உண்மைய சொல்லணும்னா நான் பக்கா நோலன் ஃபேன்.. பல்ப் பிக்சன் சேர்த்து நான் பார்த்தது மொத்தம் நாலு டாரண்டினோ படங்கள். அதுல பல்ப் பிக்சன் தவிர மற்ற படங்கள் என்னை, எனக்குள் இருக்கும் ஒரு ரசிகனை, சினிமா காதலனை ஈர்க்கவில்லை என்பதே உண்மை. டாரண்டினோவை கிறிஸ்டபர் நோலனோடு ஒப்பிடுவது எந்த வகையிலும் முறையல்ல என்றாலும், நோலனின் படங்களில் உள்ள ரசிகனை சிந்திக்க வைத்துக்கொண்டே இருக்கும் விஷயங்கள் எதுவும் டாரண்டினோவின் படங்களில் இருந்ததாக நான் உணர்ந்ததில்லை. மெமண்டோ, இன்செப்ஷன், இன்டர்ஸ்டெல்லார் மாதிரியான படங்களை வேறு எந்த ஒரு ஹாலிவுட், ஏன் உலக இயக்குனர்கள் இயக்கிவிட முடியுமா என்று மார்தட்டி கேட்டிருக்கிறேன். அதே சமயம் டார்க் நைட் போன்ற படங்களையும் இயக்கி, தான் ஒரு கமர்ஷியல் இயக்குநரும் கூட என்று நிரூபித்திருக்கிறார். சரி, நோலன் புராணத்தை நான் பிறிதொரு நாளில் பகிர்கிறேன். இப்போடாரண்டினோவை பார்ப்போம்.
சீனு, இந்தக் கட்டுரைகளைக் கொடுத்து பிழைத்திருத்தம் செய்யுமாறு கூறியபோது நான் டாரண்டினோவைப் பற்றி மேற்சொன்ன அதே மனநிலையோடுதான் இருந்தேன். முதலில் அனுப்பியிருந்த படம் ஹெட்புல் எய்ட். கௌபாய் கதை,தான் என்றபோதும், சீனுவின் எழுத்துகளில் அந்தக் கதாப்பாத்திரங்களின் பெயர்களைத் தவிர ஒரு அந்நியத் தன்மை எங்குமே புலப்படவில்லை. திருத்தம் செய்வதை நிறுத்திவிட்டு ஒருமுறை முழுமையாகப் படித்தேன். மீண்டும் ஒருமுறை வாசித்தேன். கதையின் போக்கு என்னை மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டியது.இடையிடையே டாராண்டினோவைப் பற்றிய குறிப்புகள் சுவாரஸ்யத்தைக் கூட்டின.
அடுத்து படிக்கத் துவங்கியது ஜங்கோ அன்செயின்ட் திரைப்பட அலசல். நான் ஏற்கெனவே பார்த்திருந்த போதும், அவர் குறிப்பிட்டிருந்த சில விஷயங்கள் அந்தத் திரைப்படத்தை நான் காணுகையில் தவறவிட்டதாய் இருந்தன. கறுப்பு இனத்தவர்களுக்கு எதிரான அடக்குமுறைதான் கதை. தன் மனைவியைத் தேடி அலையும் கணவன் என்று கிட்டத்தட்ட கபாலியை நினைவுபடுத்தும் ஒரு சில
காட்சிகளை குறிப்பிட்டிருந்தால் வெகு ஜன மக்களும் தொடர்புபடுத்திப் படித்திருப்பார்க்லே என்று என் கருத்தைக் கூறியிருந்தேன். பார்க்கிறேன் பாஸ், என்றவர் அதை சேர்க்காமல் விட்டிருந்தார். இப்போது சிந்தித்துப் பார்த்தால், இந்த கட்டுரைத் தொகுப்பிற்கு அந்த ரெபரன்ஸ் தேவையற்றதாகத்தான் தோன்றுகிறது.
காட்சிகளை குறிப்பிட்டிருந்தால் வெகு ஜன மக்களும் தொடர்புபடுத்திப் படித்திருப்பார்க்லே என்று என் கருத்தைக் கூறியிருந்தேன். பார்க்கிறேன் பாஸ், என்றவர் அதை சேர்க்காமல் விட்டிருந்தார். இப்போது சிந்தித்துப் பார்த்தால், இந்த கட்டுரைத் தொகுப்பிற்கு அந்த ரெபரன்ஸ் தேவையற்றதாகத்தான் தோன்றுகிறது.
கில் பில் – ஆளவந்தானால் ஈர்க்கப்பட்டு சில காட்சிகளை வைத்துள்ளதாக இந்திய இயக்குநர் அனுராக் காஷ்யப்பிடம் டாரண்டினோ கூறியதாக வந்த செய்தியைக் கேட்டு அவசர அவசரமாக பார்த்த படம். சத்தியமாக உமா தர்மனுக்காக அல்ல என்று நான் சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். அந்தத் தகவல் மட்டுமல்லாது தீவிரமாக “கிரவுண்ட் வொர்க்” செய்து ஏராளமான தகவல்களை வாசகர்களுக்குத தருகிறார் சீனு. மேலும் தன்னுடன் (டாரண்டினோவுடன் , சீனுவுடன் என்று நீங்கள் புரிந்துகொண்டால் நான் பொறுப்பல்ல) பணிபுரிந்த “Sally” பற்றிய தகவல்கள் சுவாரஸ்யம்.
அதுமட்டுமா, கதை திரைக்கதை எழுதுவதில் பெயர்பெற்ற டாரண்டினோ வேறொருவரின் கதையை வாங்கி படமாக்குகிறார். அந்த சுவாரஸ்யமான கதையை மேலும் சுவையுடன் நமக்கு பகிர்ந்தளிக்கிறார். அதிலும் கதைப்படி வெள்ளை இனத்தவரான கதாநாயகியை தன் திரைப்படத்திற்காக கறுப்பினப் பெண்ணாக ,மாற்றி, திரைக்கதை எழுதிவிட்டு, அதை ஆசிரியர் ஒப்புக்கொள்வாரா என்று கைகளைப் பிசைந்தபடி டாராண்டினோ காத்திருந்த தருணங்களை எல்லாம் அழகுற பதிவு செய்து அந்தத் திரைப்படத்தை பார்த்தவிட வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்திவிட்டார் நண்பர் ஸ்ரீநிவாசன். இந்த கட்டுரைத் தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கட்டுரையும இந்த :"ஜாக்கி பிரவுன்” கட்டுரையே!
இங்க்லோரியஸ் பாஸ்டர்ட்ஸ் – தலைவன் பிராட் பிட்டுக்காக பார்த்த படம். ஆனால், சத்தியமா சொல்றேன். படம் பார்த்தப்போ தலையும் புரியல. வாலும் புரியல. ஆனா, சீனுவின் கட்டுரையை படித்த போதுதான் இது வரலாற்றின் மீது புனையப்பட்ட ஒரு புனைவுக் கதை என்ற விவரமும், மேலதிக தகவல்களும் கிடைத்தது. இப்போ அந்த படத்தை மறுபடியும் பார்க்கத் தோனுச்சு. பார்த்துடுவேன். (பிரைம், ஹாட்ஸ்டார் எதுலயும் டாராண்டினோ காட்சி தருவதில்லை. நெட்பிலிக்ஸ் இருந்தாலே அவர் அருள் கிடைக்கும்) பார்ப்போம்.
அதற்குப் பிறகு, டாரண்டினோ எடுத்து எனக்கு மிகவும் பிடிச்ச பல்ப் பிக்சன். இந்த கதை மூணு நாள்ல நடக்குதா, நாலு நாள்ல நடக்குதான்னு வாசகர்களிடம் கேள்வி கேட்டு நம்மையும் யோசிக்க வைக்கிறார் தலைவர் ஸ்ரீநிவாசன். இந்த கேள்வி எனக்கு படம் பார்க்கும்போது வரலை. ஏன்னா நான் பார்த்த காலகட்டம் அப்படி. சினிமாவை அலசும் மனநிலை எல்லாம் அப்போ இல்லை. சோ, இப்ப பாக்க வேண்டிய படங்கள்ல பல்ப் பிக்சனும் சேர்ந்திருச்சு. இப்படி ஒரு நோலன் ரசிகனை மெல்ல மெல்ல தன் எழுத்துகளால் டாரண்டினோ ரசிகனா மாத்தின பெருமை தம்பி சீனுவுக்குத்தான் சேரும்.
இதெல்லாம் இருக்கட்டும். கட்டுரைத் தொகுப்பு சிறப்பா வந்திருக்கு. அது அப்படித்தான் வரும்னு எனக்குத் தெரியும். ஆனா, உலகம் சீனுகிட்ட இருந்து ஒரு நாவலை எதிர்பார்க்குதுங்கிற விஷயத்தை அன்னாருக்குத் தெரிவிப்பதோடு, “யுவ புரஸ்கார்” இளைஞர்களுக்கு மட்டும்தான் வழங்குவார்கள் என்ற மேலதிக தகவல்களையும் கூறிக்கொண்டு, இந்த விமர்சனத்தை முடிக்கிறேன்!
பி. கு: இப்போ வாசகசாலையில் தற்செயலின் பின் ஒளிந்திருக்கும் கடவுள் புத்தகத்திற்கு 144 விலை நிர்ணயித்திருக்கிறார்கள். (இன்னைக்குள்ள வாங்கினா 15% டிஸ்கவுன்ட். முந்துங்கள்! )
https://www.commonfolks.in/books/d/tharcheyalin-pin-olinthirukkum-kadavul
https://www.commonfolks.in/books/d/tharcheyalin-pin-olinthirukkum-kadavul
நம் நண்பருக்கு வாழ்த்துகள்...
ReplyDeleteசீனுவிற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
ReplyDeleteபுத்தக அறிமுகம் நன்று ஆவி.