ஆண் :  நான்கு கண்கள் பார்த்தது ...
பெண் : காதல் நெஞ்சில் பூத்தது ...
ஆண் : மீண்டும் மீண்டும் பார்த்தது ...
பெண் : காதல் இன்னும் கூடுது ...
ஆண் : கண்ணில் பொங்கும் காதல் தன்னை
                காதில் மெல்ல நானும் சொல்ல ...  
               இனிக்கிறதே ... காதல் ... இனிக்கிறதே ...
               இனிக்கிறதே ... காதல் ... இனிக்கிறதே ...
ஆண் : காதல் கடிதம் ஒன்றைத் தானே காற்றின் வழியே
                 தூதுவிட்டேன் நான்   தூதுவிட்டேன்
பெண் : பூவின் காதில் எந்தன் காதல் நானும் உனக்கு
                  சொல்லிவிட்டேன் நான்   சொல்லிவிட்டேன்
ஆண் :  மிக இனிமையான உணர்விது
பெண் : நெஞ்சம் மீண்டும் வேண்டும் என்றது ...
குழு :    நேசம் மட்டும் குறைவதுமில்லை
                 காதல் தானே அன்பின் எல்லை
                 பிரிவு என்பது நமக்குள் இல்லையே ...  
  
               இனிக்கிறதே ... காதல் ... இனிக்கிறதே ...
               இனிக்கிறதே ... காதல் ... இனிக்கிறதே ...
ஆண் : நான்கு கண்கள் பார்த்தது
பெண் :காதல் நெஞ்சில் பூத்தது
ஆண் : நான்கு வருடம் ஆனது
பெண் : காதல் இன்னும் கூடுது
ஆண் : கண்ணில் பொங்கும் காதல் தன்னை
                 காதில் மெல்ல நானும் சொல்ல ......    
            இனிக்கிறதே ... காதல் ... இனிக்கிறதே ...
            இனிக்கிறதே ... காதல் ... இனிக்கிறதே ...
ஆண் :  மேகம் போலே எந்தன் மீது பாசம் தன்னை 
                  பொழிகிறாய் நீ பொழிகிறாய்
பெண் : போதும் போதும் என்றபோதும் நேசம் மட்டும் 
                   தருகிறாய் நீ தருகிறாய் ...
ஆண் : இது பூர்வ ஜென்ம பந்தமா ...?
பெண் : புனிதமான சொந்தமா ...?         
குழு :    நேசம் மட்டும் குறைவதுமில்லை
                 காதல் தானே அன்பின் எல்லை
                 பிரிவு என்பது நமக்குள் இல்லையே ...  
            
            இனிக்கிறதே ... காதல் ... இனிக்கிறதே ...
            இனிக்கிறதே ... காதல் ... இனிக்கிறதே ...
பெண் : நான்கு கண்கள் பார்த்தது
ஆண் :காதல் நெஞ்சில் பூத்தது
பெண் :நான்கு வருடம் ஆனது
ஆண் : காதல் இன்னும் கூடுது
பெண் : கண்ணில் பொங்கும் காதல் தன்னை
                  காதில் மெல்ல நானும் சொல்ல......   
             இனிக்கிறதே ... காதல் ... இனிக்கிறதே ...
 
 
 
 
 
 
             இனிக்கிறதே ... காதல் ... இனிக்கிறதே ...
குழு : லலல்லலலா லாலலல லலல்லலலா...
 
              லலல்லலலா லாலலல லலல்லலலா...