுக்கு எடுத்து சொல்றது.

      //இங்க புரிஞ்சுடுச்சு. /// கண்டின்யுட்டிய கேட்ச் பண்ணிட்டீங்க. குட்!

      Delete
  14. இது! சூப்பரு!
    சிரிப்ப அடக்கமுடியவில்லை.

    ReplyDelete
  15. கடைசி ட்விஸ்ட் பின்னிட்டிங்க ஜி

    ReplyDelete
  16. ஒரு டீச்சர் கிடைச்சா இந்தப் பாடா படுத்துவீங்க:/ ஹர்ர்ர்ர்
    ஆமா அதென்ன நஸ்ரியா வீட்டுகாரர். அவரு உங்கள ,மாதிரி டைரக்டர் இல்லையே!@!@ !
    டைரக்டரோட பையன் என்றல்லவா கேள்விப்பட்டேன்!!! ஆனா, கார்த்திக் சகா இனி அனுபவபதிவு போடுவாரா என்ன??:))))))

    ReplyDelete
    Replies
    1. //ஒரு டீச்சர் கிடைச்சா இந்தப் பாடா படுத்துவீங்க:/// ஹஹஹா சும்மா நகைச்சுவைக்கு மட்டுமே..

      Delete
    2. // கார்த்திக் சகா இனி அனுபவபதிவு போடுவாரா என்ன?///

      டவுட்டு தான்!

      Delete
    3. நஸ்ரியாவின் முதல் வீட்டுகாரர். டைரக்டர்தானுங்க அவர் பெயர் ஆவிங்க இரண்டாவது வீட்டுக்காரதான் டைரக்டரின் பையன்தான். என்ன ஆவி நான் சொன்னது சரிதானே

      Delete
  17. Replies
    1. தேங்க்ஸ்

      Delete
    2. பார்ரா இங்கிலிஸில் கமெண்ட் போட்டு தான் இங்கிலீஸ் டிச்சர் என்று ஒருத்தர் காமிச்சிட்டு போறாங்க. அவங்க போட்ட கமெண்டை யாராவது மொழி பெயரத்து போடுங்களேன்

      Delete
  18. கோப குட்டிச்சாத்தான் -சூப்பர்

    ReplyDelete
  19. இப்படியெல்லாம் யோசிக்க எப்படிங்க முடியுது! ட்விஸ்ட் கலக்கல்!

    ReplyDelete
  20. மிகவும் சிரிக்க வைச்ச பதிவு பாராட்டுக்கள் ஆவி...

    ReplyDelete
  21. உங்களை நேரில் பார்த்த போது சின்ன பையனாக இருக்கிறாரே இவருக்கு ஒரு நல்ல அமெரிக்க பொண்ணா பார்த்து கட்டி வைச்சு நம்ம ஊர்பக்கம் இழுத்துடறலாம் என்று பார்த்தேன் இப்பதான் தெரிஞ்சுது உங்களுக்கு +2 படிக்கிற வயசில பையன் இருக்கிறான்னு,.......

    ReplyDelete
  22. இத நடிகர் விவேக் குரலில் படிங்க என் பாசத்திற்குரிய பாஸ்.

    "அடப்பாவி (எனக்கு என்னமோ ஆவின்னு தான் கேட்ட மாதிரி ஒரு பீலிங்) கடைசில அங்கயய்யாமுல வைப்பீங்க டுவிஸ்டு. நீங்கல்லாம் நல்ல வருவீங்கலே. ஆமா இன்னுமா நஸ்ரியா பின்ன போயிட்டுரிக்கீரு.

    ReplyDelete
  23. என்ன ஒருட்விஸ்ட்! ரொம்ப ஆவலோடு முடிவைப் பார்த்தால்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆவி ஷ்டைல்! :)

    ReplyDelete
  24. haaahaaa :) very nice aavee :)

    ReplyDelete
  25. அன்புகூர்ந்து அந்தப் பள்ளியின் பெயரைத் தெரிவிப்பீர்களா? நிறைய பையன்கள் அதில் சேர விருப்பம் தெரிவிக்கிறார்கள்..! - இராய செல்லப்பா

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...